திட்டத்தின் குறிக்கோள்

வறுமைக்கோட்டிற்குட்பட்ட கருவுற்ற தாய்மார்களுக்கு சத்தான உணவு பெறுவதற்காக (முதல் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்) ரூ. 500/- விதம் வழங்கப்படும்.

உதவித் தொகை

ரூ. 500/- வழங்கப்படுகிறது.

தகுதிகள்

அ) விண்ணப்பதாரரின் வருட வருமானம் ரூ. 24,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

ஆ) விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரோ / அவரது கணவரோ புதுச்சேரி பிரதேசத்தில் 5 ஆண்டிற்குக் குறையாமல் குடியிருப்பு பெற்றிருத்தல் வேண்டும்.

இ) விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.

ஈ) இரண்டு பேறு காலத்திற்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்

உ) கருவுற்ற 7ஆம் மாதத்திற்குப் பிறகுள்ளவரின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

அ) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் வருமானச் சான்றிதழ்

ஆ) அரசு மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ்

இ) மார்பளவு புகைப்படம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

புதுச்சேரி பிராந்தியம்

துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு)

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி.

காரைக்கால்

குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால்.

மாஹே / ஏனாம்

நல அதிகாரி, மாஹே / ஏனாம்.

மனுக்களை பரிசீலிக்கும் காலம்

நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும்

காலதாமதமானால் அணுகவேண்டிய முகவரி

புதுச்சேரி பிராந்தியம்

இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை,

புதுச்சேரி.

காரைக்கால்

மாவட்ட ஆட்சியர், காரைக்கால்.

மாஹே / ஏனாம்

மண்டல நிர்வாகி, மாஹே / ஏனாம்.

ஆதாரம்: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, புதுச்சேரி அரசு