முன்னுரை பொதுவாக மாதிரிகள் குறிப்பிட்ட (சராசரி) பொது அளவைகளில் தயாரிக்கப்படுகின்றன! வடிவமைக்கப்படுகின்றன. சிலரின் உடலமைப்பின் அளவுகள் சராசரி அளவிற்கு ஏற்றதாக அமையும். ஆனால் சில பெண்களின் உடலமைப்பிற்கு ஏற்றவாறு மாதிரி வரைபடங்கள் / மாதிரி துண்டுகளில் திருத்தம் செய்வது மிகவும் அவசியமாகிறது. துணியினை வெட்டுவதற்கு முன் மாதிரி துண்டுகளில் மாற்றம் செய்வதால் சரியான அளவினை பெறலாம். மாதிரி துண்டுகளில் திருத்தம் செய்யும்போது அதன் வெளி கோடுகளை மாற்றாமல் இருப்பதன் மூலம் மாதிரிகளை பாதுகாக்கலாம். மாதிரியில் வெட்டு அல்லது மடிப்பு அல்லது விரிப்பு போன்றவற்றின் உதவியால் திருத்தப்பட்ட நிரந்தர மாதிரி துண்டுகளை மறுபடியும் பயன்படுத்தலாம். மாதிரி துண்டுகளை திருத்துவதன் முக்கியத்துவம் துணியை வெட்டுவதற்கு முன்மாதிரி துண்டுகளில் திருத்தங்களை செய்வதால், துணி வீணாவதை தடுக்கலாம். மாதிரி காகிதத்தில் தேவையான திருத்தங்கள் செய்வதால் நேரமும், துணி வீணாதலும் தவிர்க்கப்படுகிறது. மாதிரியில் திருத்துவதன் மூலம் ஒருவரின் சரியான அளவையும், ஆடையின் பொருத்தத்தையும் பெற முடியும். பல ஆடைகளுக்கு கச்சிதமான அளவினில் மாதிரி தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டால் ஒவ்வொரு முறையும் மாதிரி அளவினை எடுக்கும்படி இருக்காது. திருத்தப்பட்ட மாதிரி துண்டின் பொது அளவைகள் 1. நூலின் திசை பாதுகாக்கப்படும் 2. மாதிரி துண்டுகள் சரிசமமாகவும், நேர் விகிதத்திலும் இருக்கும். 3. தேவையான இடத்தில் மட்டும் மாற்றங்கள் திருத்தங்கள் செய்யப்படும். 4. ஆடை வடிவமைப்பாளரின் கோடுகள் பாதுகாக்கப்படும். அடிப்படை கொள்கைகள் * முதல் கொள்கை : பெரிய மாதிரி துண்டில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு தகுந்தாற்போல் மற்றவற்றிலும் செய்ய வேண்டும். *. இரண்டாம் கொள்கை: மாதிரி துண்ட பெரிதுபடுத்துவதை, சிறு துண்டு பேப்பரை இணைப்பதன் மூலம் செய்யப்படுகிறது. * மூன்றாம் கொள்கை : திருத்தப்பட்ட மாதிரி துண்டில் உண்மையான மாதிரி துண்டின் பண்புகள் இருக்க வேண்டும். * நான்காம் கொள்கை : திருத்தப்பட்ட மாதிரி துண்டில் தவறுகளை உண்மையான மாதிரி துண்டின் பண்புகள் மாறாமல் திருத்த வேண்டும். * ஐந்தாம் கொள்கை : மாற்றப்பட்ட மாதிரி துண்டு தட்டையாக, உண்மையான துண்டுபோல் இருக்க வேண்டும். பொருத்த பிரச்சனைகளுக்கு மாதிரிகளை திருத்துதல் பொதுவாக ஆடையில் உயரம் மற்றும் அகலம் தான் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதை சரிசெய்வதன் மூலம் ஒரு ஆடை பயன்படும் காலத்தை அதிகப்படுத்தலாம். சட்டையின் (பிளவுஸ்) நீளத்தை அதிகரிக்க மாதிரி துண்டின் வெய்ஸ்ட் லைன் பகுதிக்கும் அன்டர் ஆர்ம்க்கும் இடையே முன், பின் பகுதியில் ஒரு கோடு வரையவும். அந்த கோட்டை வெட்டி தனியே எடுக்கவும். வெட்டப்பட்ட இடத்திற்கும் தேவையான அளவு சிறு பேப்பர் துண்டை குண்டூசியின் உதவியால் இரு துண்டுகளையும் இணைக்கவும். ஓரத்தில் இருக்கும் அதிகபடியான அல்லது தேவையில்லாத பேப்பரை வெட்டி எடுக்கவும். கீழ் ஓரத்தில் நீளமாக்கக் கூடாது. பிளவுஸ் நீளத்தை குறைக்க மேலே கூறப்பட்டவாறு மாதிரி துண்டில் கோடு வரையவும். எவ்வளவு குறைக்க வேண்டுமோ அந்த அளவிற்கு, ஏற்கனவே போடப்பட்ட கோட்டிற்கு இணையாக கோடு போடவும். மாதிரி துண்டை மடித்து இரு கோடுகள் இணையுமாறு குண்டூசி மூலம் இணைக்கவும். ஸ்கர்ட்டின் நீளத்தை அதிகரிக்க ஸ்கர்ட்டின் பின், மாதிரி துண்டில் ஹிப் லைன்க்கு கீழ் குறுக்கு கோடு வரையவும். வரையப்பட்ட கோட்டில் வெட்டி மாதிரி துண்டை தேவையான அளவிற்கு பிரித்து வைக்கவும். பிரித்து வைக்கப்பட்ட மாதிரி துண்டிற்கு இடையில் தேவையான அளவு பேப்பரை வைத்து குண்டூசியின் மூலம் இணைக்கவும். நூலின் திசை மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் ஆகும். இதே போல் ஸ்கர்ட்டின் முன் மாதிரியிலும் திருத்தத்தை செய்து தைக்க வேண்டும். பிளேர்டு ஸ்கர்ட்டின் நீளத்தை அதிகரிக்க, ஹெம் லைனில் தேவையான அளவு நீளத்தை இணைக்க வேண்டும். அப்போதுதான் ஸ்கர்ட்டின் அளவு அல்லது விகிதம் சரியாக அமையும். கீழ் ஓரத்தில் அதிக அகலம் தேவைப்பட்டால் ஹெம்லைனில் தேவைப்படும் நீளம் சேர்க்கலாம். தொங்கவிடும்போது ஒழுங்காக தொங்கும். ஏனெனில் கூட்டப்பட்ட நீளத்திற்கு ஏற்ப சரிவிகித மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கர்ட்டின் நீளத்தை குறைக்க ஸ்கர்ட் பின் மாதிரி துண்டில் ஹிப் லைனிற்கு கீழ் இரு கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாக மற்றும் பின் மாதிரிக்கு குறுக்காக தேவையான அளவு இடைவெளிவிட்டு வரைய வேண்டும். இரு கோடுகளும் இணையுமாறு மாதிரி துண்டை மடித்து இணைக்க வேண்டும். இதே போல் ஸ்கர்ட்டின் முன் மாதிரியை செய்ய வேண்டும். பிளேர்டு ஸ்கர்டின் நீளத்தை குறைக்க அதன் ஹெம் லைனில் உள்ள அதிகப்படியான அளவை வெட்டி எடுக்கவும். ஆனால் இவ்வாறு செய்வதனால் ஸ்கர்ட்டின் அகலம் குறையும். எனவே, ஸ்கர்ட்டின் அகலம் குறையாமல் இருக்க மாதிரி துண்டில் ஹிப் லைனில் மடித்து இணைக்கலாம். கை நீளத்தை அதிகரிக்க நூலின் நேர்கோட்டு திசையில் தோள்பட்டையில் இருந்து முட்டி (Elbow) வரை ஒரு கோடு வரையவும். ஒருவரின் தோள்பட்டையிலிருந்து முட்டி வரை உள்ள அளவையும், முட்டியிலிருந்து வெய்ஸ்ட் வரை உள்ள அளவையும் குறிப்பதன் மூலம் தேவையான நீளத்தை கண்டறியலாம். தேவையான அளவு பேப்பர் துண்டுகளை இணைக்கவும். பின் அதிகப்படியான ஓரத்தை வெட்டவும். கை நீளத்தை குறைக்க மேலே குறிப்பிட்டவாறு, கோடு வரைய வேண்டும். பின் மாதிரி துண்டிற்கு குறுக்காக தேவையான அளவை குறைத்து, மடித்து தையல் போடவும். நூலின் திசை நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இரு கைதுண்டுகள் மற்றும் நேரான முழுக்கைகள், நீளமாக்கவோ, குறைக்கவோ முட்டியில் திருத்தம் செய்தல் மூலம் செய்யப்படும். தோள் பகுதியில் திருத்தங்கள் ஆர்ம் ஹோல் லைனை பொருத்து தோள்பட்டையில் அகலம் குறிக்கப்படுகிறது. ஆர்ம்ஹோல் லைன், ஆர்ம் ஹோல் தையலாகவும், உடை கையற்றதாக இருந்தால் அது இணைப்பு லைன் (seam line) ஆகவும் கருதப்படுகிறது. ஆர்ம் ஹோல் லைன், தோள்பட்டை மற்றும் கையை பிரிக்கிறது. இது கையை இலகுவாக அசைப்பதற்கு பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். கையற்ற ஆடையாக இருந்தால் ஆர்ம் ஹோல் லைன் மேலும் அழகை கூட்டுகிறது. பெண்கள் அகலமான அல்லது குறுகலான தோள்பட்டையை கொண்டிருக்கலாம். மாதிரி துண்டில் சிறு திருத்தங்களை செய்வதன் மூலம் இவர்களை அழகுபடுத்தி காட்டலாம். தோள் அகலத்தை குறுகலாக்க சீர்செய்து பொருத்தமானதாக செய்யலாம். தோள் பகுதியில் இணைப்புக்கோட்டை சிறிது வெட்டி அகலமாக்கி கொள்ள முடியும். சிறு உடலமைப்பு (தோள்பட்டை) கொண்டவருக்கு 1/4” மற்றும் பெரிய தோள்பட்டை கொண்டவருக்கு 1%2” ம் திருத்தினால் போதுமானதாக இருக்கும். மிகப்பெரிய தோள்பட்டை கொண்டவர்களுக்கு 3/4” திருத்துவதன் மூலம் சரியான பொருத்தத்தை ஆடையில் உருவாக்கலாம். அகலமான தோள்பட்டை தோள்பட்டையை அகலமாக்க கீழ்வரும் படிகளை பின்பற்ற வேண்டும். பின் மாதிரி துண்டின் சோல்டர் லைன் (across back) மத்தியில் பின் மாதிரி துண்டின் குறுக்காக 1” கோடு வரையவும். கோட்டின் பகுதி அண்டர் ஆர்ம் இணையும் இடம் வரை வெட்டவும். பேப்பரின் மேல் வெட்டிய பின் மாதிரி துண்டை வைத்து தேவையான அளவு விரித்து புதிய மாதிரியை வரையவும். புதிய சோல்டர் லைனிற்கு கழுத்து பகுதியின் ஓரத்தில் இருந்து சோல்டர் முடிவு வரை கோடு வரையவும். இதேபோல் முன் மாதிரியிலும் (சோல்டரில்) திருத்தம் செய்து பின் இணைக்கவும். குறுகலான தோள்பட்டை *பின்பகுதியில் மத்திய பகுதிக்கு இணையான கோட்டினை தோள்பட்டையில் கழுத்துப் பகுதியிலிருந்து பஸ்ட் லைன் கீழ் 1 அங்குலம் வரை கோடு வரைந்து கை கீழ்ப்பகுதி இணைப்பு இடம் வரை கோட்டை இணைக்கவும். *புதிய காகிதத்தின் மேல் மாதிரியை வைத்து குறித்த பின் பகுதியை தகுந்த அகலத்தில் வெட்டி குண்டூசியால் குத்தவும். கழுத்து ஓரத்திலிருந்து தோள் ஓரம் வரை தோள்வரைந்து புது தோள்பட்டை கோடு வரைக. முன் பகுதி மாதிரியிலும் மாற்றம் செய்க. இணைக்கும் பகுதியில் அதிகப்படியான துணியை வெட்டவும். பின்புற இடுப்புப் பகுதியை அகலமாக்குதல் வெய்ஸ்ட் லைனில் ஒரு வெட்டு செய்யவும், சோல்டர் சீம் வழியாக அல்லாமல், ஆர்ம் ஹோல் நாட்சஸ்க்கு குறுக்காக வெட்டவும். வெட்டப்பட்ட பகுதியை தேவையான அளவுக்கு விரிக்கவும். ஆனால் வெய்ஸ்ட்லைனில் விரிக்கவேண்டாம். குறுக்காக வெட்டப்பட்ட ஓரம் ஒன்றன் மீது ஒன்றாக மடிந்து நீளவாக்கில் வெட்டப்பட்டதில் குறைத்து காட்டி இடுப்புக் கோட்டு இணைப்பை சரியாக்கும். அடிப்படை திருத்தங்களால் நீளம், குறைந்த நீளம், அகலம், குறுகல் சரியாக உள்ளதா என அறிய மாதிரிகளின் பண்பினை அறிந்திருக்க வேண்டும். மாதிரி திருத்துதலின் பண்புகள் மாதிரியில் திருத்தம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். திருத்தப்பட்ட மாதிரியில், மாதிரி துண்டின் தன்மை / பண்பு மாறாமல் இருக்க வேண்டும். மாற்றப்பட்ட மாதிரியை உண்மை மாதிரியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். நீளம் திருத்தப்பட்ட மாதிரியின் பண்புகள் • மாதிரியை இரண்டு பகுதிகளாக வெட்டி சிறிதாக்கி, ஓரங்கள் ஒரே சீராக ஒன்றன் மீது ஒன்று மடிக்கப்பட வேண்டும். *மாதிரிகளை இரு பகுதிகளாக வெட்டி நீளமாக்கி, ஒட்டாமல் தனித்து, வைத்து செங்கோணத்தில் நீளவாக்கில் நூல் திசையில் வெட்ட வேண்டும். *ஓரம் நீளமாக்கப்பட்டோ, குறைக்கப்பட்டோ, தொடர்புடைய ஓரங்கள் திருத்தப்பட்டு மேட்ச் ஆகுமாறு செய்யப்படுகிறது. *மாதிரியில் உடல் அசைவுகள் உள்ள இணைப்புகளின் இடையே மாற்றங்கள் செய்யப்படுகிறது. *சாய்வான அல்லது வளைந்த ஓரங்களில் குறுக்காக டக்குகள் அல்லது வெட்டுகள் செய்த இடங்களில் கோடுகள் பிரிந்திருந்தால் மாற்று கோடுகள் வரையவும். *மாற்றங்கள் செய்யும்போது ஆடை அமைக்கும் விவரங்களை இயன்றவரை தவிர்க்கவும். அகலம் திருத்தப்பட்ட மாதிரிகளின் பண்புகள் • மாதிரிகளில் மாற்றம் செய்யப்படுகிறது அல்லது சிறு மாற்றங்களை ஆடையின் ஓரங்களில் செய்யலாம். இங்கு ஆடைவடிவமைப்பாளரின் கோடுகள் எளிமையானதாகவும், நேரானதாகவும் இருக்கும். *மொத்தமாக ஓரிரு இடங்களில் பெரிய மாற்றங்கள் செய்வதை விட சிறு மாற்றங்களை பல இடங்களில் செய்யலாம். *மாதிரிகளில் சில பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் திருத்தங்கள் சிறு வெட்டுக்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. தைக்கும் இணைப்புக்கோடு அல்லது ஓரத்தில் தேவைக்கு மட்டுமே வெட்ட வேண்டும். ஒழுங்கற்ற உடலமைப்புகளின் மாதிரியில் திருத்தம் செய்தல் வேறுபட்ட ஒழுங்கற்ற உடலமைப்பு உடைய நபர்களுக்கு சரியாக பொருந்தக்கூடியவாறு ஆடைகள் வடிவமைத்து உருவாக்குதலில் மாதிரிகளை திருத்தியமைத்தல் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரிய அல்லது சிறிய மார்பகங்கள், தட்டையான மார்பு, பெரிய அல்லது சிறு இடுப்பு, வட்ட கழுத்து, சதுர தோள்பட்டை, பருத்த அடிவயிற்றுப் பகுதி மற்றும் இடுப்புச் சுற்றுக்கோடுகள் ஆகியன பொதுவாக காணப்படும் ஒழுங்கற்ற உடலமைப்பு கூறுகளாகும். பொதுவாக, அடிப்படை மாதிரிகளில் ஒழுங்கற்ற உடலமைப்பு கூறுகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. பெரிய மார்பக உருவம் பின்புறத்தில் இடுப்புகோட்டு அளவு சரியாக இருந்து பக்கவாட்டில் நேரடியாக மார்பகத்தின் கீழ்பகுதிக்கும் இருப்புக்கோட்டுக்கும் இடைவெளி குறுகி இல்லாவிடில் அவ்வுருவத்திற்கான மார்பகத்திற்கு பெரிய அளவில் கப் தேவைப்படும். திருத்தியமைக்கும் கோட்டில் வெட்டி, முன்பக்க இடுப்பு அளவை போதுமான அளவு நீளமாக்க வேண்டும். இங்கு ஒரு துண்டு துணியை குண்டூசியால் இணைக்கவும். மார்பக பார்ட்டில் முன்பக்கம் சேர்க்கப்பட்ட, நீள அளவை கொண்டு டார்ட் அமைக்கவும். முழு மார்பகத்திற்கும் அதிகமான கப்பிங்கை இது அளிக்கும். ஏனெனில், பின் மற்றும் பக்கவாட்டில் எதுவும் திருத்தம் செய்யப்படவில்லை. இணைப்புகள் சமமாக இருக்கும். பக்கவாட்டு இணைப்பு டார்ட் மார்பக பாயின்ட் நோக்கி இருக்க வேண்டும். டார்டானது மார்பகத்தில் இருந்து 1 அங்குலத்திற்கும் குறைவாக இருக்கக் கூடாது. மேல் அல்லது கீழ் உள்ள மொத்த டார்ட்களை தேவைப்பட்டால் செய்யவும். ஆனால் மார்பக பார்ட்கள் மேல் நோக்கி அமைப்பதில் கவனமாக இருக்கவும். அப்போதுதான் இளமையான தோற்றம் இருக்கும். தட்டையான மார்பக உருவம் வழக்கமாக இது போன்ற உருவ குறைபாட்டில், பின்பக்க நீளம் சரியாகவும், முன்பக்க இடுப்பு கோடு நீளமாகவும், முன்மத்தியில் தொங்கியவாறும் இருக்கும். கழுத்துக்கோட்டில் இருந்து ஆர்ம்ஹோல் வரை டார்ட் எடுத்து, அதிகப்படியான நீளத்தைக் குறைக்கவும். இதே அட்ஜஸ்ட்மெண்டை மாதிரியிலும் செய்யவும். சிறிய மார்பக உருவம் இவ்வுருவத்திற்கு மார்பக கோட்டில் அதிக மடிப்புகள் கொடுக்க வேண்டும். தோள்பட்டை குறுகலாக இருந்தால் தோளில் இருந்து இடுப்புகோடு வரை நேராக ஒரு டக் எடுக்கவும். அதிகப்படியான மடிப்புகளை நீக்கவும். ஒரு வேளை, தோள்பட்டை சாதாரணமாக இருந்து, மார்பக அளவு சிறிதாக்கப்பட வேண்டியிருந்தால், இடுப்புக்கோட்டில் இருந்து முன்பக்க ஆர்ம்ஹோலில் உள்ள நாட்ச் வரை ஒரு டார்ட்டை மஸ்லினால் அமைக்கவும். மாதிரியில் இந்த திருத்தங்களை மாற்றியமைக்கவும். சிறிய மார்பகங்கள் மற்றும் தட்டையான மார்பு உள்ள உருவம் இந்த உருவத்திற்கு கலவையான திருத்தியமைப்பு தேவைப்படுகிறது. தட்டையான மார்பு கொண்ட உருவத்திற்கு பயன்படும் டார்ட்டை சரிசெய்து பொருத்தி, முன்பக்க இடுப்பு கோட்டில் அதிகப்படியான நீளத்தை நீக்க வேண்டும். சிறு மார்பகத்திற்கு மாதிரியை சரிசெய்ய கூறப்பட்டுள்ள குறிப்பகளை பின்பற்ற வேண்டும். இந்த திருத்தங்களை மாதிரியில் செய்யவும். முழு மார்பகம், தட்டையான மார்பு கொண்ட உருவத்திற்கு முழு மார்பக உருவம் உருண்டையான தோள் பட்டை உருவாக்கி, மார்பை தட்டையாக்கிவிடும் முழு மார்பக உருவத்திற்கான குறிப்புகளை பின்பற்றி, முன்பகுதியை நீளமாக்கி, டார்ட் எடுக்கவும். தட்டை மார்பு உருவத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கவும். மாற்றியமைக்க வேண்டியவற்றை மாதிரியில் அதே புள்ளிகளில் மாற்றவும். வட்ட கழுத்து பின் மத்தியில், பின் இடுப்புக் கோடு மிகவும் குறுகலாக தெரியும். பின் கழுத்துக்கடியில் ஆர்ம் ஹோல் பக்கமாக பின் பக்கத்தில் வெட்டவும். தேவையான அளவு திறந்து, சிறு துண்டு துணியை நுழைத்து குறிப்பிட்ட இடத்தில் குண்டூசியால் குத்தவும். அங்குலத்திற்கு அதிகமாக தேவைப்பட்டால், உருவம் பொதுவாக வட்ட தோள்பட்டையுடன் பொருத்தமானதாக அமையும். முன்பு வெட்டியது போல வெட்டி, பிறகு தோள்பட்டை பார்ட்டின் மத்தியில் வெட்டி விரிக்கவும். இதனால் பின் பகுதி நீளமாக ஆகிவிடும். மேலும் ஆழமான டார்ட் கொடுத்து தோள்பட்டையுடன் வட்டமான பின்பக்கத்தை வடிவம் பெறச் செய்கிறது. நிமிர்ந்த உருவம் பின்பக்க மத்திய இடுப்புப் பகுதி அதிக நீளமாக இருக்கும். இந்த நீளத்தை நீக்க, ஒரு டார்ட்டை பின் கழுத்துக் கோட்டுக்குக் கீழ் இருந்து ஆர்ம் ஹோல் வரை வரையவும். இதே போல் மாதிரியில் பொருந்திக் கொள்ள சரி செய்ய வேண்டும். அடிப்படை மாதிரியில் கழுத்துக்குக் கீழ் இருந்து ஆர்ம்ஹோல் வரை வேறு பிற தவறுகளுக்கு திருத்தியமைப்பதில் கவனமாக செய்ய வேண்டும். (உ.ம்) சதுர தோள்பட்டை, சாய்ந்த தோள்கள் அல்லது வட்ட தோள்பட்டைகள் போன்ற அனைத்திற்கும் இதுபோன்ற திருத்தங்கள் செய்து பொருந்துமாறு செய்ய வேண்டும். இதற்கு தோளில் இருந்து துணிகள் தொங்க வேண்டும். ஒரு ஆடையை அணியும்போது தோள்பட்டை சாய்வானது, சாதாரணமாக நாம் அணிவதை ஒத்து இருக்க வேண்டும். சதுரத் தோள்பட்டைகள் மாதிரியில் உள்ளதை விட தோள்கள் சதுரமாக இருந்தால், மாதிரியை நாம் பயன்படுத்தும்போது ஆர்ம்ஹோல் மேல்பகுதி தோள்களை இடிப்பதும் கழுத்து அதிக உயரமாகவும் இருக்கும். இந்த அதிகப்படியான துணி குறைக்கப்பட்டு ஆடையின் முன்பகுதி தொங்குவது போல் இருக்கும். முன்பக்கம் பயன்படுத்தப்படும் டார்ட் சாய்ந்த தோள்பட்டையை மாற்றி, பொருந்துமாறு செய்யப்பட்டு, உடையானது சரியாக தொங்கும். பின் கழுத்துக்கோட்டுக்குக் கீழ் மடிப்பு ஏற்படும் போதும், இது போன்ற அட்ஜஸ்ட்மென்டை செய்ய வேண்டும். 818). சாய்வான தோள்கள் ஆடை கழுத்தில் பொருந்தி, கையின் மேல்பகுதியில் பொருந்தாவிடில், துணியில் அதிகப்படியான மடிப்புகளை கைக்கு கீழ்பகுதியில் ஏற்படுத்தும். கழுத்துக் கீழ் இருந்து ஆர்ம்ஹோல்வரை வெட்டி சரி செய்யலாம். அடிப்படை மாதிரிகளில் மட்டுமே அட்ஜஸ்ட்மெண்ட்கள் செய்யப்படும்வரை கவனிக்க வேண்டும். முன் மற்றும் பின் தோள்பகுதி பொருந்துமாறு செய்வதற்கு, வழக்கமாக பின் கழுத்துப் பகுதியில் பார்ட் செய்வது அவசியமாகும். இது அதிகப்படியான துணிகளை எடுத்துக் கொள்வதால், முன் மற்றும் பின் தோள் இணைப்பு பகுதிகள் சமமாக இருக்கும். மேலும் வட்டபின் பகுதிக்கு நன்கு பொருந்தும். ஆனால் மொத்த பின்பகுதியும் மிக அகலமாக இருந்தால் மாதிரியில் இடுப்புப் பகுதியில் இருந்து தோள்பகுதி வரை வெட்டி, விரிக்கவும். இரண்டு வகைகளின் கலவை அதிக எடை அல்லது செவிலித்தன்மையான உடலமைப்பு, இதுபோன்ற உடலமைப்பு பிரச்சனைகளின் கலவையாக இருக்கும். மார்பகம் மிகத் தாழ்ந்தோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். தோள்பட்டை குறுகி இருக்கலாம். முதுகு பக்கம் அதிக சதை கொண்டு, உருண்டு தோளுடன் சேர்ந்து அமைந்திருக்கும். உயர ஆர்ம்ஹோலுடன், அகன்ற முதுகுடன் கூடிய தாழ்ந்த பெரிய மார்பகத்துடன் திருத்தப்பட்ட மாதிரியை தேர்ந்தெடுக்கவும். தாழ்ந்த மார்பகத்துக்கு, பக்க டார்ட்களை சற்று கீழ் இறக்கவும். இந்த பார்ட்களை முழு மார்பகத்துக்கு திருத்தம் செய்ய மாதிரியில் வெட்டும் முன் குறிக்கவும் இடுப்பு அளவை குறைத்தல் இடுப்பின் அளவை மஸ்லின் துணியில் அட்ஜஸ்ட் செய்யும்முன், கை அடியில் இணைப்புக் கோட்டினை சரிபார்க்கவும். மேலும், கீழும் நேர்கோட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இடுப்பு கோடு சற்று பெரியதாக இருந்தால் முன்பின் மாதிரி துண்டில் இடுப்புக் கோட்டில் இருந்து ஆர்ம்ஹோலை நோக்கி டார்ட் பிடிக்கவும். இது கச்சிதமான பொருத்தம் கொடுக்கும் முன்பின் பாடிஸ் துண்டுகளில் அதே புள்ளிகளில் டார்ட்டை குண்டூசியால் குத்தவும். ஆர்ம்ஹோலை நோக்கி டார்ட் பிடிக்கப்பட்டிருந்தாலும், ஆர்ம்ஹோல் அளவு மாறாது. இடுப்புக் கோட்டின் அளவை அதிகரித்தல் மாதிரியில் இடுப்பின் அகலத்தை கூட்டுதல் அல்லது இடுப்பின் அளவை அதிகரித்தல். இரு முன்பக்க இணைப்பு ஓரமும், இருப்பின் பக்க இணைப்பு ஓரமும் உள்ளதால், இடுப்பின் கூடுதல் அளவை ஓரங்களில் சேர்க்கலாம். தேவையான அளவை நான்கால் வகுத்து முன் மற்றும் பின் மாதிரி துண்டுகளின் இரு ஓரங்களிலும் இணைக்க வேண்டும். மாதிரியில் கூட்டியது போல் பாவாடையின் இடுப்புப்பகுதியிலும் கூட்ட வேண்டும். இன்னும் கூடுதலான இடுப்புக் கோடு சரியமைப்புகள் நமது குறிப்பிட்ட உடல் அளவு குறைபாடுகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. (எடுத்துக்காட்டாக) அன்டர் ஆர்ம் சீம்கள் முன் மாதிரி துண்டில் இழுத்துக் கொண்டிருந்தால் முன்பகுதியில் துருத்திக் கொண்டிருக்கும். அதனால் திருத்தங்களை முன் மாதிரி துண்டில் மட்டுமே செய்ய வேண்டும். இது போன்ற திருத்தங்கள் செய்ய, அடிப்படை மாதிரியில் இடுப்புகோட்டை நீளமாக்கி வெட்டவும், பிறகு பார்ட்டினில் வெட்டி பார்ட்டின் வடிவம் மாறாமல் குறித்து சரியான பொருத்தம் ஏற்படுத்தவும். அதிகபடியான பெரிய மார்பகங்களுக்கு, தோள்பட்டையில் வெட்டு செய்து விரிக்கவும். டக் பிடித்து குறுக்கி, தோள்பட்டையின் நடுமத்தியில் இருந்து மார்பகத்தை நோக்கி குறுக்கவும். முழு முதுகுப்பகுதி பொதுவாக, மாதிரியானது பின்புறத்தில், மிகச்சிறிதாக இருக்கும். என்றாலும், மாதிரி ஒழுங்காக பொருந்தும். சௌகர்யமான பொருத்தத்திற்கு, தோள்பட்டையை அகலமாக்க வேண்டும். தேவைப்படும் நிறைவை முதுகு பகுதியில் ஏற்படுமாறு ஆர்ம்ஹோல் கீழ் இருந்து குறுக்காக தோள் வரை ஒரு வெட்டு செய்து அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். பின் தோள்பகுதியை அகலமாக்க வேண்டும். ஏனெனில் தோள்பட்டை இந்த வடிவமைப்பில் உருண்டையாக இருக்கும். சரியான ஆர்ம்ஹோல் மற்றும் கழுத்து வளைவை ஏற்படுத்தி உறுதிசெய்து அதிகப்படியாக தோள்பட்டையில் தேவைப்படும் நிறைவை பெறலாம். பெரிய மார்பகம் (Very full bust) வழக்கமாக, அனைத்து மாதிரிகளும் மார்பக அளவுபடி தயாரிக்கப்படுகின்றன. ஆனால், மார்பக அளவு அதிகப்படியானால், சாதாரண அளவில் தயாரிக்கப்பட்ட மாதிரி கழுத்து மற்றும் ஆர்ம்ஹோலில் மிகப் பெரிதாக இருக்கும். ஆகவே மார்பக அளவை கணக்கில் எடுக்காமல் ஆர்ம்ஹோல்களில் சரியாக பொருந்தும்படி ஒரு அளவினை தேர்ந்தெடுக்கவும். இந்த சிறிய மாதிரி மார்பகம் தவிர மற்ற பகுதிகளில் பொருந்தும். வெயிஸ்ட் லைன் முதல் ஆர்ம்ஹோல் வரை மார்பக பார்ட்டின் மத்தியில் இருந்து மாதிரியில் ஒரு வெட்டு மூலம் மாதிரியில் திருத்தம் செய்து மார்பகத்தின் அளவை பெரிதாக்கலாம். மாதிரியை விரித்தால் பெரிய மார்பகத்திற்கு நிறைவை பெறலாம். டார்ட் பெரியதாகவும், ஆழமானதாகவும் ஆகிவிடும். வெயிஸ்ட் லைனின் நீளமாக்க வேண்டுமெனில், மாதிரியின் முன்பக்கத்தில் பார்ட் பாயிண்ட்டில் இருந்து நேராக வெட்டி தேவையான நீளமாக்கி கொள்ளலாம். சரியாக பொருந்துமாறு டார்ட்டை ஷேப் செய்யவும். ஆர்ம்ஹோலுக்கு வெயிஸ்ட் லைனும் தேவைப்படும் எனில், முன் பகுதியில் தேவைப்படும் அளவினை புகுத்தி கைப்பகுதியின் கீழ் இணைப்பை சரி செய்ய வேண்டும். முதுகுப்பகுதி நிறைவானால், இணைப்புப் பகுதி பின் பகுதியில் இழுக்கப்படும். இதனை அட்ஜஸ்ட் செய்யவும். 2 அங்குலங்களுக்கு அதிகமாக இடுப்பளவு, கூட்ட வேண்டும் எனில் பின் மற்றும் முன்பக்க துண்டுகளில் வெட்டு செய்து அட்ஜஸ்ட்மெண்ட்டை வெளிப்புற இணைப்புகளில் செய்வதைவிட அடிப்படை மாதிரிகளில் செய்வது உகந்தது. பெரிய மார்பகம் - சிறிய வெயிஸ்ட்லைன் பெரிய மார்பகத்துடன் சிறிய வெயிஸ்ட்லைன் இருந்தால் இடுப்பில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து சரியாக பொருந்துதலை மார்பக பகுதியில் ஏற்படுத்தலாம். பின்புற இடுப்பு பகுதியில் சிறு பார்ட்டை இடுப்பின் பக்கப் பகுதியில் செய்து வெயிஸ்ட்லைனில் இருந்து ஆர்ம்ஹோல் வரை) இடுப்பு பகுதியை சிறிதாக்கலாம். முன்பக்க வெயிஸ்ட்லைனை, ஆழமான வெயிஸ்ட் லைன் டார்ட் எடுத்து சிறிதாக்கலாம். பார்ட்டை வெளிப்புற டார்ட்லைன் ஓரங்களில் செய்து பொருந்துமாறு செய்யலாம். மாதிரியில், முன்பக்க பார்ட்டை டார்ட்லைனின் வெளிப்புற ஓரத்தில் சற்று ஆழமாக செய்ய வேண்டும். அப்போதுதான் ஸ்கர்ட் மற்றும் உடற்பகுதி பார்ட்கள் மேற்பகுதியோடு இணைந்து தொடர்ச்சியாக இருக்கும். பின்புற மாதிரியை அட்ஜஸ்ட் செய்க. பின்புற பார்ட்களை ஆழமாக செய்யக்கூடாது. ஏனெனில் பின்பகுதி புடைத்து உருண்டையான தோள்களாக காட்டும். சிறிய ஹிப்பிற்கு பொருத்துமாறு செய்தல் மேற்பகுதி பாடிஸ் பார்ட் மற்றும் ஸ்கர்ட் டார்ட்களை இணைக்க வேண்டும். பாடிஸில் முன் பின் பக்கத்தில் மத்தியை நோக்கியுள்ள டார்ட்கள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். வெளிப்புற கோட்டில் டார்ட்கள் எடுக்க வேண்டும். வெயிஸ்ட் மற்றும் ஹிப் மாதிரியை விட சிறிதாக இருந்தால், மாதிரியின் முழு நீளத்திற்கும் ஒரு டக் எடுத்து, அதே பகுதியில் மாதிரியில் மடித்து விட வேண்டும். ஹிப் பகுதி மட்டும் சிறிதாக இருந்து, அட்ஜஸ்ட்மென்ட் தேவைப்பட்டால், அதிகப்படியான மடிப்புகளை மஸ்லினில் பக்கவாட்டு இணைப்பில் மடித்துவிட்டு பொருந்துமாறு செய்ய வேண்டும். மாதிரியிலும் இதே அளவினை வெட்டும் முன் மடித்து விட்டுவிடவும் அல்லது நிறைவு செய்யப்பட்ட ஆடையில் இணைப்புப் பகுதியில் விட்டுவிடவும். ஸ்கர்ட்டின் முன், பின் பக்கத்தில் டார்டின் கீழ் பஃப் இருந்து ஃபிட் ஆகாமல் இருந்தால் ஆழமான பார்ட்கள், தேவைக்கு அதிகமாக நல்ல வடிவத்தை பெறலாம். பாவாடையில் ஹிப் பகுதியில் பக்கவாட்டில் மடிப்புகள் வைத்து, பக்கவாட்டு இணைப்பில் வெட்டு செய்யப்பட்ட பகுதி நோக்கி பார்ட்கள் அமைத்து ஸ்கர்ட்டை வடிவம் பெற செய்யலாம். பாவாடையின் மாதிரியில் மேல் பகுதியில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் செய்து உடலமைப்பு குறைபாடுகளை சரிசெய்து, வெயிஸ்ட்டில் சரியாக பொருந்துமாறு செய்யலாம். தட்டையான பின் பகுதி (flat derriere) பின்பகுதி தட்டையாக இருந்தால், மாதிரி துண்டில் பின்புற டார்ட்டை பிரித்து அதை சிறிதாக்கவும். அதிகப்படியான துணியை மடித்து குண்டூசியால் குத்தி இணைக்கவும். சில சமயங்களில் இவ்வகை உடலமைப்பால் ஸ்கர்ட் பின்னோக்கி தொங்கிக் கொண்டிருக்கும். இதை தவிர்க்க ஸ்கர்ட்டின் மேல்பகுதி அல்லது வெயிஸ்ட் லைன்க்குக் கீழே டார்ட் பிடிக்கவும். பெரிய இடுப்பெலும்பு உடையவர்களுக்கு இது இளவயதினருக்கு பிரத்யேகமாக ஏற்படும் குறைபாடாகும். இடுப்பு எலும்பு துருத்திக் கொண்டு, பக்கவாட்டிலும் முதுகின் மத்திய பகுதியிலும் பொருந்தாமல் போகும். பாவாடையின் முன்பக்கமாக உள்ள பார்ட்களை பெரிய இடுப்பெலும்பு உள்ளவர்களுக்கு ஆழமாக வைக்க வேண்டாம். மார்பகம் சரியாக பொருந்தவும். வெயிஸ்ட்லைன் சிறியதாக்கும்போது, முன்பக்க பாடிஸ் பார்ட்களை ஆழமாக வைத்து சரியாக பொருந்தச் செய்ய வேண்டும். ஆனால் பின் முதுகு டார்ட்கள், ஆழமாக்கப்படுவதில்லை. ஏனெனில், உடலமைப்பினை உருண்ட தோள்பட்டை கொண்டதாகக் காட்டும். ஸ்வே பேக் (Swayback) இந்த உடலமைப்பில் உள்ள குறைபாட்டில், வெயிஸ்ட் லைன்க்கு சற்று கீழ் ஸ்கர்ட்டின் மேல் குறுக்காக மடிப்புகள் உருவாகும். இந்த மடிப்பை குண்டூசி உதவியால் ஸ்கர்ட்டின் மேல் பகுதியில் குறுக்காக மடித்து பின் செய்யவும். நூலின் திசையை சரிபார்க்கவும். நூலின் திசை முழுமையாக ஹிப் பகுதியில் சீராக இருப்பதை உறுதி செய்யவும். மாதிரியில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட்களை அதே இடத்தில் செய்ய வேண்டும். பருத்த அடிவயிறு இந்த குறைபாட்டில், ஸ்கர்ட் முன்புறம் மத்தியில் தூக்கிகொண்டு இருக்கும் இதனை சரிசெய்ய, முன்பக்க மத்திய பகுதியில் வெயிஸ்ட் லைனில் பிரித்து, தேவையான அளவு துணி இணைத்து அதிக நீளத்தை வெயிஸ்ட் லைனில் குறுக்காக கொடுத்து, ஸ்கர்ட் நீளம் குறையாது இருக்கச் செய்யலாம் சைடு சீம் லைனில் வெட்டு செய்து ஸ்கர்டின் வடிவத்தை சரி செய்யலாம். மாதிரியிலும் இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவும். ஸ்கர்ட் வெயிஸ்ட் லைனை அதிகரித்தல் ஸ்கர்ட்டின் வெயிஸ்ட் அளவை மாதிரியில் சைடு சீமை அதிகமாக்குவதன் மூலம் அதிகமாக்கலாம். பாடிஸ் வெயிஸ்ட் லைனில் திருத்தியமைக்க வெயிஸ்ட் அளவில் வெட்டுவது போல் ஸ்கர்ட்டில் வெட்டுவது கிடையாது. பாடிஸ் வெயிஸ்ட்லைனை அதிகமாக்கிய அதே பாயிண்ட்டில், அதே அளவில் ஸ்கர்ட் வெயிஸ்ட் அளவையும் அதிகமாக்கவும். அதாவது, ஸ்கர்ட்டின் முன்மாதிரி துண்டில் மட்டும் அல்லது பின் மாதிரி துண்டில் மட்டும் அல்லது இருமாதிரி துண்டுகளிலும் சைடு சீமின் அளவை அதிகப்படுத்துவதன் மூலம் வெயிஸ்ட் லைனை அதிகரிக்கலாம். ஸ்கர்ட் வெயிஸ்ட் லைனை குறைக்க வெயிஸ்ட் அளவை குறைக்க, வெயிஸ்ட் லைனில் இருந்து இடை வரை ஒரு டார்ட்டை மடிக்கவும். பாடிஸ் அளவு போல ஸ்கர்ட் அளவிற்கும் திருத்தியமைக்கவும். ஹிப்பை விட வெயிஸ்ட் அளவு சிறியதாக இருந்தால், ஸ்கர்ட்டின் ! பின் பக்க வெயிஸ்ட்டில் பொருத்தமான சற்று ஆழமான டார்ட்கள் வைத்து, திருத்தியமைக்கவும். பார்ட்களை பக்கவாட்டில் அட்ஜெஸ்ட் செய்து பார்ட்டின் வெளிப்புற கோட்டில் வெட்டி சிறிதாக்கவும். தேவையற்ற அதிகப்படியான அளவினை வெயிஸ்ட் மற்றும் இடைபகுதியில் மடித்து டக் செய்து மாதிரியின் நீளத்தில் குறைக்கவும். மாதிரியில் இதுபோல் சரிசெய்யவும். வயிறு தட்டையாக இருந்தாலொழிய பொதுவாக இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட் முதுகு பகுதியில் மட்டுமே தேவைப்படும். முழு ஹிப்புக்கும் பொருந்தச் செய்தல் மாதிரி அளவை விட ஹிப் அகலமானதாக இருந்தால், மஸ்லினில் இணைப்பை கத்தரிக்கவும். ஆடையை வெட்டும்போது தேவையான அளவு துணியை அந்த இடத்தில் சேர்க்கவும். அதிக அளவில் இடையில் சேர்க்க வேண்டியது இருந்தால் (வெயிஸ்ட்டில் சேர்க்க வேண்டாம். மாதிரியில் ஹெம்மில் இருந்து வெயிஸ்ட் வரையில் 4 அங்குலங்கள் பக்கவாட்டு சீமில் இருந்து வெட்டவும். சரியாக தேவைப்படும் ஹிப் அளவுக்கு மஸ்லினை விரித்து, துண்டு துணியை குண்டூசியால் குத்தி வைக்கவும். மாதிரியில் சரிசெய்ய, பக்கவாட்டு இணைப்பில் அதே அளவினை கூட்டவும். ஹிப்பின் முழு பகுதிக்கும் ஹெம் லைனுக்கும் உள்ள அளவானது ஒரே அளவாக சமமாக இருக்க வேண்டும். மாதிரியில் திருத்தப்பட்டதை வெயிஸ்ட்லைன் டார்ட்களை மீண்டும் குறிக்கவும். வெயிஸ்ட் அளவு அதிகரிக்க வேண்டுமானால் அதிகமான அளவினை வெயிஸ்ட் இணைப்பின் வெளிப்பகுதியில் சேர்க்க வேண்டும். கூரான கைமூட்டுக்கள் கை மூட்டு கூர்மையாக இருந்தால், டார்ட்கள் சரியாக இருந்தாலும், கைப்பகுதி அதிக இறுக்கமாக தோள் பகுதியிலிருந்து இழுத்துக் கொண்டிருக்கும். கைமூட்டு பகுதியில் அதிகமான துணி தேவைப்படும். ஆகவே ஒவ்வொரு பார்ட்டையும் சற்று ஆழமாக வைத்து, முட்டியை மடக்கி பார்த்து சோதனை செய்யவும். செளகர்யமாக தோன்றும் போது அதிகமாக சேர்க்கப்பட்ட அளவினை குறித்து எடுத்துக் கொள்ளவும். கை மாதிரியை அட்ஜஸ்ட் செய்யும்போது, பார்ட்டின் மத்தியில் வெட்டி கை இணைப்பின் உட்பக்கம் வரை வெட்டவும். பிறகு தேவையான அளவு டார்ட்டை விரிக்கவும். டார்ட்கள் தைத்தபின் ஆழமானவைகள். மூட்டு பகுதியில் அதிக இடம் சௌகர்யமான கைப்பகுதியை அமைக்கும் கைப்பகுதி நீளமாகவோ அல்லது குறைவானதாகவே இருப்பின், மாதிரியில் அதே இடத்தில் அட்ஜெஸ்ட் செய்யவும். முழு மேற்கை முழு மேற்கை உடைய உடலமைப்புக்கு, வழக்கமாக கையின் மேல்பகுதியில் அதிக மடிப்பு தேவைப்படும். ஆனால் ஆர்ம்ஹோல் அளவு மாறாது. ஆர்ம்ஹோல் அளவு மாறாமல், கையின் அளவில் மட்டும் திருத்தம் செய்ய வேண்டும். கை நீளத்தின் மத்தியிலிருந்து வெட்டு செய்து விரிக்கவும். பின் தேவையான அளவை குறித்து புதிய மாதிரியை உருவாக்கவும். வெட்டப்பட்ட கையின் பகுதியில் இருந்து பார்ட்களை கையின் மேல் பகுதி நோக்கி எடுக்கவும். டார்ட்கள் ஆர்ம்ஹோல் நோக்கி இருந்தாலும் ஆர்ம்ஹோல் அளவினை மாற்றாது. முடிவுரை உடலமைப்பின் வகை பற்றி வரையறுத்தபின் அடிப்படை மாதிரியில் தேவையான திருத்தம் செய்யலாம். உருவத்தில் தட்டை மார்பும், உருண்டை தோள் போன்ற இரு குறைபாடுகள் இருந்தால் மாதிரியில் இரு வகை உருவத்திற்கும் தேவைப்படும் திருத்தம் செய்ய வேண்டும். இது போல் மஸ்லினில் மாதிரிகளை செய்யலாம். கச்சிதமான பொருத்தம் மற்றும் உடையை எம்மாதிரியான குறைபாடுள்ள உருவத்திற்கும் தயார் செய்யலாம். மாதிரியை திருத்தியமைத்தல் பற்றிய தெளிவான அறிவு, வடிவமைப்பாளர்களுக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய உடைகளை உருவாக்க உதவியாக இருக்கும். ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்