அரைக்கால் சட்டை (Shorts) அறிமுகம் பள்ளி செல்லும் சிறுவர்கள் அணியக் கூடிய உடையாகும். இடுப்பு பகுதியில் பெல்ட் (Belt) அணியக் கூடிய வகையில் பட்டி அமைத்து தைக்கப்பட்டிருக்கும். இடுப்பிலிருந்து முழங்கால் பகுதிக்கும் மேலாக அமைந்திருப்பதால் நன்கு ஓடி விளையாடக் கூடிய வகையில் வசதியாக அமைந்திருக்கும். வலது, இடது பக்கங்களில் பாக்கெட் வைத்து தைக்க வேண்டும். பொருத்தமான துணிகள் சற்று தடிமனான துணி வகைகள், பின்னி, காக்கி, டெரின், டெரிகாட்டன் போன்றவை பொருத்தமாய் இருக்கும். தேவையான துணியின் அளவு 90” அகலமுள்ள துணியாக இருப்பின் உடையின் உயரம் + மடிப்பிற்கும் அகலம் குறைவாக இருப்பின் உடையின் 2 மடங்கு உயரம் + மடிப்பு அளவுகள் உயரம் = 10” +2” மடிப்பிற்கு சீட் சுற்றளவு = 32" முன் சீட் = 14'' பின் சீட் = 18'' பட்டி உயரம் (Belt) = உயரம் 1½’’ ஓப்பன் உயரம் = 6” வரைமுறை (முன் பாகம்) ABCD என்ற மூலாதார சதுரம் வரையவும் AB = CD = உயரம் + மடிப்பிற்கு 2” AC = BD முன் சீட்டில் பாதி CE=1” CF= ஒப்பன் உயரம் 7½’’ BD க்கு இணையாக 2” மேலே குறித்து G என்ற நேர் கோடு வரையவும் GH = ½’’ FH =காலின் பக்க பாகம் DG = 2" GB = GD = மடித்தும் வெட்டலாம் SG= நேரிழை திசை AEFHDBGA = முன் பாக துண்டு வரைமுறை (பின் பாகம்) ABCD என்ற மூலாதார சதுரம் வரையவும் AB = CD = உயரம் + மடிப்பிற்கு 2” AC = BD பின் சீட்டில் பாதி CE = பின் சீட்டின் அகலத்தில் 1/3 பகுதி CF = பின் வளைவு 7½’’ BDக்கு இணையாக 2” மேலே குறித்து G என்ற நேர் கோடு வரையவும் GH = ½’’ FH =காலின் பக்க பாகம் E = என்ற புள்ளியிலிருந்து 1” உயர்த்தி EI=1” I என்ற புள்ளியை குறித்து பின் பக்க வளைவை உயர்த்தவும் Aயை Iயுடன் இணைக்கவும் குறிப்பு: பின் பக்க இடுப்பு சற்று உயர்ந்து காணப்படும். 5 ஓப்பன் துண்டுகள் வெட்டிக் கொள்ளவும். சதுரமான துணியை மடித்து படத்தில் உள்ளது போல் பாக்கெட் தைத்துக் கொள்ளவும். இடுப்பு சுற்றளவிற்கேற்ப பட்டி அமைக்கவும். முன்புற ஓப்பன் பகுதியில் பொத்தானும், பொத்தான் துவாரமும் அமைக்கலாம். மாதிரி துண்டுகள் முன் பாக துண்டுகள் = 2 பின் பாக துண்டுகள் = 2 ஓப்பன் துண்டுகள் = 5 பாக்கெட் துண்டு = 1 பட்டி (Belt) துண்டு = 1 தைக்கும் முறை மாதிரியை துணியின் மீது விரித்து மடிப்பு, பக்க இணைப்பு முன்புறம் அமைக்க வேண்டிய சுருக்கம் (Pleats) பின்புறம் அமைக்க வேண்டிய டார்ட்ஸ் (Darts) இவற்றிற்கு போதுமான இடம் விட்டு வெட்டிக் கொள்ளவும். வலது பக்க முன் பின் துண்டுகளின் உயர பகுதியில் (Pocket) வைத்து தைக்கவும். இடது பக்க பகுதியிலும் இவ்வாறே செய்யவும். முன்புறத்தில் சுருக்கம் (Pleats) பின்பகுதியில் டார்ட்ஸ் (Darts) தைக்கவும். காலின் பக்க பாகங்களை சேர்த்து ரன் அண்டு ஃபெல் சீம் (Run and Fell Seam) தைக்கவும். வலது, இடது பாகத்தையும் மேற்படி தைத்த பின் இடதுபுறம் இருந்து வலதுபுறம் மூடும்படியாக பேசிங், பைண்டிங்காக ஓப்பன் தைத்து முடிக்கவும். பின் வளைவுகளை சேர்த்த பின் பொருத்தமான பட்டி (Belt) அமைத்து தைக்கவும். காலின் கீழ் ஓரம் மடித்து தைத்து முறைப்படி அழுத்தம் கொடுத்து முடிக்கவும். குறிப்பு: ஈஸ் என்பது உடல் அளவிற்கும், உடை அளவிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஆகும். டி சர்ட் (T Shirt) அறிமுகம் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஆண்கள் அணியும் உடையாகும். இது தளர்ச்சியான ஆடையாகும். அயல் நாடுகளில் பெண்களும் அணிகிறார்கள். தற்போது நம் நாட்டிலும் பெண்கள் அணிகிறார்கள். முதுகு பகுதியில் யோக் வைத்தோ அல்லது இல்லாமலோ தைக்கலாம். கழுத்து பகுதியல் நேரான காலர் (Straight Collar) டென்னிஸ் காலர் அமைத்தும் தைக்கலாம். பொருத்தமான துணிவகைகள் பாலியஸ்டர், பருத்தி, டெரிகாட்டன், ஸ்பன் தேவையான துணியின் அளவு உடையின் உயரம் + கை நீளம் போல் 2 மடங்கும் 25 செ.மீ அளவுள்ள துணி அளவுகள் மார்பு சுற்றளவு = 26” - 66 செ.மீ. உயரம் = 17”-43 செ.மீ. தோள் அகலம் = 10”-26 செ.மீ. மேற்கை சுற்றளவு = 10”-26 செ.மீ. கை நீளம் =5”-13 செ.மீ. வரைமுறை (முன் பாகம்) AB = CD = மூலாதார சதூரம் AB = CD = உயரம் + மடிப்பிற்கு 1½’’ AC = BD = மார்பு சுற்றளவில் ¼ பாகம் + முன் பாக ஓப்பன் மடிப்பிற்கும் சேர்த்து AE = முன் கழுத்து ஆழம் = 2” 5 செ.மீ. AF = கழுத்து அகலம் = 2”5 செ.மீ. AG = தோள் அகலத்தில் ½ பாகம் GH = மேற்கை சுற்றளவில் ½ பாகம் HD = HDஐ சமமாக பிரித்து I குறிப்பிடவும் IJ = ½ EFGHJDB = முன் துண்டு HJD = பக்க பாகம் SG = நேரிழை திசை வரைமுறை (பின் பாகம்) AB = உயரம் + மடிப்பிற்கு 1½’’ BD = மார்பு சுற்றளவில் ¼ பாகம் AE = பின் கழுத்து ஆழம் 1½’’ AF = கழுத்து அகலம் = 2” 5 AG = தோள் அகலத்தில் ½ பாகம் GH = மேற்கை சுற்றளவில் ½ பாகம் HD = HDஐ சமமாக பிரித்து I குறிப்பிடவும் IJ = 1/2" HJD = பக்க பாகம் SG = நேரிழை திசை EFGHJDB = முன் துண்டு வரைமுறை கைபகுதி AB' = கை நீளம் + மடிப்பிற்கும் சேர்த்து AC = BD = மேற்கை சுற்றளவில் பாதி CE = 2”