நவ்யா திட்டத்தின் கீழ் வளரிளம் பெண்களுக்கு பயிற்சி வளரிளம் பருவச் சிறுமிகளுக்கான தொழிற்கல்விப் பயிற்சி மூலம் லட்சியங்களை வளர்த்தெடுத்தல் திட்டத்தின் (நவ்யா) கீழ், 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1,060 சிறுமிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 100 மாவட்டங்களுக்கு இந்தத் திட்டத்தை 2026 மே 27 முதல் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வளரிளம் பருவச் சிறுமிகளுக்கான தொழிற்கல்விப் பயிற்சி மூலம் லட்சியங்களை வளர்த்தெடுத்தல் திட்டம், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0'-ன் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், பணிபுரியும் இடங்களில் நேரடிப் பயிற்சியை உள்ளடக்கிய, தொழில்துறைக்குத் தேவையான திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், பல்வேறு தொழில் வாய்ப்புக்களைத் தேர்ந்தெடுக்கவும், தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. இந்தத் திட்டத்தில், எதிர்காலத் தேவைக்கேற்ற பணிகளுக்கான பயிற்சிகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அத்துடன், டிஜிட்டல், நிதிசார் அறிவு, பணிக்குத் தயாராதல், தொழில்முனைவோர் மனப்பான்மை போன்றவற்றை உள்ளடக்கிய கட்டாய, முழுமையான மேம்பாட்டுப் பாடத்திட்டம் ஒன்றும் இதில் இடம்பெற்றுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், வளரிளம் பருவச் சிறுமிகளின் வேலைவாய்ப்புத் திறன், பொருளாதாரப் பங்களிப்பு, ஒட்டுமொத்த தொழில் தயார்நிலை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297193®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்