அறிமுகம் முற்காலத்தில் அநேக மக்கள் தேவை ஏற்படும் பொழுதும், ஏதாவது விஷே காலத்திற்கும் அல்லது பழைய ஆடைகள் உபயோகிக்க முடியாத அளவிற்கு இருக்கும் நிலையிலும் புதிய ஆடைகளை வாங்குவர். ஒரு சராசரி மனிதனால் அவனது அடிப்படைத் தேவைகளை மீறி அதிக அளவிற்கு வாங்க இயலாது. இன்றைய நிலையில் வருமானம் அதிகரித்துள்ளதால் மக்கள் புது ஆடைகளை அதிகமாக வாங்குகின்றனர். ஆகையால் ஆடைகள் வாங்குவதன் நோக்கம் மாறியுள்ளது. நமது தேவைக்கோ அல்லது விருப்பத்தினாலோ ஆடைகளை வாங்குகிறோம். ஆடைகளை வாங்குவதன் நோக்கம் நாளுக்கு நாள், பயன்படுத்துவோரின் எண்ணம் ஆகியவற்றிற்கு ஏற்ப மாறுபடுகிறது. ஆடைகளை வாங்குவதன் நோக்கம் கீழ்க்கண்ட விருப்பங்களை பொறுத்துள்ளது. நவநாகரிகமாக இருத்தல் இன்றைய நாகரிகத்திற்கு ஏற்ப உடை அணிவதற்காக உபயோகிக்கக்கூடிய நல்ல ஆடைகளை நாம் கழிவுகள் ஆக்குகிறோம். இதையே "நுகர்வோர் புறக்கணிப்பு'' (Consumer obsolescence) என்று கூறுவர். கவர்ச்சியாக இருத்தல் நமது ஆடைகள் நம்மை மிகச் சிறப்பாக காட்டுவதற்கும் நமது இயல்பான குணங்களைக் காட்டுவதாகவும் இருக்க வேண்டும். மற்றவர் மனதில் தனிச்சிறப்பாக பதிதல் நமது விருப்பம் மற்றும் வருமான நிலையை ஆடைகள் மூலமாக வெளிப்படுத்த முடிகிறது. விலைமதிப்புள்ள குறிப்பிட்ட சில பொருட்கள் நமது அந்தஸ்த்தை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகிறது. நண்பர்கள் மற்றும் உடன் உழைப்போரால் ஏற்றுக்கொள்ளப் படுதல் நண்பர்கள் குழுவில் உள்ளோர் மற்றவரிடமிருந்து மாறுபட்ட விரும்பாமல் ஒரே எண்ணம் கொண்டிருப்பர். ஒத்த வயதினரை கொண்ட குழுவிலிருந்து வேறுபட விரும்பாமல், குழுவினரின் ருசியுடன் தங்கள் விருப்பங்கள், மற்றும் எண்ணங்களுடன் ஒன்றி விடுவர். தாங்கள் விரும்பும் ஆடைகளை வாங்குவதற்கு ஆலோசனை மற்றும் சில வழிக்காட்டுதல்களை தங்கள் குழுவின் மூலம் பெறுகின்றனர். மன எழுச்சிகளை பூர்த்தி செய்தல் புத்தாடைகள், ஒரு மனிதனின் மனநிலை சிறப்பாக செயல்பட உதவுகிறது என்றாலும், இது போன்ற எண்ணம், அதிக அளவில் ஆடைகளை வாங்க தூண்டுகோல் ஆகிறது. (கவனமாக சிந்திக்காமல் வாங்குவது). கவர்ச்சியான வடிவ அமைப்பு முறையின் மூலப்பொருட்கள் (Elements of fashion appeal) கவர்ச்சியான வடிவ அமைப்பு முறையின் மூலப்பொருட்கள் என்பன அடிப்படையில் உருவரை முன்மாதிரியின் மூலப்பொருட்களை ஒத்தவையே ஆகும். ஆனால் கவர்ச்சியான வடிவ அமைப்பு முறையின் மூலப்பொருட்கள், ஆடையை உருவாக்குபவரை விட வாங்குபவரின் எண்ணத்தை சார்ந்து அமைகிறது. நிறம் வழக்கமாக ஒரு நாகரிக பாணியின் அமைப்பு முறையை தேர்வு செய்வது அல்லது நிராகரிப்பதன் காரணம் என்னவெனில், நிறத்தின் கவர்ச்சியோ, கவர்ச்சியற்ற தன்மையோ அல்லது தங்களது நிறத்திற்கு பொருந்தாததே ஆகும். இழை அமைப்பு அல்லது இழைநயம் ஒரு ஆடை அல்லது துணைப்பொருள் செய்யப்பட்ட துணியின் மேற்பரப்பே "இழை நயம்” எனப்படுகிறது. இழை அமைப்பில் புலன் உணர்வு சார்ந்த கவர்ச்சி மிகுந்துள்ளமையால், நுகர்வோருடைய விருப்பத்தைச் சார்ந்துள்ளது. நாகரிக பாங்கு நாகரிகப் பாங்கினை விவரிக்கும் மூலப்பொருட்கள் - கோடு, உருவரை நிழல் வடிவம், மற்றும் சிறு வேலைப்பாடுகள். ஆடைகளைக் கவர்ச்சியாக தொங்கவிடுவதும் ஆடையின் தோற்றத்தைப் பாதிக்கிறது. நுகர்வோரின் நாகரிக மனோநிலையைப் பொருத்தே தற்போதைய நாகரிகம் மதிப்பீடு செய்யப்படுகிறது. நடைமுறையில் கவனத்தில் கொள்ளவேண்டியவை விலை சராசரி நுகர்வோர் மிக முக்கியமானதாக நடைமுறையில் கவனத்தில் கொள்ள வேண்டியது விலையே ஆகும். நுகர்வோர் ஆடை அல்லது துணைப்பொருளின் நாகரிக பண்புக்கூறுகளின் மொத்த மதிப்பை சில்லறை விற்பனையுடன் தொடர்புப்படுத்தி விலையினை மதிப்பீடு செய்வர். பொருத்தம் நுகர்வோர் ஆடையைத் தேர்வு செய்யும் போது உடையணிந்து பார்ப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் அளவு பொருந்தி இருக்க வேண்டும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. ஒவ்வொரு ஆடை நிறுவனமும் நுகர்வோரை, ஒத்த மாதிரிகளைக் கொண்டு தயாரித்த ஆடைகளை அணியச் செய்து பார்ப்பர். எனினும், வழக்கமாக நுகர்வோர், உடை வகைகள் அல்லது துணைப் பொருட்களில் தங்கள் உள் உணர்வை வெளிப்படுத்தும் முதல் பண்புக் கூறு நிறமாகும். மக்கள் நேரடியாக நிறத்தோடு தங்களை உருவ அமைப்பிற்கும் பல்வேறு அளவுகளில் அணிந்து பார்க்கும் நுகர்வோர்க்கு அவர்கள் விரும்பிய நாகரிகத்துடன் அவர்கள் உருவத்திற்கு ஏற்றதாக அமைந்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய உதவுகிறது. பொருத்தமானதாக்குதல் ஒரு நாகரிக ஆடையானது, நுகர்வோரின் வாழ்க்கைப் பாங்கு மற்றும் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளின் தேவைக்கும் பொருத்தமானதாகவும், ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் அமைய வேண்டியது மிக அவசியம் ஆகும். உதாரணமாக, பெரிய நகரங்களில் வாழ்பவர்கள், கிராமங்களில் வாழ்வோரைவிட பகட்டாக ஆடை உடுத்த வேண்டியுள்ளது. அதிகமான அளவில் ஆடைகளை வாங்கும் நுகர்வோர், உடை தங்களுக்கு பொருத்தமானதா என்பதை கருத்தில் கொள்ளாமல், அவர்களது அலமாரி கொள்ளாத அளவிற்கு ஆடைகளை வாங்கி விடுவர். தர அடையாளம் இது தயாரிப்பாளர்களின் தயாரிப்புக்கு பொருளை அடையாளம் கண்டறிவதற்கானது ஆகும். அதிக விளம்பரங்களின் விளைவாக சில நுகர்வோர் குறிப்பிட்ட தர அடையாளம் கொண்ட தயாரிப்புகளையே வாங்குவர். துணி உழைக்கும் திறன் மற்றும் பராமரிப்பு ஆடை அல்லது துணை பொருட்களின் நீடித்த உழைப்பு மற்றும் அவற்றை பராமரிப்பதில் உள்ள எளிமை, சிரமம் ஆகியவற்றை ஆடையை தேர்வு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். அநேக நுகர்வோர்கள் எளிய பராமரிப்பு, சலவை செய்து உடுத்தும் துணிகளையே விரும்புகின்றனர். என்றாலும் அருமையான வேலைப்பாடுகள் நிறைந்த துணி வகைகளை விரும்பும் சில நுகர்வோர் அந்த ஆடைகளின் உலர் சலவை மற்றும் பராமரிப்பிற்கு செலவு செய்ய தயங்குவதில்லை. குழந்தைகளின் உடைகள் மற்றும் வேலைக்குச் செல்வோரின் துணி வகைகள் எளிதாக பராமரிக்கக் கூடியதாகவும், அதிக நாட்கள் உழைக்கக் கூடிய சிறப்பும் பெற்று இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில், ஆடை தயாரிக்கப்படும், துணியில் இழையின் உள்ளடக்கம் மற்றும் பராமரிப்பிற்கான அறிவுரைகளும், தற்போது தேவைப்படுகிறது. ஆடையில் வேலைப்பாடுதிறன் ஆடையில் வேலைப்பாடு திறன் என்பது தரமான வடிவமைத்தல், தைத்தல் மற்றும் நிறைவு செய்தலே ஆகும். வேலையாட்களின் கூலித் தொகையின் ஏற்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரமானது வீழ்ச்சி அடைந்துள்ளது. துரதிர்ஷ்ட வசமாக அநேகமான நுகர்வோர் வேலைப்பாடு திறனை மதிப்பீடு செய்வதில் மிகுந்த அக்கறை செலுத்துவதில்லை. இளம் வாடிக்கையாளர் தரத்திற்கு சிறிதளவு கவனம் செலுத்துவர். ஒரு ஆடை கிழிந்து உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்படும் முன்பே அந்த ஆடையை எரிந்து விடுவர். திட்டமிடுபவர், சமகாலத்தவர் அல்லது பருவ வயது உடைய வாடிக்கையாளர் என மற்றொரு பக்கம் நோக்குகையில், பொதுவாக ஆடைகளுக்கு செலவிடப்படுவதை முதலீடாகவே எண்ணுவர். மேலும் நீடித்து உழைக்கக் கூடிய தரங்கள், அதிக வேலைப்பாடு திறன் உடையதாக இருக்குமேயானால், அதற்கு அதிக தொகையை செலவிடவும் தயங்க மாட்டார்கள். நுகர்வோரின் தேவைகள் நுகர்வோரின் வாழ்க்கை பாணிக்கு, ஏற்ப நுகர்வோரின் தேவைகள் மற்றும் மாற்றங்களைப் பொருத்து தயாரிப்பாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பல்வேறு அளவுகளிலும் விலைகளிலும் மற்றும் பலவகை தரங்களில், பாணி மற்றும் துணிவகையை தயாரிக்கின்றனர். அளவு வரிசை வெவ்வேறு உருவ வகைகளின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு அளவிலும் ஆடை தயாரிக்கப்படுகிறது. இளவயது வாடிக்கையாளர் அளவுகள் 3 முதல் 15, கொண்டவர்கள், இளம் வாலிப வயது உருவத்தினரை விட குறைவான வளர்ச்சி அடைந்த உருவம் மற்றும் குட்டையான நீளம் கொண்ட பின்புற இடை, இடுப்புப் பகுதி கொண்டிருப்பர். முழு வளர்ச்சி அடைந்த உருவத்தினர், 6 முதல் 16 அளவுகளை கொண்டிருப்பர். இளம் பருவத்தினர், 2 பகுதிகளை கொண்ட ஆடைகளில் சில மேல சட்டைகள் மற்றும் கனமான கம்பளிச் சட்டைகள் 30 முதல் 36 அளவுகளிலும் அல்லது சிறியது, நடுத்தரம் மற்றும் பெரியது என்ற அளவுகளிலும் உள்ளது. 30 முதல் 36 அளவுகள் என்பன அங்குலங்கள். ஆனால் அந்த உடல் அளவுகள் வருடங்கள் செல்ல செல்ல அதிகரிக்கின்றது. சிறிய அளவுகள் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் அணிவதற்கு ஏற்ப கிடைக்கிறது. சிறுவர்களிலும் சிறிய அளவு என்பது குள்ளமான சிறிய உருவத்தினருக்கும், இளம் பருவத்தினருக்கு பிரத்யேகமாக அவர்களது உருவத்திற்கு ஏற்ப சிறிய அளவுகளில் கிடைக்கிறது. பெரிய அல்லது பெண்களுக்கு விளையாட்டு உடைகளுக்கு உபயோகிக்கப்படும், அளவுகளானது 36 முதல் 52 வரை மேல் உடைகளுக்கும் (ஜாக்கெட்டுகள் மற்றும் சட்டைகள்), 30 முதல் 40 வரை கீழ் உடைகளுக்கும் (பேண்ட்கள் மற்றும் பாவாடைகள்) அரை அளவுகள் (1212 முதல் 24%, பெரிய அளவு உடைகளுக்கு பயன்படுகின்றன. இவை வழக்கமான பெரிய அளவுகளை விட குட்டையான பின்புற இடுப்பு நீளமும், சற்றே பெரிய இடுப்பளவையும் கொண்டிருக்கும். ஆடவரின் சூட்டுகள் 36 முதல் 44 அளவுகளில், அவர்கள் மார்பளவுகளை பொருத்து கிடைக்கும். அளவு எண்களை சார்ந்து நீளம் அமையும். 'R' என்பது வழக்கமானது, 'S' என்பது குட்டையானது, 'L' என்பது நீளமானது. இளம் ஆடவரது அளவுகள், சிறிய இளம் பருவ பெண்களின் அளவுகளுக்கு சமமானதாக இருக்கும். வழக்கமான ஆடவர் அளவினை விட மேல் சட்டை இடுப்புப் பகுதியில் சிறிது குறுகலான அளவையும் கீழ் உடையில் இடுப்புப் பகுதியில் சற்று கூடுதல் அளவையும் கொண்டிருக்கும். சிறார்களுக்கான உடைகளின் அளவு அவர்களது வயது பிரிவினை பொறுத்து அமைகிறது. குழந்தைகளது உடை அளவுகள் உள்ள வயதைப் மாதக்கணக்கில் உள்ள வயதைப் பொருத்து இருக்கும். வழக்கமாக 3, 6, 9, 12, 18 ஆனாலும் குழந்தைக்கு, குழந்தை வளர்ச்சி விகிதம் மாறுபடுவதால், அநேக தயாரிப்பாளர்கள் எடையை பொருத்து அளவினை அமைத்து சீட்டில் குறிப்பிடுகின்றனர். நடைபயிலும், நடக்கும் குழந்தைகளுக்கான உடைகள் 1 முதல் 3 அளவுகளில் உள்ளன. குழந்தைகளின் அளவுகள் 3 முதல் 6 வரை உள்ளன. இந்நிலையில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் அளவுகள் மாறுபடும். பெண் குழந்தைகள் உடைகள் 7 முதல் 14 அளவுகளிலும், வளரும் முன் இளம் பருவத்தினரின் உடைகள் 6 முதல் 14 அளவுகளிலும், சிறிய பருவ வயது பெண்களின் அளவுகள் 3 முதல் 18 அளவுகளிலும் உள்ளன. ஆண் குழந்தைகளின் உடைகள் ஆடவர் உடைப் பங்கினை பின்பற்றி தயாரிக்கப்படுகின்றன, மேலும் 7 முதல் 14 அளவுகளில் உள்ளன. விலை வரிசை ஒரு ஆடை அதன் விலைக்கு ஏற்ப மதிப்பை பெற்று இருக்க வேண்டும். வாடிக்கையாளரின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பல விலை தொகுதிகளில் ஆடைகள், கிடைக்கின்றன. அதிக விலைமதிப்புமிக்க ஆடைகள் தரம் மிகுந்து - நாகரிகம், துணி, பொருத்தம், நிறைவு பெற்று வடிவமைக்கப் பெற்று இருக்குமாறு வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பார்கள். வேலைப்பாடு மிக்க ஆடைகள் மிகுந்த விலையுடன் விற்கப்படுவதால் அவ்வாடைகளை வாங்கும் மக்கள் பிரிவு குறைந்து வருகிறது. ஆகவே, அதிகமான வேலைப்பாட்டுடன் கூடிய ஆடை வடிவமைப்பாளர்கள், மிகக் குறைந்த விலை மதிப்புடைய கோடுகளைக் கொண்டு ஆடை தயாரிக்கின்றனர். ஒவ்வொரு ஆடை தயாரிப்பாளரும் ஒரு குறிப்பிட்ட விலை தொகுதியில் ஆடை தயாரிப்பதில் சிறந்து விளங்குவர். வடிவமைப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள், துணியின் விலை மற்றும் உருவாக்கும் விவரம் பற்றிய கருத்தை மனதில் கொண்டு ஆடையைத் தயாரிக்க வேண்டும். ஆடைத் தயாரிக்க ஆகும் செலவு ஒரு குறிப்பிட்ட விலைத் தொகுதியில் பொருந்தக் கூடியதாக அமைய வேண்டும். நாகரிக பாங்கின் தொகுதிகள் பெண்களின் உடைகள் மற்றும் பெண்களின் விளையாட்டு உடைகள் தற்சமயம் பல்வேறு நாகரிக பாங்கு தொகுதியிலும், அளவுகளின் தொகுப்பிலும் உள்ளன. இவற்றில், சில சொல் தொகுதிகள் மீண்டும் இடம் பெறுவதன் காரணம் என்னவெனில் நாகரிக பாங்கின் தொகுப்புகள், வயது சார்ந்த குழுவிலிருந்து வந்தவை. அநேக மகளிர் இன்று வரைமுறைகளை மீறி, அவர்களது வயதினை விட உருவத்திற்கும், ஆளுமைக்கும் பொருத்தமாக ஆடை அணிகின்றனர். ஆடைகளின் பிரிவுகள் இன்று நாம் கண்கூடாக காணும் பல்வேறு ஆடைகள் போன்று முன் காலத்தில் இருந்தது இல்லை. பல்வேறு விதமான ஆடைகள் நமது பழக்கங்கள் மற்றும் பங்கின் மாற்றங்களால் ஏற்பட்டவையே. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், அனைத்து வாழ்க்கை நிலைக்கும், ஏற்ப நமக்கு தற்போது ஆடைகள் உள்ளன. சில்லறையாக விற்பனை நடக்கும் கடைகளில், பல்வேறு வகையான ஆடைகளுக்கு என தனிப்பிரிவுகள் உள்ளன. மகளிர் உடைகள் மகளிர் ஆடைகள் பல்வேறு பிரிவுகளை உடையவை. உள்ளுடைத் தொகுதி ஆடைகள், மாலை நேர ஆடைகள், சூட்டுகள், வெளியில் செல்ல உடுக்கும் ஆடைகள் மற்றும் விளையாட்டு ஆடைகள். மணப்பெண்ணிற்கான ஆடைகள் மற்றும் கர்ப்பகால ஆடைகள் போன்ற சிறப்பு வகையான ஆடைகளும் உள்ளன. இவற்றுடன், இன்னும் அதிகப்படியான துணைப்பொருட்களாக, சுற்றிக் கொள்ளக் கூடிய ஆடைகள், தலையை மூடிக்கொள்ளக் கூடியவை, கைப்பைகள் மற்றும் காலனிகள் ஆகியன பொதுவான ஆடைகளாக அமைந்துள்ளது. ஆடவர் உடைகள் மகளிருக்கு உள்ள உடைவகைகள் போன்று ஆடவர்களுக்கும் இன்று அதிகவகையான ஆடைகள் கிடைக்கின்றன. ஆடவருக்கு என தைத்த ஆடைகளுள் சூட்டுகள், மேல் கோட்டுகள், விளையாட்டு கோட்டு ட்ரௌசர்கள், பகல் மற்றும் மாலை உடை, சட்டைகள், கம்பளி உடைகள், மேல் சட்டைகள், சாக்ஸ், உள்ளுடைகள், சுற்றிக் கொள்ளும் உடைகள் (ரோப்ஸ்) (Robes) பஜாமாஸ் (Pajamas) இவ்வாறாக, நாகரிகமானவை எவை, தொழிற்சாலை உற்பத்தி செய்பவை எவை என்பதை தீர்மானிப்பவர்கள் நுகர்வோர் என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது. நாகரிக ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் அதிக சக்திவாய்ந்த நுகர்வோர் குழுக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. ஏனெனில், அவர்களே மிகவும் அதிக வருமானம் படைத்தவர்கள் என ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானம் செய்துள்ளது. இதுவரை ஆடை தேர்வு செய்தல் பற்றி அறிந்து கொண்டோம். இனி ஆரம்ப நிலையிலுள்ளோருக்கு, வடிவமைத்தலில் உள்ள அடிப்படைகளின் தேவைகள் பற்றி காண்போம். ஆடை வடிவமைத்தலில் உள்ள அடிப்படைகள் அடிப்படை தையல் கருவி அநேகமாக, ஆடை தயாரிப்பிற்கு தேவைப்படும் கருவிகள் பெரிய வீடாயினும், சாதாரண வீடாயினும் அனைத்து இல்லங்களிலும் இருக்கும். ஏனெனில் இக்கருவிகள் பெண்களுக்கு மிகவும் தேவையானவை ஆகும். மிகவும் சிறந்த கருவிகள் ஆடைகள் தயாரிப்பில் அதிக தரம் வாய்ந்த ஆடையை முடிவில் கிடைக்கச் செய்கிறது. 8 முதல் 10 அங்குலங்கள் நீளம் உள்ள துணி வெட்டும் கத்தரிக்கோல் வளைந்த பிடியுடன் இருப்பது சிறந்தது. வளைந்த பிடியானது மேஜை மீது விரித்து வைக்கப்பட்ட துணியை வேகமாகவும், எளிதாகவும் வெட்ட உதவுகிறது. துணி வெட்டும் கத்தரியை கூராக வைத்திருக்க வேண்டும். துணி வெட்டுவது தவிர துணி வெட்டும் கத்தரியை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. கத்தரிக்கோல் (Scissors) 6 அங்குலங்கள் நீளம் கொண்டு கூரான பகுதிகளை கொண்ட கத்தரிக்கோல் விரும்பத்தக்கது. கையாள தயாராக எப்போதுமே வைத்து இருக்கவும், ஏனெனில், கத்தரிக்கோல் வெட்டுவதற்கும், பிளவுபடுத்தி பிரிப்பதற்கும், ஒழுங்காகவும், மற்றும் பிற வெட்டும் வேலைகளுக்கும் தேவைப்படும். சித்திரப்பின்னல் வேலைப்பாடுகளுக்கான கத்தரிக்கோல் (Embroidery Scissors) இந்த வகை கத்தரிக்கோல் அதிக அளவில் தேவைப்படும் கருவி அல்ல. என்றாலும் தையல் இணைப்பை அகற்றவும், நூல்களை வெட்டவும், நுனியை கத்தரித்தலுக்கும், மிக நுண்ணிய அல்லது அருமையான வேலைப்பாடை வெட்டவும் உதவும். ஒருங்கிய கூற்பற்களை (Pinking Shears) உடைய கத்தரிக்கோல் உங்கள் உபயோகத்திற்கு வசதியான அளவில் கூற்பற்கள் கொண்ட கத்தரிக்கோல் ஒன்றை வாங்கவும். அதன் எடை கனமில்லாது பார்த்து வாங்கவும். இணைப்பு ஓரங்களை அல்லது அலங்காரமான ஓரங்களுக்கு மட்டுமே இக்கத்தரியை உபயோகிக்கவும். குண்டூசிகள் (Pins) சிறந்த ஸ்டீல் குண்டூசிகளை வாங்கவும். சிறு அட்டை டப்பாக்களில் வாங்கினால் அவை மிக குறைவான விலை கொண்டவை. அவற்றை உபயோகிக்க எளிதாக இருக்கும். பெட்டிகளில் இருந்து குண்டூசிகளை எடுப்பது, குண்டூசிகளை மெத்தை போன்ற அமைப்பில் குத்தி வைத்து எடுப்பதை விட எளிது. ஆகவே தையல் இயந்திரம் பக்கவாட்டில், மேஜை மற்றும் இஸ்திரி போடும் மேஜை அருகே ஒரு குண்டூசி டப்பாவை வைத்துக் கொள்ளவும். வரைகோல் (Ruler) பல்வேறு சிறந்த வரைகோல்கள் அநேக கடைகளில் கிடைக்கின்றன. உங்கள் வரைகோல் உலோகத்தால் செய்யப்பட்டு இருக்க வேண்டும். வரியிழைவுகள் கொண்டு இருப்பது விளிம்பில் குறியீடு செய்ய உதவும். பொத்தான் துளை இடுவதற்கு, அளவு இல்லங்களிலும் இருக்கும். ஏனெனில் இக்கருவிகள் பெண்களுக்கு மிகவும் தேவையானவை ஆகும். அளவுகோல் (Yard Stick) கோடுகளையும், சாய்வுத் தையல்களையும் சரிபார்க்க, அளவுகோலை பயன்படுத்தலாம். ஒரு உருவரையை மாற்றியமைக்க முற்பட நினைக்கும் போது, இந்த அளவுகோல் மிகவும் அவசியம் ஆகும். வரைகோலை தையல் இயந்திரம் அருகே வைத்திருந்தால் அளப்பதற்கும், தைக்கும் போது சரிபார்த்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும். சலவைப் பெட்டி போடும் மேஜை (Ironing board) தைப்பவருக்கு சலவைப் பெட்டி மற்றும் சலவைப் பெட்டி போடும் மேஜை மிகவும் அவசியமானது. ஒரு சிறந்த ஆடை தயாரிப்பவர் சலவைப்பெட்டி போடும் மேஜையில் அதிக அளவு தையல் செய்கிறார். தைக்க ஆரம்பிக்கும் முன் சலவைப் பெட்டி போடும் மேஜை தயார் செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ளவும். இந்த சுருக்கமான, எளிய முறைகளை கற்ற பின் ''தைக்கும் முன் அழுத்தமாக தேய்க்கவும்" என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணரலாம். நீராவியில் சலவை செய்தல் (Steam Iron) உடனடி நீராவி அல்லது உலர் சலவை உகந்தது. தைக்கும் தொழில் கொண்டுள்ள நபர்களுக்கு சலவை செய்யும் பெட்டி மிக முக்கியமானது. சலவை செய்து ஆடையை பராமரிக்க ஒரு சலவை செய்யும் பெட்டி இன்றியமையாததாகும். இந்த பெட்டி தைப்பவருக்கு நேரத்தை மிச்சப்படுத்தும். தையல்காரர் குறியிட உபயோகிக்கும் அடையாளமிடும் நிறக்கட்டி (Tailor's Chalk) நீங்கள் கடையில் குறியிட வாங்கும் போது மெழுகினால் செய்யப்பட்டதாக இல்லாமல் சுண்ணாம்பால் செய்யப்பட்டதாக பார்த்து வாங்கவும். பல வண்ணங்களில் கிடைக்கும் என்றாலும் வெள்ளை நிறமே சிறந்தது. தையல்காரர் மடித்து அளவெடுப்பதற்கு பதிலாக அநேகமாக சுண்ணாம்பு குறியிடுவதையே அதிகமாக கையாள்கின்றனர். ஏனெனில் சுண்ணாம்பு குறியீடுகள் மிக விரைவாகவும், கச்சிதமாகவும் வேலையை முடிவுபெற செய்கிறது. அளக்கும் நாடா (Tape measure) அளப்பதற்கு சிறந்த நாடாவை உபயோகிக்கவும். அனைத்து குறியீடுகளும் தையல்காரரின் சுண்ணாம்பு எழுதுகோல் கொண்டு செய்யப்படலாம். ஆனாலும் பல சமயங்களில் மெருகச்சு சக்கரம் (Tracing wheel) மிக வேகமாக செயல்படும். ஆடைத் தயாரிப்பவரின் கார்பன் காகிதம் என்பது தட்டச்சுக்கு பயன்படும் நீல கார்பன் அல்ல. தையல் காரரின் கார்பன் காகிதம் என்பது மெருகச்சு சக்கரத்தில் பயன்படுத்தப்படுவது ஆகும். பல நிறங்களில் கடைகளில் கிடைப்பினும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற கார்பன் காகிதங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. ஆடை வடிவம் (Dress form) ஆடையானது நம் உருவ வடிவமைப்பின், மறுபடிவமாக இருந்தாலொழிய, நம் உடலுக்கு கச்சிதமாக பொருந்தி இருக்காது. எனினும், கழுத்துப்பட்டை, தோள் பட்டை மற்றும் பிற சிறு நுணுக்கங்கள் தரமான வடிவத்திற்கு சரிபார்க்கப்படலாம். ஒரு சில விதமான ஆடைவடிவங்கள், நம் உடலுக்கு பொருந்தக் கூடியதாகவும் அமையலாம். அவை லேசான எடைகொண்டும், வேலைப்பாடுகள் செய்ய நடைமுறையில் பயன்படுத்த முடியாததாகவும் உள்ளன. தையல் இயந்திரம் (Sewing Machine) நாம் எவ்வளவு தான் அழகாக தைக்க முடிந்தவராக இருந்தாலும், உடை முழுவதையும் கைகளால் தைக்க விரும்ப மாட்டோம். கைகளால் தைப்பதால் அதிக நேரம் வீணடிக்கப் படுகிறது. நல்ல தரம் வாய்ந்த எண்ணற்ற தையல் இயந்திரங்கள் உள்ளன. பல இணைப்புகளுடன் கூடிய சாதாரண தையல் இயந்திரமே வாங்கி உபயோகிப்பதற்கும் ஏற்றதாகும். தையல் இயந்திரத்தை பயன்படுத்தவும், பராமரிக்கவும் நமக்கு அறிவுரை குறிப்புகள், இயந்திரத்தை வாங்கும் போது கிடைக்கும். பழைய தையல் இயந்திரம் உங்களிடம் இருக்குமேயானால் தயாரிப்பாளரிடம் முறையாக சீர் செய்து கொண்டு ஒழுங்கு பராமரிப்பு முறைகளை முறையாக அறிந்து கொள்ளவும். இப்போது, நாம் அடிப்படை தையல் நுட்பங்களை அறிந்து கொண்டு ஆடை உருவாக்குதல் பற்றி தெரிந்து கொள்வோம். அடிப்படை கைத்தையல்கள் இரண்டு வகையான தையல்கள் உள்ளன. கைத் தையல் இயந்திரத் தையல். இரண்டு வகைகளும் பல்வேறு நுட்பங்களைக் கொண்டுள்ளன. தையற்கலை கற்பவர் ஆரம்ப நிலையில் கையால் தைப்பதற்கு வேண்டிய நுட்பங்களை அறிந்து கொள்ளலாம். கைத் தையலை விரைந்து ஒழுங்காக செய்வதற்கு பயிற்சி தேவை. ஆனால் அடிப்படை செய்முறைகள் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகின்றன. அடிப்படை கைத்தையல்கள், தற்காலிக தையல்கள் மற்றும் நிரந்தர தையல்கள் என பிரிக்கப்பட்டுள்ளன. தற்காலிக தையல்கள் மேலும் சமச் சீரான பாஸ்டிங் (Even basting), சமசீரற்ற பாஸ்டிங் (Uneven basting), டையகனல் பாஸ்டிங் (Diagonal basting) மற்றும் ஸ்லிப் பாஸ்டிங் (Slip basting) என பிரிக்கப்பட்டுள்ளன. ஊசியில் நூல் கோர்க்கும் முன் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் 30 அங்குலங்கள் நீளம் கொண்ட நூலை வெட்டிக் கொள்ளவும். மிக நீளமான நூலை பயன்படுத்தி தைக்கும்போது முடிச்சு விழுந்து தைப்பதற்கு தடையாக அமையலாம். நூலின் ஒரு முனையை ஊசியின் துவாரத்தில் செலுத்தி இழுக்கவும். ஊசியில் செலுத்தப்பட்ட நூலின் முனையை மற்றொரு முனையுடன் சேர்த்து முடிச்சு போடவும். தற்காலிக கைத்தையல்கள் சீரான பாஸ்டிங் (Even basting) துணியின் நிறத்திற்கு மாறுபட்ட ஒரு நூலை உபயோகிக்கவும். தைக்கும் துணியின் பின்புறத்தில் நூலின் முடிச்சு இருக்குமாறு தைக்க வேண்டும் அல்லது பல உறுதியான சிறு தையல்கள் துணியின் விளிம்பில் தைக்கலாம். ஓட்டுத் தையலை 1/4 அங்குல நீளத்திற்கு ஒரே அளவில் வெளிப்புறம், மற்றும் உட்புறத்தில் இருக்குமாறு தைக்கலாம். துணியின் விளிம்பில் உறுதியாக, நெகிழாதவாறு நூலை பாதுகாக்க வேண்டும். மகளிருக்கான கச்சு உடையின் விளிம்பை சிரமத்துடன் தைக்கும்போது சமயச் சீரான பாஸ்டிங் தையல் பயன்படுத்தப் படுகிறது. கடும் சிக்கலான மேல் தையல் கொண்ட சிறு வேலைப் பாடுகளை தைக்கும் போது சமச் சீரான பாஸ்டிங் தையலை முறைப்படுத்த துணையாக அமைகிறது சமச்சீரற்ற பாஸ்டிங் மாறுபட்ட நிறம் உடைய நூல் பயன்படுத்தப்படுகிறது. நூல் நெகிழாதவாறு துணியின் முடிச்சுடன் இருக்கச் செய்யவும் அல்லது பல சிறிய நிலையான தையல்களை செய்து நூல் உறுதியுடன் நெகிழாமல் இருக்கும்படி செய்யவும். இரண்டு தையல்கள், ஒன்று 1/4 அங்குல நீளமும், மற்றொன்று 3/4 அங்குல நீளமும் கொண்டிருக்க, ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரை தைக்கவும். நூல் துணிவிளிம்பில் நெகிழாதவாறு பார்த்துக் கொள்ளவும். சமச்சீரற்ற தையல், புடவையில் ஃபால்ஸ் தைக்கும் போது பயன்படுத்தப்பட்டு, நிலையான தையல் தைக்கப்பட்டவுடன் நீக்கப்படுகிறது. நீள கோடு போன்ற தையலை தைக்க சமச்சீரற்ற பாஸ்டிங்கை துணையாகக் கொள்ளலாம். ஸ்லிப் பாஸ்டிங் இத்தையலில் வலது பக்கம் இருந்து தைக்க ஆரம்பிக்கவும். ஒரு துணி விளிம்பினை, மற்றொன்றின் மீது வைக்கவும். எதிர் நிறமுடைய நூலை எடுத்து சிறு தையல், விளிம்பின் வரியில் கீழ் இருக்கும் துணியில் செய்யவும். இதில் ஊசி மேல் பரப்பில், மேல் பாகத்தில் உள்ள துணியின் வழியாக செலுத்தப்படுவதில்லை. ஸ்லிப் பாஸ்டிங்கை வடிவமைக்கப்பட்ட துணிகளில் வலது பக்க துணி விளிம்பில் இருந்து தைக்க பயன்படுத்தலாம் டையகனல் பாஸ்டிங் துணிக்குள், ஊசியின் முனை, தைப்பவரை நோக்கும்படி செலுத்தவும். சிறு செங்குத்தான தையல் துணியின் சரியான பக்கத்தில் தெரியும். குறுக்கு ஓட்டுத் தையல் இரு அடுக்குகளை ஒன்றாக்கவும் அல்லது துணிகளின் முனைகளை தற்காலிகமாக இணைக்கவும் உதவுகிறது. துணிகளின் விளிம்பில் இத்தையல் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் உள்வரித் துணிகள் மற்றும் வரியிடைத் துணிகளிலும், பொத்தான் துவாரங்களிலும் பாக்கெட்டுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பாஸ்டிங் தையலை பிரித்தெடுத்தல் தேவையை நிறைவேற்றிய பின் பாஸ்டிங் தையல் உடனடியாக பிரித்தெடுக்கப்படுகிறது. அவ்வாறு பிரித்தெடுக்கப் படாவிடில் துணி விளிம்பு திறவு படும்போதும், அழுத்தும் போதும் குறுக்கீடு செய்யும். முடிச்சுகளை வெட்டி விடவும். பின் சில அங்குலங்களுக்கு இடையே பாஸ்டிங்கை கத்தரித்து விடவும். பின் நூலை இழுத்து எடுத்து விடவும், பற்றிப் பிடுங்கும் இடுக்கி போன்ற கருவிகளை கொண்டு நூலை எடுக்க முற்பட்டால், துணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். நிரந்தர கைத்தையல்கள் நிரந்தர கைத்தையல்கள், இயந்திர தையல்களுக்கு பதிலாக செய்யப்படுகின்றன. இவை நிரந்தரமானவையும், தேவையை பூர்த்தி செய்யக் கூடியவையும் ஆகும். நிரந்தரத் தையல்கள், ஓட்டுத் தையல் (Running stitch), பின்புறத் தையல் (Back stitch), ஓவர்காஸ்ட் தையல் (Overcast stitch) ஓவர் ஹேண்ட் தையல் (Over hand stitch) மற்றும் விப்பிங் (Whipping) ஆகியவை ஆகும். ஓட்டுத் தையல் (Running Stitch) இத்தையல் சாதாரணமாக 1/8 அங்குலம் அல்லது குறைந்த நீளம் கொண்டது. துணியில் ஊசியை செலுத்த முடிந்த அளவிற்கு பல தையல்கள் ஒரு நீள ஊசியில் செய்யப்படுகின்றன. மிக நேர்த்தியான ஓட்டுத் தையல்கள் உள்ளாடைகள், சட்டைகள் மற்றும் குழந்தைகளின் உடைகளின் விளிம்பில் இயந்திரத்தையல்களை போல செய்யப்படுகின்றன. பின்புறத் தையல் (Back stitch) சரியான பக்கத்தில் பின்புறத் தையல் இயந்திரத் தையலைப் போல தோன்றும். ஆனால் இயந்திரத் தையலில் உள்ளதுபோல் அல்லது மறுபுறத்தில் ஒன்றன் மீது ஒன்றாக தையல் காணப்படும். 1/8 அங்குல நீளம் கொண்ட ஓட்டுத் தையலை தைத்து, மீண்டும் ஊசியை முதல் தையல் முடிந்த இடத்தில் நுழைக்கவும். பின் முன்னோக்கி, கீழ் பக்கமாக செலுத்தி மேற்புறத்திற்கு, கொண்டுவந்து முந்தைய தையலை விட ஒரு தையல் நீளமாக தைக்கவும். மீண்டும் அடுத்த தையலை தைக்கவும். பின்புறத் தையலை, இயந்திர தையல் விடுபட்ட இடங்களில் பயன்படுத்தலாம். மேலும், சித்திரப் பின்னல் தையல்களுக்கும், மேல் அடைப்பு அணி தையல்களிலும் ஆரம்பித்தலுக்கும், முடிவுறுத்தலுக்கும் பயன்படுத்தப் படுகிறது. ஓவர் காஸ்ட் தையல் (Over cast stitch) இத்தையல் ஓரங்கள் பாழ்படாமல் காப்பதற்காக ஒன்று அல்லது இரு முனைகளில் தைக்கப்படுகிறது. விளிம்பின் முனையை இடது கை பெருவிரல் மற்றும் விரலால் பிடித்துக் கொண்டு, ஊசியை துணி முனையின் பின் பக்கத்தில் இருந்து, 1/8 அங்குலங்கள் கீழிருந்து செலுத்த வேண்டும். தையல் ஒரே சீரான அளவில் இடைவெளி விட்டும், ஆழமாக கீழிலிருந்து எடுப்பதால் இருமடங்கு இடைவெளி விட்டு தைக்கவும். ஓவர் ஹேண்ட் தையல் (Over hand stitch) ஓவர்காஸ்ட் தையல் போன்றதே ஆகும். ஆனால் துணியின் நுனிமுனையில் 1/16 அங்குலம் இடைவெளியில் தைக்கப்படுகிறது. ஊசியை நம்மை நோக்கி நேராக செலுத்தவும். சிறிய, மிக நேர்த்தியான ஊசியை உபயோகித்து, சிறு அளவில் தையல் உருவாக்கலாம். ஓவர் ஹேண்ட் தையல், லேஸ் போன்றவற்றிற்கும் அல்லது தட்டையான கண்ணுக்கு புலப்படாத விளிம்பினில் இரண்டு மடிப்புகளை கொண்ட முனைகளை இணைக்கவும் பயன்படுகிறது. விப்பிங் (Whipping) ஒரு பொருத்தமான நூலைக் கொண்டு விப்பிங் செய்யப்படுகிறது. சாய்வு தையலுக்கான துணிவிளிம்பில் மடித்து, வலது பக்கத்தில் இருந்து இடப்பக்கத்திற்கு ஊசியைக் கொண்டு தைக்கவும். துணியில் உள்ள ஒன்று அல்லது இரு இழைகளை மடிப்பு ஓரமாக எடுத்து சீராக சாய்வுத் தையலை செய்யவும். தையல், துணியின் சரியான பக்கத்தில் கண்களுக்கு தெரியக் கூடாது. விப்பிங் தையலில் 1/4 அங்குல இடைவெளி தையலுக்கு தையல் இருக்க வேண்டும். சித்திரப் பின்னல் வேலைப்பாடுகள் மற்றும் மேல் அடைப்பானி (Embroidery & Applique) சித்திரப்பின்னல் வேலைப்பாடு பழமை வாய்ந்த கைத்தொழில்களுள் ஒன்றாகும். பண்டைய காலத்தில் இருந்து, அதாவது துணிகளில் சாயம் ஏற்றப்படாமல் கையால் நெய்த காலத்தில் இருந்து, கற்பனையை இணைத்து அழகுபடுத்த நெசவாளர்கள் பல்வேறு முறைகளை பின்பற்றினர். 'சித்திரப் பின்னல்' என்ற சொல் மாயத்துக்குட்பட்ட மிகுதியான நாகரிக பாங்கை குறிக்கிறது. தேவையான பொருட்கள் துணிகள் சிஃப்பான் முதல் தோல் பொருள் வரையிலான எந்த வகை பொருளிலும் சித்திரப்பின்னல் வேலைப்பாட்டை செய்யலாம். செயற்கை மற்றும் இயற்கை துணிகளின் தொகுதி, ஆரம்ப நிலையில் சித்திர பின்னல் செய்பவருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கிறது. பல செயற்கை துணிகள், இயற்கை துணிகளை விட மிக மலிவான விலையிலும் நீடித்து உழைக்கும் திறனும் பெற்று உள்ளன. ஆனால், பொதுவாக, செயற்கை இழைகள், சித்திரப்பின்னல் வேலைபாட்டிற்கு கையாள சற்று சிரமமாக இருப்பதால் நமக்கு போதுமான அனுபவம் பெறும் வரை இயற்கை இழையில் செய்யப்பட்ட துணிகளில் சித்திரப்பின்னல் செய்யலாம். நூல்கள் பல்வேறு நூல்களைக் கொண்டு சித்திரப்பின்னல் வேலைப்பாடுகளை செய்யலாம். பட்டு, பருத்தி, நார்மடி லினன்), கம்பளி, செயற்கை மற்றும் உலோகங்களால் பல்வேறு எடைகள் மற்றும் தடிப்புகளிலும் உள்ளன. ஒவ்வொன்றின் குறிப்பிடத்தக்க தரத்திற்கு - பட்டின் மினுமினுப்பில் இருந்து கம்பளியின் மிருதுவான மயிரிழை அமைப்பு வரை - பல்வேறு பலன்களை முனைப்புடன் உருவாக்கும். ஒரே வகையான நூலைக் கொண்டு ஒரு சித்திர வலைப்பின்னல் வேலைப்பாட்டை உருவாக்கலாம். மாறுபட்ட ஊசிகள் ஊசி என்பது மிகச் சாதாரண கருவி, ஆனால் ஊசி இல்லாவிடில் சித்திரப் பின்னல் வேலைபாடு என்பது இயலாதது. மிக நேர்த்தியான ஸ்டீல் ஊசிகள் உபயோகிக்கப்படுகின்றன. தற்போது பல்வேறு வகைகளில், அளவுகளில், தரமதிப்பு வாய்க்கப்பெற்று பல தொகுப்புகளில், மக்களின் பயன்பாட்டிற்காக ஊசிகள் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இதன் அடிப்படை கொள்கை என்னவெனில் நூலும், துணியும் ஒத்து உணர்வுடன், முழுமையாக்கப்பட வேண்டும். ஒரு சில மிகப் பொதுவான சித்திரப்பின்னல் வேலைப்பாட்டிற்கான நூல்களாவன: திரைச் சித்திர வேலைக்குரிய முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளிநூல் அல்லது கம்பளி ஓவியத்திரை சீலை. பருத்தியினால் செய்யப்பட்ட, வெள்ளை நயம் மிக்க துணி மீது உள்ள அகலப்பின்னல் வேலைப்பாடு. பூ வேலை செய்ய பருத்தியால் செய்யப்பட்ட இழை முடிக்கண்ணி. சித்திரப் பின்னல் பூ வேலை செய்ய பயன்படும் மென்பட்டிழை. பின் தங்கவிடப்பட்ட பருத்தி. மென்மையான சித்திரப்பின்னல் வேலைக்கான பருத்தி அல்லது ஃப்ளாஸ் (Silk floss) பட்டின் மென்மையான இழை பொத்தான் துவாரத்திற்கு முறுக்கப்பட்ட பட்டு இழை. சாதாரண தையல் அல்லது டாக்கிங் (tacking) செய்ய உதவும், நூலானது வடிவத்தை வேறு ஒன்றில் மாற்றி அமைக்க பயன்படுகிறது. க்ரூயல் அல்லது திரைச்சித்திர வேலைக்கு (Crewel) முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நூல் செலுத்தவதற்கு, ஊசியானது நீள கண்கள், மெல்லிய, கூர்முனையை கொண்டிருக்க வேண்டும். மென்பட்டு மேசை துணி வகை (Chenile) நீள கண், திரைச்சித்திர வேலைக்கு பயன்படும் ஊசியை விட நீளத்தில் சிறியதாகவும், அளவு தொகுதிகளில் அதிகமாகவும், கூர்முனையுடனும் ஊசி இருக்க வேண்டும். கம்பளி ஓவிய திரைச்சீலை (Tapestry) நீள கண்கள், மழுங்கிய முனை கொண்ட ஊசியாக இருக்க வேண்டும். மணிகளைக் கோர்த்தல் (Beading) இதற்கு மிக நீளமான, நேர்த்தியான வளைந்து கொடுக்கும் தன்மை வாய்ந்த ஊசியாக இருப்பது நல்லது. தைத்து மூட்டுதல் (Darning) திரைச்சித்திர வேலையை ஒத்தது. கருவிகள் (Tools) சித்திரப் பின்னல் வேலைக்கு ஒரு ஜதை கத்தரிக்கோல், கூர்மையான முனையோடு, சிறிய வெட்டும் வாய்ப்பகுதியுடன் கூடியதாக இருக்க வேண்டியது அவசியம். இக்கத்தரிக்கோல் நூலை ஒழுங்காக வெட்டி, ஊசியினுள் மிக எளிதாக செலுத்துவதற்கு பயன்படும். துணிகளில் வடிவங்களை வரைவதற்கும், பிற வடிவங்களை துணிகளுக்கு மாற்றுவதற்கும் ஒரு அளவுகோல் மற்றும் அளக்கும் நாடா பயன்படும். மேலும், எழுதுகோல், குறியிடுவதற்கு பேனா, பிரஞ்ச் சுண்ண எழுதுகோல் (French chalk), கிராப் தாள் (Graph paper), அச்செடுக்கும் தாள் (Tracing paper) மற்றும் ஆடை தயாரிப்பாளரின் கார்பன் (Dress maker's carbon) பயன்படும். சித்திரவேலை செய்ய துணை வரிச்சட்டம் (Frames) தேர்வு செய்யும் சட்டம் சித்திர வலைப்பின்னல் வேலைபாட்டின் அளவு மற்றும் வகையை அதிகமாக சார்ந்துள்ளது. மேலும் பயன்படுத்தப்படும் துணி, மற்றும் அவ்வேலைப்பாட்டினை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு எடுத்து செல்வது போன்றவற்றை பொறுத்தும், சட்டத்தை தேர்வு செய்வது அமைகிறது. வட்ட வடிவம் கொண்ட சட்டங்களே மிகவும் எளிமையான, உபயோகிக்கத் தகுந்தவை ஆகும். வட்ட வடிவ சட்டங்களில் இரண்டு இறுக்கும் இரும்புப் பட்டைகள், துணியை இடையே இறுக்க ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்டு இருக்கும். வெளியே உள்ள பட்டை பக்கவாட்டில் உள்ள ஒரு ஸ்க்ரூவால் இறுக்கப்படுகிறது. இச்சட்டங்கள் மரத்தால் செய்யப்பட்டிருக்கும், பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இன்னும் சில மாதிரி சட்டங்கள் தரையிலோ அல்லது மேஜை மீதோ, நிலையாக இறுக்கிப் பிடிக்கும் கருவியைக் (clamp) கொண்டு பொருத்தப்பட்டிருக்கும். முடிவுபெறும் உத்தி (Finsishing Technique) சித்திரப்பின்னல் வேலைப்பாடு முடிவு பெற்ற பின் குளிர்நீரில் மூழ்கச் செய்ய வேண்டும். ஒரு சுத்தமான துணியை ஒரு போர்டு வளைந்தது (Curved) அகன்றதும், சிறிய கண்களையும் கொண்டது, அரை வட்ட வளைவு உடையது. மெத்தை தைப்பதற்கு மட்டுமே முக்கியமாக உபயோகிக்கப்படுகிறது. ஒரு ஊசியை தேர்வு செய்யும் முன் எந்த வகையில் அது பயன்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நூல் அல்லது நூல்கள் ஊசியின் கண் வழியே எளிதாக செல்லக் கூடியதாக இருக்க வேண்டும். ஊசியானது துணியில் செலுத்தப்படும் போது நூல் தடித்த தன்மையில் இருப்பினும், எவ்வித சிரமமும் ஏற்படுத்தாமல், மிக எளிதாக துணியினுள் இழுக்கப்பட வேண்டும். சித்திரப்பின்னல் வேலைப்பாட்டை பராமரித்தல் : நேரடியான சூரிய ஒளியில் சித்திரப்பின்னல் வேலைப்பாடு உள்ள துணியை தொங்க விடக் கூடாது. பின்புறத்தையல் (Back stitch) எல்லை வரை கோடு நேரான தையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கோடு விளைவு ஏற்படுத்துவதற்கு மிக எளிய தையல். மற்ற அலங்கார தையல்களுக்கு இந்த தையல் அடிப்படையாக அமைகிறது. அடிப்படை தையல் வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக செய்யப்பட வேண்டும். ஊசியை எண் 1ல் வெளி கொண்டு வரவும், 2ல் மீண்டும் குத்தவும், 3ல் வெளியே கொண்டு வரவும். 3க்கும் 1க்கும் உள்ள இடைவெளியும், 1க்கும் 2க்கும் உள்ள இடைவெளியும் சமமாக இருக்க வேண்டும். இதே போல் தையலைத் தொடரவும். 2வது பாயிண்ட்டில் வரும் ஊசியானது, 1வது பாயிண்டால் முந்தைய தையலால் நுழைத்து ஏற்படுத்தப்பட்ட துவாரத்தில் செலுத்தப்பட வேண்டும். பின் தையலின் நீளம் ஒரே அளவில் சீராக இருக்க வேண்டும் அடிக்கடி துவைத்தல் மற்றும் இஸ்திரி போடுவதை தவிர்த்தல் அவசியம். வீட்டு உபயோகத்திற்கு உள்ள லினன் மற்றும் வீட்டு தட்டுமுட்டு பொருட்களில் உள்ள சித்திர பின்னல் வேலைப்பாடுகளை சாதாரணமாக மென்மையான துவைக்கும் சோப்பு கொண்டு, வெதுவெதுப்பான நீரில், (சாயம் துணியில் நீடிக்கிற பட்சத்தில்) கைகளால் துவைக்க வேண்டும். சாயம் போகக் கூடிய சித்திரப்பின்னல் வேலைப்பாடுகளை உலர்சலவை செய்ய வேண்டும். சித்திரப்பின்னல் வேலைப்பாட்டை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க வேண்டும் எனில், முதலில் சித்திரப்பின்னல் வேலைப்பாடு உள்ள துணியை துவைத்தபின் வெள்ளை நிற அமிலத்தன்மை இல்லாத மெல்லிய தாளில் மடித்து வைக்க வேண்டும். இருட்டான, உலர்ந்த இடத்தில், பூச்சிகள் வண்டுகளால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து வைக்கவும். சித்திரப்பின்னல் வேலைப்பாட்டிற்கான தையல்கள் எல்லைக்கோடு தையல்கள் (Outline Stitches) இத்தையல்கள் கலைப்பண்புக்கூறு வடிவங்களுக்கு (design motifs) வெளிப்புறக் கோட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. காம்புத் தையல் (Stem stitch) இது முதல் நிலை எல்லைக்கோடு தையல் ஆகும். ஆனாலும், பூ வேலைப்பாடு உருவடிவங்களில் காம்புகளை தைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தையல் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக தைக்கப்படுகிறது. 1ல் ஊசியை வெளி கொணரவும். 2ல் ஊசியை நுழைக்கவும். பின் 3ல் அரை தையல் நீளத்திற்கு மீண்டும் வெளிவரவும். 1-3 நீள அளவும், மற்றும் 3-2 நீள அளவும் சமமாக இருக்க வேண்டும். இம்முறையை மீண்டும் செய்யவும். முந்தைய தையலில் 3ம் எண், அடுத்த தையலில் 1ம் எண், 3ம் எண்ணில் வெளிவரும் ஊசியானது எண் 2ல் வந்த முந்தைய தையல் துவாரம், வழியாக வந்ததாகும். அகலமான காம்பு தையலுக்கு, ஊசி 2ம் எண்ணிற்கு வரும் போதும், 3ல் வெளியேறும் போதும் சிறிது சாய்வாக செலுத்த வேண்டும். கம்பளத் தையல் (Blanket Stitch) பிரசித்தி பெற்ற தையல் முடிவு பெறுவதற்கு முனைகளில் செய்யப்படுகிற தையல் ஆகும். சிறிய அளவுகளில் செய்யப்பட வேண்டிய சமயங்களில் எல்லைக் கோடுகளிலும் செய்யப்படுகின்றது. இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்துக்கு தைக்கப்படுகிறது. கீழ் கோட்டில் 1ல் ஊசியை வெளிக் கொணரவும். 2ல் மேல் கோட்டிலும் சற்று வலதில் குத்தி 3ல் வெளியே நேரடியாக கீழே கொண்டு வரவும். ஊசியை வெளியே இழுக்கும் முன், முறுக்கு நூலிழையை ஊசி முனையின் கீழ் படத்தில் உள்ளது போல் கொணரவும். அடுத்த தையலை செய்யவும். 3ம் எண் நிலை, முந்தைய தையலில் இருந்தது இப்போது 1ம் எண். முழு வரிசை தொகுதியையும் ஒரே சீராக, தையலின் உயரம் ஒரே அளவில் இருக்கும்படி தைக்கவும். பிளவுத்தையல் (Split Stitch) காம்புத் தையல் போன்றே செய்யப்படுகிறது. ஊசி வெளிவரும்போது, தையல் செய்யப்படும் நூலிழையை பிளவு படச்செய்கிறது. முடிவுறும் நிலையில், மெல்லிய சங்கிலித் தையல் போல தோற்றம் அளிக்கும். எல்லைக்கோடு என்பது மிகவும் பொதுவாக பயன்படுத்தப்பட்டாலும், திடமாக வரிசைகளிலும் பயன்படுத்தலாம். இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக தைக்கப் படுகிறது. ஊசியை 1ல் மேல் கொண்டு வந்து 2ல் கீழே செலுத்தவும். மீண்டும் 3ல் மேல் கொணர்ந்து, நூலிழையை மத்தியில் பிளக்கிறது. மீண்டும் தையலை தொடரவும். முந்தைய தையலில் 3ம் எண், தற்போதைய தையலில் முதல் எண். தையல் நீளம் ஒரே அளவினதாக இருக்க வேண்டும். வளைவுகளில் தைக்கும் போது நீளத்தை சற்றே குறைத்துக் கொள்ளலாம். சங்கிலித் தையல் இது சித்திரப் பின்னல் வேலைப்பாட்டு தையல்களில் எல்லைக்கோடு தையலுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற தையலாகும். நெருக்கமான வரிசைகளில் தைக்கவும். ஒரு குறிப்பிட்ட பகுதியை நிரப்புவதற்காக செய்யப்படும் தையலுக்கும் இத்தையலை பயன்படுத்தலாம். 1ல் ஊசியை வெளிகொண்டு வரவும். மீண்டும் ஊசியை அதே 1ல் உள்ள துளையில் செலுத்தி, 2ல் வெளி கொணரவும், இழையை ஊசியின் கூர்முனைக்கு வைத்து ஊசியை இழுக்கவும். இப்போது 2ம் எண் அடுத்த தையலுக்கு 1ம் எண்ணாக அமையும். இது போன்று அனைத்து தையலையும் செய்து முடிக்கவும். முடிவுற்ற ஒரு தையலின் துளையினுள் ஊசியை செலுத்தி அடுத்த தையல் செய்யப்படுகிறது. அந்த வரிசையை முடிவுக்குக் கொண்டு வர, ஒரு சிறிய தையலை இறுதி சங்கிலி கண்ணியின் (Loop) மேல் செய்து உறுதியாக இருக்கச் செய்யலாம். விதைத் தையல் (Seed Stitch) இது மிக எளிதான நிரப்பும் தையலாகும். இந்த தையல் கொத்தாகவோ அல்லது அங்குமிங்குமாகவோ செய்யப்படலாம். விதை தையல் தொகுப்பாக மிகவும் நெருக்கமாக தைக்கப்பட்டு இருக்கும்போது நிழலுருவம் போல் இருக்கும். ஊசியை 1ல் மேல் கொணர்ந்து, 2ல் சிறிய தையல் தைக்கவும். கனத்த தையலுக்கு, ஊசியை 3ல் மேல் கொண்டுவந்து, 4ல் அடுத்த சிறு தையல் செய்யப்பட்டு முதல் தையலுக்கு நெருக்கமாக இருக்குமாறு செய்யவும். அனைத்து தையல்களும் ஒரே திசையில் செய்யப் பட்டிருந்தால், தையலால் நிரப்பப் படவேண்டிய இடம் சீராகக் காட்சி தரும் 3ல் சங்கிலி கண்ணியில் மேல் ஊசியை செலுத்தவும், மீண்டும் 1ல் ஊசியை வெளியே கொண்டு வந்து அடுத்த சங்கிலித் தையல் தைக்கவும். அனைத்து இலைகளும் தைத்து முடிவு பெறும் வகையில், தையலை தொடரவும். லேசி டெய்சி தையல் (Lazy daisy stitch) ஒரு வட்டத்தின் மேல் தனியாக எவ்வித தையலுடனும் சார்ந்து இராமல் தைக்கப்பட்டு, இலைகள் போன்று தோற்றமளிக்கும். 1ல் ஊசியை வெளி கொணரவும். மீண்டும் 1ல் அதே துளையில் செலுத்தி, 2ல் ஊசியை வெளி கொணரவும். நூலிழையை ஊசி முனையின் கீழ் கொண்டு வந்து, ஊசியை இழுக்கவும். புல்லியன் முடிச்சு மேல் அடைப்பு அணி (Applique) ஒரு பொருளில் இருந்து வெட்டப்பட்டு மற்றொன்று மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு 'அப்ளிக்' எனப்படும். அப்ளிக் வேலைப்பாடு அடிப்படையில் தையற்கலையை ஒத்து இருப்பதால் தையலுக்கு தேவைப்படும் பொருட்களும் கருவிகளுமே இதற்கும் தேவைப்படுகிறது. துணிகள் இவ்வேலைப் பாட்டிற்கு இன்றியமையாதது ஆகும். ஆனாலும், பெரும் அளவில் தேவைப்படுவதில்லை. துண்டுகள், கத்தரிக்கப்பட்ட சிறு துணுக்குகள் போன்றவை சிறிய செயல்முறைகளுக்கு போதுமானவை ஆகும். அப்ளிக் வேலை செய்யப்பட வேண்டிய இடத்தில் அனைத்து தையல்களுக்கும் உபயோகிக்கப்படும் தையல் நூலை பயன்படுத்தலாம். சில அதிகப்படியான அலங்காரத் தையலுக்கு, சித்திரப் பின்னல் வேலைப்பாடுகளுக்கு பயன்படும் முறுக்கில்லாத மென்பட்டிழை அல்லது பருத்தி இழையைப் பயன்படுத்தலாம். ஷார்ப்ஸ் (Sharps) என்பன ஒரு வகையான சராசரி நீளமுடைய ஊசி. இது கைத்தையல் வேலைக்கு உகந்தது. அப்ளிக் வேலைக்கு கூர்மையான கத்தரிக்கோல் ஜதையும் மிகவும் இன்றியமையாத கருவியாகும். ஆடைத் தயாரிப்பாளர் குறியிட பயன்படுத்தும் எழுதுகோல், அப்பிளிக்குகளை அதன் இடத்தில் அசையாமல் இருக்கச் செய்யப் பயன்படும் நீளமான குண்டூசிகள் ஆகியன மற்ற முக்கியமான தையல் பொருட்கள் ஆகும். துணியை இறுக்கி பிடிக்கும் சட்டங்கள், அச்செடுக்க உதவும் தாள்கள் (tracing papers) மற்றும் வடிவம் உருவாக்கப் பயன்படும் வண்ண காகிதங்கள் முதலியன உருவடிவங்களை நகல் எடுக்கவும் அல்லது வெட்டி எடுக்கவும் உதவும் பொருட்கள் ஆகும். டெம்பிளேட்கள் உருவாக்குதல் (Making Templates) உருவம், வடிவங்களை காகிதங்களில் உருவாக்கி வெட்டி எடுத்து வடிவங்களை பெறும்போதோ அல்லது, புத்தகம் மற்றும் உருவரை வடிவங்களை வெட்டி எடுக்கும் போது அத்துண்டுகள் சரியான டெம்பிளேட்களாகின்றன. உருவரை முன்மாதிரிகளை வேறொன்றில் மாற்றி அமைத்தல் (Transfering Designs) உருவரை முன்மாதிரிகளை மாற்றி அமைக்கும் முன், பின்னணியில் உள்ள துணியை வெட்டிக் கொள்ளவும். வெட்டப்பட்ட துண்டானது, ஒட்டு தையல் வேலைக்கு அல்லது ஆடை தயாரிக்கும் பகுதிக்கு தேவைப்படும் அளவில் இருக்க வேண்டும். உருமாதிரியை சரியான இடத்தில் கச்சிதமாக பொருத்துவதற்கு, நீளவெட்டிலும், குறுக்குவெட்டிலும் மத்திய கோடுகளை பின்னணி துண்டு துணியில் குறித்துக் கொள்ள வேண்டும். மத்திய கோடுகள் ஒட்டு துண்டு துணி வேலைக்கு மிகவும் உறுதுணையானவை. ஏனெனில், அவை அப்ளிக்கை சரியான இடத்தில் பொருத்தி செய்ய உதவும். ஒரே ஒரு அப்ளிக்கை பொருத்துவதற்கு பின்னணித் துணியில் குறியீடுகள் தேவையில்லை. ஏனெனில் மத்திய கோடுகள் அதற்கு போதுமான துணையாக அமைந்து விடும். அதிக கச்சிதமாக இருப்பதற்கு, அப்பிளிக் செய்யப்படும் இடத்திற்கு குறியீடுகள் பரிந்துரைக்கப் படுகின்றன. அப்ளிக்குகளை வெட்டுதல் பல்வேறு அப்ளிக்குகள் வெட்டி எடுக்கப்பட்டாலும், முதல் கட்டத்தில், துணிகளில் துண்டுகளை ஒழுங்குபடுத்தி, முறையாக வைத்து எந்தவிதமாக அப்ளிக்குகள் எதற்கு ஒத்திருக்க பயன்படுத்த முடியும் என்பதனை தீர்மானிக்க வேண்டும். நிறங்களை சமநிலைக்கு கொண்டு வரவும் முயற்சி செய்ய வேண்டும். செய்யப்படுகின்ற அப்ளிக் வேலைப்பாட்டின் அச்சுகள், உறுதியான இழையமைப்பு நயம் ஆகியன சமநிலையுடன் துணிக்கு ஒத்து இருக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுத்துள்ள துணியில் அதிக மேம்பட்ட அச்சுகள் அல்லது நெசவு இருப்பின், ஒவ்வொரு அப்ளிக் துண்டிலும் அந்த அச்சு அல்லது நெசவை எவ்வாறு இடம் பெற வைப்பது என்பதை கவனமாக ஆராயவும். உதாரணத்திற்கு, அந்த துணியில் வரிகள் இருப்பின், அப்ளிக்கை வெட்டும் போது வரிகள் நேர்க்கோடாகவோ, குறுக்குக்கோடாகவோ, அல்லது சாய்ந்த கோடாகவோ அன்றி மூன்று வரிகளும் சேர்ந்ததாகவும் இருக்கலாம். ஒவ்வொரு முடிவு எடுக்கையிலும் அப்ளிக்கை சுற்றி வெளியில் உள்ள துணியை கவனத்தில் கொள்ள வேண்டும். டெம்ப்ளெட்டை துணியின் வலப்பக்கத்தில் குண்டூசியால் குத்திக் கொள்ளவும். அச்செடுக்கும் (Trace paper) தாள் கொண்டு உருவரை வடிவத்தை ஆடை தயாரிப்பாளர் பென்சிலால் அச்செடுக்கவும். 1/8” முதல் 1/4” துணிவிளிம்பின் கோட்டில் இருந்து இடவெளி விட்டு குறிக்கவும். குறுகிய துணி விளிம்பு இடத்தை மிகவும் தளர்வாக நெய்யப்பட்ட துணிகளில் பயன்படுத்தவும். குறிக்கப்பட்ட கோடுகளுக்கு வெளியே சிறிது துணியை விட்டு வெட்டி எடுக்கவும். அடுத்த கட்டத்தில் இவ்வாறு சிறிது அதிகப்படியான அகல இடம் விடுவதால் அப்ளிக்கை துணி மீது வைத்து தைக்க இலகுவாக இருக்கும். அப்ளிக்கின் ஓரங்களை மடித்து வசதியாக வைத்து விளிம்பின் உள்ளே உள்கோட்டிற்குள் தைக்க வேண்டும். தையல் இயந்திரத்தை ஒரு அங்குலத்தில் 12-15 தையல் வருமாறு சரி செய்து வைக்க வேண்டும். அப்ளிக்குகளை கைகளால் சேர்த்து தைத்தல் அப்பிளிக்கை கைகளைக் கொண்டு தேவைப்படும் இடங்களில் இருமுறைகளில் தைக்கலாம். முதல் முறையானது, அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஆனாலும், ஆரம்ப நிலையில் உள்ளோர் இம் முறையை பின்பற்ற பரிந்துரை செய்யப்படுகின்றனர். இம்முறையில் கூடுதலாக பாஸ்டிங் செய்ய வேண்டியிருக்கும். அப்ளிக்கின் ஓரவிளிம்பு இடத்தை கீழே மடித்து அதன் இடத்தில் வைத்து, பின்புறத்தில் உள்ள துணிக்கு குறைவான அளவில் இடர் ஏற்படுமாறு செய்யப்படுகிறது. இரண்டாவது முறையில் ஓரங்களில் ஆரம்பத்தில் செய்யப்படும் பாஸ்டிங் செய்யப்படுவதில்லை. பதிலாக அப்ளிக்கை பொருத்த வேண்டிய இடத்தில் குண்டூசி வைத்து குத்தி வைக்கப்படுகிறது. ஓரங்கள் பின்புறமாக மடிக்கப்பட்ட பின் தைக்கப்படுகிறது. அப்ளிக்கை பாதுகாக்க நேர்த்தியான ஸ்லிப் தையல் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தையல் அப்ளிக்கை அதன் இடத்தில் பொருந்தி இருக்க செய்கிறது. மிக நுட்பமாக வேலை செய்யப் பட்டிருந்தால் தையல் கண்களுக்கு புலப்படுவதில்லை. கைகளால் மேல் தையல் செய்யப்பட்டிருந்தாலும் கண்களுக்கு தெரியாமல் இருந்தாலும், சிறு வேலைப்பாடுகளுக்கு, தேய்ப்பதால் அகற்றப் படுகின்ற நிலையில் பயன்படுத்தப்படுகிறது. சித்திரப்பின்னல் தையல்களான, ஓட்டத்தையல் மற்றும் குறுக்குத் தையல்களை உபயோகித்து அப்ளிக் வேலைப்பாட்டை இறுக்கமானதாக ஆக்கலாம். இவை அனைத்துமே பார்வைக்கான அலங்காரத் தையல்கள் இத்தையல்களும் உருவடிவங்களின் ஒரு பகுதிகள் ஆகும் என்பதை மறந்து விடக்கூடாது. ஸ்லிப் தையல் செய்வதற்கு வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக தைக்கவும். அப்ளிக்கின் மடிப்பு முனையில் ஊசியையும், நூலையும் கொண்டு வரவும். பின்னணியில் உள்ள துணியில் இருந்து எதிர்புறமாக ஒன்று அல்லது இரண்டு நூல்களை ஊசியில் எடுக்கவும். பிறகு ஊசியை காட்டியுள்ளது போல அப்ளிக்கில் வெளியில் ஓரமாக தெரியும் சிறு நூல்களை அழகாக வெட்டிவிடவும். விளிம்பில் உள்ள இடைவெளியை வளைவுகளில் மற்றும் மூலைகளில் ஒழுங்காக பிடித்து இணைக்கவும். அப்போது தான் ஓரங்களை ஒழுங்காக திருப்ப முடியும். ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.