தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறை (DoP), தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS-அனைத்து குடிமக்களுக்கான மாதிரித் திட்டம்), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் [Pension Fund Regulatory and Development Authority (PFRDA)] நிர்வகிக்கப்படும் இந்திய அரசின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை, அதன் குறிப்பிட்ட சில அஞ்சலகங்கள் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் நேரடியாக வழங்கி வருகிறது. அஞ்சல் துறை தேசிய ஓய்வூதியத் திட்டத்தை NPS-அனைத்து குடிமக்களுக்குமான மாதிரித் திட்டம்) 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ஆன்லைன் முறையில் வழங்கி வருகிறது. 18-70 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் "தேசிய ஓய்வூதிய அமைப்பு-ஆன்லைன்" என்ற மெனு தலைப்பின் கீழ் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.indiapost.gov.in) சென்று இந்த ஆன்லைன் வசதியைப் பெறலாம். குறிப்பிட்ட இணைப்பிற்கான இணையதள முகவரி: https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/NPS.aspx இந்த இணையதளத்தில் புதிய பதிவு, ஆரம்ப / அடுத்தடுத்த பங்களிப்பு மற்றும் முறையான முதலீட்டுத் திட்டம் SIP / Options போன்ற வசதிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும். அஞ்சல் துறையின் NPS சேவைக் கட்டணம் மிகக் குறைவானது. சந்தாதாரர்கள் நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, வருமானவரிச் சட்டம் பிரிவு 80CCD 1(B)-ன் கீழ் NPS-ல் வரி கழிவு பெறத் தகுதியுடையவர்கள். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் அலுவலகம்