சென்னையிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஹோமியோபதி ஆராய்ச்சி மையத்தில் விரைவில் உள் நோயாளிகள் பிரிவு சென்னை, முட்டுக்காட்டில் அமைந்துள்ள இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஹோமியோபதி ஆராய்ச்சி மையத்தில் விரைவில் உள் நோயாளிகள் பிரிவு தொடங்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான ஹோமியோபதி ஆராய்ச்சி மையத்தில் வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு விரைவில் 25 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவும் தொடங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் சென்னை முட்டுக்காட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது ஐந்து ஆராய்ச்சிகள் இந்த மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு அறிவுசார் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், அதிக சுறுசுறுப்புடன் உள்ள குழந்தைகள் மற்றும் காது கேளாத குழந்தைகள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு பாதிப்புள்ள குழந்தைகளுக்கும் ஹோமியோபதி சிகிச்சைகள் அளிக்கப்படுவதோடு இதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்