பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / வேளாண்மைப் பொறியியல் துறை - முக்கிய திட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மைப் பொறியியல் துறை - முக்கிய திட்டங்கள்

வேளாண்மைப் பொறியியல் துறையின் முக்கிய திட்டங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம்

தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்டங்களில் உள்ள நீர்வடிப்பகுதிகளில் மண்ணின் ஈரத்தன்மையை மேம்படுத்தி, அதிக பரப்பில் விவசாயம் மேற்கொள்ளும் பொருட்டு, தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள், பண்ணைக்குட்டைகள், புதிய கிராமக் குளங்கள், ஊரணிகள் மற்றும் செறிவூட்டும் குழாய் கிணறுகள் போன்ற மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் மேலாண்மைக் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ், சமுதாய நிலங்களில் செயல்படுத்தப்படும் பணிகளின் பராமரிப்பிற்காக பயனாளிகளின் பங்காக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளிடமிருந்து 5 விழுக்காடு தொகையும், இதர விவசாயிகளிடமிருந்து 10 விழுக்காடு தொகையும் பெற்று, கிராம முன்னேற்ற சங்கம் அல்லது நீர்வடிப்பகுதி சங்கக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை சமுதாய நிலங்களில் அமைக்கப்படும் கட்டுமானங்களின் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும். பட்டா நிலங்களில், பட்டா நிலமாக இருந்தால், இத்திட்டப்பணிகள் 90 விழுக்காடு அரசு மானியத்திலும், பயனாளிகளின் பங்காக 10 விழுக்காடு (தாழ்த்தப்பட்ட / பழங்குடியின விவசாயிகளிடமிருந்து 5 விழுக்காடு) பணமாகவோ, பொருளாகவோ அல்லது மனித உழைப்பாகவோ பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல்

நிதியுதவி

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் – மத்திய அரசின் பங்களிப்போடு கூடிய மாநில அரசுத் திட்டம்.

வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கம் – மத்திய மாநில அரசுத் திட்டம்.

பயனாளிகள்

குதி அளவுகோல் அனைத்து விவசாயிகள்
வருமானம் வரம்பு இல்லை
வயது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை
 • வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாங்குவதற்கு இதர விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இதில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும் வழங்கப்படுகிறது
 • விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் வகைகள் மற்றும் மாடல்களை வேளாண்மைப் பொறியியல் துறையால் அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் செய்யப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தங்களின் முழு விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளலாம்

அணுக வேண்டிய அலுவலர்

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.)

மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)

மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர் ,

வேளாண்மைப் பொறியியல் துறை,

நந்தனம், சென்னை-600 035.

தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மையங்கள் மூலம் வாடகைக்கு வழங்கும் திட்டம்

திட்ட நோக்கம்

டிராக்டர், பவர் டில்லர், தானியங்கி நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், தானியங்கி இயந்திரம், பல்வகை பயிர் கதிரறுக்கும் இயந்திரம், விதையிடும் கருவி, நெல் கதிர் அறுக்கும் இயந்திரம், தட்டு வெட்டும் கருவி, கரும்பு சோகை துகளாக்கும் கருவி, வைக்கோல் கட்டு கட்டும் கருவி மற்றும் டிராக்டர் மற்றும் பவர் டில்லரால் இயங்கும் கருவிகள், பூச்சி மருந்து தெளிப்பான்கள் மற்றும் இதர வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வாங்கி உபயோகிக்கும் பொருட்டு மானியம் வழங்குதல்.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மையங்கள் மூலம் வாடகைக்கு வழங்கும் திட்டம்

பயனாளிகள்

தகுதி அளவுகோல் அனைத்து விவசாயிகள்
வருமானம் வரம்பு இல்லை
வயது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை
  வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி அளித்தல் பண்ணை இயந்திர வங்கிகளை ஏற்படுத்தி இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல் உயர் தொழில்நுட்ப / உயர் திறனுள்ள இயந்திரங்களை மையங்கள் மூலம் பெற்று வாடகைக்கு வழங்குதல்

திட்ட நோக்கம்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் வேளாண் இயந்திரமயமாக்குதல் சென்றடையும் வகையில் இயந்திரமயமாக்குதலைஅதிகரித்தல் மற்றும் எந்தெந்த பகுதிகளில் பண்ணை சக்தியின் அளவு குறைவாக உள்ளதோ அங்கு வேளாண் இயந்திரமயமாக்குதலை அதிகப்படுத்துதல்.

குறைந்த அளவு நிலம் வைத்துக் கொண்டிருக்கும் தனிப்பட்ட விவசாயிகள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தினால் ஏற்படும் வருவாய்க்கு பொருந்தாத வேளாண் இயந்திரங்களை வாங்க வேண்டிய நிலையினை தவிர்ப்பதற்காக "வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்களை" நிறுவுவதை ஊக்கப்படுத்துதல்.

உயர்தொழில்நுட்ப மற்றும் உயர்விலையுள்ள வேளாண் இயந்திரங்களை உள்ளடக்கிய மையங்களை ஏற்படுத்துதல்

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் மூலம் கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் அமைத்தல்.

பயனாளிகள்

தகுதி அளவுகோல் சர்க்கரைத் துறையின் கீழ் உள்ள சர்க்கரை ஆலைகளால் தொழில்முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் மாவட்ட அளவிலான செயற்குழுவின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
வருமானம் வரம்பு இல்லை
வயது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை வாடகைக்கு வழங்கும் மையம் மூலம் வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக 5 தொழில் முனைவோருக்கு கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் / கருவிகளை 40 சதவிகித மானியத்தில் வழங்குதல்.

திட்ட நோக்கம்

டிராக்டர் (60-70 குதிரை சக்தி திறன்), டிராக்டரால் இயக்கப்படும் சட்டிக்கலப்பை, சுழல் கலப்பை, கொத்துக் கலப்பை, பார் அமைக்கும் கருவி, கரும்பு கணுவெட்டும் கருவி, களையெடுத்தல், மண் அணைத்தல் போன்ற பணிகளுக்கான சிறியவகை டிராக்டர், கரும்பு அறுவடை இயந்திரம், இன்பீல்டர்கள் 2 எண்கள், இன்பீல்டர்களுக்கு ஏற்ற டிராக்டர்கள் 2 எண்கள், டிராக்டரால் இயங்கும் கரும்பு சோகை துகளாக்கும் கருவி, கரும்பு சோகை கட்டும் கருவி, கரும்பு கட்டை சீவும் கருவி முதலான கருவிகளை தொழில்முனைவோர் மூலம் வாடகைக்கு வழங்கும் மையம் அமைத்து கரும்பு சாகுபடிக்கு வாடகைக்கு விடும் பொருட்டு 40% மானியம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிக பட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அதனை மானியமாக வழங்குதல்.

அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை

பயனாளிகள்

தகுதி அளவுகோல் அனைத்து விவசாயிகள்
வருமானம் வரம்பு இல்லை
வயது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி இயந்திரங்களை விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கம் செய்து காண்பித்தல். செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்ட பிறகு சுய உதவிக்குழு / டான்வேப் குழு / பயனாளிகள் குழு / விவசாயிகள் குழு / நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் / விளை பொருட்கள் குழு ஆகியவற்றிற்கு இயந்திரங்களை 50 சதவிகித மானிய விலையில் வழங்குதல்.

திட்ட நோக்கம

தமிழ்நாட்டில் உணவுச் சத்து பாதுகாப்பினை உறுதி செய்தல் மற்றும் புரதச் சத்து அதிகமுள்ள பருப்புவகை மற்றும் சிறு தானியப்பயிர்களின் விளைச்சலினை ஊக்கப்படுத்துதல்.

விளைப் பொருட்களில் ஏற்படும் சேதாரத்தினை குறைத்து, தரத்தினை உயர்த்துவதற்கு தகுந்த தொழில் நுட்பங்களை பிரபலப்படுத்துதல்.

வேளாண் பதன் செய்தல், தொழில் நுட்பங்கள் மற்றும் விளைபொருட்களுக்கு மதிப்புக் கூட்டுதல் தொடர்பாக செயல் விளக்கங்கள் செய்து காண்பித்தல்

பாசனப்பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டம்

செயலாக்கப்படும் பணிகள்

பாசன வாய்க்கால்களில் கட்டுமானப் பணிகள் அமைத்தல் சுழற்சிமுறை நீர்ப்பாசனப் பணிகள் நுண்ணீர் பாசனத்திற்கான உள்கட்டமைப்புகள் அமைத்தல்

பண்ணை மேம்பாட்டு பணிகளில் செயலாக்கப்படும் கட்டுமானப் பணிகளின் பராமரிப்பிற்காக, நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கு ஒரு முறை செயல்பாட்டு மானியம் வழங்குதல் .

திட்ட நோக்கம்

பயிரிடும் பாசனப் பரப்பிற்கும், உருவாக்கப்பட்ட பாசன நீர்வளம் பெறத் தகுதியுடைய பரப்பிற்கும் உள்ள இடைவெளியை குறைத்தல். கால்வாய் பாசனப் பகுதிகளில் பாசன நீரின் பயன்பாட்டுத்திறனை மேம்படுத்துதல் தலைமடை முதல் கடைமடை வரை பாசன நீரை சமமாக பகிர்ந்தளித்தல் பாசன மேலாண்மையில் விவசாயிகளின் பங்கேற்பை உறுதி செய்தல். பாசன நீர் வீணாவதைத் தடுத்தல்

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்

பயனாளிகள்

தகுதி அளவுகோல்

 

தேர்வு செய்யப்பட்ட உப வடிநிலப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்.

 

வருமானம் வரம்பு இல்லை
வயது குறைந்தது 18 வயது, உச்ச வயது வரம்பு இல்லை.
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை

 

சொட்டு மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் மத்திய அரசு வழிமுறைக்குட்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியம்; இதர விவசாயிகளுக்கு 75% மானியம்.
பண்ணைக் குட்டைகள் அமைத்தல் பொது பிரிவினருக்கு 90% மானியம் தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு 95% மானியம்.
நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல் (சமுதாய நிலங்களில்) 100% மானியம்
குழாய் பாசனம் அமைத்தல் 100% மானியம்

திட்ட நோக்கம்

ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் அதிக வருமானத்தை ஈட்டுதல்.

நீர் வீணாவதை குறைத்து நீர் உபயோகத் திறனை அதிகப்படுத்துதல். பயிர் உற்பத்தியை அதிகரிப்பதன்மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திடுதல்.

பண்ணை குட்டைகளை மேலும் ஆழப்படுத்துதல்

பயனாளிகள்

தகுதி அளவுகோல் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மானாவாரி விவசாய நிலங்களை சொந்தமாகக் கொண்ட அனைத்து விவசாயிகள்.
வருமானம் பிரத்தியேக வரம்பு ஏதும்பு இல்லை
வயது வரம்பு இல்லை
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம்.

விபரங்கள்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 0.50 மீட்டர் ஆழம் வரை பண்ணைக்குட்டைகள் அமைத்தல்.

0.50 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் பண்ணைக்குட்டைகளை ஆழப்படுத்துதல்.

திட்ட நோக்கம்

பண்ணைக்குட்டைகளில் மழைநீர் சேகரித்தல். வறட்சிக் காலங்களில் மானாவாரி பயிர்களுக்கு உயிர் பாசனம் அளித்தல். பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற மானாவாரி பயிர்களின்உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல்.

நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்க திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைத்தல்

பயனாளிகள்

தகுதி அளவுகோல் பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகள்.
வருமானம் பிரத்தியேக வரம்பு ஏதும்பு இல்லை
வயது வரம்பு இல்லை
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை விவசாயிகளுக்கு 50% சதவிகித மானியம்.

திட்ட நோக்கம்

பண்ணைக்குட்டைகளில் மழைநீர் சேகரித்தல். வறட்சிக் காலங்களில் மானாவாரி பயிர்களுக்கு உயிர் பாசனம் அளித்தல். பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற மானாவாரி பயிர்களின்உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல்.

மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்

தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நதிப்பள்ளத்தாக்குத் திட்டங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்.

பயனாளிகள்

தகுதி அளவுகோல் தென்பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தேர்வு செய்யப்பட்ட நீர்வடிப் பகுதிகளில் நிலங்கள் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர். (தருமபுரி, ஈரோடு,கிருஷ்ணகிரி)
வருமானம் வரம்பு இல்லை
வயது வரம்பு இல்லை
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை மண்வளப் பாதுகாப்புப் பணிகள் அரசின் 100% மானியத்தில் செயல்படுத்தப்படுகின்றன.

திட்ட நோக்கம்

நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைத்திடும் பொருட்டு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் அரிமானத்தை தடுத்தல் நீர்வடிப்பகுதி மேலாண்மை மூலம் நீர்பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல் நீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரம் மற்றும் ஈரப்பதத்தினை மேம்படுத்துதல் நீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரத்திற்கேற்றவாறு நிலப்பயன்பாட்டினை மேற்கொள்ளுதல்

அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்.

பயனாளிகள்

தகுதி அளவுகோல் குந்தா மற்றும் கிருஷ்ணகிரி நீர்த்தேக்க நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ளஅனைத்து விவசாயிகள்.
வருமானம் வரம்பு இல்லை
வயது வரம்பு இல்லை
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை 100% மானியத்தில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு பணிகள்.

செயல்படுத்தப்படும் பணிகள்

தடுப்பணை கட்டுதல் கால்வாய் ஒழுங்குபடுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல். வண்டல் சேகரிப்பு குட்டைகள். கம்பி வலையுடன் கூடிய தடுப்பு சுவர் கட்டுதல். கம்பி வரையுடன் கூடிய படிமட்ட தாங்குசுவர் கட்டுதல். ஓடை பராமரிப்பு பணிகள். வண்டல் சேகரிப்பு கட்டுமானங்கள். நிலச்சரிவு தடுப்பு பணிகள்.

திட்ட நோக்கம்

மண்வளப் பாதுகாப்பு பணிகள் மூலம் மண் தரம் குறைவதை தடுத்தல். நீர்த்தேக்கங்களில் வண்டல்மண் படிவதை குறைத்தல். மண் அரிமானத்தை தடுத்து, மண்வளத்தை பாதுகாத்தல்.

பசுமை எரிசக்தி ஊக்குவித்தல் திட்டம்

தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின்கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன வசதியுடன் இணைத்து வழங்கும் திட்டம்.

பயனாளிகள்

தகுதி அளவுகோல் தகுந்த பாசன ஆதாரங்களுடன் (குழாய் கிணறு / திறந்தவெளி கிணறு / தரைநிலைத் தொட்டி) கூடிய விளை நிலங்களின் உடமையுள்ள அனைத்து விவசாயிகள். நுண்ணீர் பாசன வசதி அமைப்பினை ஏற்கனவே நிறுவியுள்ள அல்லது தற்பொழுது நுண்ணீர் பாசன அமைப்பினை நிறுவி அதனை இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சூரிய சக்தி பம்புகளுடன் இணைத்து பாசனம் மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் விவசாயிகள்
வருமானம் அனைத்து விவசாயிகள்
வயது வரம்பு இல்லை
இனம் வரம்பு இல்லை
நன்மைகள் வகை
  80 சதவீத அரசு மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
  நுண்ணீர் பாசன அமைப்பு செயல்படுத்தும் போது, நடைமுறையிலுள்ளதேசிய நுண்ணீர்ப் பாசன திட்டத்தின்கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.

திட்ட நோக்கம்

பாசன வசதிக்கான எரிசக்தி பாதுகாப்பினை உறுதி செய்தல். விவசாயத்திற்கு மரபுசாரா எரிசக்தியினை தொடர் செலவினம் இல்லாத வகையில் வழங்கிடுதல். பாசனத்திற்கான நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக பயிர் வளர்ச்சி பெறுதல். சூரிய ஒளிக்கேற்ப தானாக சாய்மானத்தை சரி செய்துக் கொள்ளும் வசதியுடைய 4800 Wp திறனுடைய சூரிய சக்தியால் இயங்கும் 5 HP, AC பம்புசெட் அமைப்புகளை நுண்ணீர் பாசன வசதியுடன் இணைத்து விவசாயிகளுக்கு வழங்குதல்.

சூரிய உலர்த்தி் அமைத்தல்

பயனாளிகள்

தகுதி அளவுகோல் தமிழகத்தின் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள்
வருமானம் வரம்பு இல்லை
வயது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை
  100 சூரிய உலர்த்திகள் ரூ.200 இலட்சத்தில் அமைக்கப்படுகிறது..
  சூரிய உலர்த்திகள் அமைப்பதற்கான மதிப்பீட்டுத் தொகையில் 50 சதவீத மானியமாக வழங்கப்படுகிறது.

மற்ற விபரங்கள்

வேளாண்மை இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் மூலம் சூரிய உலர்த்திகள் அமைக்கத் தகுதியான விவசாயி/விவசாய குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் கூட்டுறவுத் துறை மூலமாக கடன் உதவி பெற வழிவகுக்கப்படும். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் மூலம் உலர்த்தப்பட்ட வேளாண் பொருட்களை விற்பனை செய்யத் தேவையான உதவி ஏற்படுத்தப்படும்

திட்ட நோக்கம்

வருடத்தில் பெரும்பாலான நாட்கள் கிடைக்கப்பெறும் சூரிய சக்தியை உபயோகிக்க 100 சூரிய உலர்த்திகள் அமைத்தல்.

நில மேம்பாட்டுத் திட்டம்

நோக்கம்

விவசாய நிலங்களில் நீர்ப்பாய்ச்சுதல் மற்றும் இதர விவசாய பணிகளை எளிதாகவும் திறமையாகவும் மேற்கொள்ளும் பொருட்டு நிலம் சமன்படுத்துதல் மற்றும் வடிவமைத்தல் போன்ற பணிகளை செயல்படுத்தி அதன் மூலம் விவசாயம் செய்வதற்கான நிலப்பரப்பை அதிகப்படுத்தி விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல்.

விவசாயிகள் உரிய நேரத்தில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு கூடுதல் பண்ணை சக்தியை உருவாக்குதல்.

செயல்படுத்தப்படும் பணிகள்

நிலம் வடிவமைத்தல் நிலம் சமன் செய்தல் நிலச்சீரமைத்தல் உழுதல், பரம்படித்தல் நெல் கதிரறுக்கும் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்தல்

சிறுபாசனத் திட்டம்

நோக்கம்

குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைத்திட தகுந்த இடங்களை தேர்ந்தெடுக்க புவியியல் ஆய்வு மேற்கொள்ளுதல்.

மணற்பாங்கான இடங்களில் குழாய் கிணறு அமைத்தல்

கடினப்பாறைப் பகுதியில் உபயோகமற்ற அல்லது வறண்டு போன திறந்த வெளி கிணறுகளில் வெடிவைத்தும், நேர் மற்றும் பக்கவாட்டு துளைகள் இட்டும் மீண்டும் கிணற்றினை உபயோகிக்க ஏற்பாடு செய்தல்.

செயல்படுத்தப்படும் பணிகள்

புவியியல் கருவி மூலம் புதிய குழாய் கிணறுகள் அமைக்க இடம் தேர்வு செய்தல். புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் கூடுதல் நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளுதல். தற்போதுள்ள பாசனப் பரப்பை நிலைப்படுத்துதல்.

ஆதாரம் : வேளாண்மைப் பொறியியல் துறை

2.72
ASHOKKUMAR T Jan 14, 2020 12:55 PM

அருமையான பதிவு. நன்றி. விவசாயம் செய்ய அரசு இவ்வளவு நல்ல முயற்சி செய்வது பலருக்கு தெரிவதில்லை. இதை விவசாயிடம் கொண்டு செல்ல வேண்டும். நன்றி.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top