பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத்திட்டம்
பகிருங்கள்

பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத்திட்டம்

பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத்திட்டம் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

அறிமுகம்

நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் NMSA என்ற மிகப்பெரிய திட்டத்தின் உள்ளே அடங்கி இருக்கும் விரிவான ஒரு பகுதியே பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் (Paramparagat Krishi Vikas Yojna – PKVY என்பதாகும்.  மண்ணில் ஆரோக்கியத்தைப் பேணுவது பற்றியது இது. இந்தத் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையில் ஈடுபடக்கூடிய கிராமங்களைத் தத்தெடுத்து அவற்றை ஒரு தொகுப்பாக அணுகியும், விவசாயி அரசு இ-சேவை அல்லாத மூன்றாவது ஒரு அமைப்பிடமிருந்து சான்றினைப் பெற்றும் இயற்கை வேளாண்மை வளர்ச்சிக்கு ஊக்கம் தரப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் பயன்கள்

 • இந்தத்திட்டம் வணிகத்திற்கான வேளாண் பொருள்களின் உற்பத்தியை சான்றளிக்கப்படும் இயற்கை வேளாண்மை மூலம் செய்வது.
 • இத்தகைய வேளாண்விளைபொருள்கள் பூச்சிக்கொல்லி மருந்துப்படிவுகள் இல்லாதவையாக, நுகர்வோரின் உடல்நலத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்.
 • விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து வணிகர்களுக்கு சாத்தியப்பாடுள்ள சந்தையை இது உருவாக்கும்.
 • இயற்கை வளங்களைத் திரட்டி இடுபொருள்களை உருவாக்க விவசாயிகளை ஊக்குவிக்கும்.

திட்டச் செயலாக்கம்.

 • பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் குழுக்கள் அமைக்கப்பட்டு இயற்கை வேளாண்மை செய்வதற்கு அவர்களுக்கு ஊக்கம் தரப்படும்.
 • 50 அல்லது அதற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரு குழுவாகச் சேர்ந்து 50 ஏக்கர் அளவுள்ள நிலத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வார்கள். இந்த முறையில் 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் குழுக்கள் 5 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவார்கள்.
 • சான்று பெறுவதற்கான செலவில் விவசாயிகளுக்கு எந்தவிதமான சுமையும் இருக்காது.
 • விதைச்செலவு முதற்கொண்டு அறுவடை வரையிலும் அதன் பிறகு சந்தைக்கு விளைபொருள்களை எடுத்துச் செல்வதற்குமாக ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளில் பணம் தரப்படும்.
 • பாரம்பரிய வளங்களைக் கொண்டு இயற்கை வேளாண்மையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்படுவதோடு, விளைபொருள் சந்தையுடன் தொடர்பு படுத்தப்படும்.
 • விவசாயிகளை உள்ளடக்கி இயற்கை வேளாண் விளைபொருள்களின் உற்பத்தியையும் தரச்சான்று பெறுவதையும் இது அதிகரிக்கும்.

உதவிகள் தொடர்பான உள்ளடக்கமும் மாதிரியும்

குழு அணுகுமுறை மூலம் சான்றிதழ் பெறுவது

 • விவசாயிகள் உள்ளுர் மக்களைத்திரட்டி குழுவை உருவாக்கி சான்று பெறத்தக்க வேளாண்மையை 50 ஏக்கரில் செய்யவைப்பது.
 • இலக்குப்பகுதிகளில் இயற்கை வேளாண்மைக் குழுக்களை அமைப்பதற்கு விவசாயிகளுடன் கூட்டங்கள், கலந்துரையாடல்களை நடத்திடுவது. ஒரு விவசாயிக்கு ரூ.200 வீதம் நிதி
 • குழு உறுப்பினர்களை இயற்கை வேளாண்மை நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது. ஒரு விவசாயிக்கு ரூ.200.
 • விவசாயக்குழுவை அமைப்பது, விவசாயிகளை உறுதி ஏற்கச் செய்வது, தலைமை ஏற்று நடத்தக்தக்க ஆற்றல் பெற்றுள்ளவரை குழுவிற்குள்ளிருந்தே கண்டறிவது
 • குழு உறுப்பினர்களுக்கு இயற்கை வேளாண்மையில் பயிற்சி அளிப்பது (3 பயிற்சிகள் - ஒவ்வொரு பயிற்சிக்கும் ரூ.20 ஆயிரம்)

சான்றளிப்பும் தரக்கட்டுப்பாடும்

 • பங்கேற்புடன் கூடிய உத்திரவாத வழிமுறையின்படி சான்று பெறுவது பற்றிய பயிற்சி இரண்டு நாள்களுக்கு நடத்த குழுத்தலைவருக்கு ரூ.200.
 • குழுவின் தலைவர் 20 நபர்களுக்கு பயிற்சி தருவார் ஒரு நாளைக்கு ஒரு குழுவிற்கு ரூ.250 வீதம் மூன்று நாள்களுக்கு.
 • இணையத்தின் வழியாக விவசாயிகளை பதிவுசெய்து கொள்வது. ஒரு உறுப்பினருக்கு ரூ.100 வீதம் குழுவின் 50 உறுப்பினர்களுக்கும்.
 • மண் மாதிரி சேமிப்பும் பரிசோதனையும் (ஒரு ஆண்டிற்கு ஒரு குழுவிற்கு 21 மண் மாதிரிகள்) ஒரு மாதிரிக்கு ரூ.190 வீதம் 3 ஆண்டுகளுக்கு
 • இயற்கை வேளாண்மை முறைக்கு மாறி வரும் வழிமுறையை ஆவணப்படுத்துவது. சான்றளிப்பு பெறுவதற்காக பயன்படுத்த வேண்டிய இடுபொருள்கள், பின்பற்றப்படவேண்டிய பயிர் சுழற்சிகள், இயற்கை வரங்கள் முதலானவை ஒரு உறுப்பினருக்கு  ரூ.100 வீதம் 50 உறுப்பினர்களுக்கு
 • குழு உறுப்பினர்களின் நிலங்களைப் பார்வையிடுதல் ஒரு முறைக்கு ரூ.400 வீதம் 3 மேற்பார்வையாளர்களுக்கு (ஒரு ஆண்டிற்கு ஒரு குழுவிற்கு 3 மேற்பார்வையாளர்கள்)
 • மாதிரிகளை சேகரித்து படிவுகள் இருக்கின்றனவா என ஆராய்தல். பரிசோதனை முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தல்.
 • தேசிய குழுமம் ஆய்வை மேற்கொள்ளும்.  ஒரு மாதிரிக்கு ரூ.10 ஆயிரம் வீதம் சான்றளிப்புக் கட்டணம் (ஒரு குழுவிற்கு ஒரு ஆண்டிற்கு எட்டு மாதிரிகள்).

சான்றளிப்புக்காகும் நிர்வாகச் செலவுகள்.

 • இயற்கை வேளாண்மை செய்யும் கிராமத்தைத் தத்தெடுப்பது. உர மேலாண்மைக்காகவும், உயிரிநைட்ரஜனைப் பெறுவதற்காகவும் தத்தெடுப்பு நடத்தப்படும்.  இது குழு அணுகுமுறையின்படி நடைபெறும்.
 • இயற்கை வேளாண்மைக்காக செயல்திட்டம் - ஒரு குழுவிற்கு: வேளாண்மைக்கு உரியவகையில் நிலத்தில் மாற்றங்கள் செய்வது. ரூ.1000 வீதம் 50 ஏக்கருக்கு
 • பயிரிடும்முறைகளை அறிமுகம் செய்வித்ததில் இயற்கை வேளாண்மைக்கான விதைகளைப் பெறுதல், நாற்றங்கால் ஏற்பாடு. ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டிற்கு ரூ.500 வீதம் 50 ஏக்கருக்கு.
 • பஞ்சகவ்யம், பீஜம்ரூத், ஜீவாமிருதம் போன்ற பாரம்பரிய இடுபொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை அமைத்தல், ஒரு ஏக்கருக்கு ஒரு அலகிற்கு ரூ.1500.
 • உயிர் உரங்களைப் பயன்படுத்தி காற்றிலுள்ள தழைச்சத்தை நிலைநிறுத்துவதற்கு கிளிரிசிடியா, சனப்பை போன்ற பசுந்தாள் உரங்களைக் கையாளுதல்.  ஒரு ஏக்கருக்கு ரூ.2000 வீதம் 50 ஏக்கருக்கு.
 • வேப்பம் புண்ணாக்கு வேப்ப எண்ணெய் போன்ற தாவர சாரங்களை உருவாக்கும் அலகுகள். ஒரு ஏக்கருக்கு ரூ.1000 வீதம் 50 ஏக்கருக்கு.

ஒருங்கிணைந்த உரமேலாண்மை

 • திரவ உயிர் உரங்கள் கூட்டுச் சங்கம் (நைட்ரஜனை நிலைநிறுத்துதல் பாஸ்பேட் கரைவதற்கு ஃபொட்டாசியத்தைத்திரட்டும் உயிர் உரம்). ஒரு ஏக்கருக்கு ரூ.500 வீதம் 50 ஏக்கருக்கு.
 • திரவ பூச்சிக் கொல்லிகள் (டிரைகோடெர்மாவிர்டி, சூடோ மோனோமாஸ், மைட்டாரைசியம், பிவேரியா பேசியானா, பாசிலோமைசிஸ், வெர்ட்டிசிலியம் போன்ற உயிர் பூஞ்சானங்கள்).  ஒரு ஏக்கருக்கு ரூ. 500 வீதம் 50 ஏக்கருக்கு.
 • வேப்பம் புண்ணாக்கு வேப்ப எணணெய்  ஓரு ஏக்கருக்கு ரூ.500 வீதம் 50 ஏக்கருக்கு
 • பாஸ்பேட் மிகுதியாக உள்ள இயற்கை உரம் ஒரு ஏக்கருக்கு ரூ.1000 வீதம் 50 ஏக்கருக்கு
 • வெர்மிகம்போஸ்ட் எனப்படும் மண்புழுஉரம் (அளவு 7:3:1) ஒரு அலகிற்கு ரூ.5000 வீதம் 50 அலகுகளுக்கு

பாரம்பரிய அணுகுமுறை மையத்திற்கான செலவுகள்

 • விவசாயக் கருவிகள் (வேளாண் எந்திரமயமாக்கலுக்கான துணைத்திட்டம்). பவர்டில்லர், களைஎடுக்கும் கருவி, கதிரடிக்கும் இயந்திரம், தெளிப்பான், உழவுகால் திறப்புக் கருவி, பூவாளி, மின்னணு எடை இயந்திரம் போன்றவை.
 • தோட்டக்கலைப் பயிர்களின் ஊடே நடந்துசெல்வதற்கான தடங்கள் (ஒருங்கிணைந்த தோட்டக்கலைப்பயிர்கள் மேம்பாட்டுத் திட்ட வழிமுறைகளின் படி கால்நடைக் கொட்டகை கோழிக்கூடுகள் பன்றிக்தொழுவம் உயிர் உரங்களைப் பெறுவதற்காக – திட்ட வழிமுறைகளின்படி. குழுக்களின் இயற்கை வேளாண்இடுபொருள்களைப் பொதியிடுதல், வில்லையிடுதல், தொழிற்சின்னம் இடல்.
 • விளைபொருள்களை பொதியில் இட்டு சொல்லச்சு முப்பரிமாண உருவத்துடன் பதிக்கப்படும் ஹோலோகிராம் வில்லைகளை அச்சிடுதல். ஒரு ஏக்கருக்கு ரூ.2500 வீதம் 50 ஏக்கருக்கு
 • விளைப்பொருள்களை எடுத்துச் செல்லுதல் (நான்கு சக்கர வாகனம், 1.5 டன் சுமைதிறன் கொண்டது) அதிகபட்சமாக ரூ.120000 உதவி ஒரு குழுவிற்கு.
 • இயற்கை வேளாண் கண்காட்சிகள் (ஒரு குழுவிற்கான அதிகபட்ச நிதி ரூ.36330.)

ஆதாரம் : வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலத்துறை. விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய அரசாங்கம்.

3.14084507042
இரா.நிர்மல் Feb 02, 2019 10:45 AM

இதை அனைத்தும் இலவசமாக கற்றுக்கொடுக்கலாம்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top