பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

கல்வி

  • edu slider3 190115

    கல்வி என்பது அடிப்படை மனித உரிமை

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86ஆவது பிரிவில் "6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அவர்களுடைய அடிப்படை உரிமை" என்று கூறப்பட்டிருக்கிறது.அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இந்தியா முழுவதும் ஆரம்ப கல்வி / அனைவருக்கும் கல்வி இயக்கமானது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

  • edu slider2 190115

    கல்வி துறையில் ஐ.சி.டி-யின் பங்கு

    தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பமானது கல்வி துறையில் மிக முக்கியமான அங்கமாகும். இது கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அளித்து கற்றல் சூழலை மேம்படுத்தியுள்ளது.

கல்வி

ஒவ்வொரு குடிமகனின் மற்றும் நாட்டின் மேம்பாட்டுக்கும், ஆரம்ப கல்வியே அடித்தளமாக அமைக்கிறது. தற்போதைய கடந்த காலத்தில், இந்தியா ஆரம்ப கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவையாவன; ஆரம்ப கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், பாதியில் விட்டுச்செல்லாமல் கல்வியை தொடர்வது, ஒழுங்காக பள்ளிக்கு வருதல் மற்றும் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு கல்வியை விரிவு படுத்துதல் ஆகும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, இந்தியாவின் மேம்பட்ட கல்வி திட்டங்களே பெரும் பங்கினை வகிக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவின் தொடக்கநிலை கல்வியின் தரமும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தின்படி குழந்தைகளுக்கு பதினான்கு வயது வரை, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில், தற்போது பாராளுமன்றம், கல்வி உரிமை விதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி 6 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்டை உரிமையாகும். இந்த நேர்த்தியான இலக்கான, எல்லாருக்கும் தொடக்ககல்வி கிடைக்கச் செய்தலை (அதாவது எல்லா பகுதிகளிலும் உள்ள, 100 சதவீதம் குழந்தைகளும் தொடக்க கல்விக்கு பதிவு செய்தல் மற்றும் யாரும் விட்டுச் செல்லாமல் இருத்தல்), இன்னும் இந்தியா அடையவில்லை. இந்த இலக்கை அடையவே, அரசானது 2001-ல் சர்வ சிக்ஷா அபியான் என்னும் திட்டத்தை இந்தியா முழுவதும் நிறுவியது.

இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ICT யானது, குறிப்பாக கிராமபுற இந்தியாவில் கல்வி அமைப்பில் இருக்கும் மற்றும் இல்லாத வசதிகளை சரி செய்து வருகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறைய அறிவுபூர்வமான செய்திகளை வழங்கி, தொடக்க கல்வியை எல்லாருக்கும் கிடைக்க செய்வதற்கான முயற்சியை, இந்தியா டெவலப்மென்ட் கேட்வேயின், ஆரம்ப கல்வி முகவையானது புரிந்துவருகிறது

குழந்தைகளின் உரிமைகள்

கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனின்  அடிப்படை மனித உரிமை. இது தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

கொள்கைகள் / திட்டங்கள்

21A பிரிவை சேர்ந்த 86-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் படி 6 முதல் 14 வயது வரையுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வேண்டும்.

குழந்தைகள் பகுதி

இந்தப் பகுதியில் இந்தியாவின் நாட்டுப்புற கதைகள், குழந்தை பாடல்கள் உள்ளன. இனிய கதைகள், பாட்டுகள் போன்றவற்றைக் கேட்டும் பார்த்தும் நம்மைச் சுற்றி நடக்கும் ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

ஆசிரியர்கள் பகுதி

கற்றல் மற்றும் கற்பித்தல் என்பது இரண்டு முக்கியமான காரணிகள். இந்த காரணிகள் கற்போர்களின் இலக்குகளை நோக்கி வேலை செய்வது மற்றுமன்றி அவர்களின் கற்றல் அனுபவங்களில் புதிய அறிவு, நடத்தைகள் மற்றும் திறன்களை சேர்க்கிறது

சிறந்த செயல்முறைகள்

ஹோவர்ட் கார்ட்னர் உளவியல் கோட்பாட்டின் படி, பன்முக நுண்ணறிவு என்பது மக்கள் மற்றும் அவர்களின் பல்வேறு வகையான நுண்ணறிவு பற்றியதாகும். ஒவ்வொரு நபருக்கும் ஏழு நுண்ணறிவுகள் உள்ளன. அந்த ஏழு நுண்ணறிவுகளில் சில நபருக்கு இரண்டு அல்லது மூன்று நுண்ணறிவுகள் ஆதிக்கமாகவும் மற்றும் சிலருக்கு சமநிலையிலும் இருக்கலாம்

வேலைவாய்ப்பு வழிகாட்டி

வேலைவாய்ப்பு வழிகாட்டியானது எதிர்காலத்தை நல்ல வழியில் வடிவமைக்க உதவுகிறது. இந்த பகுதி பத்தாம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்ததற்கு பின்னர் கிடைக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை வாசகர்களுக்கு அளிக்கிறது.

பயனுள்ள தொடர்புகள்

இத்தலைப்பின் கீழ் அரசு ஆதார வளங்கள், அடிப்படை கல்வி, குழந்தை உரிமை ஆகியவற்றின் பயனுள்ள இணைய தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வி- கருத்து பகிர்வு

இந்த மன்றம் கல்வி தொடர்பான பிரச்சனைகள் மீது விவாதம் செய்ய உள்ளது.

முருகராஜ் Jul 05, 2020 04:43 PM

இத்திட்டத்தின் கீழ் வருகையை நோக்கி வரும் குழந்தைகள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைகளாக இருப்பார்கள்.இத்திட்டம் மிகவும் பயனுள்ளது.மிக்க மகிழ்ச்சி.

HEMANTH Jul 03, 2020 12:07 PM

It was very nice

சா.உன்னிகிருஷ்ணன் Jun 21, 2020 07:29 PM

தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள தொடக்கப் பள்ளி முதல் நகராட்சியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி வரை ஓராண்டுக்கு பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் நிதிகள் எவ்வளவு..? என்பதை விளக்கவும்.

முருகேசன்.சி Apr 01, 2020 08:27 AM

அரசின் நல்ல பயன் உள்ள திட்டம்

ஆ.பழனிசாமி Mar 29, 2020 09:38 PM

ஒரு ஆசிரியர் ஒரு தொடக்க பள்ளியில் எத்தனை வருடம் பணியாற்றலாம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top