நோக்கம் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் மிகவும் பழுதடைந்த சாலைகளை மேம்படுத்திடவும், தார் போடப்படாத சாலைகளை முக்கியமான சாலைகளாக தரம் உயர்த்திடவும் தமிழக அரசால் நபார்டு வங்கியின் கடன் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு தேவைப்படும் மொத்த நிதியில் ரூ. 20 மாநில அரசாலும் மீதமுள்ள ரூ. 80 நிதி நபார்டு வங்கியின் மூலம் கடனாகவும் பெறப்பட்டு தார் சாலை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் தேர்வு ஒவ்வொரு நிதியாண்டும் மாவட்டத்திற்கு, இத்திட்டத்திற்கென அரசால் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப பணிகள் தேர்வு செய்யப்படுகிறது. பணிகள் தேர்வு செய்யப்படும் போது கீழ்க்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன: தேர்வு செய்யப்படும் பணிகளில் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயங்கும் சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் இதர முக்கியமான விவசாயத்திற்கு பயன்படும் பழுதடைந்த சாலைகள் குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை பணிகள் தேர்வு செய்யப்படுகிறது தொழில் மற்றும் வணிக மையங்களுக்கு செல்லும் சாலைகள் சுற்றுலா பகுதிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் சாலைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேறு எந்த ஊரக வளர்ச்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்படாத சாலைகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள் மாநில அளவில்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15 மாவட்ட அளவில்: மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார அளவில்: வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) நபார்டு - வெற்றிக் கதைகள் நபார்டு - வெற்றிக் கதைகள் ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்