முன்னுரை தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்கவும் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்" "ஒருவரும் விடுபடாமல் அனைவருக்கும் உதவித் திட்டங்கள் உடனடியாக சென்றடைய வேண்டும்" ஆகிய உயர்ந்த கொள்கைகளுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை அமைத்து, அனைத்து நிலையிலும் அணுகத்தக்க நிலையுடன் கூடிய சிறப்புக்கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதற்காக அனைத்து துறைகளையும் இணைத்து, ஒருமுக சேவையாக வழங்கும் வகையில் நிர்வாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைத்து, நிதி ஒதுக்கீட்டினை ஆண்டுதோறும் உயர்த்தி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.சர்வதேச அளவில் நமது நாடு, மாற்றுத்திறனாளிகள் நலம் காக்க, ஐக்கிய நாடுகள் UNCRPD (United Nations Convention on the Rights of Persons with Disabilities) மேற்கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றும் வகையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ஐ இயற்றியது. இவ்வரசு, மேற்படி சட்டத்தினை நாட்டின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ள 'நிலையான நீடித்த இலக்கினை' (Sustainable Development Goal) குறிப்பிட்டகாலவரையறைக்குள் அடையும் வகையில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் பற்றிய தரவு சேகரித்தல், அனைவருக்கும் உதவிகள் சென்றடையும் நோக்கில் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்க சிறப்பு முகாம்களை நடத்துதல், நடமாடும் சிகிச்சை வாகனங்களை மாநிலம் முழுவதும் பயன்படுத்தி ஆரம்ப நிலையிலேயே குறைகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்திற்கேற்ப உதவி உபகரணங்களை தெரிவு செய்து வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மேம்பட்ட சேவைகளை அளிக்கும் வகையில் கோட்டம் மற்றும் வட்டார அளவில் ஒருங்கிணைந்த சேவை மையங்களை அமைத்து (ONE STOP SOCIAL CARE SERVICE CENTRE) இதர துறைகளின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு அரசு உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தினை 2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் - 2016 மாற்றுத்திறனாளிகள் (சமவாய்ப்புகள், சம உரிமைகள், பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு வழங்குதல்) சட்டம் 1995 (Persons with Disabilities (Equal opportunities, Protection of Rights and Full participation) Act 1995] நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது, இது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 "(Rights of Persons With Disabilities Act 2016)" என புதிய சட்டம் 19.04.2017-ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தில், 21 வகையாக மாற்றுத்திறன்கள் வகைப்படுத்தப்பட்டு, அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் பொருளாதார மேம்பாடு அடையவும், சுயமரியாதையுடன் கூடிய வாழ்வு அமைவதற்கும், எவ்வித நடத்தப்படுவதற்கும், அவர்கள் பாரபட்சமில்லாமல் சமுதாயத்தில் முழுமையாக பங்கேற்கவும் செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வகைப்பாட்டில் பின்வரும் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை (NIDC) மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID Card) மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமது அன்றாட வாழ்விற்குத் தேவையான அரசின் அனைத்து உதவிகள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கான அடிப்படை ஆவணமாக மருத்துவ சான்றிதழுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. 40 விழுக்காடுக்கு மேல் உடல் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் இவ்வட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளை சிறப்பு மருத்துவர்கள் நேரிடையாக பரிசோதனை செய்து உரிய மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனை, வட்டார மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் உள்ள உரிய மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை மேற்கொண்டு மாற்றுத்திறனின் வகைக்கு ஏற்ற வகையில் மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசிற்கு துணையாக மறுவாழ்வு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை ஊக்குவிக்கும் வகையில் இந்நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளித்தும்,நிதியுதவி கோரும் நிறுவனங்களுக்கு பயனாளிகளை பராமரிக்க தேவையான உணவு. மருத்துவ உதவி, மறுவாழ்வு சிகிச்சை, சிறப்புக்கல்வி வழங்குவதற்கு உரிய மானியம் வழங்கியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அந்நிறுவனங்களில் பணிபுரியும் மறுவாழ்வு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான மானியத்தையும் அவ்வப்போது அரசால் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இன் சட்டப்பிரிவு 50 வலியுறுத்தியுள்ளவாறு, தன்னார்வத் தொண்டு றுெவனங்களை பதிவு செய்யும் அதிகாரத்திற்குட்பட்டு, மாற்றுத்திறனாளிகள் இந்நிறுவனங்கள் நல ஆணையரால் பதிவு செய்யப்படுகின்றன. இச்சட்டத்தின்கீழ், இதுநாள் வரை 786 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1973 மற்றும் 1973 ஆம் ஆண்டு சட்டத்திற்கு மாற்றாக இயற்றப்பட்ட தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை) சட்டம், 2018 மற்றும் விதிகள் 2023 ஆகியவற்றின் கீழ் 393 சிறப்பு பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி, மாநிலம் முழுவதும் 93 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் மாவட்ட தலைநகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. செவித்திறன் குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு, பார்வைத்திறன் குறைபாடு. உலக மூளை முடக்குவாதம், புற சிந்தனையற்ற / மதி இறுக்கமுடைய மற்றும் பல்வகை குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 290 சிறப்பு ஆசிரியர்களுடன் 2466 குழந்தைகள் பயன்பெறும் வகையில் இம்மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நடமாடும் சிகிச்சைப் பிரிவுகள் மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே செயல்பட்டு வரும் ஆரம்பநிலை பயிற்சி சேவை பணியினை தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் இருப்பிடத்திலோ அல்லது அருகாமையில் உள்ள இடத்திலோ கொண்டு சேர்க்க நடமாடும் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் தசைச்சிதைவு நோயினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில் அவர்களின் மறுவாழ்விற்காக மாநிலம் முழுவதும் 14 பகல்நேர பராமரிப்பு மையங்கள் சென்னை, திருச்சிராப்பள்ளி, வேலூர், மதுரை, திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், விழுப்புரம், திண்டுக்கல், விருதுநகர், தருமபுரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அரசின் நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இம்மையங்களில் இயன்முறைபயிற்சி, தொழில்சார் சிகிச்சை பயிற்சி, பேச்சுப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளும், தசைப்பயிற்சி மற்றும் அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மறுவாழ்வு இல்லங்கள் பதினான்கு வயதிற்கு மேற்பட்ட அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் மறுவாழ்வு அறிவுசார் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு பணியானது அவர்களின் வாழ்க்கையில் உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கான திறனை வளர்க்க உதவுவதாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் 6 வயதிற்குட்பட்ட அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்காக நடத்தப்படும் ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் (EIC) மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அறிவுசார் குறைபாடுயுடையவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்களில் (Day Care சென்டர்) வாழ்க்கைக் கல்வியுடன் கூடிய மறுவாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதினான்கு வயதிற்கு மேற்பட்ட அறிவுசார் குறைபாடு உடையவர்கள் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் 67 மறுவாழ்வு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வில்லங்களில் இருபாலினத்தவர்களுக்கும் மருத்துவம் மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மற்றும் மறுவாழ்வு பயிற்சிகளுடன் நெசவுக்கலை, தோட்டக்கலை, மெழுகுவர்த்தி தயாரித்தல், அடுமனை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு பணியின் மூலம் அவர்களுக்கு ஏற்படும் பதற்றம், மன அழுத்தம், LDOOT அதிர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களிலிருந்து மீள்வதற்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்குபின், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களுடைய இணைக்கப்படுகின்றனர். குடும்பத்துடன் இப்பணிக்காக அரசின் நிதி உதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் பராமரிப்பு இல்லங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வில்லப்பயனாளிகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 122 இல்லங்களில், 51 இல்லங்கள் அரசின் நிதியுதவினை பெற்று செயல்படுகின்றன. மீதமுள்ள 71 இல்லங்கள் சுயநிதி இல்லங்களாக செயல்பட்டு வருகின்றன. "மீண்டும் இல்லம்" திட்டம் அரசின் புதிய முன்னோடித் திட்டமாக "மீண்டும் " (Home Again) 2023-2024- फ्री அறிமுகப்படுத்தப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் முற்றிலும் குணமடைந்த மனநோயாளிகள், உணர்வு, சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், சமுதாயத்தில் மறுவாழ்வு பணியாளர்களின் உதவியின்றி சுயமாக ஒருங்கிணைந்து வாழவும், முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு இரண்டு இல்லங்கள் வீதம் 10 இல்லங்கள் மூலம் 40 நபர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மனநலச் சட்டம், 2017-இன் கீழ் பதிவு செய்த தகுதியான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு மறுவாழ்வு இல்லங்கள் பரனூர் - செங்கல்பட்டு உளுந்தூர் பேட்டை - கள்ளக்குறிச்சி பர்கூர் - கிருஷ்ணகிரி மச்சுவாடி - புதுக்கோட்டை மனையேறிப்பட்டி - தஞ்சாவூர் யா. புதுப்பட்டி - மதுரை மல்லவாடி - திருவண்ணாமலை செல்லியம்பட்டி - தர்மபுரி தேவியாகுறிச்சி - சேலம் விண்ணப்பள்ளி - ஈரோடு மாநில வள மற்றும் பயிற்சி மையங்கள் - சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி மாற்றுத்திறனாளிகள் அரசின் பல்வேறு உதவிகள் பெறுவதற்கு தேவையான தகவல்கள், ஆலோசனைகள், அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் வழங்கும் வகையில் மாநில வள பயிற்சி மையம் 2005-2012-ஆம் ஆண்டு சென்னையிலும், திருச்சிராப்பள்ளியிலும் ஆண்டு இந்த தொடங்கப்பட்டுள்ளன. மையங்களில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கும் தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், இம்மையங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதிப்படைந்தோருக்கான பகல்நேர பராமரிப்பு மையம் மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மையம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மருத்துவ சான்றிதழுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. மேலும், தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர் வண்டி கட்டணச் சலுகை, பேருந்து கட்டணச் சலுகை, வருமான வரிச் சலுகை, அரசு தேர்வு எழுதுவதற்காக உதவியாளர் அமைத்துக் கொள்ளுதல் மற்றும் கூடுதல் நேரம் ஒதுக்கக் கோருதல் உள்ளிட்ட சலுகைகள் பெறுவதற்காக சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாற்றுத்திறன் வழங்குவதற்கான தொடர்பான தகவல் உதவி மையம், இலவச தொலைபேசி அழைப்பு எண்.1800-425-0111 உடன் சென்னை, மாநில வள பயிற்சி மையத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 9499933703 என்ற அலைபேசி எண்ணில் காணொலி அழைப்பின் மூலம் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புப் பள்ளிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி வழங்கும் வகையில் 22 அரசு சிறப்புப் பள்ளிகள், மானியம் பெறும் சிறப்பு பள்ளிகள் 48 அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகள், 323 அரசு செயல்பட்டு வருகின்றன. இச்சிறப்புப் பள்ளிகள் மாற்றுத்திறன் குழந்தைகளின் தேவைக்கேற்ற நிலையில் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 அரசு பள்ளிகளும், கடுமையாக உடல் பாதிப்பு அடைந்தோருக்கு ஒரு அரசு பள்ளியும், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒரு அரசு நிறுவனம் என மொத்தம் 22 சிறப்புப் பள்ளிகள் அரசால் நடத்தப்படுகின்றன. இச்சிறப்பு பள்ளிகளில் 1094 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். கல்வி உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளின் பள்ளி வருகையினை ஊக்குவித்து சிறப்புக்கல்வியினை மேம்படுத்தும் நோக்கத்தில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அவர்கள் பயிலும் வகுப்புகளுக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை 2023-24-ஆம் நிதியாண்டில் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. வருடாந்திர உதவித்தொகை (ரூபாயில்) 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை - 2,000/- 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை - 6,000/- 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை - 8,000/- இளங்கலை பட்டப்படிப்பு - 12,000/- தொழிற்படிப்பு மற்றும் முதுகலை - 14,000/- தேர்வெழுத உதவுவோருக்கான உதவித்தொகை பார்வை மாற்றுத்திறனாளிகளின் சிறப்புக் கல்வியினை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வுதவியாளருக்கு உதவித்தொகையாக தேர்வு தாள் ஒன்றுக்கு ரூ.300/-வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சிறப்புப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற் பயிற்சி மையங்களில் தங்கி பயிலும் பார்வை மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் சீருடைக்கான மானியத்தொகை முறையே ரூ.500/-மற்றும் ரூ.600/- ஆக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறன் மாணவர்களின் உயர்கல்வியினை ஊக்குவித்து இடைநிற்றலை தவிர்க்கும் நடவடிக்கையாக 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு /ஆண்டொன்றிற்கு ரூ.1,500/-முதல் ரூ.2,000/- வரையிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இத்தொகையானது, தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பற்று வைக்கப்பட்டு, 12-ஆம் வகுப்பு முடித்த பிறகு வட்டியுடன் சேர்த்து இத்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சட்டம் பயின்ற மாற்றுத்திறன் பட்டதாரிகளுக்கான உதவித் தொகை மாற்றுத்திறன் மாணவர்கள் சட்டப்படிப்பு பயின்று, வழக்குரைஞர் மன்றத்தில் பதிவு செய்யவும், சட்டப் புத்தகங்கள் வாங்கத் தேவையான செலவினங்களை மேற்கொள்ளவும் ரூ.50,000/- உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தரமான மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகளை பதிவு செய்யப்பட்ட மருத்துவ நிறுவனம் மற்றும் முகமைகள் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். மேலும், புற உலக சிந்தனையற்ற / மதி இறுக்கமுடைய மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு மாற்றுத்திறனாளிகள் இதனால் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் வருமான உச்ச வரம்பு ஏதுமின்றி மருத்துவ சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் தசைச்சிதைவு, அறிவுசார், மூளை முடக்குவாதம், கற்றலில் குறைபாடு, செவிதிறன் குறைபாடு மற்றும் பல்வகை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பராமரிப்பு சிகிச்சைகள் இத்திட்டத்தின் மூலம் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்களும் இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆதாரம்: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு அரசு