நோக்கம்

சுத்திகரிக்கப்படாத சாக்கடை, தொழிற்சாலை கழிவுகள், நீர்வரத்து குறைவு மற்றும் வேகமாக சரிந்து வரும் நிலத்தடி நீர் மட்டம் போன்ற காரணங்களால் கங்கை நீரை சார்ந்துள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் கங்கை நதியை தூய்மைப்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி 2037 கோடி ரூபாய் ஆகும். மேலும் கணவாய், நதிக்கரையோர நகரங்களான கேதார்நாத், ஹரித்துவார், கான்பூர், வாரணாசி, அலகாபாத், பாட்னா, டெல்லி போன்ற நகரங்களை அழகுபடுத்துவதற்காகவும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

"நமாமி கங்கை' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

நீடித்த நகர கழிவு நீர் சுத்திகரிப்பை உறுதி செய்தல்

கிராமப்புற பகுதிகளில் கழிவு நீரை கையாள்தல்

தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீரை நிர்வகித்தல்

கங்கைக் கரை பகுதிகளில் நதிகள் வரன்முறைப் பகுதிகளை செயல்படுத்துதல்

பகுத்தறிவுப் பூர்வமான விவசாய நடைமுறைகள், செயல்திறன் மிக்க கால்வாய் முறைகளை உறுதி செய்தல்

பல்லுயிர்ச் சூழல், நீர்வாழ் உயிரிகள் பாதுகாப்பைப் பேணி உயிர்ச்சூழலில் மறுமலர்ச்சியை நிச்சயப்படுத்துதல்

பகுத்தறிவுப்பூர்வமான மற்றும் நீடித்து வரும் விதத்தில் கப்பல் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை ஊக்குவித்தல்

கங்கை தகவல் மையமொன்றை ஏற்படுத்தி கங்கை குறித்த தகவல்களை நிர்வகித்தல்

வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் கங்கை நிதி

இந்தியாவின் வளர்ச்சி செயல்பாட்டில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மிக முக்கியமான பங்கெடுப்பாளர்கள் ஆவர். அவர்கள் இந்தியாவின் கல்வி, உடல் நலம், பண்பாடு பேணலில் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றனர். அதே போன்று கங்கை பாதுகாப்புத் திட்டத்திலும் அவர்களது பங்களிப்பை உறுதி செய்ய, வெளிநாட்டு இந்தியர்களின் கங்கை நிதி என்றொரு திட்டம் வகுக்கப்பட்டு, வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சகம் மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்நிதிக்கான ஏற்பாடுகள் நிர்வகிக்கப்படுகிறது.

ஆதாரம்: இந்திய அரசு