சமூக தணிக்கை குழுவின் கடமைகள்

ஆளுமை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் எல்லா திட்ட நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பொறுப்பு சமூக தணிக்கை குழுவிற்கு தான் உண்டு.

அனைத்து மக்கள் அமைப்புகளிலும் இலக்கு மக்கள் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதை உறுதி செய்தல்.

அனைத்து மக்கள் அமைப்புகளிலும் அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்புடன் கூட்டங்கள் மற்றும் பயிற்சிகள் நடத்துவதை உறுதி செய்தல்.

அனைத்து மக்கள் அமைப்புகளும் உயிர் மூச்சின்படியும் திட்ட வழிகாட்டியின்படியும் செயல்படுவதை உறுதி செய்தல்.

மக்கள் அமைப்புகள் தங்களது அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரிப்பதை உறுதி செய்தல்.

அனைத்து தகவல்களும் மக்களுக்கு தகவல் பலகை மூலம் தொடர்ந்து சென்றடைவதை உறுதி செய்தல்.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு பயனாளிகளை தேர்வு செய்தல், முன்னுரிமைப்படுத்துதல், கடன் தொகை போன்ற எல்லா தகவல்களையும், தகவல் பலகையில் எழுதுவதை உறுதி செய்தல்.

இலக்கு மக்களுக்கு திட்டத்தின் பயன்கள் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்தல்.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் அனைத்து செயல்களையும் கண்காணித்து, அமுத சுரபி நிதியின் கீழ் தகுதியான சுய உதவி குழு உறுப்பினர்கள் பயனடைவதை உறுதி செய்தல்.

சுய உதவி குழுக்களில் உள்ள இலக்கு மக்கள் அனைவரும் அமுத சுரபி நிதியின் கீழ் கடனை பெற்ற நோக்கத்திற்காக உபயோகிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தல்.

அமுத சுரபி நிதி மூலம் பெறப்பட்ட கடனை சரியாக கடன் திருப்பம் செய்துள்ளதை கண்காணித்தல்.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் கீழ் செயல்படும் குடியிருப்பு அளவிலான அமைப்பு (HLF) மற்றும் துணை குழுக்கள் (Sub Commitees) ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணித்தல்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கூட்ட தேதிகள், ஆண்டு செயல் திட்டம், துணைத் திட்டம், பயிற்சி விவரங்கள், தணிக்கை அறிக்கை மற்றும் இதர செயல்பாடுகளை பற்றி சமூக தணிக்கை குழு முன்னதாகவே தெரிந்திருத்தலை உறுதி செய்தல்.

மக்கள் அமைப்புகள் செயல்பாடுகளில் கண்டறியப்பட்ட தவறுகளை பரிந்துரைகளாக சம்பந்தப்பட்ட அமைப்பிற்கும் களப்பகுதிக்கும் அறிக்கை சமர்பித்தலை உறுதி செய்தல்.

சமூக தணிக்கை குழுவின் பரிந்துரையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திடமிருந்து சமூக தணிக்கை குழுவின் அடுத்த கூட்டத்திற்குள் பெற்று கொள்வதை உறுதி செய்தல்.

ஒவ்வொரு மாதமும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் களப்பகுதிக்கு வழங்கப்படும் மாதாந்திர முன்னேற்ற அறிக்கை சமூக தணிக்கை குழு கையொப்பம் இடுதலை உறுதி செய்தல்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகளை கிராம சபையில் அறிக்கை சமர்பித்து திட்டத்தின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தல்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை அடுத்தடுத்த தவணை நிதியினை பெறுவதற்கான மைல் கற்களை ஆய்வு செய்து சான்றளித்தல்.

ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை சமூக தணிக்கை குழுவால் உள்கற்றல் நடத்தப்படுவதை உறுதி செய்தல்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் இணைந்து (GAAP) ஆளுமை மற்றும் பொறுப்புணர்வுக்கான செயல் திட்டத்தை தயார் செய்து அதன் நடவடிக்கைகளை கண்காணித்தல்.

அனைத்து மக்கள் அமைப்புகளின் நிதி பயன்பாட்டு சான்றிதழை கிராம சபைக்கு சமர்ப்பித்து ஒப்புதல் பெறுதல்.

சமூக தணிக்கை குழு பயிற்றுநர்களுக்கான பயிற்றுநர்

ஒவ்வொரு களப்பகுதி அளவில் சிறப்பாக செயல்படும் சமூக தணிக்கை குழு உறுப்பினர்களிலிருந்து 5 முதல் 6 பயிற்றுநர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்றுநர்கள் 3 முதல் 4 ஊராட்சிகளில் செயல்படும் சமூக தணிக்கை குழுக்களை வழி நடத்துபவராக செயல்பட வேண்டும்.

சமூக தணிக்கை குழு வல்லுநர்களின் அவசியம்

பலவீனமான சமூக தணிக்கை குழுவினரை வலுப்படுத்த

திட்ட ஒருங்கிணைப்பு அணியின் தொடர் கண்காணிப்பில் வேலையினை பகிர்ந்து கொள்ள

அனுபவ பகிர்வு

சமூக தணிக்கை குழுவின் உற்சாகம் அதிகரிக்கப்பட்டு செயல்பாடுகளின் தரத்தினை மேம்படுத்த

புதிய சமூக தணிக்கை குழு வல்லுநர்களை உருவாக்க

அனைத்து கண்காணிப்பு கருவிகளும் பயன்படுத்த

வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்திட

சமூக தணிக்கை குழுவினருக்கு பயிற்சியளிக்க

களப்பயணம் மேற்கொள்ள

சமூக தணிக்கை குழு வல்லுநர்களுக்கான தகுதிகள் மற்றும் பொறுப்புகள்

(i) தகுதிகள்

குறைந்தபட்சம் சமூக தணிக்கை குழுவில் ஓர் ஆண்டு சேவை செய்திருக்க வேண்டும்.

தவறாது கிராம சபைக்கு அறிக்கை சமர்பித்திருக்க வேண்டும்.

ILF, GAAP தொடர்ந்து சுழற்சி முறையில் நடத்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

முதல் தர மதிப்பீடு பெற்ற ஊராட்சியை சேர்ந்தவருக்கு முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டும்.

சமூக தணிக்கை குழு வல்லுநர்கள் தேர்வு செய்யும் போது “A” மற்றும் “B” தர மதிப்பீடு பெற்ற சமூக தணிக்கை குழுவில் இருந்திருக்க வர வேண்டும்.

(ii) பொறுப்புகள்

ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு குறிப்பிடப்பட்ட தேதியில் செல்ல வேண்டும்.

சமூக தணிக்கை குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் வருகையை உறுதி செய்திட வேண்டும்.

முந்தைய கூட்டத்தின் பரிந்துரையின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

செயல்பாடுகள் வாரியாக தணிக்கை செய்யும் முறையை அந்தந்த சமூக தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

சமூக தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி அளிக்க வேண்டும் அல்லது உறுதி செய்ய வேண்டும்.

புதிய சமூக தணிக்கை குழு உறுப்பினர்களுக்கும், பழைய உறுப்பினர்களுக்கும் புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

அதிகபட்சம் 12 மாதங்களுக்குள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஊராட்சியில் உள்ள சமூக தணிக்கை குழுவை தன்னிச்சையாக செயல்பட வைத்திருக்க வேண்டும்.

ஊராட்சி அளவில் உள்கற்றல் நிகழ்வினை சுழற்சி முறையில் தொடர்ந்து நடத்தி பிரச்சனைகளை களைவதற்க்கு வழி நடத்திட வேண்டும்.

இதே போல் ஊராட்சி அளவில் ஆளுமை மற்றும் பொறுப்புணர்வு செயல்திட்டம் தயாரித்திட உதவிட வேண்டும்.

உள்கற்றல் அனுபவங்களை திட்ட ஒருங்கிணைப்பு அணி அளவில் பகிர்ந்து கொள்ள செய்ய வேண்டும்.

ஆளுமை மற்றும் பொறுப்புணர்வு செயல்திட்டத்தினை மேல் நடவடிக்கைக்கு திட்ட ஒருங்கிணைப்பு அணிக்கு எடுத்து செல்ல வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பிற்கு உள்மதிப்பீடு செய்ய உதவிட வேண்டும்.

ஒன்றிய / மாவட்ட அளவிலான சமூக தணிக்கை குழு வல்லுநர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

கொடுக்கப்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை அறிக்கை தயாரிக்க உதவ வேண்டும்.

(iii) சமூக தணிக்கை குழு வல்லுநர்கள் சமர்பிக்க வேண்டிய அறிக்கைகள்

1. பகுதி அளவில் சமர்பிக்க வேண்டிய அறிக்கைகள்

ஊராட்சியில் கொடுக்கப்படும் பரிந்துரை அறிக்கையின் நகலை பகுதி அளவில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் பயிற்சி அட்டவணை நகலை திட்ட ஒருங்கிணைப்பு அணி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

2. மாவட்ட / ஒன்றிய அளவில் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.