கட்டாய ஓய்வு பெறுதல்

முப்பது வருட பணி காலம் அல்லது 50 வயது முதிர்வு பெற்ற வாரிய ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக மூன்று மாத கால நோட்டீஸ் மற்றும் மூன்று மாத சம்பளம் மற்றும் இதர படிகளை வழங்கலாம். (வா.ஆணை.எண் 109. நாள் 17.05.1991), அடிப்படை சட்டம்-56(2)

முப்பது வருட பணி காலம் முதிர்வு பெற்ற ஊழியர்களுக்கு நிர்வாக முறையின் படி 55 வயதில் கட்டாய ஓய்வு வழங்கப்படும்.

ஈடு செய்யும் ஓய்வூதியம்

மூன்று மாத நோட்டீஸ் கொடுத்த பின் தற்காலிக வாரிய ஊழியர்கள் மீண்டும் நிரந்திர பணியில் அமர்த்தப்பட்டு அந்த பதவியை ஏற்காத பட்சத்தில் அவருடைய இடைப்பணி காலத்தில் ஈடுசெய்யும் ஓய்வூதியத்தை பெற அனுமதிக்கப்படுகிறார். (வா.ஆணை.எண் 38(1)). தமிழ்நாடு மி.வா.ஓய்வூதியம் சட்டம்)

நோட்டீஸ் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில் எந்தவித சம்பளம் மற்றும் இதர படிகளை பெற அனுமதிக்கப்படார், (விதிமுறை 38(2) தமிழ்நாடு மி.வா. ஓய்வூதியர் சட்டம்)

ஈடு செய்யும் ஓய்வூதியத்தை பெறுபவர்கள் பணிச்சிறப்பு பெற இயலாது.

ஆதாரம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்