தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களிலும் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகள் வழங்கல் திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது.

பயன்பெற தகுதிகள்

பயனாளி பெண் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.

அக்குடும்பத்தில் உள்ள நபர் எவரும் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கக் கூடாது.

குடும்ப அட்டையில் பயனாளியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

பயனாளி நிரந்தரமாக அதே இருப்பிடத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

பயனாளியின் வீட்டு சமையல் அறையில் மேடை இருத்தல் வேண்டும். அல்லது மேடை அமைக்க முன் வர வேண்டும்.

பயனாளி எரிவாயுவினை குறைந்த பட்சம் 3 வருடங்கள் சமையல் செய்ய பயன்படுத்த வேண்டும்.

எரிவாயு சிலிண்டர் மட்டும் பயனாளியால் வாங்கப்பட வேண்டும்.

விண்ணப்பப் படிவம்

இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று குடும்ப அட்டையின் நகலையும், தேவையான சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு அரசு