சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் கட்டமைப்பு இயந்திரங்கள் நிறுவ 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை தேவையான பேப்பர் உற்பத்தியான பிளேட்களை இருப்பு வைக்க மற்றொரு அறை 1.5 ஹெச்பி மின் இணைப்பு (ரூ. 3 ஆயிரம்) முதலீடு பேப்பர் பிளேட் இயந்திரம் 1 (ரூ. 1.4 லட்சம்) பேப்பரை 5, 6, 7, 8, 9, 10, 12 ஆகிய இஞ்ச் அளவுகளில் வட்ட வடிவில் வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த அளவுகளில் பிளேட் செய்வதற்கான டை 7 (ரூ. 54 ஆயிரம்) மொத்த முதலீடு ரூ. 1.94 லட்சம் ஆகும். உற்பத்தி பொருட்கள் பாலிகோட் ஒயிட் பேப்பர் (திக் ரகம் டன் ரூ. 72 ஆயிரம், நைஸ் ரகம் ரூ. 40 ஆயிரம்) சில்வர் திக் (டன் ரூ. 38 ஆயிரம்) சில்வர் நைஸ் (டன் ரூ. 30 ஆயிரம்) புரூட்டி பேப்பர் திக் (டன் ரூ. 50 ஆயிரம்) நைஸ் ரகம் (ரூ. 38 ஆயிரம்) பேக்கிங் கவர் லேபிள் செலோ டேப் கிடைக்கும் இடங்கள் பேப்பர் பிளேட் மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர் திக் ஆகியவை சிவகாசியிலும், சில்வர் நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ் ஆகியவை கேரளாவிலும் மலிவாக கிடைக்கின்றன. உற்பத்தி செலவு வாடகை, மின்கட்டணம், உற்பத்தி பொருட்கள், கூலி உள்பட பாலிகோட் ஒயிட் 6 இஞ்ச் பேப்பர் பிளேட் தயாரிக்க 20 பைசா, 7 இஞ்ச் தயாரிக்க 45 பைசா, 8 இஞ்ச் 60 பைசா, 10 இஞ்ச் ரூ. 1, சில்வர் திக் 8 இஞ்ச் ரூ. 1, 10 இஞ்ச் ரூ. 1.30, சில்வர் நைஸ் 6 இஞ்ச் 25 பைசா, 7 இஞ்ச் 45 பைசா, புரூட்டி பேப்பர் 8 இஞ்ச் ரூ. 1, 10 இஞ்ச் ரூ. 1.30 செலவாகிறது. 10 ஆயிரம் பிளேட் தயாரிக்க ஆகும் செலவு ரூ. 7700. மாதத்தில் 25 நாளில் 2.5 லட்சம் பிளேட் உற்பத்திக்கு ரூ. 1.92 லட்சம் தேவை. வருவாய் ஒரு பேப்பர் பிளேட்டுக்கு 20 பைசா லாபம் கிடைப்பதால் தினசரி லாபம் ரூ. 2 ஆயிரம். 25 நாளில் ரூ. 50 ஆயிரம் லாபம் கிடைக்கும். விற்பனை வாய்ப்பு கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். தயாரிப்பு முறை பேப்பர் பிளேட் இயந்திரம் இரண்டு பாகங்களைக் கொண்டது. ஒன்று கட்டிங் மெஷின், இரண்டாவது பேப்பர் பிளேட் டை மெஷின். இரண்டும் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை. தயாரிக்க வேண்டிய பிளேட்டின் அளவுக்குரிய கட்டிங் வளையத்தை கட்டிங் மெஷினில் பொருத்த வேண்டும். கட்டிங் வளையத்துக்கு கீழ் பிளேட்டுக்குரிய பேப்பரை மொத்தமாக வைத்து இயக்கினால் கட்டிங் செய்யப்படும். வட்ட வடிவில் பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். நைஸ் ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கை வரையும் திக் ரகமென்றால் 30 முதல் 40 வரை கட்டிங் செய்யலாம். கட் செய்த பேப்பர்களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்களாக மாறும். பேப்பரை பிளேட்டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும். நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும். 40 பிளேட்களாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர் பிளேட் விற்பனைக்குத் தயார். பேப்பர் பிளேட் இயந்திரங்களை விற்பனையகங்களில் பார்வையிடலாம். அரை மணி நேரத்தில் இயக்குவதை கற்றுக் கொள்ளலாம். எளிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த தொழிலுக்கு மதிப்பு கூடி வருவதால் வங்கிகள் எளிதாக கடன் உதவி வழங்குகின்றன. ஆதாரம்: குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம் (MSME DI)