போஷன் டிராக்கர் டிஜிட்டல் செயலி மிஷன் சக்ஷம் அங்கன்வாடி (Mission Saksham Anganwadi ), போஷன் 2.0 (Poshan 2.0) திட்டங்களின் கீழ் வரையறுக்கப்பட்ட குறியீடுகளின் அடிப்படையில், அனைத்து அங்கன்வாடி மையங்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பயனாளிகளை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்கும், அவற்றின் செயல்பாடுகளைப் பின்தொடர்வதற்கும் ஒரு முக்கிய நிர்வாகக் கருவியாக ‘போஷன் டிராக்கர்’ (ஊட்டச்சத்து தடமறிதல்) என்ற டிஜிட்டல் செயலியை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் செயலாக்கத்தை பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் ஆய்வு செய்யவும், திருத்தங்கள் செய்யவும் போஷன் டிராக்கர் (Poshan Tracker) செயலி, அமைச்சகத்திற்கு உதவியுள்ளது. இது, அங்கன்வாடி மையங்களைத் திறப்பது, குழந்தைகளின் தினசரி வருகைப் பதிவு, ஆரம்பகால குழந்தை பராமரிப்பு, கல்வி செயல்பாடுகள், குழந்தைகளின் வளர்ச்சிக் கண்காணிப்பு, சூடான சமைத்த உணவு மற்றும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவுப் பொருள் வழங்குதல், வளர்ச்சி அளவீடு போன்ற அங்கன்வாடி சேவைகளுக்கான தரவுகளை ஏறத்தாழ நிகழ்நேரத்தில் சேகரிக்க வழிவகுத்துள்ளது. போஷன் டிராக்கர் செயலியில் அனைத்துப் பயனாளிகளையும் பதிவு செய்யவும், தரவு உள்ளீடு செய்யவும், கண்காணிக்கவும், அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் அங்கன்வாடிப் பணியாளர்கள், பெண் மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு திறனறி செல்பேசிகளைக் கொள்முதல் செய்வதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் நிதியை விடுவிக்கிறது. வளர்ச்சி கண்காணிப்புக் கருவிகளுக்கும் (பயனாளிகளின் உயரத்தை அளவிடுவதற்கான கருவிகள், தாய் மற்றும் குழந்தையின் எடை அளவிடுவதற்கான கருவி) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது. ஒரு திறனறி செல்பேசிக்கு ரூ. 10,000+ ஜிஎஸ்டி மற்றும் 4 வளர்ச்சி கண்காணிப்புக் கருவிகளுக்கு ரூ. 8,000 என்பது செலவுப் பகிர்வு அடிப்படையில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288793®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்