தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மகளிரை சுய உதவி குழுக்களாக அமைத்து, திறன் வளர் பயிற்சிகள் வழங்கி, கூட்டமைப்புகள் மூலம் ஒருங்கிணைத்து, வங்கிகள் மூலம் கடனுதவிகள் பெறச் செய்து, சிறு தொழில்களில் ஈடுபடுத்தி வருவாயைப் பெருக்குவதன் மூலம் வறுமையை குறைத்து சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக 'தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்’ 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம், மாநிலத்திலுள்ள வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு நீடித்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் 2012-13 ஆண்டிலிருந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினை செயல்படுத்தி வருகிறது. சுய உதவி குழுக்களுக்கான திட்டங்களும் அதன் செயல்பாடுகளும் அ. சுய உதவி குழுக்கள் கடன் உதவி பெறுவதற்கான தகுதிகளும் நிபந்தனைகளும் குறைந்தபட்சம் 6 மாத காலம் முடிவுற்ற சுய உதவி குழுக்கள் சுய உதவி குழுக்கள் கீழ்கண்டவற்றை தவறாது கடைபிடித்திருக்க வேண்டும்: கூட்டங்கள் நடத்துதல் சேமிப்பு உள்கடன் கொடுத்தல் கடன் வசூலித்தல் பேரேடுகள் பராமரித்தல் தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் திட்டத்தின் செயல்பாடு வருமானம் ஈட்டக் கூடிய தொழில்களை மேற்கொள்ள வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டு சுய உதவி குழு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்யப்படும். சுய உதவி குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் நிலைத்த தன்மையை அடைய இரண்டாவது மறுகடன் மற்றும் தொடர் மறுகடன் இணைப்பு வங்கிகள் மூலமாக வழங்கப்படும். கடன் அளவு வங்கிகள் மூலம் முதல் கடன் இணைப்பு - ரூ. 50000 இரண்டாவது கடன் இணைப்பு - ரூ. 100000 மூன்றாவது கடன் இணைப்பு -ரூ. 200000 நான்காவது கடன் இணைப்பு- ரூ. 500000 முதல் 1000000 தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அனைத்து மாவட்டங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழை மக்களைக் கண்டறிந்து சுய உதவி குழுக்களாக ஒருங்கிணைத்து அவர்களுக்கான நிலைத்த தன்மையுடைய அமைப்புகளை உருவாக்கி பல்வேறு திறன் பயிற்சிகள் மூலம் வலுப்படுத்தி, இலாபம் தரக்கூடிய சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவர்களது வாழ்வாதார நிலையை உயர்த்தி, வறுமையை ஒழிப்பதே இவ்வியக்கத்தின் குறிக்கோளாகும். திட்டங்கள் தமிழ்நாட்டிலுள்ள 31 ஊரக மாவட்டங்களில் மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட ஏழை மக்களின் குடும்பங்களை 5 முதல் 7 ஆண்டுகளில் வறுமையிலிருந்து விடுபடச் செய்யும் நோக்கில் வலுவான மற்றும் உயிரோட்டமான மக்கள் அமைப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிதி மற்றும் பல்வேறு சேவைகளை பெற வழிவகை செய்வதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும் திட்டத்தின் உத்திகள் இவ்வியக்கத்தின் குறிக்கோள்களை அடைவதற்காக பின்வரும் திட்ட செயலாக்க உத்திகள் வகுக்கப்பட்டுள்ளது: சமூக உள்ளடக்கம் மற்றும் பொது சமூக ஒருங்கிணைத்தல் ஏழைகளுக்கு நிறுவன வசதிகள் செய்தல் நிதி உள்ளடக்கம் பொருளாதார உள்ளடக்கம் – ஏழைகளுக்கு நீடித்த வாழ்வாதாரத்தினை ஏற்படுத்துதல் திறமைகளை வளர்த்தல் மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுத் தருதல் இறுதிகட்ட சேவை வழங்குதல் (சமூக வல்லுநர்கள் மற்றும் சமூக முனைவோர் மூலமாக) அரசின் இதர திட்டங்களை ஒருங்கிணைத்து நிதியாதாரங்களை ஏற்படுத்தித் தருதல் திட்டத்தின் செயல்பாடு மத்திய அரசுத் திட்டமான தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமானது தமிழக அரசு மூலமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமாக ஏழாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் சுமார் ரூ. 3000 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2012-13 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு எடுக்கப்பட்ட 60 வட்டாரங்களில் உள்ள 2250 கிராம ஊராட்சிகளிலும் 2316 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு எடுக்கப்பட்ட 110 வட்டாரங்களில் உள்ள 3391 கிராம ஊராட்சிகளிலும் 3473 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2014-15 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு எடுக்கப்பட்ட 95 வட்டாரங்களில் உள்ள 2451 கிராம ஊராட்சிகளிலும் 2480 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை தகவல் சேகரிப்பு மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகள் 265 வட்டாரங்களிலும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட செயல்பாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் நிலை ஆய்வுப் பணி முடிக்கப்பட்டுள்ளது. 8269 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களிலும் சமூக தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வியக்கத்தின் கீழ் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள 2388 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு மொத்தமாக ரூ. 167.84 கோடி வறுமை ஒழிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள 3518 கிராமவறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு மொத்தமாக ரூ. 114.90 கோடி வறுமை ஒழிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள 2451 ஊராட்சிகளுக்கு தலா ரூ. 55000 வீதம் ரூ. 13.48 கோடி வறுமை ஒழிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இதுவரை ரூ. 296.22 கோடி ரூபாய் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து மாவட்டங்கள் திறன் பயிற்சி அ. தொழில் மற்றும் பணியமர்வு பயிற்சி தீனதயாள் உபாதியாய கிராமின் கௌசல்ய யோஜனா (DDU-GKY) திறன் பயிற்சி திட்டமானது, தமிழ்நாட்டில் 2012-13 ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு அங்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வியக்கம் கிராமப்புற இளைஞர்களின் தேவைகளின் அடிப்படையில் அவர்களின் குடும்ப வருமானத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அவரவர் தொழில் விருப்பங்களுக்கு ஏற்றவாறு கற்றுத் தரப்படுகிறது. இத்திட்டமானது, கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் திறன் மேம்பாடு பயிற்சியளித்து, தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன், அவர்களுக்குத் தொடர்ந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட NCVT / SSC பாடத்திட்டங்களின்படி பயிற்சி வழங்கும் பயிற்சி நிறுவனங்களை அங்கீகரித்தும், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றளித்தும், பயிற்சி பெற்றவர்களில் குறைந்தது 70 விழுக்காடு பயிற்சியாளர்களை ரூ. 6000 மாத வருமானத்திற்கு குறையாமல் பணியில் அமர்த்தியும் உள்ளிட்ட பல்வேறு தொடர் முயற்சிகளின் மூலமும் கிராமப்புறங்களில் வறுமையை ஒழித்திடும் உன்னத நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள் 3 முதல் 12 மாதங்கள் வரையிலான வேலைவாய்ப்புடன் கூடிய சந்தை சார்ந்த தொழில் திறன் பயிற்சிகள் தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் திட்டத்தில் பயன்பெறுபவர்கள் விழுக்காடு 50 விழுக்காடு அட்டவணை மற்றும் பழங்குடியினர் 15 விழுக்காடு சிறுபான்மையினர் 3 விழுக்காடு மாற்றுத் திறனாளிகள் 33 விழுக்காடு பெண்கள் (அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியபின்) பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள் 18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ள இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலருக்கும்) பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நலிவடைந்தோர் மற்றும் விளிம்பு நிலை பழங்குடியினர் முதலியோருக்கும் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக தளர்த்தப்பட்டுள்ளது. திட்ட செயல்பாடு தீனதயாள் உபதியாய கிராமின் கெளசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலமாக நிரந்தர பதிவு எண் (PRN) பெற்ற பயிற்சி நிறுவனங்களால் இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் மாநில அளவிலான உயர்மட்ட குழுவானது சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகிறது. மாநில அளவிலான உயர்மட்ட குழுவின் அனுமதியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க தலைமை அலுவலகத்தின் வாயிலாக பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் இடப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பயிற்சிக்கான திறன் இடைவெளி ஆய்வின் விபரங்களை பயிற்சி அளிக்கும் நிறுவனம் அளிப்பதோடு, அதற்கான வேலை வாய்ப்பிற்கான சாத்தியக் கூறுகள் தற்போது மற்றும் வருங்காலத்தில் இருப்பதையும் உறுதி செய்து அவ்விவரங்களை அந்நிறுவனம் வழங்குகிறது. தரமான பாடத்திட்டம் மற்றும் SSC/NCVT ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட அடிப்படை பாடத்திட்டத்தினை அனைத்து பயிற்சிகளுக்கும் பின்பற்றுவதுடன் அடிப்படை ஆங்கிலத்தில் பேச்சுத்திறன், அடிப்படை கணினி அறிவு மற்றும் மென்திறன் போன்ற திறன் மேம்பாட்டு பாடங்களையும் கொண்டதாக பாடத் திட்டம் இருக்கும். பயிற்சியின் பாடத்திட்டமானது 40 விழுக்காடு விளக்கப்பாடமும், 60 விழுக்காடு செய்முறைப் பயிற்சியும் கொண்டிருப்பதுடன் பயிற்சியின் போது பாடத்திட்ட குறிப்புகளும் அளிக்கப்படுகின்றது. பயிற்சி காலத்தில், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு சீருடை வழங்கப்படுகிறது. நிறுவன பயிற்சிக்குப் பின் இரண்டாம் கட்டமாக மொத்த பயிற்சிகால அளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் பணியமர்த்தும் இடத்திலேயே, களப்பயிற்சி (OJT- On the Job Training) அளிக்கப்படுகிறது. பயிற்சி நிறைவு பெற்ற உடன் DGET மற்றும் NSDC ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயிற்சியாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்கள் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் வழங்கப்படுகிறது. பயிற்சி நிறுவனங்கள், பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு குறைந்தது ஓராண்டு காலம் வரை ஆலோசனை வழங்கி அவர்கள் பணியில் தொடர்ந்து நீடிப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கவும் வழிவகை செய்யப்படுகின்றது. உண்டு உறைவிடப் பயிற்சி 2016-17 முதல் இப்பயிற்சியானது உண்டு உறைவிடப் பயிற்சியாகவும் வழங்கப்படுகிறது. அவ்வாறு தங்கி பயிலாத முறையில் வழங்கப்படும் பயிற்சிக்கு ஒவ்வொரு இளைஞருக்கும் நாளொன்றுக்கு ரூ. 100 என்ற வீதத்தில் அவர்கள் வருகை தந்த காலத்திற்கு கணக்கிடப்பட்டு மதிய உணவு மற்றும் போக்குவரத்துக் கட்டணத்திற்காக அவரவது வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படுகிறது. பணியமர்வுக்கு பின் அளிக்கப்படும் ஊக்கத்தொகை மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சார்ந்த திறன் பயிற்சி பெற்று பணியில் அமர்த்தப்பட்ட இளைஞர்களுக்கு அவர்களது உடனடி தேவையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில் பணியில் இருந்தால் 2 மாதங்களுக்கும், மாவட்டத்திற்கு வெளியே மாநிலத்திற்குள் பணியிலிருந்தால் 3 மாதங்களுக்கும், மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்தில் பணியிலிருந்தால் 6 மாதங்களுக்கும் இவ்ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. திறன் பயிற்சி சாதனைகள் (2012-2016) 2012 முதல் 2016 ஆண்டு வரை, 40029 இளைஞர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடை, விருந்தோம்பல், கட்டுமானம், சுகாதாரம், சில்லறை வணிகம் மற்றும் அழகுக் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களில் 31167 இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2016-17 முதல் 2018-19 ஆண்டு வரை மூன்றாடுகளில் 44416 இளைஞர்களுக்கு ரூ. 565.96 கோடி செலவில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியமாத்தப்பட உள்ளனர். ஆ. வேலைவாய்ப்பு முகாமின் மூலம் நேரடி வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு முகாமானது வேலை கொடுப்பவர் மற்றும் வேலை தேடுபவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க தமிழக அரசால் துவக்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த முன் முயற்சியாகும். இம்முகாம்களில் இளைஞர்களின் தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு பணியமர்வு செய்யப்படுகின்றனர். இம்முகாம்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் பின்வருமாறு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு நாள், இடம் மற்றும் தேதி பற்றி ஊரக பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல். வேலைவாய்ப்பு அளிக்கும் நிலையில் உள்ள தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்களை இம்முகாம்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தல். முறையான பதிவு, கலந்தாய்வு மற்றும் நிறுவனங்களின் தேவைக்கேற்ப இளைஞர்களை தேர்வு செய்தல். 2015-16 ஆம் ஆண்டில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வாழ்வாதாரப் பகுதிகளில் மொத்தம் 90 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 2464 நிறுவனங்கள் பங்கேற்றனர். அவற்றில் 36653 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு தனியார் நிறுவனங்களில் குறைந்தது ரூ. 5000 முதல் ரூ. 12000 வரையிலான மாத வருமானத்திற்கு பணியமர்வு செய்யப்பட்டுள்ளனர். 2016-17 ஆம் ஆண்டில் 385 வேலைவாய்ப்பு முகாம்கள் மாநிலத்தின் அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரத்திற்கு ஒன்று வீதம் நடத்திட இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு அதில் நாளது வரை 266 வட்டாரங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 2847 நிறுவனங்கள் பங்கேற்றனர். இம்முகாம்களின் வாயிலாக 24850 இளைஞர்கள் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க செயல்பாடுகளின் மூலம் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொடர் வேலைவாய்ப்பிற்கான வாழ்வாதார திட்டம் (MGNREGS - PROJECT LIFE) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளி குடும்பங்களுக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டமானது 2015-16 ஆம் ஆண்டு முதல் இம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி திட்டத்தின் மூன்று முக்கியகூறுகள்: ஊதியம் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகள், சுய வேலைவாய்ப்பு திறன் சார்ந்த பயிற்சிகள் மற்றும் வாழ்வாதார முன்னேற்ற பயிற்சிகள். இதில் ஊதியம் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகள் மத்திய அரசின் MGNREGS அலகின் நிதி ஆதரவோடு நடத்தப்படுகிறது. பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள்: ஓட்டுநர் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடை, விருந்தோம்பல், கட்டுமானம், சுகாதாரம், சில்லறை வணிகம் மற்றும் அழகுக் கலை. ஊதியம் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகள்: இப்பயிற்சிகள் DDU - GKY திட்டத்தின் வழிமுறைகளின்படி நிரந்தர பதிவு எண் மற்றும் சிறந்த உட்கட்டமைப்பினைக் கொண்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. சுய வேலைவாய்ப்பு திறன் பயிற்சிகள்: சுய வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முன்னோடி வங்கிகளால் நடத்தப்படும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (RSETI's) மூலமாக வழங்கப்படுகிறது. வாழ்வாதார முன்னேற்ற பயிற்சிகள்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திறன் பயிற்சிகள் தேவையின் அடிப்படையில் சுய உதவி குழு மற்றும் ஒத்த தொழில் குழுக்களில் உள்ள தனி நபரின் தேவைக்கிணங்க வழங்கப்படுகிறது. இதன் தொடக்கமாக நீடித்த நிலைத்த வேளாண்மையில் ஈடுப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அனைத்து மாவட்டங்கள் சுய உதவி குழுக்களுக்கான வட்டி மானியம் மத்திய அரசு வட்டி மானிய திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிகளிடமிருந்து பெறப்படும் 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகையின் மீது 7 விழுக்காட்டிற்கு மேல் விதிக்கப்படும் வட்டித் தொகையில் அதிகபட்சமாக 5.5 விழுக்காடு மட்டும் வட்டி மானியமாக தமிழ்நாட்டில் தர்மபுரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் தவிர நீங்களாக 22 மாவட்டங்களில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினால் வழங்கப்படுகிறது. இத்திட்டம் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசால் நேரிடையாக செயல்படுத்தப்படுகிறது. விருதுகள் சிறந்த சுய உதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான விருதுகள் சிறப்பாக செயல்படும் 10 சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் வீதம் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் சிறந்த மூன்று சுய உதவி குழுக்களுக்கு அனைத்து மாவட்டங்களில் தலா ரூ. 25000 வீதம் மூன்று விருதுகள் வழங்கப்படுகிறது. சிறப்பாக செயல்படும் 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 3 இலட்சம் வீதம் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களில் மாவட்ட அளவில் சிறந்த ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு தலா ரூ.