குடும்ப ஆலோசனை மையம்

வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் கூடுதலான பணி சம்மந்தப்பட்ட மன உளைச்சல் ஆகிய காரணங்களால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

குடும்ப ஆலோசனை மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட தம்பதியினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இக்குடும்ப ஆலோசனை மையங்கள் இப்பிரச்சனைகளில் தலையிட்டு தார்மீக மற்றும் மனரீதியான ஆலோசனைகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மையமாக திகழ்கிறது.

குடும்ப ஆலோசனை மையங்களில் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஆலோசகர்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், குடும்ப வன்முறை மற்றும் குடும்ப தகராறுகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனை, பரிந்துரை மற்றும் மறுவாழ்வு அளிக்கும் சேவைகள் அளிக்கப்படுகிறது.

இது அவர்கள் பிரச்சனைகளை கையாள உதவுகிறது. மேலும் வரதட்சணை கொடுமை, குடிப்பழக்கம் மற்றும் எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட நபர்களும் அவர்களின் பிரச்சனைகளை இம்மையங்களை அணுகி தெரிவித்து தேவையான ஆலோசனைகள் பெறலாம்.