நோக்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, மிகச் சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தெருவோர சிறு வணிகர்கள், பெட்டிக் கடைகள் நடத்துவோர், முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலையை தவிர்க்கவும், ஏழை, எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வகை செய்யும் ஒரு புதிய திட்டம் - இத்திட்டத்தின் வாயிலாக, கூட்டுறவு வங்கிகள் மூலம் 5 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் - கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டியாக 11 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் - இந்தக் கடனை 25 வாரங்களில் வாரந்தோறும் 200 ரூபாய் என்ற அடிப்படையில் திருப்பிச் செலுத்த வேண்டும் - குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு மீண்டும் அதே அளவு கடன் தொகையை குறைந்த வட்டியான 4 சதவீதத்தில் வழங்கப்படும்

பயன்கள்

மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 5000 வரை வட்டியில்லாக் கடன் உதவி

சிறு வணிகர்களுக்கு உதவிடும் வகையில் 11 சதவீத வட்டியை தமிழ்நாடு அரசே ஏற்கும்

பூக்கள், பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருள் போன்றவற்றை விற்கும் தெருவோர சிறு வணிகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், பெட்டிக்கடை நடத்துவோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம்

எளிய தவணையில் வாரம் ரூ. 200 வீதம் 25 வாரங்களில் திரும்ப செலுத்தும் வசதி

குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் சிறு வணிகர்களுக்கு, 4 சதவீத குறைந்த வட்டியில் மீண்டும் கடன் உதவி பெறும் வசதி

ஆதாரம்: தமிழ்நாடு அரசு