অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வயிற்றுக்கு இதமளிக்கும் தயிர்

வயிற்றுக்கு இதமளிக்கும் தயிர்

நமது அன்றாட உணவுப்பொருட்களில் ஒன்றான தயிரில் பல நன்மை அளிக்கும் விஷயங்கள் இருக்கின்றன.

குளிர்ச்சி உணவான தயிரில் உள்ள புரதம், பாலில் உள்ள புரதத்தை விட விரைவாக செரிமானமாகக் கூடியது. அதனால்தான், வயிறு சரியில்லாதபோது வெறும் தயிர் சாதமாவது சாப்பிடும்பட வேண்டும்

அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும்போது வெந்தயமும், ஒரு கப் தயிரும் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும்போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர்ப்பச்சடி சாப்பிடுகிறோம்.

'மெனோபாஸ்' பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது. வெண்ணெய்யைக் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

புளித்த தயிரை தலையில் தேய்த்துச் சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும். தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் அதிக நேரம் ஆனாலும் புளிக்காது.

தயிரை மோராகக் கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கிப் பருகலாம். விரும்பினால் தயிருடன் சர்க்கரை சேர்த்து கலக்கி 'லஸ்சி'யாகவும் அருந்தலாம்.

ஆதாரம் : ஈகரை தமிழ்களஞ்சியம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate