தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்து, திறன் வளர் பயிற்சிகள் வழங்கி, கூட்டமைப்புகள் மூலம் ஒருங்கிணைத்து, வங்கிகள் மூலம் கடனுதவிகள் பெறச் செய்து, சிறு தொழில்களில் ஈடுபடுத்தி வருவாயை பெருக்குவதன் மூலம் வறுமையை குறைத்து சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக ‘தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்’ 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம், மாநிலத்திலுள்ள வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு நீடித்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் 2012-13 ஆண்டிலிருந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினை செயல்படுத்தி வருகிறது.

தொழில் மற்றும் பணியமர்வு பயிற்சி

ஆஜிவிகா திறன் பயிற்சி திட்டமானது, தமிழ்நாட்டில் 2012-13 ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வியக்கம் கிராமப்புற இளைஞர்களின் தேவைகளின் அடிப்படையில் அவர்களின் வருமானத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அவரவர் தொழில் விருப்பங்களுக்கு ஏற்றவாறு கற்றுத் தரப்படுகிறது. இத்திட்டமானது, கிராமப்புற ஏழை இளைஞர்களை அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பயிற்சியளித்து பணியமர்த்துவதை மையமாகக் கொண்டிருப்பதுடன், வேலை தேவைகளின் அடிப்படையில் பயிற்சியளிக்கப்பட்ட மனிதவளத்தை அளிப்பதற்கும் வழிவகை செய்கின்றது.

பாடத்திட்டங்களை சீரமைத்தும், பயிற்சி நிறுவனங்களை அங்கீகரித்தும், சான்றளித்தும், 80 விழுக்காடு பயிற்சியாளர்களை, குறைந்தது ரூ. 6000 மாத வருமானத்தில் பணியில் அமர்த்தியும் ஆகிய பல்வேறு தொடர் முயற்சிகளை தரமான பயிற்சி அளிக்க அரசு எடுத்து வருகின்றது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

3 முதல் 12 மாதங்கள் வரை வேலைவாய்ப்புடன் கூடிய சந்தை சார்ந்த பயிற்சிகள்.

தொழில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் (பயிற்சி பெற்றவர்களில் 80 விழுக்காட்டிற்கு)

திட்டத்தில் பயன்பெறுபவர்கள் விழுக்காடு

33 விழுக்காடு பெண்கள்

50 விழுக்காடு அட்டவணை மற்றும் பழங்குடியினர் வகுப்பினர்

15 விழுக்காடு சிறுபான்மையினர்

3 விழுக்காடு மாற்றுத் திறனாளிகள்

பயிற்சியில் சேர்வதற்கான தகுதிகள்

18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ள இளைஞர்கள் - ஆண் , பெண் இருவரும். பெண்களுக்கு வயது வரம்பு 40 ஆக தளர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலிவடைந்தோர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 45 ஆகும்.

திட்ட செயல்பாடு

ஆஜிவிகா திட்டத்தின் கீழ் நிரந்தர பதிவு எண் பெற்ற பயிற்சி நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

ஒவ்வொரு பயிற்சிக்கான திறன் இடைவெளி ஆய்வினை பயிற்சி அளிக்கும் நிறுவனம் அளிப்பதோடு, அதற்கான வேலைவாய்ப்பிற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைய மற்றும் வருங்காலத்தில் இருக்க வேண்டும்.

தரமான பாடத்திட்டம் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட அடிப்படை பாடத்திட்டத்தினை அனைத்து பயிற்சிகளுக்கும் பின்பற்றுவதுடன் மென்திறன் பயிற்சிகளான அடிப்படை ஆங்கிலம், அடிப்படை கணினி அறிவு ஆகியவற்றையும் கொண்டதாக இருக்க வேண்டும்.

40 விழுக்காடு விளக்கப்பாடமும், 60 விழுக்காடு செய்முறை பயிற்சியும் ஒவ்வொரு பயிற்சியின் பாடத்திட்டமும் கொண்டிருப்பதுடன் பயிற்சியின் போது பாடத்திட்ட குறிப்புகளும் அளிக்க வேண்டும்.

பயிற்சிக்குப் பின் பணியமர்த்தும் இடத்திலேயே, பயிற்சியின் போது பயிற்சி அளிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயிற்சி முடித்த பின் பயிற்சியாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரமான சான்றிதழ்கள் ஒவ்வொரு பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.

பயிற்சி நிறுவனங்கள், பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு குறைந்தது ஓராண்டு காலம் வரை ஆலோசனை வழங்கி, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

உணவு மற்றும் போக்குவரத்து கட்டணம்

உறைவிடம் தங்கி பயிலாத ஒவ்வொரு இளைஞர்களுக்கும் நாளொன்றுக்கு ரூ. 100 என்ற வீதத்தில் அவர்கள் வருகை தந்த காலத்திற்கு கணக்கிடப்பட்டு மானியமாக அளிக்கப்படுகிறது.

பணியமர்வுக்கு பின் அளிக்கப்படும் ஊதியம்

வறுமைக் கோட்டிற்கு கீழ் / மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு திறன் பயிற்சி பெற்று பணியில் அமர்த்தப்பட்ட இளைஞர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகையாக அளிக்கப்படுகிறது. இத்தொகையானது ஊதியம் பெற்றதற்கான வருமான சான்று இரசீதுகளை சமர்ப்பித்த பிறகு அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

அந்தந்த மாவட்டத்தில் பணியில் இருந்தால் 2 மாதங்களுக்கும், மாநில அளவில் பணியிலிருந்தால் 3 மாதங்களுக்கும், மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்தில் பணியிலிருந்தால் 6 மாதங்களுக்கும் இவ்வூக்கத்தொகை வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

மாவட்ட திட்ட அலுவலர், மகளிர் திட்டம்

தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்

சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, குறிப்பாக நகர்ப்புற குழு உறுப்பினர்களுக்கு அவர்கள் ஆர்வம் காட்டும் தொழில்களில் சிறந்த நிறுவனங்களின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சுய தொழில் பயிற்சி அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பயிற்சி நிறுவனங்களின் மூலம் சுயமாகவோ அல்லது குழுவாகவோ சுய தொழில் மேற்கொள்ள ஆர்வமுள்ள மகளிருக்கு இப்பயிற்சி வழங்கப்படும்.

பயன்களை பெறுவதற்கான தகுதிகளும் நிபந்தனைகளும்

18 முதல் 50 வயதுக்குள் உள்ள சுய உதவி குழு உறுப்பினர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற மகளிர் சுய உதவி குழு மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

திட்ட செயல்பாடு

மூலப் பொருட்கள் கொள்முதல், இயந்திரங்கள், மதிப்புக்கூட்டுதல், பேக்கேஜிங், பெயரிடுதல், விலை நிர்ணயித்தல் மற்றும் சான்றளித்தல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி இப்பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பாடப்பிரிவுகள் தேர்வினை மாவட்ட அளவிலான குழு தீர்மானிக்கும்.

பாடப் பிரிவுகளுக்கான பயிற்சி காலம் 45 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை.

பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

வழங்கப்படும் உதவித் தொகை

உதவித் தொகையாக உறுப்பினர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ. 25 வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

மாவட்ட திட்ட அலுவலர், மகளிர் திட்டம்

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்