மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், அதனைக் கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. வ.எண் விருதின் வகை விருது விவரம் 1 மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 25000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் (மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்) 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 50000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 6 சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை - 5 அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். மேலும், விண்ணப்பப் படிவங்களை www.awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம். மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு விருதுகள் சுதந்திர தின விழா நிகழ்வில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9