பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் 21.08.2026 அன்று நிறைவடைந்தது. இக்கூட்டத்திற்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பிரேசில், ஈரான், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு, சீனா, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ரஷ்யா ஆகிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. ஜெய்ப்பூர் பிரகடனம் ஜெய்ப்பூர் பிரகடனமானது, இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது பிரிக்ஸ் சுற்றுலாப் பணிக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும், முன்னுரிமை அம்சங்களையும் பிரதிபலிக்கிறது. பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்களால் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனம், சுற்றுலாவில் பொறுப்பான, பாதுகாப்பான டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் ஆற்றலை அங்கீகரிக்கிறது. அத்துடன் சுற்றுலாத் திட்டமிடல், இலக்கு மேலாண்மை, பார்வையாளர் சேவைகள், பன்மொழித் தொடர்பு, பயண வசதி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க வகை செய்கிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302067®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்