பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / மாநில அரசின் திட்டஙகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாநில அரசின் திட்டஙகள்

மாநில அரசின் திட்டஙகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

நபார்டு மூலம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில். துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை-32 (மாநில அளவில்).

விரிவாக்கம் :

சுயஉதவிக் குழுக்கள் நிலமற்றவர்கள் மற்றும் மகளிர்க்கு வருமானத்தை ஏற்படுத்தி தரும் பணிகள் மானியம்- எக்டருக்கு ரூ.900/-

நபார்டு மூலம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி-பயிற்சி

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில். துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை-32 (மாநில அளவில்).

விரிவாக்கம்

பயிற்சி நீர்வடிப்பகுதி பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது - இவர்களுக்கு ஊரக பங்கேற்பு முறையின் அடிப்படையில் தேவைக்கேற்ப நீர்வடிப்பகுதி திட்டமிடுவது குறித்து பயிற்சி. மானியம்-எக்டருக்கு ரூ.1500/-

நபார்டு மூலம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி-மானியம்

மற்ற விவரங்கள்

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப் பட்ட நீர்வடிப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராம பொது நிலங்களில் பண்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். 16 சதவீத உடலுழைப்பு அல்லது சிரமதானம் பயனாளிகளால் கொடுக்கப்பட வேண்டும். இதில் 8 சதவீதம் கிராம நீர்வடிப்பகுதி சங்கத்தல் பராமரிப்பு பணிகளுக் கான தொகையாக வைக்கப்படுகிறது

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில். துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை-32 (மாநில அளவில்).

விரிவாக்கம்

செயல்பரப்பு பணிகள் வயல் வரப்பு, சமவெளி வரப்பு தடுப்புகள், நீர்சேகரிப்பு குழிகள், பண்ணைக் குட்டைகள், வேளாண் காடுகள், பழ மரக் கன்றுகள், கால்நடை வளர்ப்பு, புல்வெளி வளர்த்தல் ஆகிய பணிகள். வடிகால் அமைப்பு பணிகள் கல்தடுப்பு அமைப்புகள், நீர்சேகரிப்பு அமைப்புகள் சீரமைத்தல், பண்ணைக் குட்டைகள், குளங்கள் தூர்வாருதல், வாய்க்கால்கள் சரிசெய்தல், ஆகிய பணிகள். மானியம்- எக்டருக்கு ரூ.8400/-

நில மேம்பாட்டுத் திட்டம்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

நோக்கம் விவசாய நிலங்களில் நீர்ப்பாய்ச்சுதல் மற்றும் இதர விவசாய பணிகளை எளிதாகவும் திறமையாகவும் மேற்கொள்ளும் பொருட்டு நிலம் சமன்படுத்துதல் மற்றும் வடிவமைத்தல் போன்ற பணிகளை செயல்படுத்தி அதன் மூலம் விவசாயம் செய்வதற்கான நிலப்பரப்பை அதிகப்படுத்தி விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல்.

செயல்படுத்தப்படும் பணிகள்

நிலம் வடிவமைத்தல் நிலம் சமன் செய்தல் நிலச்சீரமைத்தல் உழுதல், பரம்படித்தல் நெல் கதிரறுக்கும் இயந்திரத்தின் மூலம் நெல்

அறுவடை செய்தல் சலுகைகளும்

அரசு நிர்ணயித்த வாடகை விகிதங்கள் படி விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வழங்கப்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் வேளாண்மைப் பொறியியல் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.

நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம் (ssi)

மற்ற விவரங்கள்

அனைத்து மாவட்ட கூட்டுறவு / தனியார் சர்க்கரை ஆலைகள் / கரும்பு சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள். அனைத்து மாவட்ட கரும்பு சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள்

 1. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு
 2. இதர விவசாயிகள் அனைத்து மாவட்ட கரும்பு சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள் / சர்க்கரை ஆலைகளின் கரும்பு அலுவலர்கள்

எப்படி பெறுவது

வட்டார அளவில் கரும்பு அலுவலர்கள் / கரும்பு ஆய்வாளர்கள் கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அ) ஒரு விதைப்பரு நாற்று தயாரிக்க நிழற்வலை அமைத்தல் - 50 சதவீத மானியம் அதிகபட்சமாக நிழற்வலை ஒன்றுக்கு ரூ.50,000/- ஆ) முக்கிய இடுபொருட்கள் விநியோகம் - 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.25,000/- இ) சொட்டு நீர் உரமிடல் 1) மொத்த செலவில் 100 சதவீத மானியம் அதிகபட்சமாக விவசாயி ஒருவருக்கு ரூ.43816 2) மொத்த செலவில் 75 சதவீத மானியம் ஈ) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் இத்திட்டம் குறித்து பயிற்சி அளித்தல் விவசாயி ஒருவருக்கு ரூ.1000

நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகள்

விவரங்கள்

நீர்வடிப்பகுதிகளில் உள்ள பயனாளி களால் மேற்படி நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகிறது. 10 சதவீத பங்களிப்பு தொகை தனிப்பட்ட பயனாளியிடமிருந்து தனிப்பட்ட பயன்களுக்கும், சமுதாய நலப்பணிகளுக்காகவும் 5 சதவீத பங்களிப்பு தொகையும் ஆதி திராவிட மற்றும் பழங்குடி பயனாளிகளிடமிருந்து தனிப்பட்ட மற்றும் சமுதாய பணிகளுக்காகவும் வசூலிக்கப்பட்டு, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நீர்வடிப்பகுதி சங்கங்களால் வருங்கால பாதுகாப்பிற்காக சேமிக்கப்படுகிறது.

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில்.

விரிவாக்கம்

நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப் படும் பணிகள் தாவர தடுப்புகள், ஓடைத் தடுப்புகள், பண்ணைக்குட்டைகள் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு, தொடர் குழி அமைத்தல் போன்றவை. பொது நிலங்களில் மேற்கொள்ளப் படும் பணிகள் தடுப்பணை, ஊரணி மற்றும் குளம் தூர்வாருதல், கால்வாய் சீரமைத்தல், தற்போது இருக்கும் அமைப்புகளை பராமரித்தல் போன்றவை. மானியம் எக்டருக்கு ரூ.3,000/-

நீலப்பச்சைப்பாசி விநியோகம்

மற்ற விவரங்கள்

மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகள்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அனைத்து பயிர்களுக்கான நுண்ணூட்டக்கலவை முழு விலையில் விநியோகித்தல் கிலோ ஒன்றுக்கு நெல் (அடி உரம்) - ரூ.24.80 சிறுதானியங்கள் - ரூ.56.30 தென்னை - ரூ.55.30 பருத்தி (அடி உரம்) - ரூ.72.00 பயறுவகைகள் - ரூ.97.50 கரும்பு (அடி உரம்) - ரூ.29.00 நிலக்கடலை - ரூ.45.70

நுண்ணூட்டக் கலவை விநியோகம்

மற்ற விவரங்கள்

மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகள்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அனைத்து பயிர்களுக்கான நுண்ணூட்டக்கலவை முழு விலையில் விநியோகித்தல் கிலோ ஒன்றுக்கு நெல் (அடி உரம்) - ரூ.24.80 சிறுதானியங்கள் - ரூ.56.30 தென்னை - ரூ.55.30 பருத்தி (அடி உரம்) - ரூ.72.00 பயறுவகைகள் - ரூ.97.50 கரும்பு (அடி உரம்) - ரூ.29.00 நிலக்கடலை - ரூ.45.70

பசுந்தாள் உர விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகம்

மற்ற விவரங்கள்

இராமநாதபுரம், சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக மாநிலத்தின் பிற மாவட்டங்களிலுள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

பசுந்தாள் உர விதை விநியோகம் விதை விலையில் 25 சதவீத மானியம்.

பயறு அதிசயம் வழங்குதல்

மற்ற விவரங்கள்

சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்ட பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

எக்டருக்கு மானியமாக ரூ.425/-

பயிர்க்காப்பீடு

தென்னை காப்பீட்டுத் திட்டம்

மற்ற விவரங்கள்

வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தென்னை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

கிராம அளவில் - வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் - வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

காப்பீட்டுத் கட்டணத்தில் 50 சதவீதத்தை தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீத மானியத்தை மாநில அரசும், மீதமுள்ள 25 சதவீத மானியத்தை விவசாயிகளும் ஏற்பர்.

தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் (nais)

மற்ற விவரங்கள்

நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, பருத்தி, பணப்பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகள்

 1. கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாகச் சேர்க்கப்படுவர்.
 2. கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் சேர்க்கப்படுவர்.

எப்படி பெறுவது

கிராம அளவில் - வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் - வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

காப்பீட்டு கட்டணத் தொகையில் கடன் பெறும் அனைத்து சிறு / குறு விவசாயிகளுக்கு (குத்தகைதாரர்கள் உட்பட) 50 சதவீத மானியம் மற்றும் கடன்பெறா சிறு / குறு விவசாயிகளுக்கு (குத்தகைதாரர்கள் உட்பட) 55 சதவீத மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு (குத்தகைதாரர்கள் உட்பட) 50 சதவீத மானியம்

மாற்றி அமைக்கப்பட்ட தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் (mnais)

மற்ற விவரங்கள்

1. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, பருத்தி, பணப்பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் கடலூர், சிவகங்கை, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் (முன்னோடித் திட்டமாக)

2. கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாகச் சேர்க்கப்படுவர்.

3. கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் சேர்க்கப்படுவர்.

எப்படி பெறுவது

கிராம அளவில் - வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் - வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

காப்பீட்டு படிமுறை வீதம் - மானியம் 2 சதவீதம் வரை - இல்லை 2 – 5 சதவீதம்- 40 சதவீதம்(குறைந்தபட்சம் 2) 5 – 10 சதவீதம்- 50 சதவீதம்(குறைந்தபட்சம் 3) 10 – 15 சதவீதம்- 60 சதவீதம்(குறைந்தபட்சம் 5) 15 சதவீதம்- 75 சதவீதம்(குறைந்தபட்சம் 6)

வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (wbcis)

மற்ற விவரங்கள்

1. தர்மபுரி, சேலம், அரியலூர், விருதுநகர், பெரம்பலூர், கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், திருநெல்வேலி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கடன் பெறும் மற்றும் கடன்பெறா விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் சலுகை பெற தகுதியுடையவர்கள்.

2. கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாகச் சேர்க்கப்படுவர்.

3. கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தினையோ வானிலை அடிப்படையிலான காப்பீட்டுத் திட்டத்தினையோ தேர்வு செய்யலாம்.

எப்படி பெறுவது

கிராம அளவில் - வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் - வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

காப்பீட்டுத் தொகையில் மானியம் - விவசாயிகளின் பங்குத் தொகை நீங்கலாக மீதமுள்ள காப்பீட்டுத் தொகையினை மானியமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் சரிசமமாக வழங்குகின்றன.

பருத்தி

மற்ற விவரங்கள்

விதைப் பண்ணை அமைப்பதற்காக துறையுடன் பதிவு செய்து விதை வழங்கும் விவசாயிகள் அனைவரும் இம்மானியத்திற்கு தகுதியுடையவராவர். அனைத்து மாவட்ட பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழுக்கள், பண்ணை மகளிர் குழுக்கள் (டான்வேப்) இம்மானியத்திற்கு தகுதியுடையவராவர். ஆதிதிராவிடர் / பழங்குடியின பருத்தி விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு - 20 சதவீதம் (19 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் 1 சதவீதம் பழங்குடியினர்) பண்ணை மகளிருக்கு நிதி ஒதுக்கீடு - 30 சதவீதம்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) சான்று விதைகள் உற்பத்தி இரகங்கள் வீரிய ஒட்டு இரகங்களுக்கு குவிண்டாலுக்கு 25 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ1,500/- (இதில் எது குறைவோ)

2) சான்று விதை விநியோகம் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.20/-

3) தாவர பூச்சிக்கொல்லி உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் விநியோகம் - 50 சதவீத மானியம் எக்டருக்கு ரூ.900/- வரை 4) 30 விவசாயிகள் அடங்கிய உழவர் வயல்வெளிப் பள்ளி ஒன்றுக்கு மொத்த மானியத் தொகை ரூ.17,000/- 5) உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த முன்னோடி செயல் விளக்கங்கள் அமைத்தல் – ஏக்கருக்கு ரூ.2,000/- மானியம்

பருத்தியில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல்

மற்ற விவரங்கள்

கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, நீலகிரி நீங்கலாக பருத்தி சாகுபடி செய்யும் அனைத்து மாவட்ட விவசாயிகள்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.300/

பெரு நகர காய்கறி தொகுப்பு வளர்ச்சித்திட்டம்

மற்ற விவரங்கள்

சென்னை மாநகரைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலுள்ள அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் சம்பந்தப்பட்ட மாவட்டம். சம்பந்தப்பட்ட மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் / தோட்டக்கலை துணை இயக்குநர்.

விரிவாக்கம்

உயர் விளைச்சல் இரக / வீரிய ஒட்டுரக காய்கறிகள் பரப்பு அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை பெருக்குவதற்கு 75 சதவீத மானியம், பசுமைக்குடில் சாகுபடி, நிழல் வலை குடில்கள் மற்றும் அறுவடைக்கு பிந்திய மேலாண்மை ஆகியவற்றிற்கு 50 சதவீத மானியம் அளித்தல். தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல்.

பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம்

- 50 சதம் மற்றும் அதற்கு மேல் ஏற்படும் பயிர் இழப்பிற்கு வேளாண் இடுபொருட்களுக்கான மானியம்

மற்ற விவரங்கள்

1) இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள்

2) இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட இதர விவசாயிகளுக்கு ஒரு எக்டர். எனினும் தொடர்ந்து இரு ஆண்டுகள் பாதிப்பு ஏற்படுமாயின், அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 எக்டருக்கு நிவாரணம்

எப்படி பெறுவது

கிராம அளவில் - வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் - வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) வேளாண் பயிர்கள் தோட்டக்கலை வருடாந்திர மலைப்பயிர்கள் அ) நெல் எக்டருக்கு ரூ.10,000/-

ஆ) மானாவாரி பகுதியில் எக்டருக்கு ரூ.4,000/-

இ) இறவைப் பகுதியில் எக்டருக்கு ரூ.7,500/-

ஈ) விதைக்கப்படாத வேளாண் விளைநிலங்கள் மற்றும் தரிசு நிலங்களுக்கு வேளாண் இடு பொருட்கள் மானியம் கிடையாது.

உ) மிக குறைவாக நிலம் உள்ள சிறு விவசாயிகளுக்கு

குறைந்தபட்ச நிவாரணத்தொகை ரூ.250/-

2) பல்லாண்டு பயிர்கள்

அ) அனைத்து பல்லாண்டுப் பயிர்களுக்கும் எக்டருக்கு ரூ.9,000/-

ஆ) விதைக்கப்படாத வேளாண் விளைநிலங்கள் மற்றும் தரிசு நிலங்களுக்கு வேளாண் இடுபொருட்களுக்கான மானியம் கிடையாது.

இ) மிக குறைவாக நிலம் உள்ள சிறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச நிவாரணத் தொகை ரூ.500/-

மக்காச்சோளம்

மற்ற விவரங்கள்

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், விருதுநகர், தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் சலுகை பெற தகுதியுடையவர்கள்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) மக்காச்சோள சான்றுவிதை உற்பத்தி குவிண்டாலுக்கு ரூ1,000/- மானியம்

2) மக்காச்சோள சான்று விதை விநியோகம் சான்று விதைகளுக்கு விற்பனை விலையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.1,200/-

3) துறை மூலம் 5 எக்டர் பெருவிளக்கத்திடல் அமைக்க இடுபொருள் செலவினத்தில் 50 சத மானியம் (அல்லது) அதிகபட்சமாக ஒரு செயல்விளக்கத்திற்கு ரூ.4,000/- வீதம்

4) 2 கிலோ மக்காச்சோள சிறுதளைப் பைகள் இலவசமாக வழங்குதல்

5) 10 எக்டர் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல் விளக்கம் ஒரு செயல் விளக்கத்திற்கு ரூ.22,680/- வீதம்

6) விவசாயிகளுக்கு பயிற்சி (குழுவிற்கு 50 விவசாயிகள் வீதம்) ஒரு விவசாயிக்கு ரூ.300/- வீதம் 2 நாட்களுக்கு

7) நீர் ஆதாரங்களிலிருந்து வயலுக்கு நீர் எடுத்து செல்லுதல் - 800 மீட்டர் நீளம் வரை அனைத்து வகை குழாய்களுக்கும் (பி.வி.சி. / எச்.டி.பி.இ., ஏனையவை - விவசாயிகளின் தேவைக்கேற்ப) 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.15,000/-

மண் வளத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்

புளூரோட்டஸ் பூஞ்சாணம் மூலம் பண்ணைக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரித்தல்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

5 கிலோ யூரியா, ஒரு கிலோ புளூரோட்டஸ் மற்றும் தொழில்நுட்ப துண்டு பிரசுரம் அடங்கிய ரூ.140/- மதிப்புள்ள 5000 சிறுதளைப்பைகள் இலவசமாக வழங்குதல்.

மண் மற்றும் நீர் மாதிரிகள் பரிசோதனை

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

i) மண் மாதிரி பரிசோதனை - மண்ணில் உள்ள பேரூட்ட சத்துக்களை பரிசோதனை செய்ய சலுகைக் கட்டணம் மாதிரி ஒன்றுக்கு ரூ.10/-ம், நுண்ணூட்டச் சத்துக்களை பரிசோதனை செய்ய மாதிரி ஒன்றுக்கு ரூ.10/-ம் வசூலிக்கப்படுகிறது.

ii) நீர் மாதிரி பரிசோதனை – நீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய சலுகைக் கட்டணமாக மாதிரி ஒன்றுக்கு ரூ.20/- வசூலிக்கப்படுகிறது.

வேளாண் கழிவுகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

செயல் விளக்கம் மற்றும் பயிற்சி - செயல் விளக்கம் அமைக்க ரூ.1,200/-ம், பயிற்சியில் பங்குபெறும் 50 விவசாயிகளுக்கு இடைநிகழ்வு செலவினமாக தலா ரூ.50/-ம் வழங்குதல்

மத்திய அரசின் விரைவுப் பாசன நலத்திட்டத்தின்கீழ் பாசனப்பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டம்

மற்ற விவரங்கள்

தேர்வு செய்யப்பட்ட பாசனப்பகுதிகளில் நிலங்கள் உள்ள அனைத்து விவசாயிகளும்

எப்படி பெறுவது

உதவி செயற் பொறியாளர் (வே.பொ), பாசனப் பகுதி மேம்பாட்டுத் திட்டம். மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ) மற்றும் செயற் பொறியாளர் (வே.பொ), பாசனப் பகுதி மேம்பாட்டுத்திட்டம், பரமக்குடி, மானாமதுரை மண்டல அளவில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் (வே.பொ.) தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை-600 035. தொலைபேசி எண்.2435 2686, 2435 2622

விரிவாக்கம்

நிதி ஆதாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சம நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

பரப்பிற்கும், உருவாக்கப்பட்ட பாசன நீர்வளம் பெறத் தகுதியுடைய பரப்பிற்கும் உள்ள இடைவெளியை குறைத்தல். கால்வாய் பாசனப் பகுதிகளில் பாசன நீரின் பயன்பாட்டுத்திறனை மேம்படுத்துதல் தலைமடை முதல் கடைமடை வரை பாசன நீரை சமமாக கிர்ந்தளித்தல் பாசன மேலாண்மையில் விவசாயிகளின் பங்கேற்பை உறுதி செய்தல். பாசன நீர் வீணாவதைத் தடுத்தல் சிறந்த பயிரிடும் முறைகளை மேற்கொள்ளல் பாசன வாய்க்கால்கள் அமைத்தல் நில வடிகால்கள் அமைத்தல் சுழற்சிமுறை நீர்ப்பாசனம் நீர்த்தேக்கம் மற்றும் பாசன கால்வாய்களின் குறைபாடுகளை சரிசெய்தல். மதகு அளவில் விவசாய சங்கங்கள், பிரிவு கால்வாய் அளவில் விவசாய சபைகள் மற்றும் திட்ட அளவில் விவசாயிகள் பேரவை அமைத்தல்பாசன வாய்க்கால் பணிகள் ஒரு எக்டருக்கு ரூ.15,000/- வீதம் 50 மத்திய அரசின் பங்களிப்பு, 40 மாநில அரசின் பங்களிப்பு மற்றும் 10 விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. நிலவடிகால் பணிகள் ஒரு எக்டருக்கு ரூ.4,000/- வீதம் 50 மத்திய அரசின் பங்களிப்பு மற்றும் 50 மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. சுழற்சி முறை பாசனப் பணிகள் ஒரு எக்டருக்கு ரூ.300/- வீதம் 100 மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. நீர்த்தேக்கம் மற்றும் பாசன கால்வாய்களின் குறைபாடுகளை சரிசெய்யும் பணிகள் ஒரு எக்டருக்கு ரூ.6,000/- வீதம் 50 மத்திய அரசின் பங்களிப்பு மற்றும் 50 மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. பதிவு செய்யப்பட்ட பாசன சபைகளுக்கு செயல்பாட்டு மானியமாக எக்டர் ஒன்றுக்கு ரூ.1,000/- வழங்கப்படுகிறது. (மத்திய அரசின் பங்கு ரூ.450/- மற்றும் மாநில அரசின் பங்கு ரூ.450/- வழங்கப்பட்டு பாசன சபையின் பங்காக ரூ.100/- வசூலிக்கப்படுகிறது)

மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்

மற்ற விவரங்கள்

தேர்வு செய்யப்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலங்கள் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்.

எப்படி பெறுவது

i) உதவி செயற் பொறியாளர் (வே.பொ.), IGBP காம்ப்ளக்ஸ், தாவரவியல் பூங்கா சாலை, உதகமண்டலம் - 643 001.

ii) உதவி செயற் பொறியாளர் (வே.பொ.), மைசூர் ரோடு, செல்விப்பேட்டை, கூடலூர் - 643 312, நீலகிரி மாவட்டம்.

iii) உதவி செயற் பொறியாளர் (வே.பொ.), நிலச்சரிவு தடுப்புத் திட்டம், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம், 117, பிருந்தாவன் ஸ்கூல் ரோடு, வெலிங்டன் பஜார், வெலிங்டன், குன்னூர் - 643 102.

iv) செயற் பொறியாளர் (வே.பொ.), தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகம், விஜயநகரம், உதகமண்டலம் - 643 001. கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ). குன்னூர்.

v) தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622

விரிவாக்கம்

நோக்கம் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல் மண் அரிமானம் மற்றும் வண்டல் மண் படிவதை தடுத்தல் உள்ளூர் மக்களின் சமுதாய மற்றும் பொருளாதார நிலையை மேம்படைய செய்தல் மண்வளப் பாதுகாப்பு பணிகளின் நன்மைகளை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் நிலச்சரிவைத் தடுத்தல் செயல்படுத்தப்படும் பணிகள் படிமட்ட தாங்கு சுவர் உதிரி கற்கள் தடுப்பணை கம்பிவளை தடுப்பணை சமுதாய பாசன கிணறுகள் நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பெரிய தடுப்பணை கருங்கற்தடுப்பணையுடன் கூடிய பாசன கால்வாய் ஒழுங்கு படுத்துதல் மற்றும் காரை வாய்க்கால் அமைத்தல் கால்வாய் அகலப்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மழை பாதுகாப்பு அமைப்புடன் கூடிய உளர் கலம் அமைத்தல் நிலச்சரிவு தடுப்பு பணிகள் மானியங்களும், சலுகைகளும் பட்டா நிலங்களில் 90சதம் மானியத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. பயனாளிகளின் பங்காக 10சதம் பெறப்படுகிறது. சமுதாய நிலங்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளின் பட்டா நிலங்களில் 95 சதம் மானியத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. 5 சதம் பயனாளிகளின் பங்காகப் பெறப்படுகிறது. சமுதாயப் பணிகள் 95சதம் மானியத்தில் (5 சதம் பயனாளிகள் பங்கு) செயல்படுத்தப்படுகின்றன. நிலச்சரிவு தடுப்பு பணிகள் 100சதம் மானியத்தில் செயல்படுத்தப்படுகின்றன.

மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்

மற்ற விவரங்கள்

சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மட்டும்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் - நீலகிரி மாவட்டம் தோட்டக்கலை இணை இயக்குநர் - நீலகிரி மாவட்டம்

விரிவாக்கம்

50 சதவீத மானிய விலையில் காய்கறி விதை விநியோகம் செய்தல் ஆயில் இன்ஜின் 25 சதவீத மானியத்தில் - முன்னுரிமை நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகளுக்கு வழங்குதல் பவர் டில்லர் 25 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல் சிறு டிராக்டர் 25 சதவீத மானியத்தில் - முன்னுரிமை நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகளுக்கு வழங்குதல் தெளிப்பான்கள் 25 சதவீத மானியத்தில் வழங்குதல் தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல்

மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் மேலாண்மைத் திட்டம்

மற்ற விவரங்கள்

மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட நீர்வடிப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

i) நோக்கம் நிலத்தடி நீரை மேம்படுத்த மழைநீரை சேகரித்தல்.

ii) நீர்வடிப் பகுதிகளில் மண்ணின் ஈரப்பதத்தை மேம்படுத்துதல்

iii) மண் அரிமானம், மண்வளம் குறைதல் மற்றும் வண்டல் படிதல் ஆகியவற்றை தடுத்து கட்டுப்படுத்துதல் செயல்படுத்தப்படும்

iv) பணிகள் செறிவூட்டும் குழாய்க் கிணறுடன் கூடிய கசிவு நீர் குட்டைகள் அமைத்தல்

v) பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தடுப்பண்ணைகள் அமைத்தல் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்

vi) புதிய கிராம குளங்கள் ஊரணிகள் அமைத்தல்

vii) செறிவூட்டும் குழாய்க் கிணறுகள் அமைத்தல்.

viii) மானியங்களும், சலுகைகளும் சமுதாய நிலங்களில் 100சதம் மானியத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

ix) சமுதாய நிலங்களில் செயல்படுத்தப்படும் பணிகளின் பராமரிப்பிற்காக பயனாளிகள் பங்காக 10சதம் (தாழ்த்தப்பட்ட பழங்குடியின விவசாயிகளிடமிருந்து 5சதம்) பெறப்பட்டு கிராம முன்னேற்ற சங்கம் அல்லது நீர்வடிப்பகுதி சங்கம் கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்.

x) பட்டா நிலங்களில் பணிகள் 90சதம் மானியத்தில் (தாழ்த்தப்பட்ட பழங்குடியின விவசாயிகளுக்கு 95சதம்) செயல்படுத்தப்படுகின்றன. மேலும் பயனாளிகளின் பங்காக 10சதம் (தாழ்த்தப்பட்ட பழங்குடியின விவசாயிகளிடமிருந்து 5சதம்) பணம் பொருள் மனித உழைப்பு என்ற வகையில் பெறப்படுகிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு விருது

மற்ற விவரங்கள்

சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்ட விவசாயிகளும் ரூ.150/- பதிவுக்கட்டணம் செலுத்தி திருந்திய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளலாம்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை மேற்கொண்டு, பயிர் விளைச்சல் போட்டியில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு ரூ.5.00 இலட்சம் பரிசு தொகையும் ரூ.3,500/- மதிப்புள்ள பதக்கமும் குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.

மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டம்

மற்ற விவரங்கள்

கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மட்டும் விவசாய தொகுப்புகள் மற்றும் கூட்டமைப்புக் குழு உறுப்பினர்கள்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் - சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் தோட்டக்கலை இணை இயக்குநர் - சம்பந்தப்பட்ட மாவட்டங்கள்

விரிவாக்கம்

50 சதவீத மானிய விலையில் காய்கறி விதை விநியோகம் செய்தல் ஆயில் இன்ஜின் 25 சதவீத மானியத்தில் - முன்னுரிமை நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகளுக்கு வழங்குதல் பவர் டில்லர் 25 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல் சிறு டிராக்டர் 25 சதவீத மானியத்தில் - முன்னுரிமை நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகளுக்கு வழங்குதல் தெளிப்பான்கள் 25 சதவீத மானியத்தில் வழங்குதல் தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்

மற்ற விவரங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் நீர்வடிப் பகுதிகளில் நிலங்கள் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்ட அளவில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் சுற்றுப்புற சூழலை மறுசீரமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மண் அரிமானம், நிலச்சரிவு மற்றும் வண்டல் மண் படிவதைத் தடுத்து சுற்றுச் சூழல் சமநிலையை பராமரித்தல் விவசாயிகளுக்கிடையே சுற்றுச் சூழலை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த விழிப்புணர்வை உருவாக்குதல் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுதல் செயல்படுத்தப்படும் பணிகள் சம உயர குழிகள் அமைத்தல் கம்பிவலை கட்டமைப்புகள் அமைத்தல் வடிகால் பராமரிப்புப் பணி செயல்படுத்துதல்

சம உயர கல்வரப்பு அமைத்தல் வரப்பு அமைத்தல் தடுப்பணை கட்டுதல் கிராம குளங்கள் அமைத்தல் நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் நிலம் வடிவமைத்தல் கசிவு நீர் குட்டைகள் அமைத்தல் அரிமானத்தை தடுக்கும் கட்டமைப்புகள் அமைத்தல் மானியங்களும், சலுகைகளும்

தனியார் பட்டா நிலங்களில் 90 மானியத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. பயனாளிகளின் பங்காக 10 பெறப்படுகிறது. சமுதாய நிலங்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளின் பட்டா நிலங்களில் 95 மானியத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. 5 பயனாளிகளின் பங்காகப் பெறப்படுகிறது.

வளர்ச்சி ஊக்கி விநியோகம்

மற்ற விவரங்கள்

கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, நீலகிரி நீங்கலாக பருத்தி சாகுபடி செய்யும் அனைத்து மாவட்ட விவசாயிகள்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.100/

வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்

மற்ற விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்வடிப்பகுதி களில் உள்ள தனியார் மற்றும் கிராமத்தில் உள்ள பொதுவான நிலங்கள் இத்திட்டத்தில் மேம்படுத்தப்படுகிறது. நீர்வடிப்பகுதிகளில் உள்ள பயனாளி களால் மேற்படி மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் பங்களிப்பும், பயனாளிகள் தேர்வும் நீர்வடிப்பகுதி குழுக்களால் தேர்வு செய்யப்படும். நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதிக்காக பொதுப்பணிகள் மற்றும் ஆதி திராவிடர் / பழங்குடியினருக்கு 5 சதவிகிதமும் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு 10 சதவிகிதமும் வசூலிக்கப்படும்.

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில். முதன்மை செயல் அலுவலர், மாநில அளவிலான இணைப்பு முகமை, சென்னை -32. (மாநில அளவில்)

விரிவாக்கம்

நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் தாவர தடுப்புகள், ஓடைத் தடுப்புகள், பண்ணைக்குட்டைகள், மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு, தொடர் குழி அமைத்தல், பழமரக் கன்றுகள் வளர்த்தல், வேளாண் காடுகள் வளர்த்தல், தீவனப் பயிர் மேம்பாடு செய்தல் போன்றவை. பொது நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் தடுப்பணை, ஊரணி மற்றும் குளம் தூர்வாருதல், கால்வாய் சீரமைத்தல், தற்போது இருக்கும் அமைப்புகளை பராமரித்தல் ஆகியவை இவ்வினத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. மானியம் எக்டருக்கு ரூ.5100/-

வாழ்வாதாரப் பணிகள்

மற்ற விவரங்கள்

முகிர்ந்த சுய உதவிக்குழுக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் மற்றும் தொழில் முனையவும் சுழற்சி நிதியிலிருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில்.

துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்,

 1. செயல் இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை-32 (மாநில அளவில்).

விரிவாக்கம்

சுயஉதவிக் குழுக்கள் மற்றும் நிலமற்றவர்கள் வருமானத்தை ஏற்படுத்தி தரும் பணிகள் மானியம் எக்டருக்கு ரூ.800/-

விதை உற்பத்தி - விதைச்சான்று விதை தரக்கட்டுப்பாடு – பயிற்சி

மற்ற விவரங்கள்

சான்று விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் மற்றும் விதை தரக்கட்டுப்பாடு தொடர்பாக அளிக்கப்படும் பயிற்சிகளில் எவர் ஒருவரும் பங்கேற்கலாம். இப்பயிற்சிக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

எப்படி பெறுவது

அந்தந்த பகுதி விதைச்சான்று உதவி இயக்குநர்கள் மற்றும் விதை ஆய்வு துணை இயக்குநர்கள் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், 1424ஏ, தடாகம் சாலை, கோவை - 641 013. தொலைபேசி எண். - 0422 2432984 நிகரி - 0422 2457554 மின்னஞ்சல் – dsccbe@gmail.com இணைய தளம் - www.seedtamilnadu.com

விரிவாக்கம் : சான்று விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் மற்றும் விதை தரக்கட்டுப்பாடு தொடர்பான கீழ்க்குறிப்பிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அரசு விதை உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி

 1. தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி
 2. விதை விற்பனையாளர்களுக்கான பயிற்சி முடிவுகள் 10 தினங்களுக்குள் தெரிவிக்கப்படும்.

விதை கிராமத் திட்டம்

மற்ற விவரங்கள்

தரமான விதைகளை தனது சொந்த நிலத்தில் உற்பத்தி செய்து சொந்த உபயோகத்திற்கும், பிற விவசாயிகளுக்கும் வழங்க முன்வரும் அனைத்து விவசாயிகள் (சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அ) நெல், சிறுதானியங்கள், பயறு வகைப்பயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களின் ஆதார சான்று விதைகள் - 50 சதவீத மானிய விலையில் விவசாயிகள் தரமான விதை உற்பத்தி செய்ய வழங்கப்படுகிறது.

ஆ) விதை உற்பத்தி குறித்த 3 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி - தரமான விதை உற்பத்திக்காக துறை மூலம் 50 சதவீத மானிய விலையில் விதைகள் பெற்ற விவசாயிகளுக்கு, பயிர்களின் முக்கிய மூன்று நிலைகளில் (விதைப்பு, பூக்கும்பருவம், அறுவடைக்குப்பின் மற்றும் விதை சுத்திகரிப்பின்போது) பயிற்சி வழங்கப்படுகிறது.

விதைச்சான்றிளிப்பு

மற்ற விவரங்கள்

விதைச்சான்று திட்டத்தில் சான்று விதை உற்பத்தி செய்ய விரும்பும் எவர் ஒருவரும் விதைச்சான்று துறையின் கீழ் பதிவு செய்து விதை உற்பத்தி செய்யலாம். விதைப்பு அறிக்கை பதிவுக் கட்டணமாக விண்ணப்பம் ஒன்றுக்கு, ரூ.25/- பெறப்படுகிறது. உரிய வயலாய்வு மற்றும் பகுப்பாய்வு கட்டணமும் பயிர்களுக்கேற்றவாறு தனியாக செலுத்தப்பட வேண்டும். விதைச்சட்டம் 1966 பிரிவு 5ன் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட விதை ரகங்களே சான்று செய்ய தகுதியானவை.

எப்படி பெறுவது

அந்தந்த பகுதி விதைச்சான்று உதவி இயக்குநர்கள் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், 1424ஏ, தடாகம் சாலை, கோவை - 641 013. தொலைபேசி எண். - 0422 2432984 நிகரி - 0422 2457554 மின்னஞ்சல் - dsccbe(at)gmail.com இணைய தளம் - www.seedtamilnadu.com

விரிவாக்கம்

விதை உற்பத்தி கண்காணிக்கப்பட்டு தரமான விதைகளுக்கு சான்றளிப்பு வழங்கப்படுகிறது. விதைச்சான்றுப் பணி கீழ்குறிப்பிட்ட ஆறு வழிகளில் நிறைவு செய்யப்படுகிறது. 1. விதைச்சான்றுக்கு விண்ணப்பங்கள் ஏற்பு மற்றும் கூர்ந்தாய்வு செய்தல் 2. ஆதாரம் மற்றும் இதர தகுதிகள் ஆய்வு செய்தல் 3. வயல் ஆய்வுகள் 4. அறுவடைக்கு பிந்தைய நிலையில் ஆய்வுகள் 5. விதை மாதிரி எடுத்தலும், பகுப்பாய்வு செய்தலும் 6.

தரமான விதைகளுக்கு சான்றளித்தல். விண்ணப்பங்கள் ஏற்பு / மறுப்பு தொடர்பான விபரம் உரிய உற்பத்தியாளருக்கு 10 தினங்களில் தெரிவிக்கப்படும்

விதை தரக்கட்டுப்பாடு

மற்ற விவரங்கள்

விதை விற்பனை செய்ய விரும்பும் எவர் ஒருவரும், உரிய விதை ஆய்வு துணை இயக்குநரிடம் வதை விற்பனை உரிமம் பெற்று விதை விற்பனை செய்யலாம். புதிய விதை விற்பனை உரிமம் பெற ஒரு விதை விற்பனை நிலையத்திற்கான கட்டணம் ரூ.50/- (மூன்று ஆண்டுகளுக்கு) விற்பனை உரிமம் புதுப்பிக்க கட்டணம் ரூ.20/- (மூன்று ஆண்டுகளுக்கு)

எப்படி பெறுவது

அந்தந்த பகுதி விதை ஆய்வு துணை இயக்குநர்கள் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், 1424ஏ, தடாகம் சாலை, கோவை - 641 013. தொலைபேசி எண். - 0422 2432984 நிகரி - 0422 2457554 மின்னஞ்சல் - dsccbe(at)gmail.com இணைய தளம் - www.seedtamilnadu.com

விரிவாக்கம்

விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

 1. விதை விற்பனை நிலையங்களை அவ்வப்போது ஆய்வு செய்து விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு தரம் ஆய்வு செய்யப்படுகிறது.
 2. தரக்குறைவான விதை விநியோகம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
 3. முறையற்ற விதை விநியோகிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதை விற்பனை உரிம விண்ணப்பங்கள் ஏற்பு / மறுப்பு தொடர்பான விபரம் 15 தினங்களுக்குள் தெரிவிக்கப்படும்

விதைப்பரிசோதனை

மற்ற விவரங்கள்

விதை மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய விரும்பும் எவர் ஒருவரும் விதை மாதிரிகளை அறிவிக்கை செய்யப்பட்ட விதைப்பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பலாம். பரிசோதனைக் கட்டணம் ஒரு விதை மாதிரிக்கு ரூ.30/-

எப்படி பெறுவது

அந்தந்த பகுதி விதைப்பரிசோதனை அலுவலர்கள் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், 1424ஏ, தடாகம் சாலை, கோவை - 641 013. தொலைபேசி எண். - 0422 2432984 நிகரி - 0422 2457554 மின்னஞ்சல் - dsccbe(at)gmail.com இணைய தளம் - www.seedtamilnadu.com

விரிவாக்கம்

விதைப்பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் விதை மாதிரிகள் அவைகளின் தரம் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டு கீழ் குறிப்பிட்ட இனங்களின் மீது முடிவுகள் தெரிவிக்கப்படும்.

புறத்தூய்மை

 1. முளைப்புத்திறன்
 2. ஈரப்பதம்
 3. விதை நலம்
 4. பிற ரக கலப்பு விதை மாதிரிகள் பெறப்பட்ட 30 தினங்களுக்குள் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படும்

வியாபாரிகளுக்கு பொருளீட்டுக்கடன்

மற்ற விவரங்கள்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக விற்பனை செய்யும் உரிமம் பெற்ற அனைத்து விவசாயிகள்.

எப்படி பெறுவது

ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மேற்பார்வையாளர்

விரிவாக்கம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகளுக்கு ஊக்கம் அளிக்கும் பொருட்டும், விவசாயிகளுக்கு உடனடி பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்ற நோக்கிலும், அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் வியாபாரிகளுக்கு பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாங்கி இருப்பு வைக்கப்படும் விளைபொருட்களின் மதிப்பில் 50 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.1,00,000/- வரை பொருளீட்டுக்கடனாக வழங்கப்படுகிறது. இதற்காக 9 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படுகிறது. வியாபாரிகள் 3 மாதம் வரை கொள்முதல் செய்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைக்கலாம் ஒப்பளிப்பு / நிராகரிப்பு கால அளவு ஒரு வார காலம்

விரிவாக்கம் மற்றும் பயிற்சிக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்-உழவர் பயிற்சி நிலையங்கள்

மற்ற விவரங்கள்

அனைத்து மாவட்ட விவசாயிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு திட்ட நிதியில் 20 சத

எப்படி பெறுவது

மாவட்டத்தில் உள்ள சம்மந்தப்பட்ட வேளாண்மை துணை இய்ககுநர் (உபநி) வேளாண்மை அலுவலர் (உபநி)

திட்டதிற்கான செல்லுபடியாகும் காலம்

விரிவாக்கம்

1) உழவர் பயிற்சி – 2 நாட்கள் நடத்தப்படும் கிராம அடிப்படை பயிற்சிகளுக்கு ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு ரூ.50/- வீதம் உதவித் தொகை.

2) உழவர் மன்ற அமைப்பாளர் பயிற்சி – 2 நாட்கள் நடத்தப்படும் பயிற்சிக்கு ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு ரூ.50/- வீதம உதவித் தொகை.

3) உழவர் சுற்றுலா – 50 விவசாயிகள் அடங்கிய குழுவினை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.4,000/-

4) விவசாயிகளுக்கான பரிசுகள் – சிறந்த சாதனை புரிந்த 15 விவசாயிகளுக்கு உழவர் தினத்தில் ரூ.3,000/- மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகிறது.

விரிவாக்கம் மற்றும் பயிற்சிக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள் - பயிர் விளைச்சல் போட்டி

மற்ற விவரங்கள்

சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் பின்வரும் பதிவுக்கட்டணம் செலுத்தி போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும்

1)மாநில அளவில் நடத்தப்படும் போட்டிக்கு நெல் மற்றும் நிலக்கடலைப் பயிருக்கு ரூ.100/-ம் இதர பயிர்களுக்கு ரூ.50/-ம்

2) மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிக்கு நெல் மற்றும் நிலக்கடலைப் பயிருக்கு ரூ.50/-ம் இதர பயிர்களுக்கு ரூ.25/-ம் பதிவுக் கட்டணமாக செலத்த வேண்டும்.

3)மாநில அளவிலான பரிசுகளை வேளாண் ஆணையர் அவர்களும், மாவட்ட அளவிலான பரிசுகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்களும் இறுதி செய்வர்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

மாநில அளவில் பரிசு நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு முதல் பரிசு ரூ.25,000/- பிற பயிர்களுக்கு ரூ.15,000/- நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு இரண்டாம் பரிசு ரூ.15,000/- பிற பயிர்களுக்கு ரூ.10,000/- மாவட்ட அளவில் பரிசு நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு முதல் பரிசு ரூ.15,000/- பிற பயிர்களுக்கு ரூ.10,000/- நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு இரண்டாம் பரிசு ரூ.10,000/- பிற பயிர்களுக்கு ரூ.5,000/-

விவசாயிகளுக்கு பொருளீட்டுக் கடன்

மற்ற விவரங்கள்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக விற்பனை செய்யும் அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மேற்பார்வையாளர்

விரிவாக்கம்

அறுவடைக்காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியினால் சிறு குறு விவசாயிகள் குறைந்த விலையில் விளைபொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்கும் பொருட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கிட்டங்கிகளில் 6 மாதம் வரை இருப்பு வைக்கலாம். சிறு, குறு விவசாயிகள், தங்கள் விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 75 விழுக்காடும், இதர விவசாயிகள் தங்கள் விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 50 விழுக்காடும், அதிகபட்சமாக ரூ.2,00,000/- வரை பொருளீட்டுக் கடன் பெறலாம். முதல் 15 நாட்களுக்கு வட்டியில்லை. 15 நாட்களுக்குப் பிறகு 5 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படுகிறது.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்விளக்கம்

எப்படி பெறுவது

அணுக வேண்டிய அலுவலர் வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

1 புதிய வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளிடத்தில் பிரபலப்படுத்துதல்.

2 விவசாயிகளை புதிய நவீன வேளாண் கருவிகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்த ஊக்குவித்தல். விவசாய நிலங்களில் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்விளக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கையாளுதல் மற்றும் பராமரித்தலில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம்

மற்ற விவரங்கள்

அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622

விரிவாக்கம்

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கையாள்வதில் மற்றும் பராமரித்தலில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் வேளாண்மை இயந்திரமயமாக்கலில் ஈடுபட்டுள்ள மனித ஆற்றலின் தரத்தை மேம்படுத்துதல் மாநிலத்தில் வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் வேகத்தை முடுக்கிவிடுதல். விவசாயிகளின் திறன் வளர்த்தல் பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகின்றன.

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (atma)

மற்ற விவரங்கள்

அனைத்து விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள், பெண் விவசாயிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உழவர் ஆர்வலர் குழுக்கள், விளைபொருள் ஆர்வலர் குழுக்கள், டான்வேப் குழுக்கள் மற்றும் விவசாய சங்கங்கள்.

எப்படி பெறுவது

கிராம அளவில் உழவர் நண்பர்கள். வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் / வட்டார தொழில்நுட்ப குழு / வட்டார ஆலோசனைக் குழு / வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் / மாவட்ட திட்ட அலுவலர் (அட்மா)

விரிவாக்கம்

விவசாயிகள் பயிற்சி அ) வெளி மாநில பயிற்சிக்கு ஒரு விவசாயிக்கு ஒரு நாளைக்கு ரூ1,000/- (அதிகபட்சம் 7 நாட்கள்) ஆ) மாநிலத்திற்குள் பயிற்சிக்கு ஒரு விவசாயிக்கு ஒரு நாளைக்கு ரூ.750/- (அதிகபட்சம் 5 நாட்கள்) இ) மாவட்டத்திற்குள்ளான பயிற்சிக்கு ஒரு விவசாயிக்கு ஒரு நாளைக்கு ரூ.400/- (அதிகபட்சம் 2 நாட்கள்)

 1. செயல் விளக்கங்கள் அமைத்தல் 1) அனைத்து வேளாண் பயிர்களிலும் மற்றும் வேளாண் சார்புத் துறைகளிலும் செயல் விளக்கங்கள் அமைக்க - செயல்விளக்கம் ஒன்றுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4,000/-
 2. கல்வி சுற்றுலா பயண நேரம் தவிர்த்து அதிகபட்சம் 10 நாட்கள் ஒரு சுற்றுலாவிற்கு.

  1) வெளி மாநில சுற்றுலாவிற்கு ஒரு விவசாயிக்கு ஒரு நாளைக்கு ரூ.600/-

  2) மாநிலத்திற்குள் சுற்றுலாவிற்கு ஒரு விவசாயிக்கு ஒரு நாளைக்கு ரூ.300/-

  3) மாவட்டத்திற்குள் சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.250/- வீதம்.

 3. உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் விளைபொருள் ஆர்வலர் குழுக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றிலுள்ள விவசாயிகளுக்கு

  1) திறன் மேம்பாடு மற்றும் சேவைப்பணிகள் ஒரு குழுவிற்கு வருடத்திற்கு ரூ.5,000/-

  2) விதை நிதி / சுழல் நிதி உழவர் ஆர்வலர் குழு / விளைபொருள் ஆர்வலர் குழு ஒன்றுக்கு ரூ.10,000/-

 4. விவசாயிகளுக்கு பரிசு - சிறந்த விவசாயிகள் குழுக்களுக்கான ஊக்கத்தொகை / பரிசு பல்வேறு தொழில் சார்ந்த 5 குழுக்களுக்கு ஒரு குழுவிற்கு ரூ.20,000/- ஒரு வருடத்திற்கு
 5. சிறந்த விவசாயிக்கான பரிசு வட்டார அளவில் பல்வேறு தொழில் சார்ந்த விவசாயி ஒருவருக்கு ரூ.10,000/- ஒரு வருடத்திற்கு
 6. மாவட்ட அளவில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கருத்து பரிமாற்றம் 25 விவசாயிகள் பங்கு பெறும் ஒரு கருத்து பரிமாற்றத்திற்கு 2 நாட்களுக்கு ரூ.20,000/-
 7. வயல் விழா மற்றும் விவசாயிகள் குழு மூலம் ஆராய்ச்சி - விரிவாக்கம் - விவசாயிகளை இணைத்தல் ரூ.15,000/- (குழு / வட்டாரம் / பருவம்)
 8. வேளாண் ஆலோசனை மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்ட வேளாண் சிறுதொழில் முனைவோர் மூலம் விரிவாக்க நடவடிக்கைகளை செயல்படுத்துதல் - வட்டாரத்திற்கு ரூ.25,000/-

10. வயல்வெளிப் பள்ளிகள் அமைத்தல் - முன்னோடி விவசாயிகளின் வயல்களில் வட்டாரத்திற்கு குறைந்தபட்சம் 4 வயல்வெளிப் பள்ளிகள் அமைத்தல் - ஒன்றுக்கு ரூ.29,414/- வீதம்

வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம்

மற்ற விவரங்கள்

அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

வருவாய்க்கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ). மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.) தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

வேளாண்மை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல். வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளிடத்தில் பிரபலப்படுத்துதல். வேளாண் தொழிலாளர்களின் பற்றாக்குறையினை ஈடு செய்தல். விவசாய செயல்பாடுகளை குறித்த காலத்தில் மேற்கொள்ள வழிவகுத்தல். வேளாண்மையில் இயந்திர சக்தியை அதிகரித்தல். பயிரிடும் செலவினைக் குறைத்தல் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல்.டிராக்டர்கள், பவர்டில்லர்கள் மற்றும் ரோட்டவேட்டர்கள் போன்ற இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல்.மானியங்களும், சலுகைகளும் 40 குதிரைத்திறன் வரை உள்ள டிராக்டர்களுக்கு அதன் விலையில் 25 (அதிகபட்சமாக ரூ.45,000/-) 8 குதிரைத்திறன் மற்றும் அதற்கு அதிகமான குதிரைத்திறன் உள்ள பவர்டில்லர்களுக்கு அதன் விலையில் 40 (அதிகபட்சமாக ரூ.45,000/-) ரோட்டவேட்டர்களுக்கு அதன் விலையில் 40 ( அதிகபட்சமாக ரூ.20,000/-)

ஆதாரம் : தமிழக அரசு - செய்தி துறை

3.11764705882
சபாஷ் முத்து Mar 06, 2019 07:09 AM

அரசு இலவச திட்டங்களில் சில பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகமாக உள்ளது, வேதனை.

ஈசநத்தம் R . செல்வராஜ் Mar 06, 2018 05:33 AM

அருமையான தகவல்கள் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் திட்டங்களை போட வேண்டும்

ப.மாணிக்கம் Nov 12, 2016 04:32 PM

எனக்கு விவசாயத்திற்கு டிராக்டர் தேவைப்படுகிறது அதற்கு டிராக்டர் வாங்க இருக்கிறேன்.ஆனால் யாரைப் பார்ப்பது யாரிடம் ஆலோசனைக் கேட்பது என்று தெரியவில்லை.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top