நோக்கம்

நக்சலைட்டுகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்தும் விதமாகவும், அவர்களின் வளர்ச்சியைத் தடுத்திடும் வகையிலும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சமூக, பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மேற்கொள்ளப்படும் பணிகள்

•கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்தல்.

•அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் விடுதிகள் ஆகியவற்றிக்கு அடிப்படை வசதிகள் செய்தல்.

•புதிய வீடுகள் கட்டுதல்.

•விவசாய வேலைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்.

•இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்குதல்.

•அரசு பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களுக்கு பயிற்சியளித்தல்.

•சீருடைப் பணிகளில் தேர்வு பெறுவதற்கான பயிற்சிகள் அளித்தல்.

•பல்வேறு திட்டங்களில் தனி நபர்களுக்கான மானியக் கடன்கள் பெறுவதற்கான பயனாளி பங்குத் தொகை வழங்குதல்.

நிதி ஒதுக்கீடு

இத்திட்டத்திற்கு தேவையான நிதி ஆதாரம் 100ரூ மாநில அரசால் வழங்கப்படுகிறது.

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்

மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.

மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகள், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்

வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்