பாரத் டெக்ஸ் 2026 (Bharat Tex 2026) என்பது 11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டமைப்பு (Textile Export Promotion Councils) மற்றும் ஜவுளி அமைச்சகத்தின் (Ministry of Textiles) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்படும் உலக மகா ஜவுளி நிகழ்வாகும். இதை 2026 ஜூலை 14 முதல் 17 வரை புதுதில்லியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஜவுளித்துறை சார்ந்த அனைத்துப் பிரிவுகளையும் உலகளாவிய தளத்தில் ஒருங்கிணைக்கிறது. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான பாரத் டெக்ஸ் வர்த்தகக் கூட்டமைப்பு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜவுளி, ஆடைவடிவமைப்பு, நீடித்தத் தன்மை, தொழில்நுட்பம், முதலீடு, சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய தலைமைத்துவத்தை இந்நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்