புது வாழ்வு திட்டம்

புது வாழ்வு திட்டமானது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் செயல்படுத்தப்படும் ஆற்றல் வளர்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு திட்டமாகும். இத்திட்டமானது சுமார் 6 ஆண்டுகளில் ரூபாய் 717 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தமிழகத்தின் 16 மாவட்டங்களில் (புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் உட்பட) உள்ள 70 பின்தங்கிய நிலையில் உள்ள ஒன்றியங்களுக்குட்பட்ட 2509 ஊராட்சிகளை இத்திட்டம் பயன்பெறச் செய்கிறது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் துவக்கப்பட்ட போதிலும் திட்டத்தின் முழு அளவிலான செயல்பாடுகள் 2006- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் இலக்கு மக்கள் தொகை எனப்படுவது மிகவும் ஏழைக் குடும்பங்கள், நலிவுற்றோர், ஊனமுற்றோர் மற்றும் பட்டியலிடப்பட்ட சமூகங்களை உள்ளடக்கியுள்ளது.

இத்திட்டமானது தளர்த்தப்பட முடியாத திட்டக் கோட்பாடுகளைக் கொண்டு மக்களாலேயே செயல்படுத்தும் முறையின் மூலம் மக்கள் அவர்களின் தேவையை அவர்களே கண்டறிந்து திட்டமிடுதல், செயல்படுத்துதல், கால அளவை நிர்ணயித்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றைப் பின்பற்றச் செய்கிறது.

இதன் மூலம் புதுவாழ்வு திட்டமானது மக்கள் திட்டம் என்ற வலுவான உணர்வை மக்களிடையே ஏற்படுத்தச் செய்கிறது.

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாடு