অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஆன்லைனில் ரெயில்வே ரயில் டிக்கெட் பதிவு செய்வது எப்படி?

ஆன்லைனில் ரெயில்வே ரயில் டிக்கெட் பதிவு செய்வது எப்படி?

இணையத்தில் பதிவு செய்யும் முறை(Online ticket Booking)

இணையத்தில் ரயில் டிக்கெட் பதிவு செய்ய சில தளங்கள் நமக்கு உதவுகின்றன. அவற்றில் ரயில்வே இணையதளமான IRCTC ஆகும். IRCTC தளத்தின் மூலம் நிறைய பயணிகள் ஆன்லைன் மூலம் தங்களது பயணத்திற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்கின்றனர். இத்தளத்தில் அணுகுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தளம் எப்போதும் மெதுவாகவே இயங்கும். அல்லது சில சமயம் இயங்காமல் ஸ்தம்பித்துவிடும்.

இக்குறையைப் போக்க சில தனியார் இணையதளங்களும் உள்ளன. அவற்றில் முதன்மையானவையாக கருதப்படுவது ClearTrip தளம். இதில் எளிய முறையில் டிக்கெட் புக் செய்யும் முறையை அமைத்துக்கொடுத்திருக்கிறார்கள். மேலும் சில தளங்கள் இருக்கின்றன. அவை: .

  1. Yatra.Com/Trains
  2. MakeMyTrip.Com/Railways
  3. http://www.railticketonline.com/SearchTrains.aspx
  4. http://www.ezeego1.co.in/rails/index.php
  5. Thomas Cook.Co.In/IndianRail
  6. ERail.in தளத்தின் மூலம் மிக விரைவாக ரயில்களின் நேரம்(time), தொலைவு(Distance), கட்டணம்(), பயணிக்கும் ஸ்டேசன்கள், சீட் இருக்கிறதா (Seat Availablity) போன்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். உங்களின் PNR Status மிக விரைவாக அறிய முடியும்.

PNR நிலைமையை அறிந்துகொள்ள

  • முன் பதிவு செய்தபின் நமக்கு இருக்கை வசதியிருந்தால் உடனே தெரிந்துவிடும். பெரும்பாலும் இவ்வாறு உடனே இருக்கை வசதி கிடைக்காது. சில சமயங்களில் காத்திருப்போர் பட்டியலில் நம் பெயர் (waiting list)இருக்கும். அவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இருக்கும்போது நமக்கு இடம் கிடைத்திருக்கிறதா என மீண்டும் தெரிந்துகொள்ள இணையத்தையே நாட வேண்டும். இதை PNR status
  • ஒவ்வொரு முறையும் PNR status ஐ அறிந்துகொள்ள இணையத்தையே நாட வேண்டும். இவ்வாறு இணையம் செல்லாமல் உங்களுடைய மொபைலிலேயே PNR status -ஐ SMS ஆக பெற முடியும். இத்தளத்தில் சென்று உங்களுடைய PNR நம்பரையும், தகவல் பெற விரும்பும் மொபைல் எண்ணையும் பதிவு செய்தால் போதுமானது. www.mypnrstatus.com
  • இனி பயண சீட்டில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் உங்கள் மொபைலுக்கே SMS ஆக தகவல் அனுப்பபடும்.
  • மொபைல் மூலமாகவும் இவ்வசதியைப் பெற முடியும். அதற்கு உங்கள் மொபைலில் MYPNR என தட்டச்சிட்டு ஒரு இடைவெளி விட்டு பிறகு உங்களுடைய பத்து இலக்க PNR எண்ணை டைப் செய்யவும். இந்த தகவலை 92200 92200 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள்.
  • இனி நீங்கள் பயணசீட்டை பதிவு செய்துவிட்டு, ஒவ்வொரு முறையும் பயணசீட்டின் நிலவரத்தை தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பயணச்சீட்டின் நிலவரங்கள் உங்களைத் தேடி உங்கள் மொபைலுக்கே வந்து சேரும்.

மொபைல் மூலம் பதிவு செய்யும் முறை:

  • தற்போது மொபைல் மூலமும் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யலாம். ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வசதியாக தற்போது மொபைலைப் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்யும் முறையும் சமீபத்தில் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதற்கு உங்கள் மொபைலில் GPRS உடன் இணைய இணைப்பையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • உங்கள் மொபைலில் ரயில்வேயில் புதிய தளமான https://www.irctc.co.in/mobile தளத்திற்கு செல்லவும். தளத்தில் முதலில் பதிவு செய்துகொண்டு பிறகு தேவையான வழிமுறைகளைப் பின்பற்றவும். ஒவ்வொரு முறையும் டிக்கெட் பதிவு செய்யும்போது உங்களுடைய யூசர்நேம், பாஸ்வேர்ட் பயன்படுத்தி நீங்கள் உள்நுழைய (login) செய்துகொள்ள வேண்டும்.
  • கணினியில் E-Ticket பதிவு செய்வதைப் போன்றே மொபைலிலும் கிரடிட் கார்டு, டெபிட் கார்ட் பயன்படுத்தி மொபைலிலும் டிக்கெட்டை புக் செய்துகொள்ளலாம்.

ஆதாரம் : ஐ.ஆர்.சி.டி.சி

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate