பாரத் கௌரவ் ரயில்கள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், அற்புதமான வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலங்களை உள்நாட்டு, வெளிநாட்டு மக்களுக்குக் காட்சிப்படுத்தும் நோக்கில், பாரத் கௌரவ் ரயில் கொள்கையை மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டது. இந்தக் கொள்கையின்படி, கருப்பொருள் சார்ந்த சுற்றுலாப் பயணத்திற்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சந்தை வாய்ப்புகள், வர்த்தக ரீதியான வாய்ப்புக்கள் அடிப்படையில், தமிழ்நாடு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுற்றுலாப் பயணங்களுக்காக இந்த பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா சேவை வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், ரயில் பயணம், தங்குமிடம், உணவு, உள்ளூர் சாலைப் போக்குவரத்து, சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய முழுமையான சுற்றுலாத் தொகுப்பை வழங்குகின்றனர். தமிழ்நாட்டில் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் சேவைகள் ரயில் சேவைகள் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மாமல்லபுரம், ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய வகையில் பயணத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 31.03.2026 நிலவரப்படி, தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய வகையில், 226 முறை பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு, 1,33,165 சுற்றுலாப் பயணிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு - ஷீரடி சாய்பாபா கோயில் யாத்திரை, கோயம்புத்தூர் - திருப்பூர் - ஈரோடு - சேலம் - பெங்களூர் - மந்த்ராலயம் - ஷீரடி சென்று கோவை திரும்புவது உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்