தமிழ்நாடு அரசு, விதவை பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு தனியாக நிதியுதவி அளிக்கும் வகையிலும் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. நிபந்தனைகள் மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணின் வயது 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஆணிற்கு முதல் திருமணமாக இருக்க வேண்டும். ஆணின் வயதுக்குக் கட்டுப்பாடு இல்லை. மறுமணம் முடிந்து ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வருமான உச்சவரம்பு எதுவுமில்லை. விண்ணப்பம் மாவட்ட சமூக நல அதிகாரி அலுவலகத்தில் இந்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும். இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதுடன் பின்வரும் சான்றிதழ்களையும் இணைத்து மாவட்ட சமூக நல அதிகாரி அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். பெண்ணிற்கான வயது சான்றிதழ் முதல் திருமணம் நடந்ததற்கான சான்றிதழ் முதல் கணவரின் இறப்பு சான்றிதழ் இரண்டாம் கணவருக்கு இது தான் முதல் திருமணம் என்பதற்கான சான்றிதழ் விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு, அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. உதவித்தொகை இத்திட்டத்தில் உதவி பெறுபவர்களுக்கு நிதியுதவியாக ரூ. 10000 அளிக்கப்படுகிறது. இதில் ரூ. 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூ. 3000க்கான காசோலையாகவும் வழங்கப்படுகின்றன. தேசிய சேமிப்புப் பத்திரத்தை 5 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து மாற்றிக் கொள்ளும்படியான நிபந்தனையுடன் அளிக்கப்படுகிறது. ஆதாரம்: தமிழ்நாடு அரசு