தமிழக அமைச்சரவை முதல் அமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 9 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். திரு சி. ஜோசப் விஜய் - முதல்-அமைச்சர் - பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், இளைஞர் நலன், மாற்றுத் திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் . திரு. என். ஆனந்த் - ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் - ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டங்கள். திரு. ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை (PWD) மற்றும் விளையாட்டு மேம்பாடு அமைச்சர் -பொதுப்பணிகள், (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்),விளையாட்டு மேம்பாடு டாக்டர். கே. ஜி. அருண்ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு திரு. கே. ஏ. செங்கோட்டையன் - நிதி அமைச்சர் - நிதித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள் திரு பி. வெங்கடரமணன் - உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு. திரு ஆர். நிர்மல் குமார்- மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், ஊழல் தடுப்பு, தேர்தல் திரு ராஜ் மோகன் - பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் - பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம். டாக்டர் டி. கே. பிரபு - இயற்கை வளங்கள் (கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்) துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா - தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் ஆதாரம்:தமிழ்நாடு அரசு