மக்களுக்கான டெலி-லா கைபேசிச் செயலியை (Citizens’ Tele-Law Mobile App) மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் சுயசார்புடையவர்களாகவும், நீதியை எளிதில் அணுகக்கூடியவர்களாகவும் இருக்கும் வகையில் இச்சேவை தொடங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் டெலி-லா இயக்கத்தில் சேரவும், சட்ட உதவி சேவைகளுக்கான அடிப்படை நடவடிக்கைகளாக சட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 75000 கிராமப் பஞ்சாயத்துகளில் டெலி-லாவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனை தேவைப்படும் பயனர்கஞடன் வழக்கறிஞர்களை இணைக்க, வீடியோ கான்பரன்சிங் வசதி மற்றும் தொலைபேசி சேவைகளைப் பயன்படுத்தும். இந்த சேவை கிராம பஞ்சாயத்து மட்டத்தில் அமைந்துள்ள பொது சேவை மையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. விலைமதிப்பற்ற நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் எவரும் சட்ட ஆலோசனையைப் பெற இச்சேவை உதவுகிறது. இந்த சேவை அனைத்து குடிமக்களுக்கும் இலவசம். இச் சட்ட சேவை மூலம் ஆலோசனை பெறக்கூடிய சட்ட விஷயங்கள் :- வரதட்சணை, குடும்பத் தகராறு, விவாகரத்து, வீட்டு வன்முறையிலிருந்து பாதுகாப்பு. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் துஷ்பிரயோகம், ஈவ் டீசிங். பெண் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு. சொத்து மற்றும் நிலம் தொடர்பான உரிமைகள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம். மகப்பேறு சலுகைகள் மற்றும் கருக்கலைப்பு தடுப்பு. குழந்தைத் திருமணத்தைத் தடை செய்தல், பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல் மற்றும் கல்வி உரிமையை செயல்படுத்துதல். கைது - (F.I.R)/ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யும் செயல்முறை. பட்டியல் சாதிகள்/பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் அவர்களின் மறுவாழ்வு பயனாளிகளுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கும் வழக்கறிஞர்களுடன் நேரடி இணைப்பை ஏற்படுத்தி கொடுக்கும் இந்த செயலி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இது வழக்கு விசாரணைக்கு முந்தைய செயல்முறையை வலுப்படுத்துவதற்கான தளமாகும். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்