வரவு/செலவு திட்டமிடுதல் மற்றும் சேமிப்பு எதிர்காலத்திற்கான வரவு செலவைத் திட்டமிடுவதையே வரவு/செலவு திட்டம் (பட்ஜெட்) எனலாம். அதை வழிகாட்டியாகக் கொண்டு செலவு மற்றும் சேமிப்பைத் திட்டமிடலாம். ஒவ்வொரு குடும்பமும் வரவு மற்றும் செலவிற்கான பட்ஜெட்டைத் தயாரித்து. அதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மாதாந்திர பட்ஜெட்டைத் தயாரித்து செலவுகளை அதற்குள் அடக்குவது சிறந்ததாகும். செலவுக்கு அதிகமாக வரவு இருப்பின் அது உபரி எனப்படும். இந்த உபரி வருவாய் சீரான முறையில் சேமிக்க அல்லது முதலீடு செய்யப்படவேண்டும். எதிர்பாராத நிகழ்வுகளை சந்திக்கவும் (உதாரணம்: விபத்து, இயற்கை சீற்றம், பணி இழப்பு...) அல்லது முக்கியமான பெரிய செலவுகளைச் (உதாரணம்: திருமணம், குழந்தைகளின் கல்வி, பயணங்கள், வீடு, வாகனங்கள் வாங்குதல் போன்றவை) சமாளிக்கவும் இது உதவிடும். வேலை செய்யும் சக்தியை இழந்துவிட்ட காலத்தில் (ஓய்வு, முதுமை...). வாழ்க்கையை நடத்திட சேமிப்பு உதவியாக இருக்கும். சேமிப்பின் முக்கியத்துவம் நாம் செலவழிப்பதற்கு முன்னதாக வருவாயில் ஒரு பகுதியையாவது சேமிக்க வேண்டும். முதலாவதாக, நமது சேமிப்பு பாதுகாப்பான உபகரணங்கள் வடிவில் அல்லது பாதுகாப்பான நிறுவனங்களில் இருக்க வேண்டும். உதாரணமாகப் பாடுபட்டு நீங்கள் சேமித்த பணத்தை அதிகமான இடர்வரவுடைய/நெறிப்படுத்தப்படாத நிறுவனங்களில் முதலீடு செய்தால் உங்கள் சேமிப்பை நீங்கள் இழக்க நேரிடலாம். ஆகவே பாதுகாப்பான உபகரணங்கள் / நிறுவனங்கள் ஆகியவற்றில் சேமித்து வைப்பது அவசியமாகும். இரண்டாவதாக என்பது திட்டமிட்ட அல்லது எதிர்பாராத செலவுகளை சமாளிக்கவே பணத்தை சேமிக்கிறோம். எனவே, உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும் வகையில் உள்ள உபகரணங்கள்/நிறுவனங்களில் சேமித்து வைப்பது சிறந்தது. மூன்றாவதாக, பண வீக்கத்திலிருந்து பாதுகாப்பளிக்கும் வகையில் செய்திருக்கும் சேமிப்பிலிருந்து வருவாய் கிடைக்க வேண்டும். கடன் தினசரி செலவுகளை சமாளிப்பதற்காக இல்லாமல், வருங்காலத்தில் மதிப்புக் கூடும்படி உள்ள சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு கடன் வாங்க வேண்டும். இதற்கு உதாரணமாக வீடு வாங்க அதையே அடமானமாக வைத்துக் கடன் வாங்கலாம். குழந்தைகளின் உயர் கல்விக்குக் கடன் வாங்கலாம். வங்கியா/அடகுக் கடையா? எப்போதுமே அடகுக் கடையை விட வங்கியே சிறந்தது. ஏனெனில், அது இந்திய ரிசர்வ் வங்கியால் நெறிமுறைப்படுத்தப்படுகிறது. வங்கிகளின் செயல்பாடுகள் வெளிப்படையானவை. வட்டிக் கடைக்காரர் போல் அதிகமான கட்டணங்களை அவை வசூல் செய்வதில்லை. வங்கிகள் ஆவணப்படுத்தப்பட்ட புகார் தீர்வு செயல்முறைகள் வங்கிகளால் பின்பற்றப்படுகின்றன. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்