வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும் பொழுது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் [Know Your Customer (KYC)] ஒரு அடையாளம் மற்றும் இருப்பிடச் சான்றுக்கான ஒரு நகல் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை ஒரு வங்கிக் கணக்கைத் திறக்கப் போதுமானது. உங்களது ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு அல்லது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்ட [(National Rural Employment Guarantee Act (NREGA)] அட்டை ஆகியவை அடையாளம் மற்றும் இருப்பிடம் ஆகிய இரண்டிற்குமான சான்றாகிறது. வருமான வரித்துறையின் நிரந்தரக் கணக்கு எண் (PAN) அடையாளச் சான்றாக மட்டுமே விளங்குகிறது. நீங்கள் வங்கியிடம் சமர்ப்பிக்கும் ஆதாரச் சான்றில் உள்ள முகவரி, தங்களுடைய தற்போதைய முகவரியாக இல்லையென்றால், உங்களது தற்போதைய முகவரிக்கான சுய சான்றிதழை கையெழுத்திட்டுக் கொடுத்தால் போதுமானது. "அடையாள மற்றும் இருப்பிடச்சான்று" இல்லாமலே நீங்கள் வங்கியில் "சிறு கணக்கு" என்று சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். இதற்கு உங்களது சமீபத்திய புகைப்படம் மற்றும் கையெழுத்து தேவை. உங்கள் கணக்கில் ரூ. 50000 வரை வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதத்திற்கு ரூ. 10000 வரை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் மொத்த வரவு ரூ. 1 லட்சம் வரை இருக்கலாம். ஆதாரம்: நிதியியல் சேர்க்கை மற்றும் மேம்பாட்டுத் துறை மத்திய அலுவலகம்