தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து பழங்குடியின மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்தியப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் (Ministry of Tribal Affairs) நடைமுறைப்படுத்தி வருகிறது. கல்வி: தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், நீலகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள எட்டு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 2025-26-ம் கல்வியாண்டில் 2909 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் கல்வி உதவி பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.மேலும், பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகைகள், ஆராய்ச்சி ஊக்கத்தொகைகள் போன்ற பல்வேறு திட்டங்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொழில்: காடுகளில் கிடைக்கும் விளைபொருட்களுக்கு மதிப்புக் கூட்டவும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பழங்குடியினர் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்தகைய மையங்கள் மூலம் பழங்குடியின சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தப்பட்டு வருவதோடு, தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் குறைந்தக் கட்டணத்தில் கடன்களும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம்: பழங்குடியின மக்களுக்கான மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் படுக்கை வசதிகொண்ட மருத்துவமனைகளும் நடமாடும் மருத்துவ அமைப்புகளும் செயல்பட்டு வருகிறது.இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298080®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்