நோக்கம் பதிவு தபால்கள் மற்றும் விரைவு தபால்களை வீடுகளில் இருந்தே அனுப்ப புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. தபால் துறை புதிய சேவை பொதுமக்கள் குறிப்பிட்ட முகவரிக்கு பதிவு தபால் மற்றும் பார்சல்கள் போன்றவற்றை அனுப்புவதாக இருந்தால் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தான் அனுப்ப முடியும். சில நேரங்களில் ஒரே ஒரு பதிவு தபால் அனுப்புவதாக இருந்தாலும் மணிக்கணக்கில் தபால் அலுவலகங்களில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்படும். வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறானாளிகள் போன்றவர்களுக்கு இது போன்று காத்துக் கிடப்பதால் சிரமம் ஏற்படுகிறது. இதன் மூலம் வீடுகளுக்கு வரும் தபால்காரர்களிடம் பொதுமக்கள் விரைவு தபால்கள், பதிவு தபால்களை அளிக்கலாம். அவர் அந்த தபால்களை தபால் அலுவலகத்தில் கொண்டு சென்று பதிவு செய்து முறையாக அனுப்ப வேண்டிய முகவரிக்கு அனுப்புவார். இதற்கான ரசீதை மறுநாள் தபால் பட்டுவாடா செய்ய செல்லும் போது பொதுமக்களிடம் அளிப்பார். இதற்கு தேவையான தபால்களையும் பொதுமக்கள் தபால்காரரிடம் பெற்றுக்கொள்ளலாம். நன்மைகள் சென்னை வட்டத்திற்கு உட்பட்ட புதுச்சேரி மற்றும் வட தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய விரைவு தபால் மற்றும் பதிவு தபால்களை தபால் அலுவலகத்துக்கு வந்து தான் அனுப்ப வேண்டும். பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் வீடுகளில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் பதிவு மற்றும் விரைவு தபால்களை அளித்தால், அவரே தபால் அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அதற்கான ரசீதை மறுநாள் அளிப்பார்கள். இதற்கு தேவையான தபால் தலைகளை தபால்காரரிடமே பெற்றுக் கொள்ளலாம். ஆதாரம்: இந்திய தபால் துறை