மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள்/நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் மாநில விருதுகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் டிசம்பர் 3 அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படுகிறது. வ.எண் விருதுகள் விவரம் எண்ணிக்கை விருது விவரம் 1 சிறந்த பணியாளர்/சுயதொழில் புரிபவர் கை, கால் பாதிக்கப்பட்டோர் (LD) அல்லது தொழுநோயிலிருந்து குணமடைந்தோர் (LC) பார்வை திறன் பாதிக்கப்பட்டோர் (VI) செவித் திறன் பாதிக்கப்பட்டோர் (HI) அறிவுசார் குறையுடையோர் (ID) பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு (SpLaD) Developmental Disorder (புறவுலக சிந்தனையற்றோர் (ASD), குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு (SLD)] மன நோய் (MI) Disability caused due to blood disorderஇரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு (He), இரத்த அழிவுச்சோகை (Th), அரிவாளனு இரத்தச் சோகை (SCD)] நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு திசு பண்முகக் கடினமாதல் (MS), நடுக்கு வாதம் (PD)] பல்வகை குறைபாடு [Multiple Disabilities (MD)] 10 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 2 ஹெலன் கெல்லர் விருது - சிறந்த ஆசிரியர் – (பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், செவித் திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், மற்றும் அறிவுசார் குறையுடையோருக்குக் கற்பித்தல்) 3 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 3 சிறந்த சமூகப் பணியாளர் 1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் 1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 5 மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம் 1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 6 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் (செவித் திறன் குறைந்தோருக்குக் கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் அறிவுசார் குறையுடையோருக்குக் கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்) 2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் 2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 8 பொதுக் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 2 விருதுகள் மொத்தம் 22 விருதுகள் மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண். 5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை 5 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடமிருந்து பெற்று, அல்லது இத்துறையின் www.scd.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, அவ்விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் குறிப்பிட்ட தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பங்களை https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்யலாம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் பரிந்துரை இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9