விதவை பெண்களின் மகளுக்கு திருமண உதவி 1. திட்டத்தின் குறிக்கோள் விதவை மகளிர் குடும்பத்தில், திருமண வயதில் உள்ள ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்வதற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது. 2. உதவித் தொகை திருமண செலவிற்காக தலா ரூ.20,000/- வீதம் நிதியுதவி. 3. தகுதிகள் அ) வருட வருமானம் ரூ 24,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஆ) விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமையும், புதுச்சேரி பிரதேசத்தில் 5 ஆண்டிற்கு குறையாமல் குடியிருப்பும் பெற்றிருத்தல் வேண்டும் இ) மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருத்தல் வேண்டும். ஈ) குடும்பத்தில் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் மணமகளுக்கு இதுவே முதலாவது திருமணமாக இருத்தல் வேண்டும். ஊ) திருமணம் சட்ட திட்டத்திற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் 4. இணைக்கப்படவேண்டிய சான்றிதழ்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை திருமணத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். அ) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் வருமானச் சான்றிதழ். ஆ) திருமண அழைப்பிதழ். இ) மணப்பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் ஈ) மணப்பெண்ணின் தந்தையின் இறப்புச் சான்றிதழ். 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். மாஹே/ஏனாம் நல அதிகாரி, மாஹே/ஏனாம். 6. மனுக்களை பரிசீலிக்கும் காலம் நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும் 7. காலதாமதமானால் அணுகவேண்டியமுகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். விதவை மறுமணத்திற்கு ஊக்கத்தொகை 1. திட்டத்தின் குறிக்கோள் விதவைகள் சமுதாயத்தில் நல்ல முறையில் வாழ விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதற்கு 2. உதவித் தொகை ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கப்படுகிறது. 3. தகுதிகள் அ) வருட வருமானம் ரூ 24,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஆ) விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமையும், புதுச்சேரி பிரதேசத்தில் 5 ஆண்டிற்கு குறையாமல் குடியிருப்பும் பெற்றிருத்தல் வேண்டும் இ) மணமகன் திருமணம் ஆகாதவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ இருத்தல் வேண்டும். 4. இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் அ) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை திருமணத்திற்கு 30 நாட்கள் முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். ஆ) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் வருமானச் சான்றிதழ். இ) திருமண அழைப்பிதழ். ஈ) மணப்பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் ஊ) முதல் கணவரின் இறப்புச் சான்றிதழ் 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். மாஹே/ஏனாம் நல அதிகாரி, மாஹே/ஏனாம். 6. மனுக்களை பரிசீலிக்கும் காலம் நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும் 7. காலதாமதமானால் அணுகவேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மணப்பெண்ணின் திருமணத்திற்காக உதவித் தொகை 1. திட்டத்தின் குறிக்கோள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மணப்பெண்ணிற்கு திருமணத்திற்காக உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. 2. உதவித் தொகை திருமண செலவிற்காக தலா ரூ.15,000/- வீதம் நிதியுதவி. 3. தகுதிகள் அ) விண்ணப்பதாரரின் வருட வருமானம் ரூ.24,000/- க்கு மிகாமல்இருத்தல் வேண்டும். ஆ) புதுச்சேரி பிரதேசத்தில் 5 ஆண்டிற்குக் குறையாமல் குடியிருப்பு பெற்றிருத்தல் வேண்டும். இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும் இ) மணப்பெண்ணுக்கு முதல் தடவை நிகழும் திருமணத்திற்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் ஈ) திருமணம் சட்ட திட்டத்திற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். உ) ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் ஊ) மணப்பெண்ணின் வயது 18 முடிந்திருத்தல் வேண்டும். மணமகன் வயது 21 முடிந்திருத்தல் வேண்டும். 4. இணைக்கப்படவேண்டிய சான்றிதழ்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை திருமணத்திற்கு 30 நாட்கள் முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் அ) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்ட குடியிருப்பு மற்றும்வருமானச் சான்றிதழ். ஆ) திருமண அழைப்பிதழ். இ) மணப்பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் ஈ) திருமணத்தை பதிவு செய்திருத்தல் வேண்டும்.திருமணப்பதிவு சான்றிதழ் பதிவு செய்த 30 நாட்களுள் சமர்ப்பித்தல் வேண்டும். 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். மாஹே/ஏனாம் நல அதிகாரி, மாஹே/ஏனாம். 6. மனுக்களை பரிசீலிக்கும் காலம் நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும் 7. காலதாமதமானால் அணுகவேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். குலவிளக்கு உதவி நலத்திட்டம் 1. திட்டத்தின் குறிக்கோள் வறுமைக்கோட்டிற்குட்பட்ட கருவுற்ற தாய்மார்களுக்கு சத்தான உணவு பெறுவதற்காக (முதல் மற்றும் இரண்டு குழந்தைகளுக்குமட்டும்) ரூ.500/- வீதம் வழங்கப்படும். 2. உதவித் தொகை ரூ.500/- வழங்கப்படுகிறது. 3. தகுதிகள் அ) விண்ணப்பதாரரின் வருட வருமானம் ரூ.24,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஆ) விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரரோ/அவரது கணவரோ புதுச்சேரி பிரதேசத்தில் 5 ஆண்டிற்குக் குறையாமல் குடியிருப்புபெற்றிருத்தல் வேண்டும். இ) விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல்வேண்டும். ஈ) இரண்டு பேறு காலத்திற்கு மட்டுமே நிதியுதவிவழங்கப்படும் உ) கருவுற்ற 7ஆம் மாதத்திற்குப் பிறகுள்ளவரின்விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் 4. இணைக்கப்படவேண்டிய சான்றிதழ்கள் அ) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் வருமானச் சான்றிதழ் ஆ) அரசு மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ் இ) மார்பளவு புகைப்படம். 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். மாஹே/ஏனாம் நல அதிகாரி, மாஹே/ஏனாம். 6. மனுக்களை பரிசீலிக்கும் காலம் நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும் 7. காலதாமதமானால் அணுக வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். அரவணைப்பு உதவி நலத்திட்டம் 1. திட்டத்தின் குறிக்கோள் சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் நிலையை உயர்த்துவதற்காகவும், பெண் குழந்தைகளுக்கு கூடுதல் சத்தான உணவளிப்பதற்காகவும், தாய்மார்களுக்கு ரூ.1200/- வீதம் வழங்கப்படுகிறது. 2. உதவித் தொகை ரூ.1200/- வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 3. தகுதிகள் அ) விண்ணப்பதாரரின் வருட வருமானம் ரூ.24,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஆ) விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரோ/அவரது கணவரோ புதுச்சேரி பிரதேசத்தில் 5 ஆண்டிற்குக் குறையாமல் குடியிருப்பு பெற்றிருத்தல் வேண்டும். இ) விண்ணப்பதாரர் 18 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். ஈ) 01-04-2005 முதல் பிறந்த பெண் குழந்தைகளுக்கு விண்ணப்பப்படிவம் வழங்கப்படும். உ) ஒரு தாய் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 4. இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் அ) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் வருமானச் சான்றிதழ் ஆ) குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். மாஹே/ஏனாம் நல அதிகாரி, மாஹே/ஏனாம். 6. மனுக்களை பரிசீலிக்கும் காலம் நிதிநிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும் 7. காலதாமதமானால் அணுக வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம் விதவை மகளிரின் குழந்தைகளின் பள்ளிக்கல்விக்கு உதவித்தொகை 1. திட்டத்தின் குறிக்கோள் விதவை மகளிரின் குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கு உதவிட பாடப்புத்தகம், எழுதுபொருட்கள்வாங்குவதற்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2 உதவித்தொகை முதல் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும்குழந்தைகளுக்கு வருடத்திற்கு ஒரு முறை ரூ.25/முதல் ரூ.120/- வரை வழங்கப்படுகிறது. 3. தகுதிகள் அ) வருட வருமானம் ரூ 24,000/- க்கு மிகாமல்இருத்தல் வேண்டும். ஆ) விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமையும்,புதுச்சேரி பிரதேசத்தில் 5 ஆண்டிற்குகுறையாமல் குடியிருப்பும் பெற்றிருத்தல்வேண்டும் இ) மாணவர் 50% குறையாமல் மதிப்பெண்பெற்றிருத்தல் வேண்டும் 4. இணைக்கப்படவேண்டிய சான்றிதழ்கள் அ) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்டகுடியிருப்பு மற்றும் வருமானச் சான்றிதழ். ஆ) பள்ளியிலிருந்து கல்வித்தகுதிச் சான்றிதழ். 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். மாஹே/ஏனாம் நல அதிகாரி, மாஹே/ஏனாம். 6. மனுக்களை பரிசீலிக்கும் காலம் நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும் 7. காலதாமதமானால் அணுக வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம் விதவை மகளிரின் குழந்தைகளுக்கு தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயில செலவு செய்த கட்டணத்தொகையை திரும்ப அளித்தல் 1. திட்டத்தின் குறிக்கோள் விதவை மகளிரின் குழந்தைகள் தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயில ஊக்குவிப்பதற்காக விதவை மகளிரின் குழந்தைகளுக்கு, சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து பயில செலவு செய்த கட்டணத்தொகையை திரும்ப அளித்தல். 2. உதவித் தொகை மாதத்திற்கு ரூ50/- வீதம் 6 மாதங்களுக்கு தட்டெழுத்து இளநிலைக்கும் 10 மாதங்கள் வரை தட்டெழுத்து மேல்நிலைக்கும் சுருக்கெழுத்துப் பயிற்சிக்கு வழங்கப்படுகிறது. 3. தகுதிகள் அ) வருட வருமானம் ரூ 24,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஆ) விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமையும், புதுச்சேரி பிரதேசத்தில் 5 ஆண்டிற்கு குறையாமல் குடியிருப்பும் பெற்றிருத்தல் வேண்டும் 4. இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் அ) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் வருமானச் சான்றிதழ். ஆ) பயிற்று நிறுவனத்திடமிருந்து சான்றிதழ். 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். மாஹே/ஏனாம் நல அதிகாரி, மாஹே/ஏனாம். 6. மனுக்களை பரிசீலிக்கும் காலம் நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும் 7. காலதாமதமானால் அணுக வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். ஒரு இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட குடும்பத்திற்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை 1. திட்டத்தின் குறிக்கோள் பெற்றோர்களிடம் பெண் குழந்தையை பெற்றுக் கொள்ள விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், குடும்பத்தில் உள்ள பெண் குழந்தையின் நிலையை உயர்த்தவும் 2. உதவித் தொகை ரூ.15,000/- மட்டும் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு,அப்பெண் குழந்தை 18 வயது நிறைவுற்ற பின் வட்டியுடன் கூடிய முதிர்வுத்தொகை அளிக்கப்படும்/இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 7,500/- 3. தகுதிகள் அ) விண்ணப்பதாரரின் வருட வருமானம் ரூ.60,000/- க்குமிகாமல் இருத்தல் வேண்டும். ஆ) பெற்றோரில் தந்தை 21 வயதுக்கும் தாய் 18வயதுக்கும் குறையாமல் இருத்தல் வேண்டும் இ) பெற்றோரில் யாராவது ஒருவர் அரசுமருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்திருத்தல் வேண்டும் ஈ) புதுச்சேரி பிரதேசத்தில் 5 ஆண்டிற்குக் குறையாமல்குடியிருப்பு பெற்றிருத்தல் வேண்டும். இந்தியக்குடிமகனாக இருத்தல் வேண்டும் உ) விண்ணப்பதாரருக்கு ஒன்று (அல்லது) இரண்டுபெண் குழந்தைகள் மட்டுமே இருத்தல் வேண்டும் ஊ) திருமணத்தை பதிவு செய்திருத்தல் வேண்டும். 4. இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் அ) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்ட குடியிருப்புமற்றும் வருமானச் சான்றிதழ். ஆ) விண்ணப்பதாரரின் திருமணப்பதிவு சான்றிதழ். இ) குடும்ப கட்டுப்பாடுச் சான்றிதழ் ஈ) பெற்றோரின் வயதுச் சான்றிதழ் உ பெண் குழந்தை/குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் ஊ ரேஷன் அட்டை நகல் எ குடும்ப புகைப்படம் 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். மாஹே/ஏனாம் நல அதிகாரி, மாஹே/ஏனாம். 6. மனுக்களை பரிசீலிக்கும் காலம் நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்தகாலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்துதேர்ந்தெடுக்கப்படும் 7. கால தாமதமானால் அணுக வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். பணி புரியும் மகளிர்க்கான விடுதி 1. திட்டத்தின் குறிக்கோள் பணியின் காரணமாக வீட்டில் தங்க இயலாத மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான தங்குமிடம் அளிப்பதற்காக. 2. விடுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் விடுதியில் தங்கும் ஒவ்வொருவருக்கும் மெத்தையுடன் கூடிய கட்டில், பூட்டும் வசதியுள்ள அலமாரி,தொலைக்காட்சி, தினசரி, புத்தகங்கள் ஆகியவைகள் வழங்கப்படும். 3. வாடகை மற்றும் உணவுக்கான செலவு வாடகை ரூ. 400/- மாதத்திற்கு. உணவுக்கான ஒரு மாத செலவு விடுதியில் தங்குபவர்கலுக்கு பகிர்ந்துகொள்ளப்படும். 4. தகுதிகள் 1) அரசு அலுவலகங்களில், பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள். 2) தங்குபவரின் மாத வருமானம் ரூ.5000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 5. அளிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் பணி புரியும் அலுவலகத்திலிருந்து வருமானச் சான்றிதழ். 6. யாரிடம் விண்ணப்பிப்பது புதுச்சேரி : துணை இயக்குநர் (மகளிர் நலம்), மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் : குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். 7. பரிசீலனைக்கான காலம் - 8. தாமதமெனில் யாரை அணுகுவது புதுச்சேரி : இயக்குநர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் : மாவட்ட ஆட்சியர், காரைக்கால் ஏழை பெற்றோர்களின் குடும்பத்தில் 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு வரை பயிலும் ஒரே பெண் குழந்தைக்கு உதவித்தொகை 1. திட்டத்தின் குறிக்கோள் ஒவ்வொரு பெற்றோர்களும் பெண் குழந்தையின் மதிப்பை தெளிவாக அறிந்து கொள்ளவும், மேலும் பெற்றோர்கள் அப்பெண் குழந்தையை தங்களுடைய சொத்தாக நடத்தவும், அப்பெண்குழந்தையின் திருமணத்தின் போது பெற்றோர்களின் சுமையை பகிர்ந்து கொள்ளவும் 2. உதவித் தொகை ரூ.24,000/- மட்டும் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அப்பெண் குழந்தை 18 வயது நிறைவுற்ற பின் வட்டியுடன் கூடிய முதிர்வுத்தொகை அளிக்கப்படும் 3. தகுதிகள் அ) பெற்றோரின் வருமானம் ரூ.24,000/- மேல் மிகாமல் இருத்தல்வேண்டும் ஆ) பெற்றோர்கள் இருவரும் இந்திய குடிமைக்களாகவும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவராகவும் அல்லது 5ஆண்டிற்கு குறையாமல் குடியிருப்பு பெற்றிருத்தல் வேண்டும் இ) பெற்றோர்கள் அப்பெண் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரால் பரிந்துரை செய்த சான்றிதழ் அளிக்க வேண்டும் ஈ) பெற்றோர்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தையைத் தவிர வேறு குழந்தையும் இல்லை என்ற சான்றிதழ் அளிக்க வேண்டும் 4. இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் அ) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் வருமானச் சான்றிதழ். ஆ) பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் இ) பெற்றோர்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தையை தவிர வேறு குழந்தையும் இல்லை என்ற சான்றிதழ் அளிக்க வேண்டும் ஈ) பெற்றோர்கள் அப்பெண் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரால் பரிந்துரை செய்த சான்றிதழ் உ) ரேஷன் அட்டை நகல் எ) வாக்காளர் அடையாள அட்டை நகல் ஏ) குடும்ப புகைப்படம் 5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். மாஹே/ஏனாம் நல அதிகாரி, மாஹே/ஏனாம். 6. மனுக்களை பரிசீலிக்கும் காலம் நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும் 7. காலதாமதமானால் அணுக வேண்டிய முகவரி புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். குடும்ப நல ஆலோசனை மையம் 1. திட்டத்தின் குறிக்கோள் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், முதலில் அவரைப்பற்றி அறியச் செய்வதுடன் அப்பிரச்சனையின் மூலக்காரணத்தை புரிய வைத்து இதை தைரியமாக எதிர் நோக்கி பின் அப்பிரச்சனைக்குரிய தீர்வை பாதிக்கப்பட்ட நபரைக் கொண்டே அறியச் செய்தல். 2. இருப்பிடம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, புதுச்சேரி. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்ட அதிகாரி அலுவலகம், திட்டம் – I, II, III, IV & V, புதுச்சேரி மற்றும் காரைக்கால் நல அதிகாரி அலுவலகம், மாஹே மற்றும் ஏனாம் 3. மையத்தை அணுகுவதற்கான முக்கிய காரணங்கள் வரதட்சனை பிரச்சனை குடி பிரச்சனை கணவனால் கைவிடப்பட்டவர்கள் அடிப்படை உரிமை மறுக்கப்படும்பொழுது, தற்கொலை எண்ணத்தை அதிகப்படுத்தும் பொழுது, கணவனுக்கும், மனைவிக்கும் இடையே தீர்வு காணமுடியாத சண்டை சச்சரவுகள் வரும் பொழுது. 4. குடும்ப நல ஆலோசனை குழு குடும்ப நல ஆலோசனை குழுவானது குடும்ப நல ஆலோசகர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், ஆலோசகர்களாகவும் இருந்து தீர்வு காணமுடியாத சிக்கல்கள் நிறைந்த பிரச்சனைகளுக்கு குழுவின் மூலம் தீர்வு ஏற்படச் செய்தல். இந்தக் குழுவின் அமைப்பு பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றவர்களாக இருப்பர். 5. யாரை தொடர்பு கொள்வது 1. திருமதி. ஸ்டெல்லா மேரி, குடும்ப நல ஆலோசகர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, புதுச்சேரி. 2. திரு. சவுந்தரராசு, குடும்ப நல ஆலோசகர், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம், பிரிவு – I, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வில்லியனூர், புதுச்சேரி 3. திரு. ரவிசங்கர், குடும்ப நல ஆலோசகர், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம், பிரிவு - II, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை காரைக்கால் 4. திரு. கிருஷ்ணமூர்த்தி, குடும்ப நல ஆலோசகர், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம், பிரிவு - III, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, அரியாங்குப்பம், புதுச்சேரி. 5. திருமதி. சித்ரா பிரியதர்ஷினி, குடும்ப நல ஆலோசகர், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம், பிரிவு - IV, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, முத்தியால்பேட்டை, புதுச்சேரி 6. குடும்ப நல ஆலோசகர், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம், பிரிவு - V, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சித்தன்குடி, புதுச்சேரி. 7. திரு. முகமது முனவர், குடும்ப நல ஆலோசகர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மாஹே. 6. இதர சேவைகள் குடும்ப பிரச்சனைகளின் தீர்வு சிலவற்றிற்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு தீர்த்து வைத்தல். இலவச சட்ட ஆலோசனை மையம், குறுகிய காலம் தங்கும் விடுதி, வாழ்க்கைக் கல்வி மையம், தொழில் கல்வி மையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் மையம். ஆதாரம்: புதுச்சேரி அரசு