முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை திட்டத்தின் குறிக்கோள் முதியோர், விதவை, முதிர்கண்ணி, ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அவர்களது சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில்மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல் அளிக்கும் உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு (அ) ரூ.1500/- வீதம் விதவைகளுக்கும், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கும், முதிர்கன்னிகளுக்கும், திருநங்கைகளுக்கும், முதியோர்களுக்கும் (55 வயது முதல் 59 வயது வரை) உதவித் தொகை வழங்கப்படுகிறது. (ஆ) ரூ.2000/- வீதம் முதியோர்களுக்கு (60 வயது முதல் 79 வயது வரை) உதவித் தொகை வழங்கப்படுகிறது. (இ) ரூ.3000/- வீதம் முதியோர்களுக்கு (80 வயதிற்கு மேல்)உதவித் தொகை வழங்கப்படுகிறது. தகுதிகள் 55 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலரும். 18 வயதிற்கு மேற்பட்ட விதவைகள். கணவரால் கைவிடப்பட்டவர் (ஏழு வருடங்கள் தொடர்ந்துகணவரோடு வாழாதவர்) திருமணமாகாதவர் (40 வயதுக்கு மேற்பட்டமுதிர்கன்னிகள்) திருநங்கை (21 வயதுக்கு மேற்பட்டவர்) இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் விண்ணப்ப படிவத்தில் இணைக்கப்பட்டுள்ள வருமானம்(ரூ.75,000/-), குடியுரிமை மற்றும் அடையாளச் சான்றிதழ் பிறப்பு/வயதுக்கான சான்றளிக்கப்பட்ட நகல் குடும்ப உணவு பங்கீடு அட்டை அல்லது தேர்தல்அடையாள அட்டையில் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பதாரர் விதவை எனில், கணவருடைய இறப்புச்சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பதாரர் கணவரால் கைவிடப்பட்டவர் எனில்சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊர் பஞ்சாயத்து அல்லதுஅங்கன்வாடி ஊழியரிடமிருந்து, விண்ணப்பதாரர்கணவரிடமிருந்து 7 வருடங்கள் அல்லது அதற்கு மேல்பிரிந்து வசிக்கிறார் என்பதற்கான சான்றிதழ் மற்றும்உறுதிமொழி ஆவணம் விண்ணப்பதாரர் திருமணமாகாத முதிர்கன்னி எனில்படிவம்-I உறுதி மொழி ஆவணம் விண்ணப்பதாரர் திருநங்கை எனில் 21 வயதுக்குமேற்பட்டவர் என்பதற்கான பிறப்புச் சான்றிதழ் அல்லதுவயது சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் அரசு மருத்துவ அதிகாரியால் அளிக்கப்பட்ட சான்றிதழ் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 1. துணை இயக்குனர் (சமூக பாதுகாப்பு பிரிவு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி 2. குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். 3. நல அதிகாரி, மாஹே. 4. நல அதிகாரி, ஏனாம். மனுக்களை பரிசீலிக்கும் காலம் காலி இடங்களையும் மற்றும் நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும். தாமதம் ஏற்பட்டால் விண்ணப்பதாரர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பெறுபவரின் ஈமச்சடங்கிற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் 1. திட்டத்தின் குறிக்கோள் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பெறும் நபர் இறப்பின், அவரது ஈமச்சடங்கிற்கு நிதியுதவி வழங்குதல் 2. அளிக்கும் உதவித்தொகை ரூ.5,000/- வழங்கப்படுகிறது. 3. தகுதிகள் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பெறுபவரை அவருடைய வாழ்நாளில் பாதுகாத்து அவருடைய ஈமச்சடங்கை செய்தவராக இருத்தல் வேண்டும். உதவித்தொகை பெறுபவர் இறந்த 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 4. இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் முதியோர் விதவை உதவித்தொகை அடையாள அட்டை. ஒரிஜினல் இறப்பு சான்றிதழ். இறந்தவர் மற்றும் விண்ணப்பதாரரின் உறவுமுறையைநிரூபிக்கும் சான்றிதழ். 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 1. துணை இயக்குனர் (சமூக பாதுகாப்பு பிரிவு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி 2. குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். 3. நல அதிகாரி, மாஹே. 4. நல அதிகாரி, ஏனாம். 6. மனுக்களை பரிசிலிக்கும் காலம் நிதிநிலையைப் பொருத்தது 7. தாமதம் ஏற்பட்டால் விண்ணப்பதாரர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். ஏழை மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் 1. திட்டத்தின் குறிக்கோள் தாழ்த்தப்பட்டோ/மீனவர் அல்லாத ஏழை மக்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை இலவச வேட்டி சேலை வழங்குதல் 2. அளிக்கும் உதவி குடும்பம் ஒன்றிற்கு வருடத்திற்கு ஒரு முறை இரு புடவை, ரவிக்கை துண்டு, கைலி மற்றும் துண்டு வழங்கப்படும். 3. தகுதிகள் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையினரால் வழங்கப்பட்ட சிவப்புநிற அட்டைத்தாரர்கள் (மீனவர்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் நீங்கலாக). 4. இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் இதற்கென தனியாக விண்ணப்பம் தேவையில்லை. சிவப்பு உணவு பங்கீட்டு அட்டைத்தாரர் அருகில் உள்ள அங்கன்வாடியில் பதிவு செய்து இருத்தல் வேண்டும். 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 1. துணை இயக்குனர் (சமூக பாதுகாப்பு பிரிவு ) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி 2. குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். 3. நல அதிகாரி, மாஹே. 4. நல அதிகாரி, ஏனாம். 6. மனுக்களை பரிசிலிக்கும் காலம் பொருந்தாது. 7. தாமதம் ஏற்பட்டால் விண்ணப்பதாரர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான உதவித்தொகைத் திட்டம் 1. திட்டத்தின் குறிக்கோள் காசநோய்/புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியோர்/விதவை உதவித் தொகை பெறுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பொருட்டு அவர்தம் மருத்துவ செலவுக்காக மாதம் ரூ.100/-நிதியுதவி அளித்தல் 2. அளிக்கும் உதவித்தொகை முதியோர் உதவித்தொகையல்லாது கூடுதலாக பிரதி மாதம்ரூ.100/- வழங்கப்படுகிறது. 3. தகுதிகள் முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் காசநோய் மற்றும்புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் 4. இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் புதுச்சேரி அரசு மருத்துவரின் சான்றிதழ் முதியோர் உதவித்தொகை அடையாள அட்டையின் நகல் 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 1. துணை இயக்குனர் (சமூக பாதுகாப்பு பிரிவு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி 2. குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். 3. நல அதிகாரி, மாஹே. 4. நல அதிகாரி, ஏனாம். 6. மனுக்களை பரிசிலிக்கும் காலம் இறந்தவர்களின் காலி இடங்களையும் மற்றும் சிலகாரணங்களால் ஏற்படும் காலி இடங்களையும் நிரப்ப நிதிநிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில்விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும். 7. தாமதம் ஏற்பட்டால் விண்ணப்பதாரர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். ஆதாரம்: புதுச்சேரி அரசு