ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2025 மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2025-ஐ மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா முன்னதாக மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த மசோதாவை தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்குமாறு அமைச்சர், மக்களைவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குழுவின் உறுப்பினர்களை மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுப்பார். மேலும் குழு அடுத்த அமர்வின் முதல் நாளுக்குள் தமது அறிக்கையை அளிக்கும். இந்த நடைமுறை, பல சட்டங்களில் சிறு குற்றங்களை முறையாக குற்றமற்றதாக்குவதற்கான முதல் ஒருங்கிணைந்த சட்டமான ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்தம்) சட்டம், 2023 இன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டது. ஆகஸ்ட் 11, 2023 அன்று அறிவிக்கப்பட்ட 2023 சட்டம், 19 அமைச்சகங்கள்/துறைகளால் நிர்வகிக்கப்படும் 42 மத்திய சட்டங்களில் 183 விதிகளை குற்றமற்றதாக்கியது. 2025 மசோதா, 10 அமைச்சகங்கள்/துறைகளால் நிர்வகிக்கப்படும் 16 மத்திய சட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த சீர்திருத்த செயல்திட்டத்தை விரிவுபடுத்துகிறது. மொத்தம் 355 விதிகள் திருத்தம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளன - வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக 288 விதிகள் குற்றமற்றதாக்கப்பட்டன, மேலும் வாழ்க்கையை எளிமையாக்குவதற்காக 67 விதிகள் திருத்தம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளன. ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்தம்) மசோதா, 2025, புது தில்லி நகராட்சி கவுன்சில் சட்டம், 1994 (என்டிஎம்சி சட்டம்) மற்றும் மோட்டார் வாகனச் சட்டம், 1988 ஆகியவற்றின் கீழ் வாழ்க்கையை எளிமையாக்குவதற்காக 67 திருத்தங்களையும் முன்மொழிகிறது. மசோதாவின் முக்கிய அம்சங்கள் முதல் முறை மீறல்கள்: 10 சட்டங்களின் கீழ் 76 குற்றங்களுக்கு ஆலோசனை அல்லது எச்சரிக்கை நடவடிக்கை. குற்றமற்றதாக்குதல்: சிறிய, தொழில்நுட்ப அல்லது நடைமுறை தவறுகளுக்கான சிறைத்தண்டனை விதிகள், ரொக்க அபராதங்கள் அல்லது எச்சரிக்கைகளாக மாற்றப்படுகின்றன. தண்டனைகளை பகுத்து விதித்தல்: அடுத்தடுத்த குற்றங்களுக்கு படிப்படியாக கூடுதல் அபராதங்கள் விதிக்கப்பட்டு, விகிதாச்சார அடிப்படையில் அபராதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. தீர்ப்பு வழிமுறைகள்: நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நிர்வாக செயல்முறைகள் மூலம் அபராதங்களை விதிக்க அதிகாரம் பெற்றவர்கள் ஆகிறார்கள். இதன் மூலம் நீதித்துறை சுமையைக் குறைக்கிறார்கள். அபராதங்கள் மற்றும் தண்டனைத் தொகையில் திருத்தம்: சட்டத் திருத்தங்களுக்கு அவசியமின்றி குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைப் பராமரிக்க ஒவ்வொரு மூன்று வருடங்களில் அபராதத் தொகையில் 10% அதிகரிப்பு. தேயிலைச் சட்டம், 1953, சட்ட அளவியல் சட்டம், 2009, மோட்டார் வாகனச் சட்டம், 1988, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 ஆகிய நான்கு சட்டங்கள் ஜன் விஸ்வாஸ் சட்டம், 2023-ன் ஒரு பகுதியாக ஆனது. தொடர்ந்து தற்போதைய மசோதாவின் கீழ் கூடுதலாக குற்றச் செயலற்றவையாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளன. ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்தம்) மசோதா, 2025 இந்தியாவின் ஒழுங்குமுறை சீர்திருத்த பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இது "குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்" என்ற அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியையும் மேம்பட்ட வணிகம் செய்வதற்கான எளிமையையும் ஊக்குவிக்கும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்