பரஸ்பர நிதி என்றால் என்ன?

பரஸ்பர நிதி என்பது பொதுவான நிதி இலக்குகளைப் பகிர்ந்து கொள்ளும் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் பணத்தை அதன் திட்டங்களில் சேர்க்கும் நிறுவனம் ஆகும். கடன் பத்திரங்கள் பணச் சந்தை ஆவணங்கள் போன்ற பல்வேறு வழிகளில் முதலீடு செய்யலாம்.

திட்டம் என்றால் என்ன?

பொதுமக்கள் சந்தா செலுத்தி வாங்குவதற்கு பரஸ்பர நிதிகள் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. ஒவ்வொரு திட்டமும் குறிப்பிட்ட முதலீட்டு நோக்கத்தைக் கொண்டுள்ளது. உதாரணமாக, நிலையான வருவாய் போனற முதலீடுகளை செய்கையில் திட்டத்தின் நிதி மேலாளர் முதலீட்டு நோக்கத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதில் உள்ள பயன்கள் என்ன?

பரஸ்பர நிதிகள் தாம் திரட்டிய தொகையை நிர்வகித்தல், முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP) முறையாக பணத்தைத் திரும்ப பெறும் திட்டங்கள் (SWP) போன்ற முதலிட்டு வசதிகளில் முதலீடுகளை வகைப்படுத்துதல் ஆகியவற்றில் நிபுணத்துவத்தை அளிக்கிறது.

பரஸ்பர நிதி மற்றும் திட்டங்களின் விவரங்களை எங்கு பெறலாம்?

நீங்கள் செபி (SEBI) வலையதளங்களிலிருந்து செபியிடம் (SEBI) பதிவு செய்திருக்கும் பல்வேறு பரஸ்பர நிதிகளின் விவரங்களைப் பெறலாம். பரஸ்பர நிதிகளின் பல்வேறு திட்டங்கள் பற்றிய விவரங்களை இந்திய பரஸ்பர நிதிகள் சங்கத்தின் (AWFI) வலைதளம் அல்லது சம்பந்தப்பட்ட பரஸ்பர நிதி வலைதளத்திலிருந்து பெறலாம்.

செய்ய வேண்டியவை

உங்கள் முதலீடுகளின் மதிப்பு சந்தையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்பட்டது. உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானங்கள் அளிக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களிடம் PAN, வங்கி கணக்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தில் சரியாக விவரங்களை அளியுங்கள்.

திட்ட தகவல் ஆவணம் (SID) முக்கிய தகவல் குறிப்பானையை (KIM) பார்வையிடும் போது பின்வருபவற்றை கவனியுங்கள்.

முதலீட்டு நோக்கம்

சொத்து ஒதுக்கீடு

அபராதங்கள் நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவை அடங்கிய அபாய காரணிகள்.

திறனளவுடன் (benchmark) ஒப்பிடுகையில் திட்டத்தின் செயல்திறன்.

முதலீட்டு உத்தி

நிதி மேலாளர் பற்றிய விவரங்கள்

கட்டணங்கள் (அ) கழிவுகள் (entry/exit/loads).

யூனிட் ஹோலடர்களின் உரிமைகள்

பரஸ்பர நிதியின் மற்ற திட்டங்களிலிருந்து இந்த திட்டம் எப்படி வித்தியாசமானது.

NFO விற்கு முடங்கிய தொகையால் ஆதரிக்கப்பட்ட விண்ணப்பத்தை (ASBA) பயன்படுத்துங்கள்,

கணக்குடைய பெறுநர் பெயரலான காசசசோலைகள் /வரைவோலைகள் /மின்னனு நிதிய மாற்றீடு மூலமாக மட்டும் கட்டணங்களை செலுத்துங்கள்.

ஏதேனும் சந்தேகம்/ குறையிருந்தால், பரஸ்பர நிதியின் இணக்க அதிகாரியைத் (compliance officer) தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் குறை தீர்க்கப்படவில்லையென்றால் செபி (SEBI) யை அணுங்குகள்.

செய்யக்கூடாதவை

நடைமுறைக்குப் புறம்பான / உத்தரவாதமளிக்கப்பட்ட ஆதாயங்களை எதிர்ப்பாக்காதீர்கள்.

கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்

SID/KIM ஐ படிக்காமல் முதலீடு செய்யாதீர்கள்

மக்கள் தொடர்பு ஊடகத்தில் நடைமுறைக்குப் புறம்பான லாபங்கள் மற்றும் எதிர்பாரான லாபங்களை உறுதியளிக்கும் விளம்பரங்கள் / ஆலோசனைகள் / வதந்திகள் / பொய்யான செய்திகளால் வசப்படாதீர்கள்.

நுண் எழுத்துக்களில் தரப்பட்ட விவரங்களைப் படிக்காமல் கவர்ந்திருக்கும் விளம்பரங்களுக்கு மயங்காதீர்கள்.

உங்கள் முதலீடுகளை ஜோதிட ஊகங்களின்படி செய்யாதீர்கள்.

சந்தை சதந்திகள் / சூடான ஆலோசனைகள்/ வாய்ப்பு ஒரே ஒரு முறை தான் கதவைத் தட்டும் போன்ற அறிவுரைகளுக்கு இரையாகதீர்கள்.

சந்தை கருத்துபோக்குகளால் தடுமாறாதீர்கள்

யாரேனும் ஒருவர் அளிக்கும் வெளிப்படையான / மறைமுகமான வாக்குறுதிகளை வைத்து முதலீடு செய்யாதீர்கள்.

ஊக்கத்தொகை / பரிசுகள்/துாண்டுலின் பேரில் எந்த திட்டத்தில் முதலீடு செய்யாதீர்கள்.

மனக்கிளர்ச்சியானல் (impulse) முதலீட்டில் ஈடுபடாதீர்கள்.

விண்ணப்பப் படிவத்தில் தவறான / நேர்மாறான / முழுமையற்ற தகவலை அளிக்காதீர்கள்.

விண்ணப்பப் படிவத்தை சேதப்படுத்தாதீர்கள்,

உரிமைகள்

வேண்டுகோளின்படி பரஸ்பர நிதியிடமிருந்து கூடுதல் தகவல் அறிக்கை (SAI) , SID அல்லது KIM ஐ பெறுவது.

எந்தசவித கட்டணம் இல்லாமல்

ஒவ்வொரு சந்தா / SIP யின் மொத்த மதிப்பில் ருபாய் 10,000/-க்கு குறைவான தொகை முதலீடு செய்வது.

நேரடியாக பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது.

பெறுவது

NFO முடிவடைந்த 5 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப (refund) பெறுவது.

அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் லாபத் தொகை

வேண்டுகோள் விடுத்தால் 10 வேலை நாட்களுக்குள் மீட்புத் தொகை.

லாபப் பங்கு, மீட்புத் தொகை மற்றும் திரும்ப பெறும் தொகை, ஆகியவற்றுக்கு மேலே குறிப்பிட்டுள்ள காலத்திற்கு பிறகு தாமதமானாடல ஒரு வருடத்திற்கு 15சதவீதம் வட்டியைப் பெறுவது.

ஏற்கனவே உள்ள விநியோகஸ்தரிடமிருந்து மறுப்பின்மைச் சான்றிதழ் (NOC) கோராமல் விநியோகஸ்தரை மாற்றுவது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. பரஸ்பர நிதியக திட்டங்களின் வகைகள் யாவை?

வரையறை செய்யப்படாத நிதிகள் மற்றும் வரையறை செய்யப்பட்ட நிதிகள்

2. வரையறை செய்யப்படாத நிதிகள் என்றால் என்ன?

இவ்வகை நிதியில், பங்குகள் அல்லது அலகுகள் அவ்வப்போது அறிவிக்கப்படும். நிகரச் சொத்து மதிப்பீட்டின்படி கணக்கிடப்படுகிறது. இம்முறையில் முதலீட்டாளர்கள் எளிதில் வாங்கவும் விற்கவும் முடிகின்றது.

3. வரையறை செய்யப்பட்ட நிதிகள் என்றால் என்ன?

இவ்வகை நிதியில், முதலீட்டாளர்கள் முதிர்வு காலம் முடிந்து அலகுகள் மீட்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். இருந்த போதிலும், இவ்வித நிதிகளின் அலகுகள் பங்கு மாற்றகங்களில் பட்டியலிடப்படுவதால் இவற்றை எளிதில் வாங்கவும் விற்கவும் முடிகிறது. மேலும் பங்கு ஒப்புதல் பட்டியல் முடிவதற்கு ஆறு மாதத்திற்கு முன்னர் அவை பட்டியலிடப்பட வேண்டும்.

ஆதாரம்: பரஸ்பர நிதிகள்