நோக்கம்

பத்தாவது படிப்புக்குப் பிந்தைய அல்லது உயர் படிப்புக்குப் பிந்தையப் படிப்பினை மேற்கொள்கின்ற மாணவர்களுக்கு, அவர்களுடைய படிப்பை முடிப்பதற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

வரம்பு

இவ்வுதவித்தொகைகள் இந்தியாவில் தொடரப்படும் படிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும். அந்தந்த மாநிலங்களின் யூனியன் பகுதியைச் சேர்ந்த, அதாவது நிரந்தரமான குடிகளான விண்ணப்பதாரருக்கு அந்தந்த அரசுகளால் இந்நிதி உதவி வழங்கப்படும்.

தகுதி நிபந்தனைகள்

இந்த படிப்புதவித் தொகைகள் இந்திய நாட்டுக்குப் பொருந்தும்.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலும் தொடரப்படும் பத்தாவதுக்குப் பிந்தைய அல்லது உயர்நிலை பள்ளிப் படிப்பிற்குப் பிந்தைய பாடங்களுக்கும் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அந்தந்த மாநில/யூனியன் பகுதியைச் சேர்ந்த அதாவது நிரந்தரமாகக் குடியுள்ள அந்தந்த பகுதிகளுக்கான மாணவர்கள் தகுதி பெறுவர். இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் மெட்ரிக்குலேஷன் அல்லது உயர்நிலை அல்லது ஏனைய யாதொரு உயர்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

கல்வியில் ஒரு நிலையில் தேர்ச்சி பெற்ற பின்னர், வேறு பாடப் பிரிவில் அதே கல்வி நிலையைத் தொடர்கின்ற மாணவர்கள் (பள்ளி படிப்புக்குப் பின்னர் பி.காம், எம்.ஏ. தேறிய பிறகு வேறு எம்.ஏ.,) படிப்பு உதவித்தொகை பெற தகுதி பெற மாட்டார்கள்.

ஒரு தொழிற் கல்வி பாடப் பிரிவில் கல்வி படிப்பை முடித்துள்ள மாணவர்கள், எடுத்துக்காட்டாக BT/BEd க்கு பிறகு LLR படிக்க தகுதியுடையவர்கள் ஆகமாட்டார்கள்.

மருத்துவப்பட்ட மேற்படிப்பு (PG) பயில்கின்ற மாணவர்கள், அவர்கள் பயில்கின்ற காலத்தில் மருத்துவத் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்படாத நேர்வில் தகுதியுடையவராக இருப்பார்.

கலை / அறிவியல் / வணிகப் பாடப் பிரிவில் பட்டப்படிப்பு / பட்ட மேற்படிப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத அல்லது தேர்ச்சி பெற்ற மாணவர்கள், யாதொரு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி அல்லது தொழிற்நுட்ப சான்றிதழ் / பட்டயம் / பட்டப்படிப்புகளுக்குத் தகுதி பெற்றிருப்பின் படிப்பு உதவித்தொகை வழங்கப்படும். அதற்குப் பின்னர் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இந்தச் சலுகை நீட்டிக்கப்படாது.

அஞ்சல் வழிக் கல்வி வாயிலாக படிப்பைத் தொடர்கின்ற மாணவர்களும் தகுதியுடையவர் ஆவர். அஞ்சல் வழிக் கல்வி என்பதில் தொலைதூரக் கல்வியும், தொடர் கல்வியும் அடங்கும். (Distant and Continuing Education).

பணி புரிகின்ற மாணவர்களின் வருமானமானது அவர்களுடைய பெற்றோர்களின் / பாதுகாவலர்களின் வருமானத்துடன் சேர்ந்து வரையறுக்கப்பட்ட உயரளவு வருமான உச்சவரம்பிற்கு மிகாத நேர்வில், கண்டிப்பாக செலுத்தத்தக்க திருப்பியளிக்கப்படாத அனைத்து கட்டணங்களையும் ஈடு செய்யும் வகையில் மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய படிப்புக்கான படிப்பு உதவித்தொகையைப் பெற அவர்கள் தகுதியுடையவர்களாவர்.

ஒரே பெற்றோர்களின் / பாதுகாவலர்களின் அனைத்து குழந்தைகளும் இத்திட்டத்தின் பயன்களை பெறுவதற்கு தகுதியுடையவராக இருப்பர்.

இத்திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை பெறுபவர், ஏனைய யாதொரு படிப்புத்தொகை / பயிற்சிக்கால உதவித்தொகை (Stipend) பெறமாட்டார். ஏனைய யாதொரு படிப்பு உதவித்தொகை / பயிற்சிக்கால உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பின், மாணவர் அவருக்கு மிகவும் ஆதாயம் தருகின்ற படிப்பு உதவித்தொகை / பயிற்சிக்கால உதவித்தொகை இரண்டில் ஒன்றை பெறுவதற்கான அவருடைய விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதுடன், அது குறித்து அவர் பயில்கின்ற கல்வி நிறுவனம் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் மற்றொரு படிப்புத் தொகையை பயிற்சிகால உதவித்தொகையை ஏற்கின்ற நாளிலிருந்து இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு படிப்புத்தொகை வழங்கப்படமாட்டாது. எனினும், மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற படிப்புதவித் தொகையுடன், புத்தகங்கள், சாதனங்கள் வாங்குவதற்கு அல்லது உணவுக்கும், தங்குவதற்கும் ஏற்படும் செலவினங்களுக்கு மாநில அரசிடமிருந்து அல்லது ஏனைய யாதொரு ஆதாரங்களிலிருந்து மானியம் அல்லது தற்காலிக தொகை அல்லது இலவச தங்குமிடத்தை ஏற்கலாம்.

மத்திய அரசின் / மாநில அரசின் நிதியுதவியுடன் முன்தேர்வு பயிற்சி மையங்கள் ஏதேனுமொன்றில் பயிற்சி பெறுகின்ற படிப்பு உதவித்தொகை பெறுபவர்கள், பயிற்சி திட்ட கலை அளவிற்கு, பயிற்சித் திட்டங்களின் கீழ் படிப்பு உதவித்தொகை பெறுவதற்குத் தகுதியுடையவராக இருக்கமாட்டார்.

வருமான வரம்பு

அனைத்து வகையிலும் மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ. 200000 மேற்படாத நேர்வில், அவர்களுக்கு படிப்பு உதவித்தொகைகள் வழங்கப்படும்.

குறிப்பு 1: பெற்றோர்களில் ஒருவர் உயிருடன் இருக்கின்ற காலம் வரையில்

வருமானம் ஈட்டுகின்ற பெற்றோர்களில் ஒருவர் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால் பெற்றோரின் வருமானத்தை இழந்து அத்தகைய மாணவர்கள், இத்திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட வருமான உச்சவரம்பிற்குள் அவருடைய வருமானம் வருகின்ற நேர்வில், அத்தகைய துக்க சம்பவம் நடைபெற்ற மாதத்திலிருந்து, தகுதி பெறுவதற்கான ஏனைய நிபந்தனைகளை அவர்கள் நிறைவு செய்வதற்கு உட்பட்டு, படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு அவர் தகுதியாகிறார். அத்தகைய மாணவர்களிடமிருந்து படிப்பு உதவித்தொகை கோருகின்ற விண்ணப்பங்களை, கருணை அடிப்படையில் விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்த பின்னரும் கூட கருதிப் பார்க்கப்படலாம்.

குறிப்பு 2: மாணவர்களின் பெற்றோர்களது வருமானக் கணக்கீட்டிலிருந்து வீட்டு வாடகைப்படி விலக்களிக்கப்பட வேண்டும்.

குறிப்பு 3: ஒராண்டிற்கும் மேலாக தொடருகின்ற பாடப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுகின்ற போது ஒரேயொரு தடவை மட்டுமே வருமான சான்றிதழை பெறப்பட வேண்டும்.

குறிப்பு 4: வருமான உச்சவரம்பானது திருத்தப்பட்ட ஆண்டிற்கு முந்தைய ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கான தொழில் பணியாளர்களின் நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தப்படும்.

படிப்பு உதவித்தொகையின் மதிப்பு

படிப்பு உதவித்தொகையில்

பராமரிப்பு படி

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கூடுதல் படி

திருப்பித் தரப்படாத கட்டணங்களை ஈடுசெய்தல்

கல்வி சுற்றுலா கட்டணங்கள்

ஆய்வுக் கட்டுரையை தட்டச்சு செய்ய அச்சுப் பதிக்க ஆகும் செலவினம்

அஞ்சல் வழிக் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கான புத்தகப்படி

குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கு புத்தக வங்கி வசதி படிப்பு காலம் முழுமைக்கும் வழங்கப்படும். விவரங்கள் வருமாறு.

குறிப்பு 1: வணிக விமானி உரிமம் பாடப் பிரிவு (CPL)

வணிக விமானி உரிமம் பாடப் பிரிவுடன் பன்முக என்ஜின் வகைமதிப்பு பயிற்சிக்கான படிப்புதவித் தொகை பெற்ற பின்னரும் கூட A320 மற்றும் அது போன்ற விமானங்களில் வணிக ஹெலிகாப்டர் விமானி உரிமம் மற்றும் பன்முக என்ஜின் வகைமதிப்பு பயிற்சி அடங்கும். ஆண்டுதோறும் 20 பேருக்கு வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதன் பேரில், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் / மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குகந்த நிறுவனங்கள், இத்திட்டத்தின் கீழ் அவர்களின் தகுதியை தீர்மானிப்பதற்கு அவற்றை கூர்ந்தாய்வு செய்து அதன் பின்னர் வணிக விமானி உரிம பாடப் பிரிவு பயிற்சிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரரின் எண்ணிக்கையை அவர்களின் பெயர்களுடன், ஒவ்வொரு நிதியாண்டும் சமூக நீதி மற்றும் அதிகார பகிர்வு அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்படும். (அவர்களின் விண்ணப்பங்களை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை).

சமூக நீதி மற்றும் அதிகாரப்பகிர்வு அமைச்சகம் அத்தகைய தகவலை பெறப்பட்டதன் பேரில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளுக்கு அனுமதியளிக்கும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, தொகுதி / பாடப் பிரிவுக்கு பொருந்துகின்ற வீதங்களில் பராமரிப்பு அதாவது விடுதியில் தங்கி பயில்கின்ற மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ. 740 மற்றும் வீட்டிலிருந்து சென்று வருபவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ. 330 வழங்கப்படுகிறது. இத்துடன் விமான கட்டணங்கள் உட்பட கட்டாயமான கட்டணங்கள் அனைத்தும் கட்டணமாக வகை செய்யப்பட வேண்டியிருக்கின்றன.

குறிப்பு 2: பி.எச்டி. பாடப் பிரிவுகள், பட்ட மேற்படிப்பு பாடப் பிரிவுகள் ஆகும். அத்தகைய மாணவர்களுக்கான படிப்பு உதவித்தொகை இத்தகைய தொகுதிகளின் கீழ் பாடப் பிரிவைச் சார்ந்து தொகுதி 1-க்கான பராமரிப்பு படி வழங்கப்படலாம்.

குறிப்பு 3: வழக்கமாக "விடுதி” என்பது கல்வி நிறுவன அதிகாரிகளின் கண்காணிப்புக்கு கீழ் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற ஒரு பொதுவான குடியிருப்பு கட்டிடம் மற்றும் ஒரு பொதுவான உணவகம் எனப் பொருள்படும். கல்லூரி விடுதியில், கல்லூரி நிர்வாகத்தால் தங்குமிடத்திற்கு வகை செய்ய இயலாத நேர்வில், இத்திட்டத்தின் செயல் நோக்கத்திற்காக, அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்பு இடம் ஒன்றையும் விடுதியாகக் கருதலாம். கல்வி நிறுவனத் தலைவர் உரியவாறு ஆய்வு செய்த பின்னர், பல்கலைக்கழகத்தால் ஏதேனும் விதிகளும் முறைகளும் வகுக்கப்பட்டிருப்பின் அதனைக் கருதிப் பார்த்தும் அந்த இடத்திற்கு அனுமதி வழங்கப்படும். அத்தகைய நேர்வில், கல்லூரி விடுதியில் தங்குமிடம் கிடைக்கப் பெறாததால், அம்மாணவர் அனுமதியளிக்கப்பட்ட குடியிருப்பு இடத்தில் வசிக்கிறார் என்ற சான்றிதழ் ஒன்று, கல்வி நிறுவனத் தலைவரால் வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு கருதப்பட்ட மாணவர் விடுதிகள் பொதுவான உணவு ஏற்பாட்டு முறைகளுடன் ஐந்து மாணவர்கள் வசிக்கின்ற இடமாக இருக்க வேண்டும்.

குறிப்பு 4: உணவு வசதியுடன் கூடிய இலவச விடுதியில் தங்கி பயில்கின்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் பேணல் படியில் 3-இல் ஒரு பங்கு வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளி ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கூடுதல் படிகள்

கண் பார்வையற்ற மாணவர்களுக்கான உதவித்தொகை (மாதமொன்றுக்கு) ரூ.

தொகுதி - II 240

தொகுதி - II 2OO

தொகுதி - IV 160

கல்வி நிறுவனத்தின் வளாகங்களுக்குள் உள்ள மாணவர் விடுதியில் வசிக்காத மாற்றுத் திறனாளிகளுக்கு போக்குவரத்துப் படியாக மாதம் ரூ. 100 வழங்கப்படும். 1995 ஆம் ஆண்டு ஊனமுற்றோர் (சமவாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழுபங்கேற்பு) சட்டத்தின்படி, கண் பார்வையற்றவர், குறைந்த பார்வைத் திறன் கொண்டவர், தொழுநோயிலிருந்து குணமடைந்தவர், செவித்திறனற்றவர். நடமாட இயலாதவர், மனவளர்ச்சி குன்றியவர் அல்லது மன நோயாளி ஆகியோர் இச்சட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறைந்தளவில் கால் கை ஊனமுற்றோர் அல்லது கடுமையாக ஊனமுற்று நாள்தோறும் வீட்டிலிருந்து சென்று படிக்கும் மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ. 100 வரி துணைப்படி வழங்கப்படும்.

கல்வி நிறுவனத்தின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து உதவியாளர் உதவியை நாடுகின்ற கடுமையாக ஊனமுற்ற மாணவர்களுக்கு உதவுவதற்கு விழைகின்ற மாணவர் விடுதியின் யாதொரு பணியாளருக்கு சிறப்பு ஊதியமாக மாதமொன்றுக்கு ரூ. 100 வழங்கத்தக்கதாகும்.

மனவளர்ச்சி குன்றிய மற்றும் மன நோயாளி மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிப்பதற்காக மாதமொன்றுக்கு ரூ. 150 படி வழங்கப்படும்.

குறிப்பு: இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்ற ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஊனமுற்ற மாணவர்கள், இத்திட்டத்தின் கீழ் வராத ஏனைய திட்டங்களிலிருந்து அத்தகைய கூடுதல் பயன்களையும் பெறலாம்.

கட்டணங்கள்

கல்வி நிறுவனத்திற்கு அல்லது பல்கலைக்கழகத்திற்கு / வாரியத்திற்கு மாணவரால் கட்டாயமாக செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணம், கல்விக் கட்டணம், விளையாட்டுக் கட்டணம், நூலகம், பத்திரிக்கை, மருத்தவ பரிசோதனை போன்ற அனைத்து கட்டணங்களும் உதவித்தொகையாக வழங்கப்படும். எனினும், பிணையத் தொகை, பிணை வைப்புத் தொகை போன்ற திருப்பித் தரத்தக்க தொகைகள் சேர்க்கப்படா.

குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட பாடப் பிரிவுகளில் உள்ள இலவச/ கட்டணம் செலுத்தக்கூடிய (Paid Seats) இடங்களுக்காக மத்திய / மாநில அரசின் உரிய அதிகாரியால் ஏற்பளிக்கப்பட்ட கட்டணமுறைப்படி, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் திருப்பி அளிக்கப்படாத கட்டாயக் கட்டணங்கள் முற்றிலுமாகத் திருப்பி வழங்க இயலும். இருப்பினும், கட்டணம் செலுத்தப்படும் இடங்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு ஒப்புதல் அளிக்கும் போது வருவாய் சரி பார்ப்பை மாநில அரசு கட்டாயமாக்க வேண்டும்.

கல்வி சுற்றுலா

தொழிற்படிப்பு மற்றும் தொழில்நுட்பப் படிப்பு பயில்வோர் படிப்பை முடிப்பதற்கு கல்வி சுற்றுலா அவசியமானது என்று கல்வி நிறுவனத்தின் தலைவர் சான்றளிப்பதன் பேரில், மாணவர்கள் மேற்கொள்ளும் போக்குவரத்துச் செலவு, உயரளவாக ஆண்டொன்றுக்கு ரூ. 1000 என வரையறுக்கப்பட்டு, மேற்சொன்ன படிப்பை பயில்வோருக்கு வழங்கப்படும்.

ஆய்வேட்டினை தட்டச்சு செய்வதற்கான கட்டணங்கள்

கல்வி நிறுவனத் தலைவர் பரிந்துரையின் பேரில் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்பவர்கள் ஆய்வேட்டினை தட்டச்சு செய்வதற்கும் கட்டணம் உயரளவாக ரூ. 1000 வழங்கப்படும்.

தொலைதூரக் கல்வி மற்றும் படிப்பைத் தொடருதல் உட்பட அஞ்சல் வழிக் கல்வி

திருப்பி கொடுக்கப்படும் கல்விக் கட்டணங்கள் மட்டுமின்றி, அத்தகைய படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு ரூ. 750ஐ ஆண்டு படியாகப் பெறுவதற்கு தகுதியுடையவராவர்.

புத்தக வங்கிகள்

அனைத்து மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பட்டயக் கணக்கு பாடம், முதுநிலை வணிக நிர்வாகம் மற்றும் அவற்றைப் போன்ற நிர்வாகப் படிப்புகள், பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் பயிலகங்களில் புத்தக வங்கிகள் நிறுவப்படும். பிற படிப்புகளுக்கு இருவருக்கு ஒரு தொகுதி (செட்) புத்தகமும், முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயக் கணக்கருக்கான படிப்புக்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தொகுதி (செட்) புத்தகமும் வாங்கப்படும். இருப்பினும், மாநில அரசுக்கு வழங்கப்படும் மொத்த நிதிக்குள் இந்த வரம்புகள் சரி செய்து கொள்ளப்படும்.

1. புத்தக வங்கிகள் அமைப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளின் விவரங்கள், ஒரு தொகுதி (செட்) புத்தகங்களுக்கு அனுமதிக்கத்தக்க செலவின் உச்சவரம்பு, பகிர்ந்தளிக்கக் கூடிய அளவுகள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2. புத்தகங்களை இருப்பு வைப்பதற்கான செலவு மற்றும் ஏனைய இதர செலவுகள் முதலியவற்றிற்கு ஒவ்வொரு புத்தக வங்கிக்கும் போக்குவரத்து செலவு முதலியன உட்பட, புத்தகங்களை இருப்பு வைப்பதற்காக எஃகு அலமாரி வாங்குவதற்கான செலவும் பின் வருமாறு அனுமதிக்கத்தக்கதாகும்.

ரூ. 2000 அல்லது மேற்கொள்ளப்பட்ட செலவு இவற்றில் எது குறைவோ அது.

குறிப்பு: மேற்சொன்ன தொகுப்பு புத்தகங்களில், பார்வையற்ற மாணவர்களுக்கான பிரெய்லி புத்தகங்கள், ஒலி நாடாக்கள், பேசும் புத்தகங்கள் ஆகியவையும் அடங்கும்.

அங்கீகரிக்கப்பட்ட பாடப் பிரிவுகளை கற்பிக்கும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் இத்தகைய புத்தக வங்கிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பாடத் திட்டங்களுக்கு வகுக்கப்பட்டுள்ள அனைத்து பாடநூல்கள் புத்தக வங்கிக்கு வாங்கப்படும்.

ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் தேவையான பாடநூல் தொகுப்புகளின் (குறிப்புப் புத்தகங்கள் அல்ல) (செட்) போதுமான எண்ணிக்கையை முடிவு செய்வதற்காக, வெவ்வேறு வட்டாரங்களில் / மண்டலங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்கள் அடங்கிய வல்லுநர் குழுக்களை மாநில அரசுகள் அமைக்கலாம்.

ஒரு தொகுப்பு (செட்) புத்தகங்களின் ஆயுட்காலம் மூன்றாண்டுகள். அதன் பின்னர், இப்புத்தகங்களை இது குறித்து மாநில அரசு மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதி நிர்வாகத்தின் வழிகாட்டி குறிப்புகள் ஏதேனும் இருப்பின், அந்த நிபந்தனைக்குட்பட்டு, நூலகத்தின் வழக்கமான நடைமுறைகளின்படி அகற்றிக் கொள்ளலாம்.

பாடப் பிரிவு, அரையாண்டு பருவ ஏற்பாட்டு முறை முதலியவற்றைச் சார்ந்து, பட்டியலின மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் தவணைகளில் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் கீழ்க்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படும்.

இந்நோக்கத்திற்காக / பயன்பாட்டிற்காக ஒவ்வொரு பட்டியலின மாணவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.

ஒவ்வொரு பட்டியலின மாணவரும், புத்தக வங்கியிலிருந்து புத்தகங்களை பெறுவதற்கு அளிக்கப்படவுள்ள படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பருவகால இறுதியிலும், இப்புத்தகங்கள் புத்தக வங்கியிடம் திருப்பி அளிக்கப்பட வேண்டும். புத்தகம் பெற்ற மாணவர்கள், அவர்கள் பாடங்களை முடித்த பின்னர் அல்லது படிப்பை பாதியிலேயே நிறுத்துகையில், புத்தக வங்கிக்கு இப்புத்தகங்களைத் திருப்பிக் கொடுப்பதை கல்லூரி / நிறுவன முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

புத்தக வங்கியிலிருந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை நல்ல முறையில் பேணுவது மாணவர்களின் பொறுப்பாகும்.

புத்தகங்கள் காணாமல் போனாலோ, பழுதானாலோ, மாணவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும். மிகக் கடுமையான இழப்பு ஏற்படுமானால் புத்தக விலை மாணவரிடமிருந்து பெறப்படும்.

விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்தல்

இவ்விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைக்குட்பட்ட, அனைத்துத் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கும் படிப்பு உதவித்தொகை வழங்கப்படும்.

ஒரு மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், வேறொரு மாநிலத்தில் படிக்கின்ற நேர்வில், அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரோ, அந்த மாநிலமே படிப்பு உதவித் தொகையை வழங்கும். அவர்களுடைய விண்ணப்பங்கள் அம்மாநிலத்தின் உரிய அதிகாரியிடம் வழங்கப்பட வேண்டும். கட்டண விலக்களிப்பு அல்லது ஏனைய சலுகைகளைப் பொறுத்தவரையிலும், அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் படிப்பவர்களாகவே கருதப்படுவர்.

கல்வி உதவிக்கான கால அளவும் புதுப்பித்தலும்

நன்னடத்தை, முறையான வருகை ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, படிப்பு காலத்தை முடிக்கும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவி ஆண்டாண்டு புதுப்பிக்கப்படும். ஒரு பல்கலைக்கழகமோ, நிறுவனமோ தேர்வுகள் நடத்துகின்றனவோ, இல்லையோ ஒரு பாடத்திட்ட கால முழுமைக்கும் இந்த நிதி உதவி ஒரு மாணவர் அடுத்த ஆண்டுகளுக்கு முன்னேறிச் சென்றால் அவருக்கு வழங்கப்படும்.

தொகுதி-1 பாடப் பிரிவுகளைப் பயில்வோர் முதல் முறை தேர்வில் தோல்வியுற்றாலும் இந்த கல்வி உதவித் தொகை புதுப்பிக்கப்படலாம். அவர் யாதொரு வகுப்பில் இரண்டாவது முறையாக அல்லது அதனைத் தொடர்ந்து தோல்வியடைவாராயின், அவர் அடுத்த வகுப்பிற்குத் தேர்ச்சியடையும் வரையில், தனது சொந்த செலவிலேயே தோல்வி அடைந்த வகுப்பினை அவர் முடிக்க வேண்டும்.

உடல் நலக் குறைவு அல்லது எதிர்பாராத காரணங்களால் ஒரு மாணவர் ஆண்டுத் தேர்வை எழுத இயலாத நேர்வில், மருத்துவச் சான்றிதழ் அளிப்பதன் பேரில் அல்லது அவர் தேர்வு எழுதியிருந்தால் தேர்ச்சி பெற்றிருக்கக்கூடும் என்று கல்வி நிறுவனத்தின் தலைமை சான்றளிப்பதன் பேரில் அல்லது கல்வி நிறுவனத் தலைவர் போதுமான ஏனைய சான்றளிப்பதன் பேரில் இக்கல்வி உதவி அடுத்த ஆண்டிற்குப் புதுப்பிக்கப்படலாம்.

பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களின் விதிமுறைகளின் படி ஒரு மாணவர் கீழ்நிலை வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அடுத்த உயர் வகுப்பிற்கு அவர் முன்னேறி கீழ்நிலை வகுப்புக்கான தேர்வினை எழுதிக் கொள்ளலாம் எனில், மேல்நிலை வகுப்புக்கான கல்வி உதவித்தொகை பிற வழக்கமான தகுதிகளுக்குட்பட்டு வழங்கப்படும்.

உதவி வழங்கும் முறை

மாதத்தின் 20 ஆம் தேதிக்குப் பிறகு படிப்பில் சேருவாராயின், அம்மாதத்திற்கு அடுத்த மாதத்தில் பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்.

முந்தைய ஆண்டில் வழங்கப்பட்ட படிப்பு உதவித் தொகைகளை புதுப்பிக்கும் நேர்வில், முந்தைய ஆண்டு எந்த மாதம் வரை படிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டதோ அதற்கு அடுத்த திங்கள் தொடங்கி பராமரிப்புப்படி செலுத்தப்பட வேண்டும்.

மாணவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ, அந்தந்த மாநில அரசு மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட நிர்வாகம், அவர்கள் வகுக்கும் நடைமுறைகளின் படி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையை வழங்கும்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் முதிர் மாணவ மருத்துவராக (House Surgeon) அல்லது பயிற்சி மருத்துவராகப் பணி புரியும் கால அளவில் ஏனைய பாடப் பிரிவில் செய்முறை பயிற்சியின் போது மாணவர் பயிற்சி கால அளவில் உழைப்பூதியம் பெறுபவராக இருப்பாராயின் அல்லது ஏனைய பாடப் பிரிவில் செய்முறை பயிற்சியின் போது ஏதேனும் படி / பயிற்சி கால உதவித்தொகை பெறுவாராயின் படிப்பு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.

உதவித்தொகைக்கான ஏனைய நிபந்தனைகள்

மாணவருடைய மன நிறைவளிக்கத்தக்க முன்னேற்றம், நன்நடத்தை ஆகியவற்றைச் சார்ந்தே படிப்பு உதவித்தொகை வழங்கப்படும். மாணவர் தனது நடவடிக்கை மூலம் மன நிறைவளிக்கத்தக்க வகையில் தேர்ச்சி பெறத் தவறுகின்றனர் அல்லது தவறான நடத்தையை மேற்கொண்டு குற்றம் சாட்டத் தக்கவராகிறார் அல்லது போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் அல்லது சம்பந்தப்பட்டவரின் முறையான அனுமதியின்றி வகுப்பிற்கு வராமல் போவது முதலியனவற்றை, யாதொரு நேரத்தில் கல்வி நிறுவனத்தின் தலைமை தெரிவிக்குமாயின், படிப்பு உதவித்தொகைக்கு அனுமதிக்கும் அதிகாரி படிப்பு உதவித்தொகையை மறுதலிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம்.

தவறான தகவல்களின் அடிப்படையில் மாணவர் படிப்பு உதவித்தொகை பெறுகிறார் என்று கண்டறியப்படுமாயின், உடனடியாக அவரது படிப்பு உதவித்தொகை ரத்து செய்யப்படும் என்பதுடன், சம்பந்தப்பட்ட மாநில அரசின் விருப்புரிமையின் படி, வழங்கப்பட்ட படிப்பு உதவித்தொகை அந்த மாணவரிடமிருந்து வசூலிக்கப்படும். சம்மந்தப்பட்ட மாணவர் கண்டனப் பட்டியலில் சேர்க்கப்படுவதுடன், எப்பொழுதும், யாதொரு திட்டத்தின் கீழும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்குத் தடை செய்யப்படுவார்.

மாநில அரசின் முன் அனுமதியின்றி, மாணவர் எந்த பாடப் பிரிவுக்காக படிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டதோ, அந்த பாடப் பிரிவை மாற்றினாலோ அல்லது கல்வி நிறுவனத்தை மாற்றினாலோ வழங்கப்படுகின்ற படிப்பு உதவித்தொகை நிறுத்தப்பட வேண்டும். மாநில அரசின் விருப்புரிமையின் பேரில், ஏற்கனவே வழங்கப்பட்ட தொகையும் வசூலிக்கப்படும்.

படிப்பை இடை நிறுத்தம் செய்யும் மாணவரிடமிருந்து அவருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை மாநில அரசு விருப்புரிமையின்படி திரும்பப் பெறலாம்.

மத்திய அரசின் விருப்புரிமையின் பேரில் எந்த நேரத்திலும் விதிமுறைகள் மாற்றப்படலாம்.

திட்டத்தை அறிவித்தல்

அனைத்து மாநில அரசுகளும், மாநிலத்தின் முதன்மை செய்தித்தாள்களிலும், ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் மே-ஜூன் திங்களில் திட்டத்தின் விவரங்களை அறிவிப்பதுடன், விண்ணப்பங்களை பெற வேண்டும். விண்ணப்பப் படிவங்களுக்கான அனைத்து கோரிக்கைகளையும் ஏனைய விவரங்களையும் மாணவர் எந்த மாநிலத்தை / மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட நிர்வாகத்தை சேர்ந்தவரோ அதற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரர், விண்ணப்பங்கள் பெறுவதற்கான வரையறுக்கப்பட்ட கடைசி நாளுக்கு முன்னர், உரிய அதிகாரியிடம் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நடைமுறை

படிப்பு உதவித் தொகைக்கான விண்ணப்பம், பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

வரையறுக்கப்பட்ட படிவத்தில் படிப்பு உதவித்தொகைக்கான விண்ணப்பத்தின் ஒரு நகல். படிப்பு உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிப்பதற்கும், படிப்பு உதவித் தொகையை புதுப்பிப்பதற்கும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட் பட்ட பகுதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு தனித்தனி விண்ணப்பங்கள்.

மாணவரின் கையொப்பத்துடன் கூடிய பாஸ்போர்ட் அளவிலான அவரது புகைப்படம் (புதிதாக விண்ணப்பிப்பதற்காக).

பட்டயப்படிப்பு, பட்டப் படிப்பின் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களின் சான்றொப்பமிடப்பட்ட நகல் ஒன்று.

வட்டாட்சியர் பதவி தரத்திற்குக் குறையாத அதிகாரமளிக்கப்பட்ட வருவாய் அலுவலரால் உரியவாறு கையொப்பமிடப்பட்ட இனச் சான்றிதழ் (மூல நகல்).

சுய தொழில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் / பாதுகாவலர்கள், அனைத்து ஆதாரங்களில் இருந்தும் முத்திரைத் தாளில் தெரிவித்து வருவாய் குறித்த உறுதிமொழியை அளிக்க வேண்டும். பணி புரியும் பெற்றோர்கள் / பாதுகாவலர்கள் தங்களுக்கு வேலையளிப்பவரிடமிருந்து வருவாய் சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகும். ஏனைய ஆதாரங்களில் இருந்து கிடைக்கப் பெறும் யாதொரு கூடுதல் வருவாய்க்கு, நீதித்துறைசாரா முத்திரைத்தாளில் அவர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டில் படிப்பு உதவித்தொகைக்கான விண்ணப்பம் பெறப்பட்டிருக்குமாயின் முந்தைய ஆண்டு படிப்பு உதவித்தொகை ஒப்புகைக்கான ரசீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத் தலைவரால் உரியவாறு மேலொப்பமிடப்பட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வேண்டும். கடந்த ஆண்டு உதவித்தொகை பெற்ற மாணவரின் விண்ணப்பத்தோடு இணைந்த படிவத்தில் நிறுவனத்தின் தலைவர் கடந்த ஆண்டு உதவித்தொகை பெற்றமைக்கான சான்று வழங்க வேண்டும்.

விண்ணப்பங்கள் தற்போது படித்துக் கொண்டிருக்கின்ற அல்லது கடந்த ஆண்டு படித்த கல்வி நிறுவனத் தலைமைக்கு அளிக்கப்பட வேண்டும். அவ்வப்போது அவர்களால் வெளியிடப்படுகின்ற அறிவுரைக்களுக்கிணங்க எந்த மாநில / மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், அந்த மாநில அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதியில் இந்நோக்கத்திற்காகக் குறித்தரியப்பட்ட அதிகாரிக்கு இவ்விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் முறை

இத்திட்டம் மாநில அரசுகளாலும், மைய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள யூனியன் பகுதிகளாலும் செயல்படுத்தப்படும். இதற்காக மாநில அரசின் பங்காக ஏற்றுக் கொள்ள வேண்டிய தொகைக்கு மேலாக மைய அரசிடமிருந்து 100% நிதி உதவியை அவை பெறும். கடந்த 5 ஆண்டு திட்ட காலத்தின் இறுதி ஆண்டில் என்ன செலவினம் ஆனதோ அது புதிய 5 ஆண்டு திட்ட காலத்தில் மாநில அரசின் பங்காக அமையும். இந்தத் தொகையை அந்தந்த மாநில அரசுகள் தமது நிதி நிலை அறிக்கையில் (Budget) சேர்த்திருக்க வேண்டும்.

ஒன்பதாவது 5 ஆண்டு திட்ட காலத்திலிருந்து (1997-2002) வடகிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் மாநில பங்களிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அம்மாகாணங்களுக்கான முழு செலவையும் மைய அரசே வழங்கும்.

இத்திட்டத்தை செயற்படுத்துகின்ற அனைத்து மாநில அரசுகளும், மத்திய நேரடி ஆட்சிக்குட்பட்ட நிர்வாகங்களும், பயனாளிகளின் செலவின விவரங்களையும் அவ்வப்போது தேவைப்படுகிறவாறு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை, ஏனைய யாதொரு நோக்கத்திற்கும் பயன்படுத்தக்கூடாது.

ஆதாரம்: சமூக நீதி & ஆளுமை அமைச்சகம்

ஆக்கம்: துடி இயக்கம், சென்னை