நோக்கம்

பல்வேறு திட்டங்களின் கீழ் ஊரகப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த சொத்துக்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு முழுமையான பயன்பாட்டில் கொணர வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மேற்கொள்ளப்படும் பணிகள்

இத்திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கட்டப்பட்ட கட்டடங்கள் பராமரிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம்

பயணியர் நிழற்கூடங்கள்

மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள்

மகளிர் சுகாதார வளாகங்கள்

அங்கன்வாடி மையங்கள்

செயலாக்கம்

இப்பணிகளை செயல்படுத்தும் அமைப்புகள் கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகும்.

இப்பணிகள் யாவும் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998-ன் படி ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்:

மாநில அளவில்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15

மாவட்ட அளவில்: மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில்: வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி)

கிராம அளவில்: ஊராட்சி மன்றத் தலைவர்

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்