பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் தொழிற்நுட்பம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் தொழிற்நுட்பம்

ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் தொழிற்நுட்பம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பசுந்தீவனப்பயிர்களை அதிக ஈரப்பதத்துடன் காற்றுப்புகாமல் நொதிக்கவைப்பதன் மூலம் ஊறுகாய்ப்புல் கிடைக்கிறது. பசுந்தீவனங்கள் தேவைக்குப் போக அதிக அளவில் கிடைக்கும் போது அவற்றை பிற்கால தேவைக்காக பதப்படுத்தி பாதுகாப்பது அவசியமாகிறது. போதிய அளவு சூரிய ஒளி கிடைக்கும் காலங்களில் சூரிய ஒளியில் உலர வைத்து பசுந்தீவனங்களை உலர் புல்லாக மாற்றி பாதுகாக்கலாம்.

சில சமயங்களில் பசுந்தீவனப் பயிர்களை உலர வைப்பதற்கு போதிய சூரிய ஒளி கிடைக்காமல் மோசமான வானிலை நிலவும் சமயத்தில் ஊறுகாய்ப்புல் தயார் செய்வதன் மூலம் பசுந்தீவனப் பயிர்களை சேமித்துவைக்கலாம்.

மேலும், முற்றிப்போன தடிமனான தண்டுகள் உடைய தீவனப் பயிர்களையும் இம்முறையில் பதப்படுத்துவதன் மூலம் அவற்றின் தரத்தை உயர்த்த முடியும்.

ஊறுகாய்ப்புல் தயாரிப்புக்கு உகந்த தீவனப் பயிர்கள்

மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி போன்ற தானியப் பயிர்கள் சிறந்தவை. எனினும் பயிறு வகை தீவனப் பயிர்களையும் (Leguminous fodders) மற்ற தீவனப் பயிர்களுடன் கலந்து அல்லது சர்க்கரைப்பாகு, தானியங்கள் போன்ற மாவுச்சத்து அதிகமுள்ள பொருள்களைச் சேர்த்து இம்முறையில் பதப்படுத்த முடியும். ஊறுகாய்ப்புல் தயாரிப்புக்கு பூக்கும் பருவத்தில் உள்ள தீவனப் பயிர்களை அறுவடை செய்து ஊறுகாய்ப்புல் தயாரிக்க வேண்டும்.

செய்முறை

 • ஊறுகாய்ப்புல் செய்வதற்கு ஊறுகாய்ப்புல் குழி தேவைப்படுகிறது. இக்குழியானது மேட்டுப்பாங்கான இடத்தில் மழைநீர் மற்றும் காற்றுப்புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
 • சுவற்றில் விரிசல் இருக்கக்கூடாது. குழி அமைக்க முடியாத இடங்களில் சிமெண்ட்கோபுரம் அமைத்து அதில் ஊறுகாய்ப்புல் தயார்செய்யலாம்.
 • குழியின் சுவர் மேடுபள்ளம் இன்றியும், போதிய வலிமை உடையதாகவும் இருக்க வேண்டும்.

அறுவடை செய்தல்

 • பசுந்தீவனப் பயிர்களை பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 - 65 விழுக்காடு வரும்வரை வயலில் உலர்த்த வேண்டும். இதற்காக 3 - 4 மணி நேரம் வெயிலில் உலர்த்தினால் போதுமானது.
 • முதலில் குழியில் சிறிதளவு வைக்கோல் அல்லது உலர்ந்த புல்லைப்பரப்ப வேண்டும். பின் தீவனப் பயிர்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஊறுகாய்ப்புல் குழியில் இட்டு நிரப்ப வேண்டும். இவ்வாறு நிரப்பும்போது நன்கு அமுக்கி காற்றை வெளியேற்ற வேண்டும். குழி நிரப்புதலை ஓரிரு நாட்களில் முடித்துவிட வேண்டும். குழியை நிரப்பும்போது மழை பெய்யக்கூடாது.
 • நிலமட்டத்துக்கு மேல் 5 அடி உயரம் வரை நிரப்பிய பின், வைக்கோலை பரப்பி அதன் மீது மண்கொண்டு காற்றுப்புகாவண்ணம் மொழுக வேண்டும்.
 • கரும்புச் சர்க்கரை பாகுவை 3.5 விழுக்காடு முதல் 4 விழுக்காடு (பசும்புல் எடையில்) வரை ஊறுகாய்ப்புல் குழியில் சேர்க்கலாம். குழியில் உள்ள நுண்ணுயிர்களுக்கு தேவையான மாவுச்சத்து சர்க்கரைப் பாகு மூலம் எளிதில் கிடைப்பதால் அதிக அளவு லாக்டிக் அமிலம் உற்பத்தியாகி புல் நன்கு பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
 • அசிடிக் அமிலம், சிட்ரிக் அமிலம், லாக்டிக் அமிலம், புரபியோனிக் அமிலம் போன்ற அமிலங்களை 1 விழுக்காடு வரை சேர்க்கலாம்.

தானியங்கள்

தவிடு சோளம், கம்பு மக்காச்சோளம் போன்ற தானியங்களை 4-5 விழுக்காடுகள் சேர்க்கலாம். இதனால் நுண்ணுயிர்களுக்கு தேவையான மாவுச்சத்து கிடைக்கிறது.

நுண்ணுயிர்கள் சேர்க்கை

 • தயிர், மோர் மற்றும் நுண்ணுயிர் கலவையை தேவைக்கேற்ப குழியில் 0.5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை சுண்ணாம்புத்தூளைச் சேர்க்கலாம்.
 • யூரியாவை 0.5 விழுக்காடு வரை (பசும்புல் எடையில்) சேர்ப்பதன் மூலம் புரதச் சத்தின் அளவை அதிகரிக்கலாம்.

ஊறுகாய்ப்புல் குழியில் ஏற்படும் மாற்றங்கள்

 • குழியில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் காற்றில்லா நொதித்தல் மூலம் தீவனப்பயிரில் உள்ள மாவுச்சத்தை லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது. இதனால் கார, அமில நிலை குறைந்து மற்ற நுண்ணுயிர்கள் வளராவண்ணம் தீவனப் பயிர் பாதுகாக்கப்படுகிறது. தீவனப் பயிரில் ஈரப்பதம் 65 விழுக்காட்டுக்கு அதிகமிருந்தால், சத்துக்கள் நீரில் கரைந்து வீணாக வாய்ப்புள்ளது. அதேபோல், தீவனப்பயிரில் போதிய அளவு மாவுச்சத்து இல்லாதபோது சர்க்கரைப் பாகு, ஸ்டார்ச் தானியங்கள் சேர்க்க வேண்டும். இல்லையெனில், லாக்டிக் அமிலம் உருவாக போதியமாவுச்சத்து இல்லாமல், புல் கெட்டுப்போக வழியுண்டு.

ஊறுகாய்ப்புல்லின் குணாதிசயங்கள்

 • புல்லின் பசுமை அதிகம் மாறாமல் மர வண்ணத்தில் இருக்கும்.
 • கெட்ட வாசனை ஏதுமின்றி நல்ல ஈர்க்கக்கூடிய மணம் கமழும்.
 • கார, அமில நிலை சுமார் 4.0 ஆக இருக்கும்.
 • அதிக அளவு லாக்டிக் அமிலமும், குறைந்த அளவு பியூட்ரிக் அமிலமும் இருக்கும்.

ஊறுகாய்ப்புல் தயாரிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

 1. வானிலை உலர்புல் தயாரிக்க ஏதுவாக அமையவில்லை என்றால், பசுந்தீவனத்தை ஊறுகாய்ப்புல் தயாரிப்பதன் மூலம் பதப்படுத்தலாம். மழைக்காலங்களில் இம்முறை பெரிதும் உதவும்.
 2. ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால், பசுந்தீவனத்தின் தன்மை மாறுபடுவதில்லை. பசுந்தீவனத்தைப் போலவே ஊறுகாய்ப்புல்லை கால்நடைகள் விரும்பி உண்ணும். எனவே, பசும்புல் கிடைக்காத காலங்களில் ஊறுகாய்ப்புல்லை மாடுகளுக்கு அளிக்கலாம்.
 3. கடினமான தண்டு மற்றும் முற்றிய புற்களைக்கூட ஊறுகாய்ப்புல்லாக மாற்றுவதன் மூலம் கால்நடைகள் சேதாரமில்லாமல் உண்ணும்.
 4. தீவனப்பயிறுடன் உள்ள களை விதைகள், இதன்மூலம் அழிக்கப்படுகிறது.
 5. கால்நடைகளின் கழிவுகளை (மாட்டு சாணம் / கோழி எரு) ஊறுகாய்ப்புல் குழியில் இட்டு புரதச்சத்தை அதிகரிக்கலாம்.
 6. ஊறுகாய்ப்புல்லை பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம்.
 7. குடற்புழுக்களின் முட்டைகள் அழிக்கப்படுவதால் குடற்புழு தொல்லை குறைகிறது.

இடர்பாடுகள்

 1. தகுந்த முறையில் பதப்படுத்தாவிட்டால் புல் கெட்டுப்போகவும், சத்துக்கள் வீணாகவும் வழியுண்டு.
 2. ஊறுகாய்ப்புல் குழி அமைக்க செலவு அதிகம், மற்றும் தீவனப்பயிரை நறுக்கி குழியில் நிரப்ப ஆட்கள் தேவை.
 3. போதிய அளவு செய்முறைப் பயிற்சி விவசாயிகளுக்கு இல்லாமை, நமது நாட்டில் சில அரசு மற்றும் தனியார் கால்நடைப் பண்ணைகளில் மட்டுமே ஊறுகாய்ப்புல் மூலம் பசுந்தீவனப் பயிர்கள் பதப்படுத்தப்பட்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது. இம்முறையை பெரும்பாலான விவசாயிகள் கடைப்பிடித்தால் கால்நடைகளுக்கு தரமான தீவனத்தை வருடம் முழுவதும் அளிக்க முடியும்


உறுகாய் புல்

ஆதாரம் : தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம், திண்டுக்கல்.

3.08695652174
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top