அ) கூட்டம் மாதத்திற்கு குறைந்தது 2 கூட்டங்கள் நடத்துதல் (15 நாட்களுக்கு ஒரு முறை). வாரக் கூட்டம் நடத்துவது மிகச் சிறந்தது. அனைத்து உறுப்பினர்களும் குழு கூட்ட செயல்பாடுகளில் பங்கேற்பது அவசியம். உறுப்பினர்கள் அனைவரும் வட்ட வடிவில் அமர வேண்டும். நிகழ்ச்சி நிரல் தயாரித்து அதன்படி கூட்டத்தை நடத்த வேண்டும். குறைந்தது 90 சதவீத உறுப்பினர்களாவது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொண்ட உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் 2 பங்கு ஆதரவுடன் மட்டுமே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். குழு உறுப்பினர்கள் மட்டுமே கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதற்கான விதிமுறைகளை உருவாக்குதல் அவசியம். முடிவுகள் தீர்மானப் புத்தகத்தில் எழுதப்பட்டு அனைவருக்கும் படித்துக் காட்டப்பட்டு கையொப்பம் பெறப்பட வேண்டும். ஆ) நிர்வாகிகள் பிரதிநிதி 1, பிரதிநிதி 2. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளை கட்டாயமாக மாற்றி அமைக்க வேண்டும். குழுவில் உள்ள நன்கு எழுதப்படிக்க தெரிந்த ஒரு நபரால் கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும். குழு உறுப்பினர்களால் கணக்கு பராமரிக்க முடியாத பட்சத்தில் சமூக சுய உதவி குழு பயிற்றுநர், கணக்காளர் மற்றும் குழு உறுப்பினரின் மகன் / மகள் போன்றோரின் உதவியை பெற்று கொள்ளலாம். 1. நிர்வாகிகளின் பொறுப்புகள் i. பிரதிநிதி- 1 குழு சார்பாக வெளியிடங்களில் பங்கேற்றல். தொடர்ந்து குழு கூட்டங்களை முறையாக நடத்துதல். வங்கி கணக்கினை இணைந்து இயக்குதல் (பிரதிநிதி 2 உடன் இணைந்து) எடுக்கப்பட்ட முடிவுகளை ஆவணப்படுத்துதல் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துதல். தர மதிப்பீடு, உள்தணிக்கை மற்றும் ஆண்டு தணிக்கையை உறுதிப்படுத்துதல் சரியான நேரத்தில் வங்கி மற்றும் பிற துறைகளுடன் இணைத்தல் ii. பிரதிநிதி- 2 நிதி நிலையைக் கண்காணித்தல். உறுப்பினர்கள் கடன் திரும்பச் செலுத்துதலை கண்காணித்தல். வங்கி கணக்கை இணைந்து செயல்படுத்துதல் ( பிரதிநிதி 1 உடன் இணைந்து). ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் அனைத்து பதிவேடுகளும் முறையாக எழுதப்படுதலை உறுதி செய்தல். தனி நபர் பாஸ்புத்தகம் உடனுக்குடன் அக்கூட்டத்திலேயே எழுதப்படுதலை உறுதி செய்தல். குறைந்தபட்ச கையிருப்பை உறுதி செய்தல். நிதி நடவடிக்கைகள் குழுக்கூட்டத்தில் மட்டும் நடைபெறுதலை உறுதி செய்தல். 2. கணக்காளர் / ஊக்குனரின் பொறுப்புக்கள் கணக்கு புத்தகங்களை பராமரித்தல். எடுக்கப்பட்ட முடிவுகளை ஆவணப்படுத்துதல். தனி நபர் பாஸ்புத்தகம் எழுதி உறுப்பினர்களிடம் ஒப்படைத்தல். கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு, செயல்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தலை உறுதி செய்தல். உள்தணிக்கை மற்றும் ஆண்டு தணிக்கைக்கு தயார் செய்தல் 3. சுய உதவி குழு உறுப்பினர்களின் பொறுப்புகள் குழு கூட்டம், சேமிப்பு போன்ற நடவடிக்கைகளில் தவறாமல் ஈடுபடுதல். உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கத்திற்கு அனுமதி. நிர்வாகிகளை தேர்வு செய்தல் மற்றும் திரும்பப் பெறுதல். கடன் கொடுத்தல் மற்றும் திரும்ப செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். நிதி ஆதாரப் பெருக்கம் (சுய உதவி குழுவானது பல்வேறு வகையில் சாத்தியமுள்ள வெளி நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தல்). ஒவ்வொரு முறையும் உள்தணிக்கை மற்றும் வெளித்தணிக்கை முடிவடைந்தவுடன் கணக்குகள் மீதான அனுமதி அளித்தல். குழுவின் நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து மதிப்பீடு செய்தல். உபரி / இலாப ஒதுக்கீடு (சுய உதவி குழுவில் உபரி வருவாய் ஏதும் இருப்பின், அவ்வாறு சேர்த்து வைக்கப்பட்டுள்ள இலாப நிதியை, பல்வேறு காரணங்களுக்காக குழுவின் விதிகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு ஒதுக்கீடு செய்தல் இ) வங்கி குழுவின் பெயரில் தான் வங்கி கணக்கு துவக்கப்பட வேண்டும். பிரதிநிதி 1 மற்றும் பிரதிநிதி 2 வங்கி கணக்கினை இணைந்து செயல்படுத்துவர். வங்கிக்கு குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் செல்ல வேண்டும். நிர்வாகிகள் மாறும் போது வங்கியில் தெரிவிக்கப்பட வேண்டும். சேமிப்பு மற்றும் கடன் வசூல் முறையாக (கூட்டம் முடிந்தவுடன் அல்லது அடுத்த நாள்) வங்கியில் செலுத்த வேண்டும். தீர்மானத்தின் அடிப்படையில் தான் செலவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வங்கி பாஸ் புத்தகத்தை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும். ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.