அறிமுகம்

பழங்குடியினரின் நல வாழ்வுக்காக மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சகம் வனபந்து கல்யாண் யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பழங்குடி மக்களுக்குத் தேவைப்படுகின்ற வளர்ச்சித் திட்டங்களை - அவற்றை செயல்படுத்தினால் எதிர்பார்க்கிற பயன் கிடைக்கின்ற வகையிலான திட்டங்களை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும். மத்திய / மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலம் பழங்குடி மக்களைச் சென்றடைய வேண்டுமென விரும்புகின்ற நன்மைகளும் சேவைகளும் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கம். நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நோக்கங்கள்

பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்

கல்வித் தரத்தை மேம்படுத்துதல்

படிங்குடியின குடும்பங்களுக்கு தரமான தொடர் வேலைவாய்ப்புகள் அளித்தல்

கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புதல்

பழங்குடியினரின் மரபையும் பண்பாட்டையும் பேணிக் காத்தல்

அங்கங்கள்

பழங்குடியினர் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி

அனைவருக்கும் வீட்டு வசதி

அனைவருக்கும் சுகாதார வசதியும் பாதுகாப்பான குடிநீர் வசதியும் செய்து தருதல்

பழங்குடியினர் வசிப்பிட நிலங்களின் தன்மைக்கு ஏற்றவாறு நீர்ப்பாசன வசதி செய்தல்

அருகில் உள்ள ஊர்களுக்கு / நகரங்களுக்கு எளிதாகச் சென்று வர தரமான சாலை வசதிகள்

அனைவருக்கும் மின்சார வசதி

பழங்குடியினர் பகுதிகளில் விளையாட்டுகளை ஊக்கப்படுத்துதல்

உத்திகள்

பழங்குடியினர் நலத் துறை, ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் மூலமாக பழங்குடியினருக்கான பொருள்களையும் சேவைகளையும் வழங்குவதை உறுதி செய்ய அந்த முகமைகள் யாவற்றையும் வலுப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும்.

கானக சிறு உற்பத்திப் பொருள்கள்

பழங்குடியினர் கானகங்களில் இருந்து திரட்டும் / சேகரிக்கும் சிறு உற்பத்தி பொருட்களின் தேவை குறித்து வியாபாரிகளே நிர்ணயம் செய்கின்றனர். சந்தையில் நிலவும் தேவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அதனால் அவர்களுக்கு நல்ல விலையும் கிடைப்பதில்லை. எனவே பழங்குடி மக்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக குறைந்தபட்ச விற்பனை விலை சில மாநிலங்களில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலைகள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்கும் இணைய வழித்தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

சேர்க்கப்பட்ட உற்பத்திப் பொருள்கள்

கீழ்க்கண்ட 12 பொருள்களுக்கு விலை நிர்ணயம் தற்போது செய்யப்படுகிறது.

டெண்டு இலைகள்

மூங்கில்

மதுவா விதைகள்

குங்கிலிய இலை

குங்கிலிய விதை

அரக்கு

சிரோஞ்சி

தேன்

நெல்லி

புளி

கோர்ந்து

புங்கம்

பழங்குடியினருக்கு பாரம்பரியமாக உள்ள உரிமைகளை பாதுகாக்கும் வன உரிமைகள் சட்டம் பற்றியும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம்: வனபந்து கல்யாண் யோஜனா