தமிழ்நாடு அரசு பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்க உள்ளது. முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். திட்ட விவரம் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm. / D.Pharm. சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். D.Pharm அல்லது B.Pharm படிப்பினை முடித்து மருந்தாளுனராக உரிமம் பெற்ற தொழில் முனைவோர்கள் முதல்வர் மருந்தகத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம், மேற்படி சான்றிதழ் இல்லாமல் இருப்பின் மேற்கண்ட உரிமம் பெற்ற நபரின் இசைவுக் கடிதத்தை பெற்று சமர்பிக்க வேண்டும். மேற்படி உரிமம் உள்ள கூட்டுறவுச் சங்கங்களும் இதில் விண்ணப்பிக்கலாம் முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் கடன் பெற விருப்பம் உள்ள தொழில் முனைவோர்களுக்கு கூட்டுறவு ங்கிகள் மூலம் கடன் பெற வசதிகள் செய்துதரப்படும். தேர்ந்தெடுக்கப்படும் தொழில் முனைவோர்களுக்கு 3 இலட்சம் அரசு மானியம் வழங்கப்படும். அதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிக்காக ரொக்கமாகவும் 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்படும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழியில் பரிசீலிக்கப்படும். மருந்தாளுநர் தொழில்முனைவோர் தேவைகள் தகுதி மருந்தாளுநர் படிப்பு முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் மருந்தக தொழில் குழுமம் பதிவு சான்றிதழ் மருந்தக தொழில் குழுமம் அடையாள அட்டை மற்றும் பிற சான்றிதழ்கள் இடம் சொந்த இடம் (அல்லது) வாடகை / குத்தகை ஒப்பந்தம் வாடகை இடமாக இருப்பின் உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் (NOC) சொத்து விவரங்கள் (சொத்து வரி, மின்சாரம் கட்டண ரசீது, தண்ணீர் வரி ரசீது) தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் - 110 சதுர அடி கார்பெட் ஏரியா உள்ள கடை, குளிர்சாதன பெட்டி, ஏர் கண்டிஷனர், இணைய இணைப்பு உடன் கணினி, மருந்தக SOP இன் படி அகரவரிசை பெட்டிகளுடன் இருக்கும் அமைப்பு இதர ஆவணங்கள் மருந்தக அனுமதி படிவங்கள் (படிவம் 20, 21, 19) அனுபவ சான்றிதழ் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஜிஎஸ்டி சான்றிதழ், PAN CARD ஏற்கனவே உள்ள கடன் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலை (வங்கி NOC) வழிமுறைகள் விண்ணப்பதாரர் பார்மசி கவுன்சிலில் சான்றிதழ் பதிவு செய்திருக்க வேண்டும் மருந்தகத்திற்கு தேர்வு செய்யப்படும் இடம் பொது மக்கள் எளிதில் அணுகும் இடமாக இருக்க வேண்டும் மருந்தாளுனர் தனது சொந்தக் கடையாக இருந்தால் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நகலையும் அல்லது அது வாடகைக் கடையாக இருந்தால் குத்தகை / வாடகை ஒப்பந்தமும் மருத்தகம் துவங்க தடையின்மை சான்றிதழும் சமர்ப்பிக்க வேண்டும் முன்னுரிமை காரணிகள் ஒரே இடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படின் கீழ்க்கண்ட முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்கள் D.Pharm Or B. Pharm படிப்பினை முடித்த தொழில் முனைவோர்கள் பெண்கள் / ஆதரவற்றவிதவைகள்/ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய இடம் விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள் D.Pharm / B.Pharm கல்வித்தகுதி உடைய தொழில்முனைவோர் ‘முதல்வர் மருந்தகம்’ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் போர்டல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தொழில்முனைவோர் சான்றிதழ் வைத்திருப்பவராக இல்லாவிட்டால், D.Pharm / B.Pharm சான்றிதழை வைத்திருக்கும் தனிநபரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மருந்து உரிமம் பெற்ற கூட்டுறவு சங்கங்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவை. ஆன்லைன் போர்ட்டல் மூலம் விண்ணப்பிக்க சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் கட்டாய தேவை ஆகும். விண்ணப்பதாரருக்கு அனைத்து தகவல் தொடர்புகளும் செய்திகளும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும். பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய சான்றிதழ்கள் மருந்தாளுநர் படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் மருந்தக கவுன்சில் பதிவு சான்றிதழ். மருந்தக கவுன்சில் ஐடி மற்றும் பிற சான்றிதழ்கள் சொந்த கட்டடம் என்றால் அதற்கான சொத்துவரி ரசீது நகல், மின் கட்டண ரசீது நகல், கட்டட உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட தடையில்லாச் சான்று (NOC). வாடகை கட்டடம் என்றால் அதற்கான வாடகை ஒப்பந்தம். ஆன்லைன் விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், கல்வித் தகுதி, கட்டட விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இறுதியாகக் கருதப்படும். எனவே, விண்ணப்பதாரர் மிகுந்த கவனத்துடன் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். தொழில்முனைவோர் மருந்தக உரிமம் பெற்ற உரிமையாளரிடம் இருந்து தடையில்லாச் சான்று பெற்று தங்கள் சொந்த கட்டடத்தில் / வாடகை கட்டடத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ தொடங்கலாம். மருந்தகத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான கள அதிகாரிக்கு அனுப்பப்படும். கள அதிகாரியின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு, விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படும். ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF) உடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாதிரி ஒப்பந்த படிவம் முதல்வர் மருந்தகம் இணையதளத்தில் உள்ளது. ஒப்பந்தம் ஏற்படுத்திய பிறகு, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ. 1.5 லட்சம் தொகை விடுவிக்கப்படும். உட்கட்டமைப்புத் தயார்நிலையில் உள்ளதை இரண்டாவது களச் சரிபார்ப்புக்குப் பிறகு, மானியத்தின் இறுதித் தவணை ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள ஜெனரிக் மருந்துகளாக அளிக்கப்படும். கடன் பெற விரும்பும் தொழில்முனைவோருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு அரசு மானியமாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும். இதில், 50% உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரொக்கமாகவும், 50% மருந்துகளாக விற்பனைக்கு வழங்கப்படும். தேவைப்படும் மூலக்கூறு மருந்துகளை Tamilnadu Consumer Cooperative Federation (TNCCF) மற்றும் மாவட்ட கிடங்குகள் மூலம் மட்டுமே வாங்கப்பட வேண்டும். மருந்தகம் நிலையான இயக்கமுறை வழிகாட்டுதல்களை (SOP) பின்பற்றி நடத்திட வேண்டும். TNCCF உடனான ஒப்பந்த நிபந்தனைகளை வழுவாது பின்பற்ற வேண்டும். ‘முதல்வர் மருந்தகம்‘ எனும் பதாகையின்கீழ் மருந்தகம் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் நடத்தப்படும் எனும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே மானிய தொகை வழங்கப்படுகிறது. எனவே, முதல்வர் மருந்தகம் செயல்படும் கட்டடம் செயல்படும் காலம் வரை வேறு எந்த ஒரு நோக்கத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. தேவையான ஆவணங்களின் பட்டியல்களை கள அலுவலரின் ஆய்வுக்கு அளித்திட B.Pharm/D.Pharm மருந்தகம் உரிமம் வைத்திருப்பவரின் ஒப்புதல் கடிதம். கவுன்சில் பதிவு மருந்தகம் கவுன்சில் மருந்து விற்பனை உரிமம் சில்லறை விற்பனை உரிமம் FSSAI சான்றிதழ் உரிமை / வாடகை ஒப்பந்த ஆவணங்கள் சொத்து வரி / தண்ணீர் வரி / EB பில் ஜிஎஸ்டி பான் கார்டு ஆதார் அட்டை வங்கி பாஸ்புக் கட்டட வாடகைக்கான உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் விண்ணப்பதாரர்கள் ஆதரவற்ற விதவை /எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்கள். மருந்து உரிம சான்றிதழ். தமிழ்நாடு மருந்து உரிமம் பெற விண்ணப்பமாக படிவம் 19, 20, 21. சம்மந்தப்பட்ட மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனருக்கான முகப்பு கடிதம். அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவரால் கையொப்பமிடப்பட்ட (Attested) அங்கீகார ஆவணம். விண்ணப்பதாரர், மருந்தாளுநர் அல்லது தகுதியுடைய நபரால் நிரப்பப்பட்டு கையொப்பமிடப்பட்ட உறுதி ஆவண (Declaration) படிவம். வளாகத்தின் விவரங்கள். கட்டட உரிம ஆவணம் வாடகை ஒப்பந்தம் உரிமம் பெற்ற சர்வேயரால் வழங்கப்பட்ட கட்டட வரைபடம். மருந்தாளுநர் / தகுதியான நபரின் விவரங்கள் (மருந்தாளுநர் பதிவுச் சான்றிதழ், கல்வித் தகுதி, அனுபவச் சான்றிதழ்) விண்ணப்பதாரர் விவரங்கள் (நிறுவனம் / நிறுவன அமைப்பு, புகைப்படங்கள், அடையாள அட்டை /முகவரிச் சான்று, சட்டப்பூர்வ குத்தகை உறுதிப் பத்திரம்) மருந்தக கிடங்கு விவரங்கள் - வளாகத்தின் மாற்றம் அல்லது அமைவிட மாற்றம் ஏற்பட்டால், பின்வருவனவற்றை இணைக்கவும் அசல் உரிமம் விற்பனை பத்திரம், மறுசீரமைப்பு / கலைப்பு பத்திரம் போன்ற அமைவிட தொடர்பான ஆவணங்கள். நீதிமன்ற அமைவிட ஒருங்கிணைப்பு ஆணை, நிர்வாகக்குழு தீர்மானம் மற்றும் பிற ஆவணங்கள் இருப்பின் அவற்றை கட்டாயமாக அளிக்க வேண்டும். ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் கொள்முதல் ரசீது மற்றும் மற்றும் அவற்றின் செயல்நிலை சான்று (Working condition). விண்ணப்பதாரர் சமர்ப்பித்த விவரங்களின் சரியான தன்மையை சரிபார்க்க வேறு ஏதேனும் ஆவணங்கள் தேவையின் அடிப்படையில் கோரப்படும். வெளியீடு : முதல்வர் மருந்தகங்கள் ஆன்லைன் போர்டல்