பத்திரிகையாளர் ஓய்வூதியம் விண்ணப்பம் செய்பவருக்கு 58 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் (விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள் அன்று). விண்ணப்பம் செய்பவர் 20 ஆண்டுகளுக்கு ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக் கலைஞர், பிழை திருத்துபவர் அல்லது செய்தி பிரதிநிதி ஆகிய பதவிகளில் ஒன்றில் முழு நேரம் பணியாற்றி இருத்தல் வேண்டும். விண்ணப்பம் செய்பவர் குணப்படுத்த இயலாத நோயாலோ அல்லது உடல் ஊனமுற்றிருந்தாலோ 10 ஆண்டுகள் பத்திரிகை அனுபவம் போதுமானது. விண்ணப்பம் செய்பவர் விண்ணப்பம் அளிக்கும் போது எல்லா விதத்திலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72000க்கு மேல் இருத்தல் கூடாது. விண்ணப்பம் செய்பவர் பணிக்கொடை (Gratuity) முன்னர் பணி புரிந்த நிறுவனங்களிடமிருந்து பெற்ற தொகை ரூ. 100000க்கு மேற்பட்டு இருத்தல் கூடாது. விண்ணப்பும் செய்பவர் பணியிலிருந்த போது எந்த ஒரு குறிப்பிட்ட ஆண்டிலும் பெற்ற வருமானம் ரூ. 20000க்கு மேல் இருந்திருக்கக் கூடாது. விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட சான்றிதழ்களை தவறாது அனுப்ப வேண்டும். வயது குறித்து கல்வி நிறுவனத்திடமிருந்து சான்றிதழ் பணியாற்றிய பதவி மற்றும் இடம் தொடர்பான சான்றிதழ்கள் பணியிலிருந்து ஒய்வு பெற்ற நாள் குறித்த சான்றிதழ் விண்ணப்பதாரர் ஓய்வு பெற்ற போது கிடைத்த பணிக்கொடைக்கான (Gratuity) சான்றிதழ் பணியிலிருந்த போது பெற்ற அதிகபட்ச ஆண்டு வருமானம் மற்றும் பிற வருமானங்கள் குறித்த சான்றிதழ் விண்ணப்பதாரர் மத்திய-மாநில அரசின் ஓய்வூதியம் பெற்றிருந்தால் அவற்றின் விவரங்கள் குறித்த சான்றிதழ்கள் பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்கள் தற்போதைய ஆண்டு வருமானம் (வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெற வேண்டும்) விண்ணப்பதாரர் உடல் நலமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான மருத்துவ சான்றிதழ் [அரசு மருத்துவமனை அல்லது பதிவு செய்த மருத்துவர்கள் (Registered Medical Practitioner)] வழங்க வேண்டும்) ஓய்வூதியம் பெறுபவர் மறைவெய்தினால் அவருடைய முதல் வாரிசான மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்கு ஏதுவாக மனைவியின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம். ஆதாரம்: செய்தி மக்கள் தொடர்பு துறை